Showing posts with label தொண்டமான். Show all posts
Showing posts with label தொண்டமான். Show all posts

ஹற்றனில் தமிழ் குடியிருப்புகள் மீது தாக்குதல்! பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடில் ஹர்த்தால் - அமைச்சர் தொண்டமான்

0 comments
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 01:47.05 AM GMT ]
தாக்குதலுக்குள்ளான குடியிருப்பொன்று இலங்கையில் மலையக நகரமான ஹற்றனில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஹர்த்தால் நடவடிக்கையொன்றுக்கு அழைப்பு விடுக்கப் போவதாக அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை இந்திய இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிய உலகக் கிண்ண இறுதிப் போட்டியினைத் தொடர்ந்து ஹட்டனில் மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் புகுந்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
சமநலகம, ஹிஜ்ரா புர பிரதேசங்களில் பல வீடுகள் இதனால் சேதமடைந்துள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த மூன்று இளைஞர்கள் டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காடையர் கூட்டமொன்று பட்டாசு வெடிகளை தமிழர்களின் வீடுகளுக்குள் கொளுத்தி வீசி விட்டுப் பின்னர் உட்புகுந்து தாக்குதலிலும் ஈடுபட்டதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் சிங்களவர்கள் எவரும் இருக்கவில்லையெனக் கூறிய தொண்டமான், இனவாதத்தை தூண்டி முரண்பாடொன்றை தோற்றுவிக்கும் தீய எண்ணத்திலேயே அந்தக் கும்பல் செயற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பிபிசிக்குக் கருத்து தெரிவித்த இலங்கைப் பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி, சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

thanks to http://www.tamilwin.com/view.php?202IBJ30ebjQM4ebiGpVcbdF92Yddc8292bc41pG3e43oQj2023PLc32
read more...
ஹற்றனில் தமிழ் குடியிருப்புகள் மீது தாக்குதல்! பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடில் ஹர்த்தால் - அமைச்சர் தொண்டமான்SocialTwist Tell-a-Friend

முதலாளிமார்களுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது: தொண்டமான்

0 comments

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த இனிமேல் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்தும் நோக்கில் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடைபெற்ற எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையும் நேற்றைய தினம் தோல்வியில் நிறைவடைந்துள்ளது. தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 290 ரூபா சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்த வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வரும் அதேவேளை, 360 ரூபாவாக நாள் சம்பளத்தை அதிகரிக்க முடியும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

நாள் சம்பள உயர்வை வலியுறுத்தும் வகையில் கடந்த பத்து தினங்களாக பெருந்தோட்டங்களில் ஒத்துழையாமை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முதலாளிமார் சம்மேளனத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை எனவும், தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கொட்டகலை நகரில் தொழிற்சங்கங்களுடன் நடைபெறவுள்ள கூட்டத்தில் எவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைகளில் அரசாங்கம் தலையீடு செய்ய உள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நன்றி http://www.tamilwin.com/view.php?2aSWn5e0dRj0C0ecGG7N3b4X9EC4d3g2h3cc2DpY2d426QV2b02ZLu3e
read more...
முதலாளிமார்களுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது: தொண்டமான்SocialTwist Tell-a-Friend

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட மூன்று பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுவிப்பு

0 comments
நீதிமன்றத்தின் தடையுத்தரவை மீறி, நுவரெலியாவில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அலுவலகத்திற்கு பிரவேசித்த குற்றத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட மூன்று பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல நிஷங்க கருணாரத்ன இவர்களை வழக்கில் இருந்து விடுவித்துள்ளார்.
தடையுத்தரவை மீறிய குற்றச்சாட்டுக்காக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், வீ. இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு மூன்று வருடத்திற்கான ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.நன்றி :தமிழ் வின் இணையம்
read more...
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட மூன்று பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுவிப்புSocialTwist Tell-a-Friend