Showing posts with label ஓவியர் புகழேந்தி. Show all posts
Showing posts with label ஓவியர் புகழேந்தி. Show all posts

ஓவியர் புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல்:

0 comments
உறுதி மிக்க உள்ளத்தோடு மக்களின் பிரச்சினைகளை, ஒடுக்குமுறைகளை மற்றும் சமூக அநீதிகளை மையப்படுத்தி, தீவிரமான அக்கறை உணர்வினையே லட்சியமாகக்கொண்டு ஓவியங்கள் தீட்டிவரும் கு. புகழேந்தி, சர்வதேச அளவில் பரவலாகப் பேசப்படும் மிக முக்கியமான ஓவியராவார்.  அவரது படைப்புகளும், மக்களும், சமூகப் பிரச்சினைகளும் உணர்வின் கயிறால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. புகழேந்தி தனது ஓவியங்களை காட்சிப்படுத்துகிற விதமும் அவரது ஓவியங்களின் உள்ளீடும் இத்தகையதோர் பிணைப்புக்கு முக்கிய காரணமாய் அமைகின்றன.   மனிதத்தின் மீதிருக்கும் நிஜமான அக்கறையும், மனித உரிமை மீறல்களின் அல்லது அடக்குமுறையின் மீதான தார்மீகமான கோபமும் இவரது விரல்களின் வண்ணத்தீற்றல்களில் விரிகின்றன.  
விடுதலையின் அரசியலை தூரிகை வழி தீட்டும் ஓவியர் புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல்:
http://www.chikkymukky.com/interview.htm 
read more...
ஓவியர் புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல்:SocialTwist Tell-a-Friend

சென்னையில் ஓவியர் புகழேந்தியின் ஓவியக்காட்சி (

0 comments
”உயிர் உறைந்த நிறங்கள்” - தமிழீழத்தின் இரத்தப்பதிவு”
என்ற பெயரிலான ஓவியர் புகழேந்தியின் பல்வேறு ஓவியங்களும்
சென்னையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஈழத்தமிழர்க்காக இன்னுயிர் நீத்த ஈகி முத்துக்குமாரின் ஊரான சென்னை கொளத்தூரில் அமைந்துள்ள விநாயகா திருமண நிலையத்தில் இக்கண்காட்சி 15.09.09 அன்றிலிருந்து தொடங்கி வைக்கப்படுகின்றது. இக்கண்காட்சி அன்றும் அதற்க மறுநாளான 16.8.09 அன்றும் நடைபெறுகின்றது.
15.8.09 (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடக்கும் தொடக்க விழாவில் கலந்து கொண்டு, ”தமிழ் முழக்கம்” சாகுல் அமீது அவர்கள் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார். புலவர் புலமைப்பித்தன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.
16.8.09 (ஞாயிறு) மாலை 5 மணியளவில் நடக்கம் நிறைவு விழாவில் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் கலந்து கொள்கிறார். ஓவியர் புகழேந்தி ஏற்புரை வழங்குகிறார்
read more...
சென்னையில் ஓவியர் புகழேந்தியின் ஓவியக்காட்சி (SocialTwist Tell-a-Friend