Showing posts with label பிரசந்தா. Show all posts
Showing posts with label பிரசந்தா. Show all posts

பிரசந்தா கண்டனம்

0 comments
மக்கள் புரட்சி வெடிக்கும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவும் இலங்கையும் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நேபாள முன்னாள் பிரதமரும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பிரசந்தா கண்டனம் தெரிவித்துள்ளார். காத்மாண்டுவில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
உலகளவில் நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கும் பணியில் இந்திய, இலங்கை அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது. இது சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு பாதகமாகவே முடியும்.
நேபாளத்துக்கு வெளியே உரிமைகளுக்காக நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை நாங்கள் உறுதியாக ஆதரிப்போம். நேபாள ராணுவத் தளபதி கதவாலை மீண்டும் அப்பதவியில் அமர்த்தியது தவறு. நேபாள அரசு தனது தவறை திருத்திக்கொள்ள நான்கு நாட்கள் அவகாசம் தருகிறோம். அதன்பிறகும் திருந்தாவிட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும். இவ்வாறு பிரசந்தா தனது பேட்டியில் கூறியுள்ளார்.
நன்றி http://www.alaikal.com/news/?p=19909
read more...
பிரசந்தா கண்டனம்SocialTwist Tell-a-Friend