Showing posts with label நல்லகண்ணு. Show all posts
Showing posts with label நல்லகண்ணு. Show all posts

ஈழத் தமிழர்களைப் பற்றி இந்திய ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை - நல்லகண்ணு

0 comments
[ திங்கட்கிழமை, 30 மே 2011, 10:07.17 AM GMT ]
இந்திய ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் ஐநா அறிக்கை குறித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் தமிழ்வெளி இலக்கிய அமைப்பு சார்பில், இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி ஐநாவை வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு,
ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள தாய்த் தமிழர்களுக்கும் பல்வேறு பிணைப்புகள் உண்டு. இந்தியாவுக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற இலங்கை தொடக்கத்தில் இருந்தே அங்குள்ள ஈழத் தமிழர்களை அழிப்பதில் முனைப்புக் காட்டி வருகிறது. அவர்களுக்கான உரிமைகளை மறுத்ததோடு அவர்களை அழிக்கவும் செய்து வருகிறது.
இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியாகி இருக்கின்ற இந்த சமயத்தில், கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர்களுக்காக என்ன செய்தன என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும்.
தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததால், இன்றளவும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இலங்கை அரசு நடத்திய சூதாட்டத்தில் தமிழர்கள் பலியாகி விட்டார்கள். இந்திய ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை குறித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் இணைந்து நின்று குரல் கொடுத்து கொடுங்கோல் ஆட்சியை தனிமைப்படுத்தி ஈழத் தமிழர்களுக்கு வாழ்வு கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்றார்.

thanks to http://www.tamilwin.com/view.php?22a8299N320eDppGi04eecoQjj2ccbdZVLmucddd3cIBP4bbc4VjQQ6be44QGGp1d003eF922g02
read more...
ஈழத் தமிழர்களைப் பற்றி இந்திய ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை - நல்லகண்ணுSocialTwist Tell-a-Friend

நல்லக்கண்ணுக்கு "தர்மத் தலைவர்' விருது

0 comments
திருநெல்வேலி : இந்திய கம்யூ., கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் நல்லக்கண்ணுக்கு, "தர்மத் தலைவர்' என்ற விருதை, மகாத்மா காந்தி உதவியாளர் கல்யாணம் வழங்கினார். நல்லக்கண்ணு, பொதுமக்கள் நலனுக்காக, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்து, அவரே ஆஜராகி வாதாடினார்.
கோர்ட் உத்தரவுப்படி, இந்த ஆற்றிலுள்ள ஐந்து குவாரிகளில், நிபுணர் குழு ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்தது. அறிக்கையை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், ஐந்து ஆண்டுகளுக்கு, இக்குவாரிகளில் மணல் அள்ளத்தடை விதித்தது. தாமிரபரணியை காப்பாற்ற, நல்லக்கண்ணு எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.
விருது வழங்கல்: இதையடுத்து நேற்றிரவு பாளையங்கோட்டையில், தாமிரபரணி அமைப்பு சார்பில், நல்லக்கண்ணுக்கு, பாராட்டு விழா நடந்தது. அந்த அமைப்பின் அகில பாரத தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் வரவேற்றார். முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், தஞ்சை பல்கலை., ஆட்சிக்குழு உறுப்பினர் பரமசிவன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., பேராசிரியர் அருணாச்சலம், அறக்கட்டளை நிர்வாகிகள் பேசினர். மகாத்மா காந்தி நேரடி உதவியாளர் கல்யாணம், நல்லக்கண்ணுக்கு, "தர்மத் தலைவர்' என்ற விருதை வழங்கினார். நல்லக்கண்ணு ஏற்புரை வழங்கினார்.

thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=235932


என்னை அரசியலை விட்டே ஓடச் சொன்னார்கள்: ஆர். நல்லகண்ணு பேச்சு

தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ளத் தடை உத்தரவு பெற்றுத் தந்ததற்காக ஆர். நல்லகண்ணுவுக்குதாமிரபரணி அமைப்பு சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் மைதானத்தில் நேற்று இரவு பாராட்டு விழா நடந்தது.

அப்போது நல்லகண்ணு பேசியதாவது,

மனிதன் இன்று தான் அனுபவிக்கும் இயற்கை வளங்களை எதிர்கால சமுதாயத்திற்கும் விட்டுச் செல்ல வேண்டும். அதை தன் வாழ்நாளிலேயே அழித்துவிடக் கூடாது.

தமிழ் வளர்த்த பெருமை உடைய ஆறு தாமிரபரணி. ஆற்றங்கரையோரங்களில் தமிழ் மொழி செழித்து வளர்ந்துள்ளது. அத்தகைய நதியை நாம் பாதுகாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இன்று காவிரி, வைகை, பாலாறு ஆகிய நதிகள் அழிந்து வருகின்றன. இந்த நதிகளில் எல்லாம் இப்போது தண்ணீர் வருவதில்லை. காவிரி நதியில் ஆடிப் பெருக்குக்குக் கூட தண்ணீர் வருவதில்லை.

பாலாறு பாழடைந்து விட்டது. வைகைக்கும் சிக்கல் வந்து விட்டது. தாமிரபரணி மட்டுமே தகராறு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

செல்வம் செழிக்கும் ஜீவநதியான தாமிரபரணி தான் செல்லும் இடங்களில் எல்லாம் வளமையை ஏற்படுத்துகிறது. ஆனால் அதன் தன்மை இன்று கெட்டு விட்டது. அதைப் பாதுகாக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தாமிரபரணியை பாதுகாக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. இந்த ஆற்றில் மணல் அள்ள நான் தடையாணை வாங்கியதை கண்டித்து சிலர் 'அரசியலை விட்டு ஓடு' என்று சுவரொட்டிகள் ஒட்டினர். அதை யார் ஒட்டினார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் பிறப்பதற்கு முன்பே நான் பிறந்தவன், அரசியலுக்கு வந்தவன்.

தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடுக்க நாம் உறுதி கொள்ள வேண்டும். நீதிமன்ற தடையாணையை அகற்ற முயற்சிகள் நடந்து வருகின்றது. அதை முறியடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாம் அனைவரும் உறுதியாக இருந்தால்தான் தாமிரபரணியை பாதுகாக்க முடியும் என்றார்.

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/05/04/people-asked-me-get-away-from-politics-nallakannu-aid0128.html

read more...
நல்லக்கண்ணுக்கு "தர்மத் தலைவர்' விருதுSocialTwist Tell-a-Friend

தா.பாண்டியன் வீட்டில் மர்ம நபர்கள்

0 comments

இந்தியாவின் நலனுகாகவும், ஈழத் தமிழர்களுகாகவும் குரல் கொடுப்பவர் தா.பாண்டியன். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இவர் இந்தியாவின் 15வது நாடாளுமன்றத்திற்காக கடந்த சில மாதங்களுகு முன் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டார். அப்போது இவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் டூவீலரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி போலிசார் குற்றவாளிகள் யாரையும் கண்டுபிடிகவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தா.பாண்டியன் வீட்டை சுற்றிலும் அடையாளம் தெரியாத புதிய நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று பெண்களும், குழந்தைகளும் வீட்டில் இருந்த போது மர்ம நபர் ஒருவர் வீட்டின் சுற்றுச்சுவற்றை தாண்டி வீட்டிற்குள் வந்துள்ளார். இப்படி வந்த மர்மநபர் வீட்டின் சன்னல் கதவைத் திறந்து எட்டிப்பார்த்துள்ளார். இதை கவனித்துவிட்ட பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட்டனர். அதனால் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.
இப்படியாக தா.பாண்டியன் வீட்டில் கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் நோட்டமிடுவது எதற்காக என தெரியவில்லை. வேறு அசம்பாவிதங்கள் நடப்பதற்குள் தமிழக அரசு நடவடிகை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவ்ர நல்லகண்ணு கூறியுள்ளார். நன்றி http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1250340187&archive=&start_from=&ucat=2&
read more...
தா.பாண்டியன் வீட்டில் மர்ம நபர்கள்SocialTwist Tell-a-Friend
0 comments
பிரபாகரன் உயிரோடு பாதுகாப்பாக உள்ளார் - நல்லகண்ணு



எங்களுக்கு வந்த தகவல்படி விடுதலைபுலித்தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடு பாதுகாப்பாக உள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு சூழ்ச்சியும், ஆட்சி அதிகார பலமும் கொண்டு தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே முடிவு செய்தது. சிவகங்கை, விருதுநகர் தொகுதிகளில் ஆளுங்கட்சி கூட்டணிக்கு ஆதரவாக முடிவுகள் மாற்றப்பட்டன.

பண பலத்தைக் கொண்டு வெற்றி நிர்ணயிக்கப்பட்ட சூழ்நிலையில் சில தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. பிரபாகரன் உயிரோடு உள்ளார்: அமைதி பேச்சுவார்த்தைக்கு சென்ற சார்லஸ், நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலித்தலைவர்களை ராஜபக்சே அரசு நயவஞ்சமாக கொலை செய்து விட்டது.

இலங்கையில் போர் நிறுத்தம் என்ற விஷயத்தில் இந்திய அரசு கண்டிப்பாக இருந்திருந்தால் அப்பாவி தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பர். இனியாவது ஐ.நா., விரைந்து செயல்பட்டு இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களை காப்பாற்றி மறுவாழ்வுக்கு வழி வேண்டும். எங்களுக்கு வந்த தகவல்படி விடுதலைபுலித்தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடு பாதுகாப்பாக உள்ளார் என்றார்.

நன்றி http://WWW.PATHIVU.COM

read more...
SocialTwist Tell-a-Friend