Showing posts with label டாக்டர் சேதுராமன். Show all posts
Showing posts with label டாக்டர் சேதுராமன். Show all posts

மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை: சேதுராமன்

0 comments
சென்னை : ""மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன் தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள, மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் கதிரவன் வந்தார். அவரை தொடர்ந்து அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன், பொதுச்செயலர் இசக்கிமுத்து, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் வந்தனர். தொடர்ந்து இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், துணை செயலர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலர் ராமகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர்.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர். கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதி அடையாளம் காணும் பங்கீடு முடிக்காமல், அ.தி.மு.க., தன்னிச்சையாக தொகுதிகளை அறிவித்தது குறித்து கூட்டத்தில் கலந்துக் கொண்ட தலைவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். பின், அனைவரும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தலாம் என, அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து தலைவர்கள் வரிசையாக தே.மு.தி.க., அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

வெளியே வந்த கதிரவன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ""அ.தி.மு.க., அணியில் எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுவது குறித்து, அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். உடன்பாடு ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்குள் உசிலம்பட்டி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். நாங்கள் தேசிய அளவில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்திருப்பதால், இரு கம்யூ., கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். எங்கள் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்,'' என்றார்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன், ""தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் ஒரே நோக்கம். அதற்காக எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒட்டு மொத்தமாக தமிழக மக்களின் நலன் கருதி தேர்தலில் எந்த பிணக்கு இன்றி பணியாற்றுவோம். மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என்றார்.
thanks to http://election.dinamalar.com/election_news_detail.php?id=514
read more...
மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை: சேதுராமன்SocialTwist Tell-a-Friend

அ.தி.மு.க., கூட்டணியில் சேதுராமன் கட்சிக்கு ஒரு தொகுதி

0 comments
சென்னை: அ.தி.மு.க., கூட்டணியில் சேதுராமன் தலைமையில் இயங்கி வரும், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்தில், அவரை அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் தலைவர் சேதுராமன், பொதுச்செயலர் இசக்கிமுத்து, நேரில் சந்தித்தனர். அப்போது அ.இ.மூ.மு.க., வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜெயலலிதா தெரிவித்தார். எந்த தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பது ஓரிரு நாளில் தெரிய வரும், என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=189966
read more...
அ.தி.மு.க., கூட்டணியில் சேதுராமன் கட்சிக்கு ஒரு தொகுதிSocialTwist Tell-a-Friend

தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் - டாக்டர் சேதுராமன் அறிவிப்பு !

2 comments


தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பெருக தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் அறிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென்மாநில இயக்க கருத்தரங்கில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் கலந்து கொண்டார். பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது
தேசியத்துக்கு பாதிப்பு இல்லாமல் நிர்வாகத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் தென் மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்காக தென்மாநில இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில், மாநிலங்களை பிரிப்பது தொடர்பாக 15 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், தென்தமிழகம் பிரிய வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நடக்கும் நிர்வாகத்தால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகள் அனைத்தும் சென்னையைச் சுற்றியே துவங்கப்படுகின்றன.கடந்த சட்டசபை தேர்தலின் போது எடுக்கப் பட்ட வாக்காளர் கணக்கெடுப்பில் தென்மாவட்ட ஓட்டு எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. தனி மாநிலம் கிடைக்கும் பட்சத்தில் தான் இங்குள்ள மக்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும். தெற்கும் வாழவேண்டும் என்பதற்காக தான் இந்த இயக்கத்தை துவங்கி உள்ளோம். தென்தமிழகம் பிரிக்கக்கோரி, 25 விதமான போராட்டங்களை இந்த அமைப்பு சார்பில் நடத்த உள்ளோம் என்றார்.

thanks to http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/3210-drsethuraman-then-tamilnadu
read more...
தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் - டாக்டர் சேதுராமன் அறிவிப்பு !SocialTwist Tell-a-Friend