முதலாளிமார்களுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது: தொண்டமான்

0 comments

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த இனிமேல் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்தும் நோக்கில் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடைபெற்ற எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையும் நேற்றைய தினம் தோல்வியில் நிறைவடைந்துள்ளது. தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 290 ரூபா சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்த வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வரும் அதேவேளை, 360 ரூபாவாக நாள் சம்பளத்தை அதிகரிக்க முடியும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

நாள் சம்பள உயர்வை வலியுறுத்தும் வகையில் கடந்த பத்து தினங்களாக பெருந்தோட்டங்களில் ஒத்துழையாமை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முதலாளிமார் சம்மேளனத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை எனவும், தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கொட்டகலை நகரில் தொழிற்சங்கங்களுடன் நடைபெறவுள்ள கூட்டத்தில் எவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைகளில் அரசாங்கம் தலையீடு செய்ய உள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நன்றி http://www.tamilwin.com/view.php?2aSWn5e0dRj0C0ecGG7N3b4X9EC4d3g2h3cc2DpY2d426QV2b02ZLu3e
read more...
முதலாளிமார்களுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது: தொண்டமான்SocialTwist Tell-a-Friend

ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் செல்லமாட்டேன்.

0 comments
(பிரிட்டிஷ் பிரதமருக்கு பிரிட்டன் இராணுவ வீரர் ஒருவர் எழுதிய கடிதம்)
நான் 2006-இல் ஆப்கனுக்கு அனுப்பப்பட்டேன். துவக்கத்திலிருந்தே அது சவால் மிக்கதாக இருந்தது. கஞ்சா வயல்களை அழிப்பது நோக்கமா? தேசப்பாதுகாப்புக்கா? எந்தக் காரணத் திற்காக நாங்கள் அங்கே இருக்கிறோம்? பெரும் குழப்பமாக இருந்தது. காரணங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருந்தது.காயமடைந்தவர்களும், சேவைக் காலம் முடிந்தவர்களும், இறந்தவர்களின் சவப்பெட்டிகளும் தாய்நாட்டிற்குத் திரும்ப அனுப்பப்பட்டுக் கொண்டே இருந்ததைப் பார்த்துக் கொண்டு இருந்த நான் நிலைகுலைந்து போனேன்.செப்டம்பர் 2, 2006 அன்று ஆப்கனில் 14 பேருடன் ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது என் நினைவைவிட்டு அகல மறுக்கிறது. ஒரு ஜேசிபி வண்டியில் ரோட்டில் மேலும் கீழும் அலைந்து சவப்பெட்டி களை டிரக்கில் ஏற்றிக்கொண்டிருந்த டிரைவர்களில் நானும் ஒருவன். சண்டை கூட இல்லாமல் ஏற்பட்ட அர்த்தமற்ற வீண்சாவுகள் அவை.எனது முதல் சேவைக் காலம் முடிந்து நாடு திரும்பிய நான், அந்த நாட்டுக்கு என்ன நன்மை செய்தேன் என்பதைக் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு அவமானமாக இருந்தது. இருண்ட நாட்கள் அவை. 2007-இல் ஆப்கானிலிருந்த என்னை, அதிகாரி தகுதிக்கு உயர்த்தி இங்கிலாந்திலேயே பணியமர்த்தினார்கள்.இராணுவத்தில் சேர்ந்தபோது ஆர்வம் நிறைந்த புத்தம் புதிய ஒரு படை வீரனாக இருந்தேன். அதற்குப் பெருமிதம் கொண்டேன். ஆனால், இப்பொழுது ஒரு அதிகாரியாகப் பணியிலிருக்கும் நான், என் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகிறேன். துன்புறும் ஆப்கன் மக்களின் நல்வாழ்வையும், அங்கிருக்கும் நம் வீரர்களின் நலத்தையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் துயரடைவதை அனுமதிக்கக்கூடாது.இராணுவ விதிகளின்படி வெளிநாடுகளுக்கு பணிபுரிய அனுப்பப்படும் வீரர்களின் பணிக்காலம் 3 வருடங்களில் 13 மாதங்களுக்கு மிகக்கூடாது என்பதை மீறி எங்களை திரும்பவும் ஆப்கானிஸ் தான் செல்லப் பணித்தபோது என்னால் அதற்கு இயலவே முடியவில்லை.நான் தப்பி ஓட வேண்டியிருந்தது. தென்கிழக்கு ஆசிய நாட்டுக்குச் சென்று விட்டேன். நான் ஏராளமாகக் குடித்தேன். மன அழுத்தம் என்ற வார்த்தை சர்வ சாதாரணமாகப் புழங்குகிறது. ஆனால், நான் மகிழ்வற்று இருந்தேன் என்பது மாத்திரம் உறுதி.எனது படைப்பிரிவு வீரர்களோடு நான் தொடர்பு கொள்ளவில்லை. தலை மறைவாகும் வீரர்களைப் பற்றிய தகவல்கள் அவர்களுக்குத் தெரிந்திருப்பது, அவர்களுக்கு இக்கட்டை ஏற்படுத்தும் என்பதால் அதைத் தவிர்த்தேன். சில மாதங்கள் கழித்து ஆஸ்திரேலியா சென்ற நான், பிறகு அவர்களோடு தொடர்பு கொண்டேன். அவர்கள் எனக்கு ஆதரவு தந்தார்கள். இராணுவம் என்னைப் பிடித்துவிடும் என்று எண்ணிக் கொண் டிருந்த வேளையில், பிறகு எனக்கு மனைவியாகப் போகும் கிளைரை சந்தித்தேன். எனக்கு அவள் உருக்குப்போல் உறுதுணையாக இருந்தாள். அவள்தான் என்னை தலைமறைவு வீரர்களுக்கான நேரடித் தொலைபேசியில் தொடர்புகொள்ள வைத்தாள். கடினமாக இருந்தாலும் அதை செய்ய வேண்டியதாயிற்று.மே மாதம் இங்கிலாந்து திரும்பினோம். விமான நிலையத்தில் கைதாவேன் என நினைத்தேன். அங்கு யாரும் வரவில்லை. எனது படைப்பிரிவில் என்னை ஒப்புவித்துக்கொண்டேன். இராணுவ நீதிமன்றத் தின் விசாரணையை எதிர்நோக்கி இருக்கிறேன். இரண்டு வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.(பிரிட்டிஷ் பிரதமருக்கு பிரிட்டன் இராணுவ வீரர் ஒருவர் எழுதிய கடிதம்)-“தி இந்து” நாளிதழிலிருந்துதமிழில் மிலிட்டரி பொன்னுசாமி, திருப்பூர்.
நன்றி http://www.muthalmanithan.com/2009/09/blog-post_99.html
read more...
ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் செல்லமாட்டேன்.SocialTwist Tell-a-Friend

நமது ஆர்குட் தேவர் சந்திப்பு

2 comments
நமது ஆர்குட் தேவர் சந்திப்பு













Detailed Address to the Function
விழா நடைபெறும் இடம் ....

பசும்பொன் தேவர் மண்டபம்

#100 , Habibullah Road
T. Nagar
Chennai -600017

Land Mark :
Near to Kodampakkam Railway Station

Near to kodampakkam New Bridge
நமது சிறப்பு விருந்தினர்
நமது நான்காவது சந்திப்பு, அறக்கட்டளை மற்றும் இணைய தளம் துவக்கம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இந்திய மாநிலங்களவை உறுபினரும், நமது சமுதாயத்தை சேர்ந்தவருமான மாண்புமிகு. திருநாவுகரசர் அவர்கள் வர சம்மதித்து உள்ளார்.

மாண்புமிகு திருநாவுகரசர் அவர்கள் நமது நிகழ்ச்சிக்கு வர சம்மதித்தது நமக்கு எல்லாம் ஒரு மிகப்பெரிய பெருமை. அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக இருந்தாலும், அவருடைய எளிமை, உயர்த்த பண்பு, ஏழை எளியவர்களுக்கு ஜாதி மத வேறுபாடின்றி உதவும் உள்ளதால் அனைவர் மனதிலும் உயர்ந்து நிற்பவர்.அறந்தாங்கி அரசர், வள்ளல் என்ற பட்ட பெயர்களும் இவருக்கு உண்டு..

அவரை அழைக்க சென்று, சிறிது நேர காத்திருப்பிற்கு பின் அவரை சந்தித்த அனுபவம் மிக உன்னதமானது. அவருடைய பேச்சு, கனிவு, நாம் என்ன செய்ய போகிறோம் என்று அக்கறையுடன் விசாரித்து, அறிவுரை கூறி, தன்னால் என்ன செய்யமுடியுமோ அந்த உதவிகளை தயங்காமல் கேட்கவும் என்றும் உறுதி அளித்தார்.

read more...
நமது ஆர்குட் தேவர் சந்திப்புSocialTwist Tell-a-Friend

ராகுல் அறியாமையால் பேசுகிறார்-தா.பாண்டியன்

0 comments
புதுக்கோட்டை& சென்னை: தேசிய நதிகளை இணைப்பது சுற்று சூழலுக்கு ஆபத்தானது என்று ராகுல் காந்தி கூறியிருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னையில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தியிடம் தேசிய நதிகளை இணைக்கும் திட்டம், பேப்பரில் மட்டும்தான் உள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லையே? என்று நிருபர்கள் கேட்டனர்.அதற்கு அவர் பதிலளிக்கையில், தேசிய நதிகளை இணைப்பது என்பது மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் யோசனையாகும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இது இந்த நாட்டின் சுற்றுப்புற சூழலை மிகவும் ஆபத்தான பாதைக்கு கொண்டு செல்லும் திட்டமாகும். இந்தத் திட்டத்தை தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்க மாட்டேன். இயற்கை மிகவும் பலம் வாய்ந்தது. அதற்கு முரணான பெரிய காரியங்களை செயல்படுத்துவது நல்லதல்ல என்றார்.ஆனால், உங்கள் கூட்டணியில் உள்ள முதல்வர் கருணாநிதி , இத் திட்டத்தை வலியுறுத்துகிறாரே என்று சுட்டிக் காட்டியபோது, இது எனது தனிப்பட்ட கருத்து என்று பதிலளித்தார் ராகுல்.மேலும் நீர்ப்பாசனத்துக்காக உள்ளூர் நதிகளை இணைப்பது தவறல்ல. ஆனால் தேசிய அளவில் பெரிய நதிகளை இணைப்பது ஆபத்தானது என்றார்.ராகுலின் இந்தக் கருத்துக்கு தா.பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,தேசிய நதிகளை இணைப்பது மிக அவசியமானது. பல நிபுணர்களும் ஆய்வு செய்து தான் தேசிய நதிகளை இணைக்கலாம் என்று கூறியுள்ளனர். நதிகள் இணைப்பு பல நாடுகளிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.இந்த விஷயத்தில் ராகுல் காந்தி அறியாமையால் பேசுகிறார் நன்றி http://thatstamil.oneindia.in/news/2009/09/11/tn-rahul-is-ignorant-of-facts-says-tha-pandian.html
read more...
ராகுல் அறியாமையால் பேசுகிறார்-தா.பாண்டியன்SocialTwist Tell-a-Friend

ஆண் பிறப்புவிகிதம் உலக அளவிலும் இந்திய அளவிலும் குறைந்து கொண்டே வருகிறது....

0 comments
ஆண் பிறப்புவிகிதம் உலக அளவிலும் இந்திய அளவிலும் குறைந்து கொண்டே வருகிறது....

ஆண்கள் சராசரி வயதும் மிக குறைந்து கொண்டே வருகிறது....
காரணம் மனஅழுத்தம்,குடிபழக்கம்,உலகின் மோசமான போக்குக்கு பக்குவபடுத்தால் வரும் இயலாமை.......

பெண்கள் வேறு வழியில்லாமல் பல்வேறு காரணங்களுக்காக வேலைக்கு போவது அதிகரித்து வருகிறது...

இதே நிலைமையை நான் தாய்லாந்தில் கண்டேன்...
ஆண்கள் குடிபழக்கம் மற்றும் சூதாட்ட பழக்கத்தினால் ஈடுபட்டதால் குடும்பத்தை காப்பாற்ற வேறு வழியில்லாமல் பெண்கள் அனைத்து துறைகளிலும் மிக அதிக அளவில் வேலைக்கு செல்கிறார்கள்...
இன்றைய சூழ்நிலையில் ஆண்கள் தவபுருஷர்களாக அல்லது அனைத்து தனிப்பட்ட இன்பத்தை துறந்தால் மட்டுமே முன்னேறகூடிய சூழ்நிலை...எத்தனை பேருக்கு அந்த பக்குவம் வரும் ..

கஷ்டம்தான்தனிபட்ட கருத்து அல்லது கேள்வி....ஏன் உலக அளவிலோ ( ) இந்திய அளவிலோ பெண்கள் முதல் 1000 கோடீஸ்வர பட்டியலில் (பரம்பரை சொத்து இல்லாமல்) வர முடியவில்லை?அதே மாதிரி அமெரிக்கா,ஐரோப்பாவில் கூட நான் பார்த்த வரையில் பெண்களை பெற்றோர்கள் கட்டுகோப்பாக 18 வயது வரை வளர்ப்பதை காண முடிகிறது...சிலநேரங்களில் மும்பை,சென்னை யில் வாழும் சில குடும்ப பெண்கள் மிக அதிக அளவில் சுதந்திரமாக(!) அமெரிக்கா,ஐரோப்பாவை விட இருக்கிறார்கள்...இது பெற்றோர்கள் தவறாஅல்லது சமூகத்தின் தவறா?
read more...
ஆண் பிறப்புவிகிதம் உலக அளவிலும் இந்திய அளவிலும் குறைந்து கொண்டே வருகிறது....SocialTwist Tell-a-Friend

தமிழ்நாட்டில் தமிழனுக்கு இடம் இருக்காது-ராமதாஸ்

0 comments
சென்னை: இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழனுக்கு இடம் இல்லை என்ற நிலை உருவாகும். சென்னையில் தற்போது தமிழனுக்கு சொந்தமாக இடம் இல்லை.

தமிழ்நாடு உழவர் பேரியக்கம், தாளாண்மை உழவர் இயக்கம், பசுமைத் தாயகம், காஸா ஆகிய அமைப்புகளின் சார்பில் `தமிழ்நாடு வேளாண்மை மன்ற சட்டமும் மரபு வேளாண்மை அறிவுரிமையும்' என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது.


இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசுகையி்ல், அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை மன்ற சட்டத்தின்படி வேளாண் பட்டப்படிப்பு முடித்து ரூ. 1000 கட்டி, அந்த மன்றத்தில் உறுப்பினராக சேர்ந்தால்தான் விவசாயம் பற்றிய ஆலோசனைகள் வழங்க முடியும். வேறு யாரும் ஆலோசனைகள் வழஙகினால் முதல் தடவை ரூ.5,000மும், 2வது தடவை ரூ.10,000 மற்றும் 6 மாத சிறை தண்டனையும் விதிக்க வழி உள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

ஏற்கனவே பசுமைப்புரட்சி என்ற பெயரில் இயற்கை வேளாண்மையை அழித்து விட்டனர். வாழ்க்கை ஆதாரங்களை அழிக்க தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்கிறார்கள் என்றார்.விவசாயிகளே இல்லாத நிலை உருவாகும்:உழவர் பாதுகாப்பு மற்றும் உயிரித் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் தேவிந்தர் சர்மா பேசுகையில், இந்த வேளாண் சட்டம் காரணமாக 2020ம் ஆண்டு தமிழகத்தில் விவசாயிகளே இல்லை என்ற நிலை உருவாகும்.விவசாயிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கும் இந்த சட்டத்தை எதிர்த்து போராட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்கடியால் வேளாண் தொழிலில் இருந்து விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது என்றார்.எம்எல்ஏக்களுக்கு எதுவுமே தெரியவில்லை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மகேந்திரன் பேசுகையில்,தமிழக சட்டப்பேரவையில் கடைசியாக நடந்த கூட்டத் தொடரில் ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் எவ்வித விவாதமுமின்றி நிறைவேற்றப்பட்டன. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது போல் உள்ளது.குறிப்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு வேளாண்மை மன்றச் சட்டம் குறித்து விவாதம் நடைபெறாததால், அச்சட்டத்தில் உள்ள அம்சங்கள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. பேரவை உறுப்பினர்களுக்கு எதுவுமே தெரியாத நிலையில் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது பெரும் மோசடியாகும் என்றார்.சாவு மணி சட்டம்:தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், இந்தச் சட்டம் இந்தியாவின் பாரம்பரிய விவசாய முறைகளுக்கு சாவு மணி அடிக்கும் சட்டமாகும். இந்திய விவசாய முறை என்பது 5,000 ஆண்டு கால பாரம்பரிய அறிவின் தொகுப்பாகும். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகளை உருவாக்கிய பெருமைக்குரியவர்கள் நம் விவசாயிகள்.அத்தகைய பாரம்பரிய அறிவை நாம் ஒரே நாளில் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிவிட முடியாது. பாரம்பரிய விவசாய அறிவின் அடிப்படையில்தான் விவசாயத் துறையை நவீனப்படுத்த வேண்டும். மாறாக பன்னாட்டு பணக்கார நிறுவனங்களின் நலன்களுக்காக, ஒட்டுமொத்த இந்திய விவசாயத்தையும் காவு கொடுப்பதை அனுமதிக்க முடியாது என்றார்.

உழவர் பேரியக்கத்தின் நிறுவனரான ராமதாஸ் பேசுகையில்,
வெளி மாநிலக்காரர்கள் நிலத்தை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். சிற்றூர் முதல் கிராமம் வரை விவசாய நிலங்களை வாங்கிப் போட்டு அதை ஏதோ ஒரு ஆங்கில பெயரில் நகராக மாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
தமிழ்நாடு மாநில வேளாண்மை சட்டம்-2009 தேவையில்லாதது, அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை இந்தக் கருத்தரங்கில் பேசியவர்கள் எடுத்துரைத்தனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து, இந்த சட்டத்தினால் ஏற்படும் தீமையை பற்றி அவர்களுக்கு விளக்குவதற்காக ஒரு கருத்தரங்கிற்கு விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்யலாம். வருகிற சட்டமன்ற உறுப்பினர்கள் வரட்டும்.அடுத்ததாக, விவசாய பிரதிநிதிகள் சேர்ந்து முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து, இந்த சட்டத்தில் உள்ள குறைபாடுகள், தீமைகள், அந்த சட்டத்தால் வேளாண் சமுதாயம் பாதிக்கப்படுவது பற்றி விவாதிக்கலாம். அவரிடம் மனு கொடுக்கலாம்.அதற்கும் தீர்வு ஏற்படாமல் போனால், அடுத்ததாக அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து சென்னையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டும். இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழனுக்கு இடம் இல்லை என்ற நிலை உருவாகும். சென்னையில் தற்போது தமிழனுக்கு சொந்தமாக இடம் இல்லை. வெளி மாநிலக்காரர்கள் நிலத்தை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். சிற்றூர் முதல் கிராமம் வரை விவசாய நிலங்களை வாங்கிப் போட்டு அதை ஏதோ ஒரு ஆங்கில பெயரில் நகராக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.எல்லாம் பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலம், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விளை நிலங்கள் மாற்றப்படுகின்றன. அதற்காகவும் நாம் போராட வேண்டியுள்ளது. இன்னும் நாம் போராட வேண்டிய தளங்கள் ஏராளமாக உள்ளன என்றார்.இயற்கை விவசாயத்தை அழித்து விட்டனர்:

சட்டம் நிறுத்தி வைப்பு-கருணாநிதி:இந் நிலையில் விவசா‌யிக‌ளி‌ன் கரு‌த்து‌க்களுக்கு ம‌தி‌ப்பளித்து த‌மி‌ழ்நாடு வேளா‌ண்மை ம‌ன்ற‌ச் ச‌ட்ட‌ம்-2009யை ‌நிறு‌த்‌தி வை‌ப்பதாக முதல்வர் கருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
நன்றி http://thatstamil.oneindia.in/news/2009/09/10/tn-ramdoss-slams-new-agri-act.html
read more...
தமிழ்நாட்டில் தமிழனுக்கு இடம் இருக்காது-ராமதாஸ்SocialTwist Tell-a-Friend

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் 600 பேர் இன்று முதல் ஒட்டுமொத்த விடுப்பு

0 comments
டெல்லி: ஜெட் ஏர்வேஸ் விமானிகள் 600 பேர் ஒட்டுமொத்த விடுப்பில் (மாஸ் லீவ்) சென்றுவிட்டதால், இன்று ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் பல ரத்தாகிவிட்டன. பல விமான நிலையங்களில் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுவரை 34 விமானங்கள் ரத்தாகியுள்ளன. சென்னை, பெங்களூரு, டெல்லி , மும்பை மற்றும் நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் ஜெட் ஏர்வேஸில் பயணிக்கக் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் இதனால் பெரும் தவிக்குள்ளாகியுள்ளனர். ஏர் இந்தியா உள்ளிட்ட இதர விமானங்களில் இந்தப் பயணிகளை ஏற்றி அனுப்ப ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் பேசி வருகிறது. ஜெட் ஏர்வேஸில் சில தினங்களுக்கு முன் இரு மூத்த பைலட்டுகளை நீக்கியது நிர்வாகம். இவர்களை மறுபடியும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மற்ற பைலட்டுகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.ஆனால் நிர்வாகத் தரப்பிலிருந்து இதற்கு எந்த பதிலும் தரப்படாததால், இப்போது ஒட்டுமொத்தமாக விடுப்பில் செல்லும் டெக்னிக்கைக் கையாண்டுள்ளனர். ஸ்ட்ரைக் நடத்த ஏற்கெனவே நோட்டீஸ் தந்திருந்தது விமானப் பைலட்டுகள் சங்கம். இதனை உடனடியாக தொழிலாளர் நல ஆணையருக்கு அனுப்பிவிட்டது ஜெட் ஏர்வேஸ். எனவே 600 பைலட்டுகள் சிக் லீவ் என்று விண்ணப்பம் கொடுத்துவிட்டு பணிக்கு வராமல் நின்றுவிட்டனர். 'இது திட்டமிட்ட ஸ்ட்ரைக்தான். நிர்வாகத்தின் நன்மதிப்பையும், செயல்பாட்டையும் குலைக்கும் செயல். இப்போது நிர்வாகத்தைச் சீரமைக்கும் பணியில் உள்ளது ஜெட் நிர்வாகம். இந்த நேரத்தில் பைலட்டுகள் இப்படிச் செய்வது சட்டவிரோதம். ஆனாலும் முடிந்தவரை அதிக அளவு விமானங்களை இயக்கிக் காட்டுவோம்' என ஜெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரம் விலக்கப்பட்ட பைலட்டுகளை மறுபடியும் பணிக்கு எடுப்பது குறித்து பேசலாம் என்று ஜெட் ஏர்வேஸ் தலாவர் நரேஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஜெட் ஏர்வேஸில் மொத்தம் 1000 பைலட்டுகள் உள்ளனர். இவர்களில் 600 பேர் மாஸ் லீவில் சென்றுள்ளதால், மிச்சமிருப்பவர்களை வைத்து சமாளிக்க முயன்று வருகிறது ஜெட் ஏர்வேஸ்.சென்னையில் 6 விமானங்கள் ரத்து:பைலட்டுகளின் இந்த நடவடிக்கையால் சென்னை யில் இருந்து புறப்படும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 3 சர்வதேச விமானங்கள் ஆகும்.விமானத்துறை செயலருடன் கோயல் சந்திப்பு:இந் நிலையில் விமானப் போக்குவரத்து துறை செயலாளரை சந்தித்து தனது நிறுவன விவகாரம் குறித்து ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல் பேச்சு நடத்தவுள்ளார்.சட்டத்துக்கு புறம்பானது-நீதிபதிகள்...இந் நிலையில் இந்த வேலைநிறுத்தம் சட்டத்துக்கு புறம்பானது. விமானிகள் உடனடியாக வேலைநிறுத்தத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எஸ்மா பாயுமா...வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் (எஸ்மா) விமானிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
நன்றி http://thatstamil.oneindia.in/news/2009/09/08/business-jet-airways-flights-cancelled-as-pilots.html
read more...
ஜெட் ஏர்வேஸ் விமானிகள் 600 பேர் இன்று முதல் ஒட்டுமொத்த விடுப்புSocialTwist Tell-a-Friend

"சனல் - 4" புதிய வீடியோப்படங்கள் முகாம் சேற்றுத் தரையில் சக்தி இழந்து துவண்டு கிடக்கும் அகதிகளின் கோலம்! - (வீடியோ இணைப்பு)

0 comments
"சனல் - 4" புதிய வீடியோப்படங்கள் முகாம் சேற்றுத் தரையில் சக்தி இழந்து துவண்டு கிடக்கும் அகதிகளின் கோலம்! - (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 08 செப்ரெம்பர் 2009, 11:51.41 AM GMT +05:30 ]
வன்னியில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எந்தளவுக்கு மோசமான நிலையில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் புதிய காணொலியை பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்டிருக்கின்றது.
கடுமையான நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் கூட அவர்களுக்கு மருந்து ஏற்றப்படும் நிலையில் தரையில் படுத்திருப்பதை இந்த காணொலி உறுதிப்படுத்துகின்றது. வயதான, பலவீனமான ஒருவர் தனது முகத்தில் மொய்த்துக்கொண்டிருக்கும் இலையான்களை விரட்டுவதற்குக் கூட முடியாதவராக மண் தரையில் படுத்துக்கடப்பதை இதில் காண முடிகின்றது. வவுனியாவில் உள்ள முகாம்களில் செல்லிடப்பேசி கமராவை பயன்படுத்தி இந்த காணொலி இரண்டு வார காலத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மழை காலம் தொடங்கியிருப்பதால் இந்த முகாம்களின் நிலைமை மேலும் மோசமடையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ஒரு நிலையில் இந்த காணொலி வெளியாகி இருப்பது கவனிக்கத்தக்கது.
நன்றி http://www.tamilwin.com/view.php?2aaME9X9b0bcDDpYa00eccC0jt30cc3ZZLuu24d336Wn544b33VVQ664d4e0UG7fdd0eePh2ggde
read more...
"சனல் - 4" புதிய வீடியோப்படங்கள் முகாம் சேற்றுத் தரையில் சக்தி இழந்து துவண்டு கிடக்கும் அகதிகளின் கோலம்! - (வீடியோ இணைப்பு)SocialTwist Tell-a-Friend

சென்னையில், இலங்கை தூதரகம் முன் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

0 comments


சிங்கள அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்தும், இலங்கை பத்திரிகையாளர் திஸநாயகத்தை விடுவிக்க கோரியும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் இலங்கை துணைத் தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், துணைசெயலாளர் சி.மகேந்திரன், விஜய டி.இராஜேந்தர், ரவீந்திரதாஸ், சீ.ஆர்.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்
read more...
சென்னையில், இலங்கை தூதரகம் முன் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்SocialTwist Tell-a-Friend

நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு

0 comments
நோர்வே நாட்டில் செயல்பட்டு வரும் சிவப்புக் கட்சி தாம் தமிழீழக் கோட்பாட்டிற்கு வெளிப்படையாக ஆதரவு தரும் என தெரிவித்துள்ளது. பல புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் பல அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அக்கட்சிகள் இதுவரை கூறாத ஒன்றை நோர்வே நாட்டில் இயங்கி வரும் இந்த அரசியல் கட்சி தெரிவித்துள்ளது. இக்கட்சியானது வெளிப்படையாகத் தாம் தமிழீழக் கோட்பாட்டை அங்கீகரிப்பதாகக் கூறியிருப்பது நல்லதொரு முன்னுதாரணம்.
ஏனைய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் இதைப் பின்பற்றும் என்பதில் ஐயமில்லை. வருகின்ற நோர்வே இடைத் தேர்தல்களில் போட்டியிடவுள்ள இக்கட்சி மேலும் குறிப்பிடுகையில், தமது வேட்பாளர்களுக்கு இலங்கைத் தமிழர்களும் வாக்களித்தால் தாம் வெற்றிபெறுவது நிச்சயம் எனத் தெரிவித்துள்ளது. நோர்வே நாட்டில் வசிக்கும் தமிழர்களில் சுமார் 8000 த்திற்கும் அதிகமானேர் வாக்குப் போடத் தகுதியுள்ளவர்கள். இவர்கள் அனைவரும் இக்கட்சிக்கு வாக்களித்தால் குறைந்த பட்சம் 3 எம்.பிக்கள் ஆவது பாராளுமன்றம் செல்ல வாய்ப்பிருக்கிறது.
மற்றைய அரசியல் கட்சிகளை புறந்தள்ளி எவ்வாறு ஒரு அரசியல் கட்சிக்கு தாம் அதரவை வழங்குவது என்ற குழப்பத்தில் நோர்வே தமிழ் மக்கள் காணப்பட்டனர். இருப்பினும் தற்போது சிவப்புக் கட்சி தாம் தமிழீழக் கோட்பாட்டை நேரடியாகவே அதரிக்கும் என்று அறிவித்தல் விட்டுள்ளதால், அனைத்துத் தமிழர்களும் இனி இக் கட்சிக்கே வாக்களிப்பர் என நோர்வே தமிழர்கள் தெரிவித்துள்ளனர். எது எவ்வாறு இருப்பினும் தமிழீழம் காண்பதே இறுதி நோக்கம் என்று செயல்படும் அனைத்து நோர்வே தமிழர்களும் ஒன்றுசேர வேண்டும், தமிழர்களின் பலம் உலகறியச் செய்யவேண்டும் என்பதே எமது கடமையும் ஆகும்.
நன்றி http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1252420867&archive=&start_from=&ucat=3&
read more...
நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவுSocialTwist Tell-a-Friend

சீன ஊடுருவல்-அமுக்கப் பார்க்கும் வெளியுறவுத்துறை

0 comments
டெல்லி: இந்தியாவுக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவியது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையும் பாதுகாப்புத்துறையும் மாறுபட்ட குரலில் பேசி வருகின்றன.காஷ்மீரின் லடாக் பகுதிக்குள் சீன ராணுவம் நுழைந்து சிவப்பு சாயம் கொண்டு சீனா என்று எழுதி அதை தனது எல்லையாக குறித்துவிட்டுச் சென்றுள்ளது.ஆனால், இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறையும் பாதுகாப்புத்துறையும் மாறுபட்ட குரலில் பேசி வருகின்றன.குறிப்பாக சொதப்பல்களுக்குப் பேர் போன வெளியுறவுத்துறை இது ஒரு பிரச்சனையே அல்ல என்று சொல்லி விவகாரத்தை மூடி மறைக்க முயன்று வருகிறது.அதே நேரத்தில் பாதுகாப்புத்துறை சீனாவின் இந்தச் செயல் மிக ஆபத்தானது என்று எச்சரித்துள்ளது. இது குறித்து ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் சீனாவுடன் பேசப்படும் என்றும் கூறியுள்ளது.ஆனால், வெளியுறவுத்துறையோ ஒன்றுமே நடக்காதது மாதிரி விவகாரத்தை அப்படி அமுக்க முயன்று வருகிறது.இது குறித்து சீனாவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,சீன ஊடுருவல் தொடர்பாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகளை நானும் பார்த்தேன். அவர்களுடைய அடிப்படை கருத்துகளே தவறானதாகும். செய்திகளை உருவாக்குவதே செய்தி வர்த்தகத்தின் இயற்கையான நடைமுறை. உணர்ச்சிகரமான நிகழ்வுகளை செய்தியாக்குவதும் அதில் ஒரு வகை.எனினும், 30க்கும் மேற்பட்ட டி.வி. சேனல்களில் காட்டப்பட்ட படங்கள் குறித்து மத்திய அரசு சரி பார்க்கும் என்றார்.வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில்,இந்திய-சீன எல்லை மிக அமைதியாக உள்ளது. மற்ற நாடுகளுடன் உள்ள பிற எல்லைகளை ஒப்பிடும்போது இந்த எல்லை மிக அமைதியாக இருக்கிறது. அங்கு எந்த பிரச்சினையும் இல்லை.நமது எல்லைகள் பாதுகாப்பாக உள்ளது என அனைவருக்கும் உறுதி கூறுகிறேன். தற்போதைய அத்துமீறல் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்.இந்தியாவின் வான் எல்லைக்குள் நுழைந்தது குறித்து சீனாவிடம் ஏற்கனவே விளக்கம் கேட்டுள்ளோம். தரை வழியாக இந்திய-சீனா இடையே சுமார் 3,000 கி.மீ. நீள எல்லை உள்ளது. இது போன்ற அத்துமீறல்கள் தொடர்பாக ஒரு செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இத்தகைய பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றார் பொத்தாம் பொதுவாக.ஆனால், வெளியுறவுத்துறை இவ்வாறு கூறினாலும் பாதுகாப்புத்துறை சீனாவின் செயல்களை எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும் என்கிறது.இது குறித்து சீன எல்லைப் பகுதி ராணுவ அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் பேசுவர் என்றும் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.இதற்கு முன்னரும் இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் பல முறை ஊடுருவியிருந்தாலும் இந்தியாவுக்குள் சிவப்பு வண்ணத்தால் சீனா என்று எழுதிவிட்டுப் போனது இதுவே முதல் முறை என்கின்றனர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.சீனா மறுப்பு:இந் நிலையில் சீன வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்ததாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை. அது போன்ற சம்பவம் நடக்கவே இல்லை. எல்லைப் பிரச்சனை குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலமாக நியாயமான தீர்வு காணவே சீனா விரும்புகிறது என்று கூறப்பட்டுள்ளது.காங்கிரஸ் கண்டனமாம்...ஊடுருவல் ஒரு பெரிய பிரச்சனையே இல்லை என்று காங்கிரஸ் அமைச்சரான எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ள நிலையில், இந்திய எல்லையில் அத்துமீறி சீனா நுழைந்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், சீனாவின் அத்துமீறல் கண்டனத்துக்குரியது. இது குறித்து வெளியுறவுத் துறையும், பாதுகாப்புத் துறையும் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தப் பிரச்னை குறித்து உயர் நிலையில் விவாதிக்கப்படுகிறது. சீனாவுக்கும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் கூறுகையில், சீனாவின் அத்துமீறலை அரசு மிகச் சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொண்டுள்ளது.சீன அரசிடம் தனது கடுமையான கண்டனங்களை இந்தியா தெரிவிக்க வேண்டும். கடந்த காலங்களில் சீனாவின் அத்துமீறல் குறித்து அருணாசலப் பிரதேச பாஜக எம்.பிக்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி உள்ளனர்.இந்திய, வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை சந்திக்கின்றனர். இந்தியாவில் ஊடுருவியுள்ள வங்கதேசத்தவர்களை அந் நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்றார்.சிதம்பரம் அமெரிக்கா பயணம்:இந் நிலையில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இன்று அமெரிக்கா செல்கிறார். செப்டம்பர் 11ம் தேதி வரை அவர் அங்கு பல உயர் மட்டத் தலைவர்களை சந்திக்கிறார். அப்போது இந்த எல்லை விவகாரம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் சிதம்பரம் பேசுவார் என்று தெரிகிறது.
நன்றி :http://thatstamil.oneindia.in/news/2009/09/08/india-plays-down-chinese-incursions.html
read more...
சீன ஊடுருவல்-அமுக்கப் பார்க்கும் வெளியுறவுத்துறைSocialTwist Tell-a-Friend

2008ல் உலகிலேயே அதிக அளவில் ஆயுத விற்பனை செய்த அமெரிக்கா

0 comments
வாஷிங்டன்: உலகப் பொருளாதாரம் ஒடிந்து போன நிலையிலும் கூட அமெரிக்காவின ஆயுத விற்பனையில் எந்தவித சுணக்கமும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு உலகிலேயே அமெரிக்காதான் அதிக அளவில் ஆயுத விற்பனையை மேற்கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.2008ம் ஆண்டு அமெரிக்கா மொத்தம் 30.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஆயுதங்களை விற்றுள்ளது. கடந்த ஆண்டு உலக அளவில் நடந்த மொத்த ஆயுத விற்பனையின் மதிப்பு 55.2 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உலக அளவில் நடந்த ஆயுத விற்பனையில் மூன்றில் 2 பங்கை அமெரிக்கா மட்டும் மேற்கொண்டுள்ளது.தனது வழக்கமான கஸ்டமர்களுக்கு மட்டுமல்லாமல், ரஷ்யாவிடம் பெருமளவில் ஆயுதங்களை வாங்கும் இந்தியா போன்ற சில நாடுகளுக்கும் கூட பெருமளவில் ஆயுத விற்பனையை மேற்கொண்டு ரஷ்யாவின் ஆயுத விற்பனையில் மண்ணையும் அள்ளிப் போட்டுள்ளதாம் அமெரிக்கா.வளரும் நாடுகளுக்கு பாரம்பரிய ஆயுதங்களை வழங்குதல் என்ற தலைப்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில்தான் இந்த விவரங்கள் உள்ளன. இதை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

உலக அளவில் அமெரிக்காவிடமிருந்து பெரிய அளவில் ஆயுதக் கொள்முதல் செய்து நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகும். எமிரேட்ஸுக்கு 6.5 பில்லியன் மதிப்பிலான வான் பாதுகாப்பு சாதனங்களை வழங்கியுள்ளது அமெரிக்கா. அதேபோல மொராக்கோ நாட்டுக்கு 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான போர் விமானங்களை வழங்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தைவானுக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான தாக்குதல் ஹெலிகாப்டர்களை வழங்கவும் அமெரிக்கா ஒப்பந்தம் போட்டுள்ளது.இவர்கள் தவிர இந்தியா, ஈராக், சவூதி அரேபியா, எகிப்து, தென் கொரியா, பிரேசில் ஆகிய நாடுகளுடன் பெருமளவிலான ஆயுத விற்பனை ஒப்பந்தங்களையும் அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
நன்றி http://thatstamil.oneindia.in/news/2009/09/07/world-us-largest-supplier-of-arms-in-2008-report.html
read more...
2008ல் உலகிலேயே அதிக அளவில் ஆயுத விற்பனை செய்த அமெரிக்காSocialTwist Tell-a-Friend
0 comments
சக்தி வேல் தேவர் செய்திகள் :




மூக்கையா தேவர் பிறந்த நாள் விழா .

மதுரை மன்னரடி
பகுதில் இன்று காலை
மூக்கையா தேவர்
பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
read more...
SocialTwist Tell-a-Friend

கடன் அட்டைப் பாதுகாப்பு - சில ஆலோசனைகள்

0 comments
வெள்ளிக்கிழமை, 04 செப்டம்பர் 2009 00:00 பாலகார்த்திகா அறிவியல்

இன்று கடன் அட்டையின்(Credit card) பயன்பாடு என்பது எல்லார் மத்தியிலும் அதிக அளவில் காணப்படுகிறது. ஒருவர் தன்னிடம் கடன் அட்டை இல்லை என்றால், அவரை நாம் வேற்றுக் கிரகவாசி போல் பார்க்கும் நிலை இன்று. நாம் அன்றாடம் பயன்படுத்தும் மளிகைப்பொருட்களில் இருந்து, பயண முன் பதிவு செய்வது, இணையத்தளத்தில் விற்பனையாகும் பல்வேறு விதமான பொருட்கள் / கணிணி மென்பொருட்கள் வாங்குவது ஆகிய எல்லாவற்றுக்கும் நாம் கடன் அட்டையினைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இதில்தான் துரதிருஷ்டவசமாக அதிக மோசடிகளும், ஏமாற்றுகளும் திருட்டுகளும் நடைபெறுகின்றன.



இத்தனை பரவலான உபயோகத்தைப் பெற்றிருக்கும் கடன் அட்டையினைப் பறிகொடுத்தால்??? தொலைவது என்பது இங்கு அந்த அட்டை தொலைவது பட்டுமல்ல. அந்த அட்டையில் அடங்கியுள்ள அந்தரங்கத் தகவல்கள் திருடப்படுவதும் கூடத்தான். குறிப்பாக இணையதளங்களில் கடன் அட்டை மூலம் பரிவர்த்தனை (Transaction) செய்கையில் அல்லது கொள்வனவு (Shopping) செய்கையில் உங்கள் தகவல்கள் திருடப்பட்டுவிட்டால், அது மோசடிக்கு வழிவகுக்கும். மேலும் எவ்வளவு நட்டத்தில் கொண்டு விடும், எந்த விதமான மோசடி நேரும் என்பதை அறிய இயலாது.எனவே, பாதுகாப்பாகக் கடன் அட்டையைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது. கடன் அட்டையில் உள்ள தகவல்களைத் திருடு போகாமல் காப்பாற்றுவது எப்படி, பாதுகாப்பாக இணைத்தளங்களிலும், மற்ற வணிக வளாகங்களிலும் பயன்படுத்துவது எப்படி என்று கொஞ்சம் பார்க்கலாம்.READ MORE...


read more...
கடன் அட்டைப் பாதுகாப்பு - சில ஆலோசனைகள்SocialTwist Tell-a-Friend

ரோபோ வடிவத்தில் உண்மையான வில்லன்

2 comments


உலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். ரோபோ வடிவத்தில் ! வெறும் இயந்திரம் எனும் நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ரோபோக்களின் இன்றைய வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.
இதுவரை வந்ததெல்லாம் வெறும் சாம்பிள் தான் இனிமேல் தான்பா மெயின் பிக்சர் என மிரட்டுகின்றனர் விஞ்ஞானிகள். அதாவது சுயமாகச் சிந்தித்து, முடிவெடுக்கக் கூடிய ரோபோக்கள் தான் அடுத்த இலக்காம்! அப்படி ஒன்று சாத்தியமாகும் காலத்தில் நிகழப் போகும் விபரீதங்கள் தான் திகிலை ஏற்படுத்துகின்றன.
READ MORE...



read more...
ரோபோ வடிவத்தில் உண்மையான வில்லன்SocialTwist Tell-a-Friend

உலக வர்த்தகப் பேச்சு: முட்டுக்கட்டை முறிந்தது – ஆனந்த சர்மா!

0 comments
ஜெனிவாவில் கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த உலக வர்த்தகப் பேச்சுவார்த்தையில் வளரும், வளர்ந்த நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட முட்டுக்கட்டை டெல்லி பேச்சுவார்த்தையில் முறிந்துவிட்டது என்றும், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது என்றும் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா
.உலக வர்த்தகப் பேச்சுவார்த்தையில் டோஹா மாநாட்டில் தொடங்கிய சந்தை திறப்புத் தொடர்பான சிக்கலைத் தீர்க்க இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில், வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் இடையே மீண்டு்ம் பேச்சுவார்த்தையை தொடர்வது என்று டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

“அடுத்த கட்டமாக வரும் 14ஆம் தேதி ஜெனிவாவில் மீண்டு்ம் சந்திப்பது என்று இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தங்களுடையை விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கொடுத்துவரும் மானியம் காரணமாக, அப்பொருட்களுடன் வளரும் நாடுகளின் விவசாய உற்பத்திப் பொருட்கள் போட்டியிட முடியாத நிலை உள்ளது. சம்மான வணிக வாய்ப்பை உருவாக்க வேண்டுமெனில் தங்கள் நாட்டின் விவசாயிகளுக்கு அளித்துவரும் மானியங்களை முன்னேறிய நாடுகள் குறைக்க வேண்டும் என்றும் அதுவரை தங்கள் நாட்டின் சந்தைகளை திறந்துவிடப் போவதில்லை என்றும் இந்தியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டிப்பாகக் கூறிவிட்டதால் டோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முட்டுக்கட்டையை நீக்க ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி http://tamil.webdunia.com/newsworld/news/national/0909/04/1090904133_1.htm
read more...
உலக வர்த்தகப் பேச்சு: முட்டுக்கட்டை முறிந்தது – ஆனந்த சர்மா!SocialTwist Tell-a-Friend
0 comments

வலங்கை_JAIVEER

தேவர்களின் மன்னவனே !

வாழ்க பல்லாண்டு !
மெல்ல நகை பூத்து
மேனி மலர் போர்த்தி
துள்ளி நடை போடும்
பொன்னி நதி ஓடும்
வண்டை வளநாடா !
வண்டை வளநாட்டை
ஆண்ட குல கொழுந்தே!
சோழர் குல விளக்கே !

வண்டை நிலமான
சோழ வளநாட்டை
ஆண்ட பரம்பரையால்
வாண்டையார் என பெற்ற
சேர பாண்டியரின் ரத்த உறவினறே !
முடி வேந்தர் மூவரின்
வழி வந்த காரணத்தால்
முக்குலம் என கொண்டோய் !

மூவேந்தர் முன்னேற்ற
கழகம் கண்ட கொற்றவனே !
முன்னவனின் பின்னவனே!
தேவர்களின் மன்னவனே !
வாழ்க
நீ பல்லாண்டு !
read more...
SocialTwist Tell-a-Friend

ஓணம் பண்டிகை

0 comments
மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் சேர நாட்டு மக்கள்

சேர ம‌க்க‌ளி‌ன் பார‌ம்ப‌ரிய ‌விழாவான ஓண‌ம் ப‌ண்டிகை மாவலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக, அத்தப்பூ கோலம் மற்றும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.ஓ‌ண‌ம் அ‌ன்று ‌சிற‌ப்பான உணவு வகைகளை சமை‌த்து உற‌வின‌ர்களுட‌ன் உ‌ண்டு ம‌கி‌ழ்வா‌ர்க‌ள்.மேலும் `சென்ட' என்றழைக்கப்படும் கேரள பாரம்பரிய மேளதாளத்துடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், பா‌ம்பு போ‌ன்று ‌நீ‌ண்ட படகுப்போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளும் ஓணம் திருநாளையொட்டி நடத்தப்படுவது வழ‌க்க‌ம்.
அனைத்து மக்களும் சாதி, சமய பாகுபாடு இல்லாமல் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர். மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் இந்த திருவிழா நடைபெறும்.
கேரளா‌வை முன்பு ஒரு காலத்தில், மாவலி சக்கரவர்த்தி ஆட்சி செய்து வந்தான். அவனது ஆ‌ட்‌சி‌க் கால‌த்‌தி‌ல் ம‌க்க‌ள் ‌மிகு‌ந்த ம‌கி‌ழ்‌ச்‌சியுடனு‌ம், இ‌ன்பமாகவு‌ம் வா‌ழ்‌ந்தன‌ர்.அ‌வ்வாறு ந‌ல்லா‌ட்‌சி பு‌ரி‌ந்த மாவலி சக்கரவர்த்தி கேரளாவுக்கு விஜயம் செய்யும் நாளாக ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் ஓணம் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவலி மன்னனின் வருகைக்காக இந்த திருவிழா 10 தினங்கள் கொண்டாடப்படுகிறது."அத்தம்'' என்று கூறப்படும் முதல் நாளில் இருந்தே மாவலி சக்கரவர்த்தியின் வருகைக்காக வீட்டின் முன்பு மலர்களால் பூக்கோலம் போடுவார்கள்.
இது `அத்த பூ கோலம்' என்று அழைக்கப்படுகிறது. 10-வது நாளான திருவோண தினம் கேரளாவில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகளை அலங்கரித்து வைப்பார்கள். மேலும் புத்தாடை அணிந்து விசேஷ பூஜைகளிலும் பங்கேற்பார்கள்.எல்லோருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்!
read more...
ஓணம் பண்டிகைSocialTwist Tell-a-Friend

நடிகர் ரித்திஷ் வெற்றியை எதிர்க்கும் வழக்கில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

0 comments


சென்னை, ஆக. 31: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தலில் நடிகர் ரித்திஷ் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ராமநாதபுரம் எம்.பி., தொகுதியில் ஜே.கே. ரித்திஷ் (திமுக), ஜி. சத்தியமூர்த்தி (அதிமுக), திருநாவுக்கரசர் (பாஜக) உள்பட 15 பேர் போட்டியிட்டனர். இதில் நடிகர் ரித்திஷ் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து சத்தியமூர்த்தி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு விவரம்: நடிகர் ரித்திஷ் சாதாரண நடிகர். ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் ரூ. 25 கோடியை அவர் எவ்வாறு செலவு செய்தார் என்று தெரியவில்லை. அவரும், அவரது கட்சியினரும் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்துள்ளனர். இதைத் தவிர தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். நடிகர் ரித்திஷின் பெற்றோர் இலங்கையில் உள்ள கண்டியில் வசித்து வருகின்றனர்.
கண்டியில் பிறந்த அவர் இந்தியப் பிரஜையே அல்ல. இந்தியப் பிரஜை என்று தவறான தகவல் அளித்து அவர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். ராமநாதபுரம் தொகுதியில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. நீதிபதி கே. சந்துரு முன்னிலையில் இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, இதுகுறித்து வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ரித்திஷ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
read more...
நடிகர் ரித்திஷ் வெற்றியை எதிர்க்கும் வழக்கில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்SocialTwist Tell-a-Friend

தமிழக மீனவர்களை குறிவைக்கும் இலங்கை கடற்படை

0 comments
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மறைவுக்கு முன், தமிழக கடலோர கிராமங்களில், தீவிர விடுதலைப் புலிகள் ஆதரவும், பாசமும், தமிழக மீனவர்களிடையே இருந்து வந்தது. ராஜிவ் காந்தியின் கொடுமையான மரணத்திற்கு பிறகு, பெரும்பாலான தமிழக கடலோர மீனவ கிராமங்களில், விடுதலைப் புலிகள் ஆதரவு குறைந்து போனது.

மீனவர்கள், விடுதலைப் புலிகளை தங்கள் இனமாகவும், உறவாகவும் கருதி செய்து கொண்டிருந்த உதவிகளும் குறைந்தன. கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் படகுகள் ஒன்றிரண்டு, எல்லை தாண்டும் நிலையில் மட்டுமே, இலங்கை கடற்படை தாக்குதலுக்கும், நடவடிக்கைக்கும் ஆளாகின.இலங்கை கடற்படை, விடுதலைப் புலிகளை அழிக்கவும், கட்டுப்படுத்தவும், தாக்குதலை சமாளிக்கவும் முழு மூச்சில் இருந்ததால், தமிழக மீனவர்கள் மீது கவனம் திரும்பவில்லை.தற்போது, விடுதலைப் புலிகள் பெருமளவில் ஒழிக்கப்பட்ட நிலையில், பிரபாகரன் மரணத்திற்கு பின், கடல் பகுதிகளில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் முற்றிலும் இல்லை.கடற்புலிகள் நடமாட்டத்தாலும், தாக்குதலாலும் பாதிப்பிற்குள்ளான இலங்கை அரசு, கடற்படையை பலப்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் முழு சுதந்திரத்தை கடற்படைக்கு வழங்கியது.

தற்போது, புலிகளின் நடமாட்டம் இல்லாமலிருந்தும், கடலில் வலம் வரும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர், எதிரிகளாக நினைத்து தாக்குவது தொடர்கிறது. இலங்கை கடற்படை - விடுதலைப் புலிகள் மோதல் திசை மாறி, தமிழக மீனவர்கள் - இலங்கை கடற்படை மோதலாக உருமாறி வருகிறது. இலங்கை கடற்படையின் அத்துமீறலால், தமிழக மீனவர்கள், விடுதலைப் புலிகள் தங்களுக்கு அரணாக இருந்து வந்ததாக நினைத்து, மீண்டும் புலிகள் மீது இரக்கமும், பாசமும், பரிவும் காட்டத் துவங்கியுள்ளனர். இதன் காரணமாக, தமிழக கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் அதைச் சார்ந்த நகரங்களில், பிரபாகரன் ஆதரவு பெருகி வருவதும், இதற்கு சில புலி ஆதரவு பிரமுகர்கள், அரசியல்வாதிகள் உரமேற்றி வருவதும், மறைமுகமாக தொடங்கியுள்ளது.

இலங்கை கடற்படை அட்டூழியத்தை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராவிட்டால், மீண்டும், தமிழக கடலோரங்களில் இருந்து விடுதலைப் புலிகள் ஆதரவு எழும்

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் மோதல் நடந்து கொண்டிருந்த போது, தமிழக மீனவ கிராமங்களில் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஐ.பி., கியூ பிரிவு மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி., போலீசார் நன்றி http://www.dinamalar.com/new/fpnnewsdetail.asp?News_id=4809
read more...
தமிழக மீனவர்களை குறிவைக்கும் இலங்கை கடற்படைSocialTwist Tell-a-Friend