Showing posts with label கள்ளர். Show all posts
Showing posts with label கள்ளர். Show all posts

கள்ளர் விடுதி காப்பாளர் ஐந்து பேர் சஸ்பெண்ட்

0 comments
மதுரை : மதுரை மாவட்டத்தில் அரசு கள்ளர் மாணவர் விடுதிகளில் திடீர் சோதனை நடத்திய கலெக்டர், காப்பாளர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்தார். மதுரை மாவட்டத்தில் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் அரசு கள்ளர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக வந்த தகவல்களை அடுத்து, கலெக்டர் சகாயம் அங்கு திடீர் விசிட் நடத்த முடிவெடுத்தார். நேற்று முன்தினம் அவர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் தலைமையில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டன. அனைத்து குழுக்களையும் ஒரே நேரத்தில் விடுதிகளில் சோதனையிடும்படி உத்தரவிட்டார். இதையடுத்து செக்கானூரணி, உசிலம்பட்டி, நாட்டாமங்கலம், திருநகர், கருப்பாயூரணி உட்பட 24 விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல விடுதிகளில் அதிகளவு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மாணவர் வருகைப் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாதது, விடுதிகளில் வார்டன் தங்காதது, உணவு வழங்கியதற்கும், மாணவர் வருகைக்கும் சம்பந்தமே இல்லாதது என பல முறைகேடுகளை கண்டறிந்தனர். இதையடுத்து, விடுதி காப்பாளர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்தும், 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=273816
read more...
கள்ளர் விடுதி காப்பாளர் ஐந்து பேர் சஸ்பெண்ட்SocialTwist Tell-a-Friend

தமிழ்நாடு கள்ளர் சங்கத்தின் கோரிக்கை

0 comments
1. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள உட்பிரிவு கள்ளர் இன குழுக்களை ஒன்றாக சேர்த்து ஒரே இனமாக அறிவித்து ஒரே மாதிரியாக இடஒதுக்கீடு, கல்வி, சலுகை மக்கள் தொகை அடிப்படையில் வழங்க வேண்டுதல். [ஈநாட்டுக்கள்ளர்கள், கூத்தபார் கள்ளர்கள், பிறமலைக் கள்ளர்கள், தொண்டமான் கள்ளர்கள், கள்ளர் குல தொண்டைமான், அனைத்து செட்டில்மெண்ட் கள்ளர்கள்] அதாவது [சீர் மரபினர் சலுகை]


2. அனைத்து உட்பிரிவு கள்ளர்களும் குற்றப் பரம்பரை சட்டத்திற்கு உட்பட்டவர்களே, அவர்களுக்கு ஒரே சலுகையான சீர்மரபினர் சலுகை வழங்க வேண்டுதல்.

3. இனவாரி மக்கள் தொகை கணக்கெடுத்து மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்து சலுகை வழங்க வேண்டுதல்.

4. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள கள்ளர் சங்கங்களுக்கு சொந்தமான பாராதீனம் செய்யப்பட்ட சொத்துக்களை அரசு கையகப்படுத்தி கள்ளர் இன நல வாரியம் அமைத்து தரவேண்டுகிறது.
5. தமிழக அரசு தேவரின அரசாணை எண்: 38/95ஐ ரத்து செய்ய ஆணைபிறப்பிக்க கேட்டுக் கொள்கிறது.
thansk to http://maraththamizhar.blogspot.com/2011/07/blog-post_11.html
read more...
தமிழ்நாடு கள்ளர் சங்கத்தின் கோரிக்கைSocialTwist Tell-a-Friend

முறைகேடாக பட்டாமாறுதல் வி.ஏ.ஓ.,க்கள் மீது புகார்

0 comments
தேனி:கள்ளர் ஜாரி நிலம் வாங்கிய வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு வி.ஏ.ஓ.,க்கள் பட்டா மாறுதல் வழங்கி உள்ளதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் டி.ஆர்.ஓ.,விடம் புகார் செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் கள்ளர்ஜாரி நிலங்கள் உள்ளன.
இந்த நிலத்தை கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் விலைக்கு வாங்க கூடாது என சட்டத்தில் தடை உள்ளது. ஆனாலும் பெரும்பாலான நிலங்கள் வேறு சமுதாயத்திற்கு விற்பனை செய்துவிட்டனர்.

முறைகேடாக கள்ளர்ஜாரி நிலங்களை வாங்கியவர்களுக்கு வி.ஏ.ஓ.,க்களே பட்டா மாறுதலும் வழங்கி உள்ளனர். வி.ஏ.ஓ.,க்கள் பட்டா மாறுதல் வழங்குவது தவறுக்கு துணை போவது போல் உள்ளது என மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் டி.ஆர்.ஓ., பிருந்தாதேவியிடம் புகார் செய்துள்ளனர்.இது குறித்து வி.ஏ.ஓ.,க்கள் கூறுகையில், "முறைகேடாக வாங்கப்படும் நிலங்களுக்கு நாங்கள் பட்டா மாறுதல் செய்வதில்லை. கள்ளர்ஜாரி நிலங்களை வாங்குபவர்களுக்கு போலீசார் கூறுவது போல் நாங்கள் பட்டா மாறுதல் செய்யவில்லை' என்றனர்
 thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=236898
read more...
முறைகேடாக பட்டாமாறுதல் வி.ஏ.ஓ.,க்கள் மீது புகார்SocialTwist Tell-a-Friend