பசும்பொன் செல்லும் வழி மாற்றம்: கிராம மக்கள் திடீர் உண்ணாவிரதம்

0 comments
First Published : 26 Oct 2010 08:43:20 AM IST


அருப்புக்கோட்டை, அக். 25: தேவர் குரு பூஜைக்காகப் பசும்பொன் செல்லும் வாகனப் போக்குவரத்து வழியை மாற்றக் கூடாது என வலியுறுத்தி அருப்புக்கோட்டை அருகே  சேதுபுரத்தில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.  

                 ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை அக்டோபர் 30-ம் தேதி நடைபெறுகிறது. அப்போது பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க வாகனங்கள் செல்லும் வழி மாற்றப்பட்டுள்ளது
                 கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு அருப்புக்கோட்டை மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் திருச்சுழி, மண்டல மாணிக்கம் வழியாகச் சென்றன. அப்போது தகராறு ஏற்பட்டு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.              
                       அதனால் இந்த ஆண்டு கல்லூரணி, ரெட்டியாபட்டி, கமுதி விலக்கு வழியாக வாகனங்கள் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால் திருச்சுழி, மண்டல மாணிக்கம் வழியாகத்தான் வாகனங்கள் செல்ல வேண்டும். ஊரைச் சுற்றி செல்ல முடியாது எனக்கூறி  மண்டலமாணிக்கம், செம்பொன்நெறிஞ்சி, நெல்லிக்குளம், அம்மன்பட்டி ஆகிய பகுதி மக்கள் சேதுபுரத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.  

                          இதுகுறித்து விருதுநகர் மாவட்ட பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் செயலாளர் முத்துராமலிங்கம் கூறுகையில், 46 ஆண்டுகளாக இந்த வழியாகத்தான் சென்று வந்தோம். இந்த ஆண்டு வேறு வழியாக சுற்றிச் செல்லுமாறு சொல்கிறார்கள். கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொடர் உண்ணாவிரதம் இருப்போம் என்றார்.  இவர்களிடம் போலீஸôர் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் உண்ணாவிரதம் நீடித்தது.
thanks to www.dinamani.com
read more...
பசும்பொன் செல்லும் வழி மாற்றம்: கிராம மக்கள் திடீர் உண்ணாவிரதம்SocialTwist Tell-a-Friend

தேவர் குருபூஜை: தலையில் ரிப்பன் கட்டி வர வேண்டாம்

0 comments
First Published : 22 Oct 2010 11:34:15 AM IST


ராமநாதபுரம், அக். 21: தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் தலையிலோ அல்லது கைகளிலோ எவ்வித கலர் துணிகள், ரிப்பன்கள் கட்டி வர வேண்டாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வியாழக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளார். தேவர் குருபூஜை விழா தொடர்பான அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமை வகித்து மேலும் பேசியதாவது: அஞ்சலி செலுத்த வாகனங்களில் வருவோர் வாகன எண், அதன் ஓட்டுநர் முகவரி, வாகன உரிமையாளர் முகவரி மற்றும் வாகனத்தில் பயணம் செய்வோரின் விவரத்தை வாகனம் புறப்படும் இடத்தின் எல்கைக்குட்பட்ட காவல் நிலையத்தில் முன்கூட்டியே தெரிவித்து, அதற்கான காவல் துறையினரின் அனுமதி சான்றை வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டி வர வேண்டும். சான்று பெறாத வாகனங்களுக்கும் லாரி,டிராக்டர் போன்ற வாகனங்களில் வரவும் அனுமதியில்லை. வாகனங்களின் மேற்கூரையில் வருவதோ, கோஷம் எழுப்புவதோ, ஆயுதங்கள் மற்றும் மதுபானங்கள் எடுத்து வரவோ அனுமதியில்லை. காவல் துறையினர் சோதனை செய்யும் போது ஆயுதங்களோ அல்லது மதுபானங்களோ இருந்தால், அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும். வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், வாகனத்தில் பயணிப்போர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். ஜோதி எடுத்து வருபவர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் செல்ல வேண்டும். ஜோதி, முளைப்பாரி, பால்குடம் போன்ற ஊர்வலங்களுக்கு இம் மாதம் 29 ஆம் தேதி அனுமதிக்கப்படும். மறுநாள் 30 ஆம் தேதி இதுபோன்ற ஊர்வலங்களுக்கு அனுமதியில்லை. பசும்பொன்னில் ஊர்வலங்கள் நடத்த அனுமதி கிடையாது. வெளிமாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு வழிக் காவல் பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், காவல் துறை தொலைபேசி எண்-04567-232110, 232111 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்தார். கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கி. பாலசுப்பிரமணியம், எஸ்.பி.பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகவேல், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்கள் உள்பட வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
 
thanks to /http://www.dinamani.com/
read more...
தேவர் குருபூஜை: தலையில் ரிப்பன் கட்டி வர வேண்டாம்SocialTwist Tell-a-Friend

தேவர் ஜயந்திக்கான ஜோதி வழித்தடம்: மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

0 comments
First Published : 23 Oct 2010 11:37:56 AM IST


மதுரை, அக். 22: மண்டலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உசிலம்பட்டியிலிருந்து தேவர் ஜயந்திக்கான ஜோதியை எடுத்துச் செல்லும் வழித்தடத்துக்கு அனுமதி கோரிய மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.  இதுதொடர்பாக மண்டலமாணிக்கம் மறவர் சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி தாக்கல் செய்த மனு:  ஆண்டுதோறும் தேவர் ஜயந்தி கொண்டாட்டத்தின்போது, உசிலம்பட்டி மூக்கையா தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்துவோம். பின்னர் அங்கிருந்து ஜோதியை தொடர் ஓட்டமாக மதுரை, காரியாபட்டி, திருச்சுழி, முத்துராமலிங்கபுரம் புதூர் வழியாக மண்டலமாணிக்கம், கமுதி, கோட்டைமேடு சென்று பசும்பொன்னை அடைவோம். அங்கு அக். 29,30 ஆகிய இருதினங்கள் தங்கியிருந்து குருபூஜை வழிபாட்டில் ஈடுபடுவோம்.  கடந்த ஆண்டு போலீஸôர் எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தை அணுகியபோது, போலீஸôர் கூறும் வழித்தடத்தில் செல்லுமாறு உத்தரவிட்டது. எங்களால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது என உறுதி அளிக்கிறோம். மண்டலமாணிக்கம் வழியாகச் செல்ல, மாவட்ட எஸ்.பி.யிடம் அனுமதி கோரிய மனுவை ஏற்று, அனுமதி அளிக்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா, அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இதற்கான விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது.
 
thanks to http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Madurai&artid=321937&SectionID=137&MainSectionID=137&SEO=&Title=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:%20%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
read more...
தேவர் ஜயந்திக்கான ஜோதி வழித்தடம்: மனு மீதான விசாரணை ஒத்திவைப்புSocialTwist Tell-a-Friend

இந்திய ஜனநாயக கட்சியில் தேவர் அமைப்பினர் இணைந்தனர்

0 comments
திவு செய்த நாள் : அக்டோபர் 25,2010,22:54 IST

சென்னை:இந்திய ஜனநாயக கட்சியில், தேவர் சமூக பாதுகாப்பு கூட்டமைப்பை சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் அக்கட்சியின் நிறுவனர் பச்சமுத்து முன்னிலையில் நேற்று இணைந்தனர்.இந்திய ஜனநாயக கட்சியில், காஞ்சி, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தேவர் சமூக பாதுகாப்பு கூட்டமைப்பினர் இணையும் விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், தேவர் சமூக பாதுகாப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துபாரதி தலைமையில் ஏராளமானோர், இந்திய ஜனநாயக கட்சியில், அதன் நிறுவனர் பச்சமுத்து முன்னிலையில் இணைந்தனர்.

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பச்சமுத்து பேசியதாவது:முத்துராமலிங்க தேவர் போன்ற நல்ல தேசிய தலைவரை தந்த சமூகத்திலிருந்து ஏராளமானவர்கள், இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சுதந்திரத்திற்கு பின், ஜனநாயகம் இருப்பதாக கற்பனை செய்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் ஜனநாயகம் நாட்டில் இல்லை. அறிவுடையவர்கள் எல்லாரும் அரசியலை விட்டு வெளியே நின்று கொண்டிருக்கின்றனர்.
தேவையான நேரத்தில், பொதுமக்களிடம் தொலைநோக்கு பார்வை வேண்டும். அரசியல் என்பது அனைவருக்கும் பொதுவானது. குடும்ப தேவையை பூர்த்தி செய்ய நினைத்தவர்கள், அரசியலுக்கு வந்ததால் தான், தற்போது பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.இவ்வாறு பச்சமுத்து பேசினார்.எம்.ஜி.ஆர்., மருத்துவ கல்லூரி முன்னாள் துணைவேந்தர் ராஜா, தவத்திரு.முத்துகுமார சுவாமி தம்பிரான் மற்றும் இந்திய ஜனநாயக் கட்சி தலைவர் கோவைத் தம்பி உட்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=113659
read more...
இந்திய ஜனநாயக கட்சியில் தேவர் அமைப்பினர் இணைந்தனர்SocialTwist Tell-a-Friend

மீனவர்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய, மாநில அரசுகள்-நல்லக்கண்ணு

0 comments
திருச்செந்தூர்: இயற்கை வளம் வாய்ந்த தமிழ்நாட்டில் மீனவர்கள் நலனில் அக்கறை இன்றி மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய கட்டுபாட்டுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்செந்தூர் மீனவ மக்கள் வாழ்வுரிமை மாநாடு வீரபாண்டியபட்டணத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய கட்டுபாட்டுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கலந்து கொண்டு பேசுகையில்,

தமிழ்நாட்டில் 13 -க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் உள்ளன. இயற்கை வளம் வாய்ந்த தமிழ்நாட்டில் மீனவர்கள் நலனில் அக்கறை இன்றி மத்திய மாநில அரசுகள் செயல்படுகிறது.

சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்பும் மீனவர்கள் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவில்லை. அவர்களது உரிமை பறிக்கப்படுவது வேதனை தருகின்றது.

இந்தியாவில் உள்ள கடலில் 600 வகையான மீன்கள் முத்துக்குளியல் உள்ளிட்ட எல்லா வளமும் கிடைக்கிறது. 30 சதவீத மீன்கள் ஐப்பான், ஐரோப்பா [^] போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 15 ஆயிரம் கோடி அந்திய செலவாணியை ஈட்டித் தருவது மீனவர்கள் தான்.

கடலி்ல் மீனவர்கள் 12 கிலோ மீட்டர் மைல்களுக்கு அப்பால் செல்லக் கூடாது என்கிறார்கள். 10 ஆயிரத்துக்கு மேல் மீன் பிடிக்கக் கூடாது என்று ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு சட்டம் போடுகிறார்கள். மண், மீன்வளம் ஏழைகளைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.

கடல் மேலாண்மைச் சட்டம் கொண்டு வந்த போது மீனவர்களும் அவர்களுக்குத் துணையாக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராடியது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி பாராளுமன்றத்தில் எதிர்ப்புக் குரல் தெரிவித்தது. மீனவ கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததின் மூலம் இந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

1974 ல் கட்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதன் விளைவாக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீன் வளமும், மீனவர்களும் பாதிக்கப்படாத வகையில் மத்திய மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.

கடந்த ஆண்டு இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டப் பின்பும் அங்கு பல்வேறு வகையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் ராஜபக்சேவுக்கு அளவுக்கு அதிகமான மரியாதை கொடுக்கப்பட்டு அழைத்து வருகின்றனர். அதே நேரத்தில் மீனவர்களை பாதுகாக்க எந்த ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது என்றார்.
thanks to http://thatstamil.oneindia.in/news/2010/10/25/cpi-nallakannu-fishermen-tamilnadu.html
read more...
மீனவர்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய, மாநில அரசுகள்-நல்லக்கண்ணுSocialTwist Tell-a-Friend

மனைகளாக மா‌‌றி வரு‌ம் ‌விளை‌நில‌ங்க‌‌ள்!

0 comments
‌மிழக‌த்‌தி‌லத‌‌ற்போதபு‌த்து‌யி‌ரபெ‌ற்று‌ வரு‌மஒரதொ‌ழி‌ல் ‌ரிய‌லஎ‌ஸ்‌டே‌டதொ‌ழி‌ல். இ‌ந்தொ‌ழி‌லி‌லஈடுபவ‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌‌க்கநாளு‌க்கநா‌ளஅ‌திக‌ரி‌த்தவரு‌கிறது. பெரு‌மபண‌மகொ‌ண்முதலைக‌ளஇ‌ந்தொ‌ழி‌லி‌லகொடி க‌ட்டி பற‌ந்தவரு‌கி‌ன்றன‌ர்.

இ‌தி‌லகொடுமஎ‌ன்னவெ‌ன்றா‌ல் ‌வடநா‌ட்டினரு‌ம், பெரு‌மமுதலைகளு‌ம் ‌விளை‌நில‌ங்களஅ‌ழி‌த்து ‌மனைகளாமா‌‌ற்‌றி வரு‌‌கி‌ன்றன‌ர். இதனா‌ல் ‌விவசாய‌த்தந‌ம்‌பியு‌ள்ள ‌கிராம‌த்‌தின‌‌ரி‌ன் ‌நிலகே‌ள்‌வி‌க்கு‌றியாஉ‌ள்ளது.

செ‌ன்னமுத‌லகும‌ரி வரை ‌விளை‌நி‌ல‌ங்களமனைகளாஆ‌க்‌கி வரு‌மஇ‌ந்த‌ப் முதலைக‌ள், ஏ‌ழ்மை‌யி‌லஇரு‌ப்பவ‌ர்களகு‌றிவை‌த்தஅவ‌ர்க‌ளிட‌மஆசகா‌ட்டி குறை‌ந்த ‌விலை‌‌யி‌ல் ‌‌விளை‌நில‌ங்களபெ‌ற்று‌மவ‌ரு‌கி‌ன்றன‌ர்.

த‌மிழ‌க‌த்‌தி‌லதொ‌‌‌ழி‌லதொட‌ங்வரு‌மஅய‌ல்நா‌ட்டு ‌நிறுவன‌ங்‌க‌ளு‌க்கஅரசகு‌றி‌ப்‌பி‌‌ட்இ‌ட‌ங்க‌ளி‌ல் ‌நில‌ங்களஒது‌க்‌கி கொடு‌க்‌கிறது. இது ‌விளை‌நில‌ங்க‌ளஎ‌ன்றகூ‌றி எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ளபோரா‌ட்ட‌மநட‌த்து‌கி‌ன்றன. இதனா‌லஅ‌ந்த ‌நில‌ங்களச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட ‌நிறுவன‌ங்களு‌க்கஒது‌க்குவ‌தி‌லத‌மிழஅரசு ‌பி‌ன்வா‌‌ங்‌கி ‌விடு‌கிறது.

த‌ற்போதசெ‌ன்னை‌யி‌ல் ‌‌விமான ‌நிலைய ‌‌வி‌‌ரிவா‌க்க‌த்த‌ி‌ல் ‌நில‌ங்க‌ளகையக‌ப்படு‌த்எ‌தி‌ர்‌ப்பதெ‌ரி‌‌வி‌த்தபொதும‌க்க‌ள் ‌மிக‌ப்பெ‌ரிபோரா‌ட்டமநட‌‌த்‌தின‌ர். இதனா‌லஅ‌ந்த ‌நில‌ங்களகையக‌ப்படு‌த்துவ‌தி‌லஇரு‌ந்தஅரசு ‌பி‌ன்வா‌ங்‌கியது. த‌ற்போதத‌மிழக‌த்‌தி‌லஅய‌ல்நா‌ட்டசு‌ற்றுலா‌பபய‌ணிகளபெ‌ரிது‌மகவரு‌மகொடை‌க்கான‌‌லிலு‌மஇதே ‌நிலதொட‌ர்‌ந்தவரு‌கிறது.

மலைக‌ளி‌னஇளவர‌சி எ‌ன்றவ‌ர்‌ணி‌க்க‌ப்படு‌மகொடை‌க்கான‌லச‌ர்வதேசு‌ற்றுலதல‌ங்க‌ளி‌லஒ‌ன்றாகு‌ம். இய‌ற்கஎ‌‌ழி‌லகொ‌ஞ்சு‌மகொடை‌க்கான‌லு‌க்கவரு‌மசு‌ற்றுலா‌பப‌ய‌ணிகளம‌‌ட்டும‌ல்ல ‌ரிய‌லஎ‌‌ஸ்ட‌ே‌டசுயதொ‌‌‌ழி‌லி‌லஈடுபடுவோரையு‌மபெ‌‌ரிது‌மக‌வ‌‌ர்‌ந்து‌ள்ளதஎ‌ன்றா‌லஅது ‌மிகையாகாது.

பெரு‌மபண‌மமுதலைகளு‌ம், வடநா‌ட்டினரு‌ம், ‌ரிய‌லஎ‌ஸ்டே‌டதுறை‌யினரு‌மகொடை‌க்கான‌லி‌லஉ‌ள்ள ‌விளை‌‌நில‌ங்களவா‌ங்‌கி ‌பிளா‌ட்டுகளாக ‌மா‌ற்‌றி வருவதா‌லவிவசா‌யிக‌ளஅ‌தி‌‌ர்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளன‌ர்.

''கட‌ந்த 10 ஆ‌ண்டுகளு‌க்கமு‌ன்பஇ‌‌ந்இட‌ங்க‌ளி‌லந‌‌ன்றாக ‌விவசா‌ய‌மநட‌ந்தவ‌ந்து‌க் கொ‌‌ண்டிரு‌ந்தது. த‌ற்போதஅ‌ந்இட‌ங்களை ‌பிளா‌டபோ‌ட்டு ‌வி‌ற்பனசெ‌ய்து ‌வி‌ட்டதா‌ல் ‌விவசாய‌மசெ‌ய்வத‌ற்கஇட‌மஇ‌ல்லை'' எ‌ன்று ‌விவசா‌யிக‌ளபுல‌ம்பு‌் ‌நிலை‌க்கத‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

பூ‌ண்டு, கேர‌ட், உருளை‌கிழ‌ங்கபோ‌ன்ற ‌ப‌யி‌ர்க‌ளி‌ன் ‌‌விவசாய‌மந‌லிவடை‌ந்தவருவதாகவலதெ‌ரி‌வி‌த்து‌‌ள்ள ‌விவசா‌யிக‌ள், அதே ‌நிலை ‌நீ‌டி‌த்தா‌லஇ‌ன்னு‌ம் ‌சிஆ‌ண்டுக‌ளி‌ல் ‌‌ப‌யி‌ரசெ‌ய்ய ‌நிலமஇ‌ல்லாத ‌நிலஏ‌ற்ப‌ட்டு ‌விடு‌மஎ‌ன்றவேதனையுட‌னகூறு‌கி‌ன்றன‌ர்.

ந‌ல்ல ‌விளை‌‌நில‌ங்க‌ள் ‌விவசாய‌த்‌தி‌ற்கஉக‌ந்ததஅ‌ல்எ‌ன்றபோ‌லியாசா‌ன்றபெ‌ற்று ‌நில‌‌ங்க‌ளகைய‌ப்படு‌த்த‌ப்படுவதாகவு‌ம், ப‌ச்சைபசே‌லஎ‌ன்றகாண‌ப்படு‌ம் ‌நில‌ங்க‌ளஎ‌ல்லா‌ம் ‌வீ‌ட்டமனைகளாகவு‌ம், குடி‌யிரு‌ப்பக‌ட்டிட‌ங்களாகவு‌மமா‌‌றி வருவதகவலஅ‌ளி‌ப்பதாசமூஆ‌ர்வல‌ர்க‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

பல‌த்தா‌ல் ‌வி‌திமுறைகளை ‌மீ‌றி ‌விளை ‌நில‌ங்களையு‌ம், வள‌ங்களையு‌மஆ‌க்‌கிர‌மி‌க்கு‌மகு‌ம்ப‌ல் ‌மீதஅரசஉடனடியாநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்பதஒ‌ட்டுமொ‌த்த ‌விவசா‌‌யிக‌ளி‌னகோ‌ரி‌க்கையாகு‌ம். 

thanksto http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1009/28/1100928049_1.htm
read more...
மனைகளாக மா‌‌றி வரு‌ம் ‌விளை‌நில‌ங்க‌‌ள்!SocialTwist Tell-a-Friend

rajaraja chola devar

0 comments
read more...
rajaraja chola devarSocialTwist Tell-a-Friend

பெரிய கோவில் 1000 ஆண்டு நிறைவு விழா மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் முரசு கொட்டி தொடங்கி வைத்தர்

0 comments
 தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம் நேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கியது.

பெரிய கோவில் எனப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டி ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா 5 நாட்கள் நடக்கிறது.

இதை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், அமைச்சர் கோ.சி. மணி ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர். முதல் நிகழ்ச்சியாகத் தஞ்சை சங்கமம் நடைபெற்றது. இதையடுத்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

தஞ்சை அரண்மனை வளாகத்தில் தொல்லியல் துறை சார்பில் சிறப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை இன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

thanks to http://thatstamil.oneindia.in/news/2010/09/24/tanjore-pragadheeswarar-temple.html
read more...
பெரிய கோவில் 1000 ஆண்டு நிறைவு விழா மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் முரசு கொட்டி தொடங்கி வைத்தர்SocialTwist Tell-a-Friend

தஞ்சை அரண்மனையில் சோழர்கால கண்காட்சி: தங்கம் தென்னரசு

0 comments
rajaraja chola devar  and  ulagamaa devi
தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழா செப்டம்பர் 25, 26ம் தேதிகளில் அரசு சார்பில் நடக்கிறது. இவ்விழாவுக்காக தஞ்சை அரண்மனை வளாகத்தில் கண்காட்சி அமைப்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா முன்னிட்டு அரண்மனை வளாகத்தில் சிறப்பு கண்காட்சி அமைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். கண்காட்சி அரங்கு எவ்வாறு இருக்க வேண்டும், சோழர் கால வரலாற்று பெருமையை விளக்கும் வகையில் என்னென்ன காட்சிப்பொருள் இடம் பெற வேண்டுமென முதல்வர் அறிவுரை, ஆலோசனை, வழிகாட்டுதல் தெரிவித்துள்ளார். 


11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜராஜ சோழன் மற்றும் அவன் மனைவி லோகமாதேவி ஆகியோரின் வெண்கலச் சிலைகள் குஜராத்தில் உள்ள சாராபாய் அறக்கட்டளையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலின் இந்த 1000 ஆவது ஆண்டு நிகழ்வின் போது, அந்தச் சிலைகளை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.

அதன்படி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கண்காட்சியில், சோழர்கால செப்பு படிமம், நாணயம், கல் சிற்பம், செப்பேடு, ஓவியம், வரலாற்று தகவல் இடம் பெறும். சங்கீத மகால் உள்ளிட்ட இடங்களில் பத்து அரங்கம் அமைக்கப்படும். சோழர் கால வரலாற்றை விளக்கும் அடிப்படையில் கண்காட்சி அமையும் என்றார்.
read more...
தஞ்சை அரண்மனையில் சோழர்கால கண்காட்சி: தங்கம் தென்னரசுSocialTwist Tell-a-Friend

கீழத்தூவல் படுகொலை வீர வணக்க நாள்

0 comments
1957 செப்டம்பர் 14ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள்ள  கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்த போலீஸார், கீழத்தூவலை சேர்ந்த தவசியாண்டி தேவர், சித்திரைவேலு தேவர், ஜெகநாதன் தேவர், முத்துமணி தேவர், சிவமணி தேவர் ஆகியோரை காவல்துறையினர் கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அந்த வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டி கருவேல மரத்தில் ஐவரையும் கட்டி வைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்ற தினத்தை தேவர் சமூகத்தினர், கீழத்தூவலில் ஆண்டு தோறும் செப்டம்பர் பதினான்காம் நாள் வீர வணக்க நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்
thanks to
http://thevar-mukkulathor.blogspot.com/2010/09/blog-post_14.html
read more...
கீழத்தூவல் படுகொலை வீர வணக்க நாள்SocialTwist Tell-a-Friend

குற்றாலநாதர் கோவில் கும்பாபிஷேகம்

0 comments
குற்றாலநாதர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட தென்காசி எம்.எல்.ஏ. வீ.கருப்பசாமிபாண்டியன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்
read more...
குற்றாலநாதர் கோவில் கும்பாபிஷேகம்SocialTwist Tell-a-Friend

வெளிநாட்டு சொகுசு கார் வழக்கில் ம.நடராஜனுக்கு நிபந்தனை பிணை

0 comments
ma.natarajan
 திங்கட்கிழமை, 13 செப்ரெம்பர் 2010, 01:43.09 PM GMT +05:30 ]
வெளிநாட்டிலிருந்து சொகுசு வாகனம் வாங்கி இறக்குமதி செய்த வழக்கில் சசிகலாவின் கணவர் ம.நடராஜனுக்கு நிபந்தனை பிணை வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1994-ம் ஆண்டு லண்டனில் இருந்து சொகுசு கார் வாங்கியது தொடர்பாக ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு மோசடி செய்ததாக நடராஜனுடன் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், லண்டன் தொழில் அதிபர்கள் பாலகிருஷ்ணன், யோகேஷ் பாலகிருஷ்ணன் மற்றும் வங்கி மேலாளர் சுசரிதா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் பாலகிருஷ்ணன் தவிர மற்ற 4 பேருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து நடராஜன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இம்மனுவை ஐகோர்ட்டு விசாரித்து 4 பேரின் தண்டனைகளையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மேலும் 4 பேரும் சி.பி.ஐ. கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ள உத்தரவிட்டது.

இதன்படி இன்று சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ரவீந்திரன் முன்பு நடராஜன், பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் நேரில் ஆஜராகி ரூ.10 ஆயிரத்துக்கான 2 உத்தரவாதங்களை கொடுத்து ஜாமீன் பெற்றனர். அவர்கள் அனைவரும் வருகிற அக்டோபர் 1-ந்தேதியும் அதன்பிறகு 3 மாதத்துக்கு ஒருமுறையும் கோர்ட்டில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
thanks to http://www.newindianews.com/view.php?2b3e0AA22eeYYDD30eco4OXR2cddQQAKccd3ImM0A4b443lmmaa43ffmA3d0e3S46600
read more...
வெளிநாட்டு சொகுசு கார் வழக்கில் ம.நடராஜனுக்கு நிபந்தனை பிணைSocialTwist Tell-a-Friend

ராஜ ராஜ சோழன் வெண்கல சிலையை மீட்டுத் தர வேண்டும்; குஜராத் முதல்-மந்திரி மோடியிடம் தங்கம் தென்னரசு நேரில் வற்புறுத்தல்

0 comments

சென்னை, செப். 8-
ராஜ ராஜ சோழன் சிலையை மீட்டுத்தர உதவி செய்ய வேண்டும் என்று குஜராத் முதல்- மந்திரியிடம் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்தார். தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை முதலாம் ராஜ ராஜ சோழன் கட்டினான். பெரிய கோவில் கட்டி 1000 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசு சார்பில் வருகிற 24, 25-ந்தேதியில் விழா எடுக்கப்படுகிறது.
விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். 1000-வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கோவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ராஜ ராஜ சோழன் காலத்து 7 சிலைகளில் 5 சிலைகள் தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ளது. 2 வெண்கல சிலைகள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முதலாம் ராஜ ராஜ சோழன் வெண்கல சிலையும் ராணி சிலையும் இருப்பதாக செப்பேட்டு மூலம் தகவல் வெளியானது. தனியாருக்கு சொந்தமான “காளிகோ” அருங்காட்சியகத்தில் சிலை உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை சராபாய் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
இதையடுத்து சிலையை மீட்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்-அமைச்சர் கருணாநிதி, குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். நல்லிணக்க அடிப்படையில் அந்த சிலையை குஜராத் அரசு அன்பளிப்பாக தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக குஜராத் முதல்-மந்திரியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினார்.
தஞ்சை பெரிய கோவில் 1,000-ம் ஆண்டு விழா கொண்டாடப்படும் இந்த வேளையில் முதலாம் ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மனைவி ராணி சிலையை அங்கு இருந்தால் சிறப்பாக இருக்கும். அதனால் சிலையை வழங்கி உதவிடுமாறு கேட்டுக் கொண்டார். அமைச்சருடன் சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர் ஆர்.நாகசுவாமி சென்றிருந்தனர்.
இந்த குழு சாராபாய் தன்னார்வ தொண்டு நிறுவன டிரஸ்டி கீதா சாராபாயை நேற்று சந்தித்து முதல்- அமைச்சர் கருணாநிதியின் கடிதத்தை கொடுத்தது.
ராஜ ராஜ சோழன் உயிரோடு இருந்த காலத்தில் தஞ்சை பெரிய கோவிலை தென்னவன் மூவேந்த வேலவன் என்பவர் நிர்வாகிக்க பொறுப்பு கொடுத்திருந்தார். அவர் நன்றிக்கடனாக ராஜராஜ சோழன், அவரது மனைவி சிலையை செய்துள்ளார். அந்த 2 சிலைகளையும் 1940-களில் தொண்டு நிறுவனர் சாராபாய் வாங்கியுள்ள தாக செப்பேடு தெரிவிக்கிறது.
இதுபற்றி அருங்காட்சியக இயக்குனர் டி.எஸ். மேத்தா கூறுகையில், தமிழக குழுவினர் என்னை சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தனர். சிலைக்கான ஆதாரத்துடன் எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதி கொடுத்தால் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பி னர்களுடன் பேசி முடிவு எடுப்போம் என்றார்
thanks to http://mytamilnews.com/index.php?more=15
read more...
ராஜ ராஜ சோழன் வெண்கல சிலையை மீட்டுத் தர வேண்டும்; குஜராத் முதல்-மந்திரி மோடியிடம் தங்கம் தென்னரசு நேரில் வற்புறுத்தல்SocialTwist Tell-a-Friend

அதிமுக கூட்டணியில் இருந்து பார்வர்டு பிளாக் விலகவில்லை: பி.வி.கதிரவன்

0 comments
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின், மாநில தலைமை செயற்குழு கூட்டம் மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுசெயலாளர் பி.வி.கதிரவன் செய்தியாளர்களிடம்,’’மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்டுவதற்கு மாநில அரசின் ஒப்புதலுடன் மத்திய அரசு பரிசீலனை செய்ததற்கு நாங்கள் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

ஆனால் காலதாமதம் செய்யாமல் தரம் உயர்த்தும் பணிகள் முடிந்து திறப்பு விழா காணும் விமான நிலையத்துக்கு அந்த விழாவிலேயே முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும்.

எங்கள் கட்சி தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அந்த கூட்டணி தொடரும்.
கடந்த 4-ந் தேதி தேனியில் நடந்த ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பார்வர்டு பிளாக் விலகி விட்டதாக ஒரு பொய்யான செய்தியை சிலர் கூறி வருகிறார்கள். அது உண்மையல்ல.
விலைவாசி உயர்வுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எங்கள் கட்சியினர் கலந்து கொள்வார்கள்.
அடுத்தமாதம் (அக்டோபர்) 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்த தீர்மானித்துள்ளோம்’’என்று தெரிவித்தார்.
thanks http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=39264
read more...
அதிமுக கூட்டணியில் இருந்து பார்வர்டு பிளாக் விலகவில்லை: பி.வி.கதிரவன்SocialTwist Tell-a-Friend

asset of party in india

0 comments

read more...
asset of party in indiaSocialTwist Tell-a-Friend

பூலித்தேவன் மீது ஆணை . பிரபாகரன் மீண்டும் வருவார்

0 comments
வெள்ளையனை நோக்கி பூலித்தேவன் பாய்ந்தார்! சிங்களவனை நோக்கி பிரபாகரன் பாய்ந்தார்!: காசிஆனந்தன்[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:20.19 AM GMT +05:30 ]


வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் கொடுமை எத்தனை?எத்தனை? இவ்வாறு நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார்.
தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் கருணாஸ்,சசிகலா கணவர் எம்.நடராஜன் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இவ்விழாவில் கவிஞர் காசி ஆனந்தன் தனதுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

2 லட்சம் ஈழத் தமிழர்களையும் 40 ஆயிரம் விடுதலைப்புலிகளையும் ஈவு இரக்கமற்று கொன்று குவித்தது சிங்கள இராணுவம்.
ஈழத்தில் நாங்கள் போராடவில்லை. போராட்டம் எங்களுக்கு திணிக்கப்பட்டது. அதனால்தான் நாங்கள் போராடுகிறோம்.

வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் கொடுமை எத்தனை?எத்தனை?

கொடூரத்தின் உச்சமாக தாயின் கண் முன்னே மகளை மானபங்கப்படுத்தி அவளது பிறப்புறுப்பில் குண்டு வைத்து வெடிக்கச்செய்தான். அந்த வலியால் இன்னும் துடித்துக்கொண்டிருக்கிறோம்’’என்று பேசினார்.

இவ்விழாவில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன் பேசுகையில்,
பூலித்தேவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். பிரபாகரன் மீண்டும் வருவார். இயக்கத்திற்கு தலைமையேற்று வழிநடத்துவார் என்றார்.


thanks to http://www.tamilwin.com/view.php?2a26QVl4b42X98se4b46IP5ce2bf1GU2cd3QipD2e0dVZLuSce03g2FZ0cd3tjoCd0
read more...
பூலித்தேவன் மீது ஆணை . பிரபாகரன் மீண்டும் வருவார்SocialTwist Tell-a-Friend

கண்ணன் பிறந்த நாள் திருநாள்

0 comments
கோகுல கண்ணன் , கண்ணன் பிறந்த நாள் திருநாள்
read more...
கண்ணன் பிறந்த நாள் திருநாள்SocialTwist Tell-a-Friend