Showing posts with label ராஜராஜன். Show all posts
Showing posts with label ராஜராஜன். Show all posts

அப்ப... ராஜராஜன் சோழன் நல்லவனில்லையா?

0 comments


வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011 13:43

ஆக்‌ஷன், மசாலா என்று தனது பழைய ஃபார்முலாவுக்குள் நுழைந்துவிட்டார் விக்ரம். அதற்கு காரணமும் இருக்கிறது. கண்ணுக்கு எதிரே தான் உயிரை கொடுத்து நடித்த’தெய்வதிருமகன்’ படத்தின் வியாபார சிக்கலை தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறாரல்லவா? அதனால்தான் மேற்கண்ட அதிரடி முடிவு.

இருந்தாலும், ஆக்‌ஷன் மசாலாவுடன், மனதை அள்ளும் ஒரு பிளாஷ்பேக் பகுதி இருந்தால் அது தனக்கான டேஸ்ட்டையும் வெளிப்படுத்தும் என்ற எண்ணம் இருக்கிறது அவருக்குள். அதன்விளைவாக விக்ரம் ஒப்புக் கொண்ட கமர்ஷியல் தூக்கலான ’கரிகாலன்’ படத்தில்தான் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறதாம். இருபது முப்பது வருடங்களுக்கு முன்நடக்கிற கதை என்றால் பிளாஷ்பேக் எனலாம்.
இதுவோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு விக்ரம் எப்படியிருந்தார் என்பதை பற்றிய பின்னோட்ட கதை.

அதுதான் என்ன? வானுயர கோவில் கட்டியிருக்கும் ராஜராஜ சோழனின் பெருமையை இப்போதுள்ள அரசுகள் பாடுவதில் வியப்பில்லை. அப்படிப்பட்ட மன்னனின் சமாதி ஏன்  சாதாரண ஒருவனின் சமாதி போல அசிரத்தையோடு எழுப்பப்பட்டிருக்கிறது? அதையும் ஒரு கோவில் போல பிரமாண்டமாக எழுப்பியிருக்கலாமே? ஏன் அவ்வாறு செய்யவில்லைஅப்போது வாழ்ந்த அரசும் மக்களும்? இப்படி எழுகிற கேள்விகளுக்கு விடைதான் இந்த பிளாஷ்பேக்.

மொத்தத்தில் இவர்கள் சொல்ல வருவது ராஜராஜன் நல்லவன் இல்லை என்பதுதான். இந்த பிளாஷ்பேக்கில் அவனை கெட்டவராக சித்தரிக்க உதவும் பாத்திரமாக நடிக்கிறாராம்விக்ரம்.

படம் வெளிவரும் போது யார் யாரெல்லாம் வேட்டியை மடித்துக் கொண்டு கோதாவில் இறங்கப் போகிறார்களோ?
thanks to http://www.tamilleader.in/cine/323-2011-06-24-08-40-01.html
read more...
அப்ப... ராஜராஜன் சோழன் நல்லவனில்லையா?SocialTwist Tell-a-Friend

தஞ்சை பெரிய கோவில் ராஜராஜன் கோபுரத்தை மின்னல் தாக்கியது-கலசம் உடைந்தது

0 comments
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள ராஜராஜன் கோபுரத்தை மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த ஒரு கலசம் உடைந்து சிதறி விட்டது.

பெரிய கோவில், பெருவுடையார் கோவில் என அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் முகப்பு கோபுரமான கேரளாந்தகன் வாயிலைத் தாண்டி உள்ளே போனால், ராஜராஜன் வாயில் எனப்படும் கோபுரம் உள்ளது.

இந்த கோபுரத்தில் சுண்ணாம்பு, செங்கற்களால் ஆன 5 கலசங்கள் உள்ளன. ஒவ்வொரு கலசங்களும் சுமார் 4 அடி உயரம் கொண்டவை.

தஞ்சையில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. நேற்றும் அந்த மழை நீடித்தது. மழை பெய்து கொண்டிருந்தாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கம்போல் காணப்பட்டது.

மாலை 4.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் பெரிய கோவிலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் 100-க்கும் மேற்பட்டோர் மழையில் நனையாமல் இருப்பதற்காக ராஜராஜன் கோபுரத்திற்கு கீழ் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மின்னல் தாக்கியது. அந்த மின்னல் ராஜராஜன் கோபுரத்திற்கு மேல் வைக்கப்பட்டிருந்த கலசங்களில் 4-வது கலசத்தின் மீது விழுந்து, இதில் கலசம் சுக்குநூறாக உடைந்து சிதறியது. இதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் பீதியடைந்தனர். இதனால் அங்கிருந்து ஓடினர்.

மின்னல் தாக்கிய அதிர்வின் காரணமாக கோவில் கருவறைக்குள் வைக்கப்பட்டிருந்த அவசரகால அலாரம் ஒலித்தது. இதனால் பெரிய கோவில் பெரும் பரபரப்பானது.

தகவல் அறி்நததும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மாநில அமைச்சர் உபயதுல்லா, மாவட்ட கலெக்டர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

மின்னல் தாக்கியதால் கோபுரத்திற்கு விரிசல் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
thanks t o http://thatstamil.oneindia.in/news/2010/11/29/tanjore-rajarajan-tower-big-temple-kalasam.html
read more...
தஞ்சை பெரிய கோவில் ராஜராஜன் கோபுரத்தை மின்னல் தாக்கியது-கலசம் உடைந்ததுSocialTwist Tell-a-Friend