Showing posts with label பூண்டி கலைவாணன். Show all posts
Showing posts with label பூண்டி கலைவாணன். Show all posts

‌திரு‌ச்‌சி ‌சிறை‌யி‌ல் கலைவாணன் அடை‌ப்பு

0 comments
சமச்சீர் கல்விக்கு ஆதரவாக நடந்த போராட்டம் தொடர்பாக திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட 7 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து ‌திரு‌ச்‌சி ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.

சமச்சீர் கல்விக்கு ஆதரவாக தி.மு.க. நட‌‌த்‌திய போராட்ட‌த்‌தி‌ன்போது திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் உள்ள அரசு பள்ளியை மூடுமாறு கூறியதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் அரசு பேரு‌ந்‌தி‌ல் வீடு திரும்பினர். வழியில் அந்த பேரு‌ந்து விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில் விஜய் என்ற 12 வயது மாணவன் பலி ஆனான். 19 பேர் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக, கொரடாச்சேரி பெருமாளகரம் மேலத்தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கொரடாச்சே‌‌ரி காவ‌ல்துறை‌யி‌ல் அ‌ளி‌த்த புகா‌ரி‌ன் பே‌ரி‌ல், திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன், கொரடாச்சேரி ஒன்றிய செயலர் ஆர்.பாலச்சந்தர், மகாராஜன், விமல்ஆதித்தன், சங்கர், சுப்பிரமணியன், பிரபாகரன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் காரில் சென்ற, பூண்டி கே.கலைவாணனை, ஆலத்தம்பாடி என்ற இடத்தில் வழிமறித்து காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர். பின்னர், ஒன்றிய செயலாளர் ஆர்.பாலச்சந்தர் உள்ளிட்ட மற்ற 6 பேரு‌ம் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இந்திய தண்டனை சட்டம் 143 (சட்ட விரோதமாக செயல்படுதல்), 188 (மறியல் செய்தல்), 268 (பாதுகாக்கப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைதல்), 506/2 (பள்ளிக்கு செல்லும் மாணவர்களை மிரட்டுதல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவ‌ல்துறை‌யின‌ர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பூண்டி கே.கலைவாணன் உள்ளிட்ட 7 பேரும் திருவாரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த‌ப்ப‌ட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
thnks to http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1107/31/1110731005_1.htm
read more...
‌திரு‌ச்‌சி ‌சிறை‌யி‌ல் கலைவாணன் அடை‌ப்புSocialTwist Tell-a-Friend