தொண்டமான் வழியில் தீர்வு இந்தியாவின் இறுதி முடிவு

0 comments

இந்த மாத இறுதியில் வருகைதரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு இலங்கை அரசுக்கு அழுத்தங் கள் எதனையும் கொடுக்கமாட்டார் என்று தெரிகிறது. இந்தப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நாட்டுக்குள்ளேயே காணப்பட வேண்டும் என்று தமிழ்த் தலை மைகளிடம் இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே கிருஷ்ணாவின் பயணம் அமையும் என்று புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன.
எதிர்வரும் 25ஆம் திகதி கிருஷ்ணா இலங்கை வருகி றார். அந்தப் பயணத்தில் அரச தலைவர்களைச் சந்திக்கும் கிருஷ்ணா, இனப்பிரச்சினைக் கான அரசியல் தீர்வு குறித்து நேரடி யாக எந்த அழுத்தங் களை யும் வழங்கமாட்டார் எனப் புதுடில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
தனது பயணத்தில் தமிழ்த் தலைமைகளையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ள அமைச்சர் கிருஷ்ணா இந்திய நிலைப் பாட்டைத் தெளிவாக எடுத்துரைக்க உள்ளார். “அரசியல் தீர்வு ஒன்றுக்கு வெளியாரின் தலை யீட்டை எதிர்பார்ப்பதைவிட சொந்த அரசியல் சாணக்கியங்களைக் கடைப்பிடித்து இலங்கை அரசுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணப்பட வேண் டும்.’ இதுவே இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு. இதற்கு உதாரணமாக இந்திய வம்சாவளி மக்களுக்குக் குடியுரிமை பெற்றுத் தருவதற்கு அமரர் தொண்டமான் கையாண்ட அரசியல் மூலோ பாயங்களை புதுடில்லி அரசபீடம் தமிழ்த் தலைமைகளுக்குச் சுட்டிக்காட்டி உள் ளது.
தனது இந்த நிலைப்பாட்டை இறுக்கமாகப் பேண முடிவு செய்துள்ளதால் அமைச்சர் கிருஷ்ணாவின் பயணத்தின் போது தீர்வு விடயம் குறித்து இலங்கை அரசுடன் அதிகம் பேசப்படாது என புது டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன. ஒப் புக்கு மட்டும் பேச்சுமூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனக்கூறப்படும். இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவு படுத்துமாறு வலியுறுத்துவ தற்குப் பதிலாக, இந்தியா வழங்கும் உதவிக ளுக்கான பணிகளை விரைவுபடுத்து மாறே கிருஷ்ணாவின் பயணத்தின்போது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக் கப்படும் என்கின்றன புதுடில்லி வட்டாரங்கள்.
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி யுள்ளவர்களைச் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவது, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்காக வீடமைப் புத் திட்டத்தை செயற்படுத்துவது, ரயில் பாதை புனரமைப்பது போன்ற உதவித் திட்டங்களை இலங்கையில் செயற் படுத்த இந்தியா முன்வந்துள்ளது. இத்திட் டங்களை விரைவுபடுத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது பய ணத்தில் இலங்கை அரசிடம் வலியு றுத்துவார்.
மக்களுக்கான மனிதாபிமான உதவி களை மையப்படுத்தி இந்தியா வழங்கி யுள்ள உதவிகளை இலங்கை அரசு சரி யான முறையில் பயன்படுத்த வேண் டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் இலங்கை அரசிடம் கோரவிருக்கின்றார். எது எப்படி இருப்பினும் இலங்கை யில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு இந்தியா தார் மீக ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்று புதுடில்லி அதிகாரிகள் தெரிவித் தனர்.

thanks to http://www.alaikal.com/news/?p=50066
read more...
தொண்டமான் வழியில் தீர்வு இந்தியாவின் இறுதி முடிவுSocialTwist Tell-a-Friend

கண்ணன் பெரியாழ்வார்.

0 comments
வண்ணச் செஞ்சிறு விரலனைத்தும் வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சம் உண்ணப் பெற்றிலேன்’






thanks to http://www.masusila.com/2010/11/blog-post_05.html
read more...
கண்ணன் பெரியாழ்வார்.SocialTwist Tell-a-Friend
0 comments

read more...
SocialTwist Tell-a-Friend

இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறு

0 comments
அலையிருக்கும், மலையிருக்கும், காற்றிருக்கும் நாள்வரை மன்னராண்ட மதுரை தஞ்சை காஞ்சியோடு உறந்தையும் மறவர் நாடும் உலகமுற்றும் வாழ்கவாழ்க வாழ்கவே! -----------------------கவிஞர் கண்ணதாசன்


குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக,  
பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது. 

அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. 
விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள். மேலும் தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய இராசராச சோழன், 
கல்லணையைக்கட்டிய கரிகாலன், 
 மகனின் மீது தேராட்டி பசுவுக்குநீதிவழங்கிய ஆரூர் மனுநீதிச்சோழன் அனைவரும் கள்ளர்களே! 

உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!! இவ்வாறு அவ்வாய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன. 

இராசராசோழனை பள்ளர், பறையர்,புலையர்,வலையர் என்றெல்லாம் இழிவுபடுத்துவதை தடுக்க நம் இனத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமிருக்கிறது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், நான் ஊத்துக்காடு மழவராயர் குடும்பத்தில் பிறந்தவன். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் என்பவர்கள் மட்டுமே வசித்துவருகின்றோம். மேலும், சோழ மன்னர்கள் அனைவரும் வீர இனத்தினரான கள்ளர்குலத்தைச்சேர்ந்தவர்கள். எனவே, அவர்களைப்பற்றி எழுதவேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் எனக்கு ஏற்பட்டுள்ளதால், கட்டுரைகளை தொடங்குகின்றேன்.
பிற்காலச்சோழர்களின் ஆட்சிப்பட்டியல்:

எண்
சோழமன்னனின்
பெயர்
மனைவியின்
பெயர்
ஆட்சிக்காலம்
தலைநகரம்
1
விசயாலயச் சோழன்
ஊத்துக்காடு
மழவராயர் மகள்
கிபி.846-881
பழையாறை
ஞ்சாவூர்
2
தித்த சோழன்
வல்லவராயர் மகள்
இளங்கோபிச்சி
கி.பி.871-907
ஞ்சாவூர்
3
1ம் பராந்தக சோழன்
பழுவேட்டரையர் மகள்
கி,பி,907-953
ஞ்சாவூர்
4
கண்டராதித்த சோழன்
மழவராயர்மகள்
செம்பியன்மாதேவி
கி.பி.950- 957
ஞ்சாவூர்
5
அரிஞ்சய சோழன்
வைதும்பராயர் &
கொடும்புரார்மகள்கள்
கி.பி.956 -957
ஞ்சாவூர்
6
சுந்தரசோழன்
திருக்.மலையமான் சேதிராயர்மகள்
கி.பி.957 -970
ஞ்சாவூர்
7
உத்தமசோழன்
மழவராயர் & இருங்களார்மகள்கள்
கி.பி.957 -970
ஞ்சாவூர்
8
1ம்இராசராச சோழன்
கொடும்புரார் & பழுவேட்டரயர் மகள்கள்
கி.பி.985 -1014
ஞ்சாவூர்
9
1ம் இராசேந்திர சோழன்
5 மனைவிகள்பட்டம் தெரியவில்லை
கி.பி.1012 -1044
.கொ.சோழபுரம்
10
முதல்இராசாதிராசசோழன்

கி.பி.1018 -1054
.கொ.சோழபுரம்
11
2ம் இராசேந்திரசோழன்

கி.பி,1051-1063
.கொ.சோழபுரம்
12
வீர்ராசேந்திர சோழன்

கிபி.1063 1070
.கொ.சோழபுரம்
13
அதிராசேந்திரசோழன்

கிபி.1070
.கொ.சோழபுரம்
14
முதல் குலோத்துங்கசோழன்
காடவராயர்மகள்
கிபி1070 1120
.கொ.சோழபுரம்
15
விக்கிரமசோழன்

கிபி.1118 1136
.கொ.சோழபுரம்
16
2ம் குலோத்துங்க சோழன்

கிபி.1133 1150
.கொ.சோழபுரம்
17
2ம் இராசராச சோழன்
திருக்கோ.மலைய.சேதிராயர் மகள்
கிபி.1146 1163
.கொ.சோழபுரம்
18
2ம் இராசாதிராசசோழன்

கிபி.1163 1178
.கொ.சோழபுரம்
19
3ம் குலோத்துங்கசோழன்

கிபி.1178 1218
.கொ.சோழபுரம்
20
3ம் இராசராச சோழன்
வல்லவரையர் (வாணர்குல) மகள்
கிபி.1216 1256
.கொ.சோழபுரம்
21
3ம் இராசேந்திரசோழன்
சோழகுலமாதேவி
கிபி.1246 1279
.கொ.சோழபுரம்
கள்வன் ராஜ ராஜன்என்றும்,
read more...
இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறுSocialTwist Tell-a-Friend

தேவர் குருபூஜை விழா : பசும்பொன்னில் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது

0 comments
கமுதி:கமுதிஅருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 103வது ஜெயந்தி விழா, 48வது குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும¢பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு குருபூஜை விழா நேற்று துவங்கியது.
அக்டோபர் 28ம் தேதி ஆன்மிக விழாவும்,
29ம் தேதி அரசியல் விழாவும், 
30ம் தேதி குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவாகவும் நடக்கிறது. 
நேற்று காலை 8 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மங்கல இசையுடன் கோவை காமாட்சிபுரி ஆதீனம்,       சிவலிங்கேஸ்வர சுவாமிகள், அனந்தலிங்க தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் தலைமையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து லட்சார்ச்சனை நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு தேரோட்டமும் நடந்தது. 

இன்று (29ம் தேதி) காலை லட்சார்ச்சனை தொடர்ச்சியும், மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 30ம் தேதி காலை மஹா அபிஷேகமும் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழாவும் நடக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நாளை( 30ம் தேதி ) பசும்பொன் வருகின்றனர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வரும் முக்கியத் தலைவர்களுக்கும் அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
விழா ஏற்பாடுகளை தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன், சத்தியமூர்த்தி, ராமச்சந்திரன் ஆகியோர் செய்துள்ளனர். விழாவை முன்னிட்டு தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பசும்பொன்னில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடபட்டுள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து பசும்பொன்னுக்கு வரும் வாகனங்கள் எந்த வழியாக வந்து செல்ல வேண்டும் என ஏற்கெனவே காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
thanks to http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=7997
read more...
தேவர் குருபூஜை விழா : பசும்பொன்னில் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியதுSocialTwist Tell-a-Friend