பரங்கிப்பேட்டையில் ஸ்ரீதர் வாண்டையார்

0 comments


தி.மு.க அணியில் அங்கம் வகிக்கும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் , இன்று காலை 11.30 மணியளவில் பரங்கிப்பேட்டை கீரைக்காரத் தெருவில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுக - ஊழியர் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் முன்னிலையில் நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய சேர்மன் - -தி.மு.கழக ஒன்றிய செயலாளர் முத்து.பெருமாள் தலைமை தாங்கினார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்த பின்னர் உரையாற்றிய ஸ்ரீதர் வாண்டையார், தான் இத்தொகுதிக்கு புதியவன் அல்ல, 7 தலைமுறைகளாக சிதம்பரம் பகுதியிலேயே வசிக்கிறதாக குறிப்பிட்டார், மேலும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் இத்தொகுதியின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றும் உறுதி அளித்தார்.

தொடர்ந்து பரங்கிப்பேட்டையின் முக்கிய பிரமுகர்களை அவரவர்களின் இல்லத்தில் சந்தித்து ஆதரவு திரட்டிய ஸ்ரீதர் வாண்டையார், ஜூம்ஆ தொழுகைக்கு பின்னர் மீராப்பள்ளி வாயிலில் மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டார். இந்நிகழ்ச்சியின் போது பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், நகர தி.மு.க. செயலாளர் பாண்டியன், மாவட்ட தி.மு.க.பிரதிநிதியும், நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் ஹுசேன், மாவட்ட தி.மு.க பிரதிநிதி காண்டீபன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் செழியன், நகர அவைத்தலைவர் தங்கவேல், ஒன்றிய தி.மு.க.பிரதிநிதிகள் M.K.பைசல் யூசுப் அலி, கோமு, கவுன்சிலர்கள் M.G.M.ஹாஜாகமால், M.E.அஷ்ரப் அலி, நகர இளைஞரணி துணை அமைப்பாளார் வேலவன், தவ்ஹீத், ஜாபர், K.H.ஆரிபுல்லாஹ் S.O.S.ஆரிப்,அஜிஜுத்தீன்,அஜீஸ், G.M.கவுஸ், அப்துல் அஹத், அலி முஹம்மது -நாச்சியார்,பொற்செல்வி,முஸ்லிம்லீக் நகர தலைவர் பஷீர் அஹமது, கவுஸ் ஹமீது ராஜா, கியாசுதீன், கலிக்குஜ்ஜமான், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட துணைத்தலைவர் முடிவண்ணன், நகர தலைவர் முருகன், சட்டநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹமீது கவுஸ், சேக் அப்துல் காதர், வாப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர தலைவர் ரமேஷ், உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். முன்னதாக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

THANKS TO http://mypno.blogspot.com/2011/03/blog-post_25.html
read more...
பரங்கிப்பேட்டையில் ஸ்ரீதர் வாண்டையார்SocialTwist Tell-a-Friend

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி. ரித்திஷ் கைது

0 comments
ராமநாதபுரம் திமுக எம்.பி ஜே.கே.ரித்திஷ் கைது

Last Updated : 29 Mar 2011 11:39:18 AM IST

ராமநாதபுரம், மார்ச் 29: ராமநாதபுரம் திமுக எம்.பி. ரித்திஷ் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

ராமநாதபுரத்தில் நேற்று இரவு ஒரு குழுத் தகராறின் போது, ஜே.கே.ரித்திஷ் அங்கே இருந்துள்ளார். அப்போது அவர், தலித் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இரவு அங்கே பதற்றமான சூழல் எழுந்தது. ரித்திஷை கைது செய்யக்கோரி ராமநாதபுரத்தில் இரவு சாலைமறியல் போராட்டம் நடந்தது.

இந்நிலையில் ஜே.கே.ரித்திஷ் மற்றும் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.

thanks to http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=397471&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=
read more...
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி. ரித்திஷ் கைதுSocialTwist Tell-a-Friend

வைகோ எங்களை ஆதரித்திருந்தால் பெருமையாக இருந்திருக்கும்-கார்த்திக் ஆதங்கம்

0 comments
சென்னை: சட்டசபைத் தேர்தலில் எங்களது நாடாளும் மக்கள் கட்சி க்கு வைகோ ஆதரவு தெரிவித்திருந்தால், தெரிவித்தால் பெருமையாக இருந்திருக்கும் என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவரான நடிகர் கார்த்திக் .


தற்போதைக்கு அவ்வப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார் கார்த்திக். 30 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்தார். ஆனால் அடுத்த நாளே அவர்களில் 3 பேர் அதிமுகவில் போய் சேர்ந்து கொண்டனர். இதனால் விரக்தியாகியுள்ளார் கார்த்திக்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள் அறிவித்த 30 வேட்பாளர்களில் 3 பேர் அ.தி.மு.க.வில் சேர்ந்து விட்டனர். 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போதும் இது போல் தான் அவர்கள் செய்தார்கள். இப்போதும் அப்படி தான் செய்கிறார்கள்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது நான் மதிப்பும், மரியாதையும் வைத்து இருக்கிறேன். ஆனால் அவர்களுடன் இருக்கும் சகாக்களுக்கு இது போன்று தான் சிந்திக்க தோன்றும்.

என்னை மாதிரியே எங்கண்ணன் வைகோ...!

எனக்கு வைகோவை ரொம்ப பிடிக்கும். அவரை என் மூத்த சகோதரனாக நினைக்கிறேன். அதனால் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்த தம்பி வெளியே வந்தது போல் அவரும் வந்திருக்கிறார். வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும்.

தேர்தல் அறிக்கைகள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சிலர் காப்பி அடிக்கிறார்கள். எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான். நாங்கள் 27 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். தேர்தல் ஆணையத்திடம் டார்ச் லைட் சின்னம் கேட்டு இருக்கிறோம்.

சிவகாசி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். நான் அங்கு போட்டியிட்டால் குறைந்தபட்சம் 70 ஆயிரம் ஓட்டுக்களையாவது பெறுவேன். ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றபோது அந்த கட்சியை ஆதரித்து சிவகாசியில் பேசி விட்டேன். இப்போது நான் அவர்களுடன் இல்லை. இப்போது அவர்களை எதிர்த்து அங்கே எப்படி பேச முடியும்.

சிவகாசி மட்டுமல்லாமல் நாங்கள் போட்டியிடாத இடங்களில் இருந்து சுயேச்சை வேட்பாளர்கள் எங்கள் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களில் எங்கள் கட்சிக்கு ஏற்றவர்களை தேர்வு செய்து, அவர்களை ஆதரிக்க முடிவு செய்து இருக்கிறோம்.

சிடி போட்டு அனுப்பப் போறேன்!

29-ந் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறேன். குறைந்த நாட்களில் எல்லா தொகுதிக்கும் என்னால் செல்ல முடியாது. அதனால் பிரச்சார சி.டி.யை தயார் செய்து வைத்து இருக்கிறேன். அந்த சி.டி.க்களை நிர்வாகிகளிடம் கொடுத்து அனுப்புவேன்,

இலவசமாக கொடுக்க முடியாத பொருட்களையெல்லாம், கொடுக்கப்போவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை சுயசிந்தனை இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொய்யான தேர்தல் அறிக்கையை யாரும் நம்பி ஏமாறாமல், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்துள்ளனர்

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/03/27/vaiko-support-is-honour-karthik-aid0091.html
read more...
வைகோ எங்களை ஆதரித்திருந்தால் பெருமையாக இருந்திருக்கும்-கார்த்திக் ஆதங்கம்SocialTwist Tell-a-Friend

விவேக்குக்கு பில்டப் கொடுத்த அப்துல் கலாம்

0 comments


thanks to http://www.narumugai.com/2011/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/
read more...
விவேக்குக்கு பில்டப் கொடுத்த அப்துல் கலாம்SocialTwist Tell-a-Friend

புதிய மூவேந்தர் முன்னணி கழகம்

0 comments
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/03/23/dr-sethuraman-mmk-breaks-into-two-aid0090.html

மதுரை: அதிமுக கூட்டணியில் உள்ள டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம் இரண்டாக உடைந்தது. புதிய மூவேந்தர் முன்னணி கழகம் என்ற தனிக்கட்சி உருவாகியுள்ளது.

மூவேந்தர் முன்னணி கழகத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திருச்சுழி தொகுதியை ஒதுக்கியுள்ளார். அங்கு இசக்கி முத்து என்பவர் போட்டியிடுவார் என்று சேதுராமன் அறிவித்துள்ளார்.

இந் நிலையில் அக் கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளர் ஒச்சாத் தேவர் கட்சியை உடைத்து புதிய மூவேந்தர் முன்னணி கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார்.

இதையடுத்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்த ஒச்சாத் தேவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கும். திமுகவை ஆதரித்து நாங்கள் பிரச்சாரம் செய்வோம் என்றார்.

கட்சியை உடைத்ததே அழகிரி தான் என்று சேதுராமன் தரப்பு புகார் கூறுகிறது.

read more...
புதிய மூவேந்தர் முன்னணி கழகம்SocialTwist Tell-a-Friend

பார்வர்ட் பிளாக்கை மதிக்கிறேன்-உசிலையில் போட்டியிடவில்லை: கார்த்திக்

0 comments
சென்னை: நாங்கள் தெய்வமாக வணங்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தொடங்கிய இயக்கமான அகில இந்திய பார்வர்ட் பிளாக் உசிலம்பட்டியில் போட்டியிடுவதால் அங்கு வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவரான நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழக சட்டமன்ற தேர்தலில் எங்களது கட்சியின் சார்பாக போட்டியிட, ஒவ்வொரு தொகுதிக்கும் பத்து, பதினைந்து வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக நேர்காணலும் நடைபெற்றது.

உசிலம்பட்டி தொகுதியில் நாங்கள் வணங்கும் தெய்வமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தொடங்கிய இயக்கமான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி போட்டியிடுவதால், அவர் மீது உண்மையான பக்தி கொண்ட நான், கிட்டத்தட்ட பதினைந்து வேட்பாளர்கள் போட்டியிட வந்தும் உசிலம்பட்டி தொகுதியில் மட்டும் எங்களது கட்சியின் வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்.

இந்த தீர்மானத்தை எங்களது கட்சியின் நிர்வாகிகளிடம் எடுத்துரைத்து, அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என்று கூறியுள்ளார் கார்த்திக்.

அதிமுக கூட்டணியின் அவமானத்தால் சிறுத்துப் போன கார்த்திக், முதல் ஆளாக கூட்டணியை விட்டுவெளியேறினார் என்பது நினைவிருக்கலாம். மேலும், அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்துவேன் என்றும் அவர் அதிரடியாக கூறியுள்ளார்.
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/03/21/we-will-stay-away-from-usilampatti-karthik-aid0091.html
read more...
பார்வர்ட் பிளாக்கை மதிக்கிறேன்-உசிலையில் போட்டியிடவில்லை: கார்த்திக்SocialTwist Tell-a-Friend

நடிகர் கார்த்திக் கட்சி சார்பில் 14 வேட்பாளர்கள் அறிவிப்பு

0 comments
thanks to  http://election.dinamalar.com/election_news_detail.php?id=1129


சென்னை : நடிகர் கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி, முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சங்கரன்கோவில் தொகுதியில் கூலி தொழிலாளி சுப்புலட்சுமி போட்டியிடுகிறார். சென்னையில் நேற்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக், அவரது கட்சி வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் கட்சி சார்பில் 41 தொகுதிகளை தேர்வு செய்து, இதில் 30 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளேன். தற்போது முதல் கட்டமாக 14 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த பட்டியல் இன்று அல்லது நாளை வெளியிடப்படும். எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதிகளில் எங்கள் கட்சியின் ஆதரவு யாருக்கு என்று இரண்டு நாளில் தெரிவிப்பேன்.

ஜெயலலிதாவுக்கு சரியான வழிகாட்டி இல்லை. அவரது தன்னிச்சையான நடவடிக்கை, அவரது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். கருணாநிதி நாகரிகமாகவும், அனைவரையும் அரவணைத்தும் கட்சியை பலப்படுத்தி ஓட்டுகளை பெற முயன்று வருகிறார். தி.மு.க., அரசை மைனாரிட்டி அரசு என்று வர்ணித்து வந்த ஜெயலலிதா, தேர்தலில் மெஜாரிட்டியான இடத்தை தன் கட்சி மட்டுமே பெற வேண்டும் என நினைத்து 160 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். அவரது நினைப்பும், செயல்பாடும் சரியானது தானா என தேர்தல் முடிவு வந்தால் தெரியும். இவ்வாறு கார்த்திக் கூறினார்.

போலி வேட்பாளர் : ""அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியில் இல்லாத ஒருவர், தன்னை கார்த்திக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று குறிப்பிட்டு கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் எங்கள் கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தி வேறு ஏதோ ஆதாயம் கருதி, மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளோம்,'' என்று கார்த்திக் தெரிவித்தார்.
read more...
நடிகர் கார்த்திக் கட்சி சார்பில் 14 வேட்பாளர்கள் அறிவிப்புSocialTwist Tell-a-Friend

முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி உற்சவ விழா

0 comments

First Published : 16 Mar 2011 11:01:45 AM IST

பரமக்குடி, மார்ச் 15: பரமக்குடி அருள்மிகு ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் பங்குனித் திருவிழா 4-ம் திருநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை வன்னியகுல ஷத்திரிய மகாசபையினரால் வண்டி மாகாளி உற்சவ விழா நடைபெற்றது.

பரமக்குடி ஆயிர வைசியர்களுக்கு பாத்தியமான ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் பங்குனித் திருவிழா, மார்ச் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொ டங்கியது.செவ்வாய்க்கிழமை காலையில் ரிஷப வாகனத்தில் வன்னியர்குல சேர்வைக்காரர்கள் மண்டகப்படியில் எழுந்தருளினார். இதையொட்டி மாலை 4.30 மணிக்கு வன்னியகுல ஷத்திரியர்கள் வண்டி மாகாளி வேஷமிட்டும், புலி வேஷமிட்டும் ஊர்வலம் புறப்பாடாகி நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் ஆலயம் சென்றடைந்தனர்.மார்ச்-20-ம் தேதி இரவு 7.45 மணிக்கு விசேஷ மின்சார தீப அலங்காரத்துடன் அம்பாள் தேரோட்டம் நடைபெறும். 

அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு அம்பாள் கள்ளர் திருக்கோலத்துடன் புஷ்பப் பல்லக்கில் வைகை ஆற்றில் எழுந்தருளும் காட்சியும், மார்ச் 22-ம் தேதி அம்பாளுக்கு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
thanks to http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Madurai&artid=391200&SectionID=137&MainSectionID=137&SEO=&Title=
read more...
முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி உற்சவ விழாSocialTwist Tell-a-Friend

மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை: சேதுராமன்

0 comments
சென்னை : ""மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன் தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள, மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் கதிரவன் வந்தார். அவரை தொடர்ந்து அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன், பொதுச்செயலர் இசக்கிமுத்து, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் வந்தனர். தொடர்ந்து இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், துணை செயலர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலர் ராமகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர்.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர். கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதி அடையாளம் காணும் பங்கீடு முடிக்காமல், அ.தி.மு.க., தன்னிச்சையாக தொகுதிகளை அறிவித்தது குறித்து கூட்டத்தில் கலந்துக் கொண்ட தலைவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். பின், அனைவரும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தலாம் என, அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து தலைவர்கள் வரிசையாக தே.மு.தி.க., அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

வெளியே வந்த கதிரவன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ""அ.தி.மு.க., அணியில் எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுவது குறித்து, அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். உடன்பாடு ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்குள் உசிலம்பட்டி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். நாங்கள் தேசிய அளவில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்திருப்பதால், இரு கம்யூ., கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். எங்கள் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்,'' என்றார்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன், ""தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் ஒரே நோக்கம். அதற்காக எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒட்டு மொத்தமாக தமிழக மக்களின் நலன் கருதி தேர்தலில் எந்த பிணக்கு இன்றி பணியாற்றுவோம். மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என்றார்.
thanks to http://election.dinamalar.com/election_news_detail.php?id=514
read more...
மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை: சேதுராமன்SocialTwist Tell-a-Friend

சிதம்பரம் மூ.மு.க.வுக்கு ஒதுக்கீடு: திமுக, பாமக அதிருப்தி

0 comments



சிதம்பரம் மூ.மு.க.வுக்கு ஒதுக்கீடு: திமுக, பாமக அதிருப்தி

First Published : 18 Mar 2011 05:38:36 AM IST

சிதம்பரம். மார்ச் 17: சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக, பாமகவினர் அதிகம் பேர் கட்சி தலைமையிடம் விருப்ப மனு கொடுத்திருந்தனர். ஆனால் திமுக போட்டியிட்டால் வெற்றி பெறும் தொகுதியான சிதம்பரம் தொகுதியை கூட்டணிக்  கட்சியான மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவினர் ஏமாற்றம் அடைந்து அதிருப்தியில் உள்ளனர்.  ÷சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் துரை.கி.சரவணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2006-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் தோல்வியுற்றார்.  ÷நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ துரை.கி.சரவணன் விருப்ப மனு கொடுத்திருந்தார். மேலும் நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், ஒன்றியக் குழுத் தலைவர்கள் ரா.மாமல்லன் (குமராட்சி), முத்துபெருமாள் (பரங்கிப்பேட்டை) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் திமுக தலைமையில் சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இத்தொகுதி மூவேந்தர் முன்னேற்றக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.  ÷சிதம்பரம் தொகுதி மூ.மு.க.வுக்கு ஒதுக்கியதால் பாமகவினர், வன்னியர் சமூக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கருத்து வேறுபாடுகளை களைந்து வன்னியர் சமுதாய மக்களின் வாக்குகளையும், திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அரவணைத்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆதரவுடன் அக்கட்சிகளின் வாக்கு வங்கியை முழுமையாக பெற்று மூவேந்தர் முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வியூகம் அமைத்துள்ளது.  ÷போட்டியாளரை வீழ்த்த அமைச்சரின் சாதுர்யம்: கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் தனது அரசியல் போட்டியாளர்களில் ஒருவரான முன்னாள் எம்.எல்.ஏ. துரை.கி.சரவணனுக்கு சீட் கிடைக்கக்கூடாது என மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மூலம் சிதம்பரம் தொகுதி கேட்டு வலியுறுத்தி அக்கட்சிக்கு சிதம்பரம் தொகுதியை வாங்கித் தந்ததாக கூறப்படுகிறது. ÷அத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வியுற்றார். அதிமுக வேட்பாளர் ஏ.அருண்மொழிதேவன் வெற்றி பெற்றார். இந்த முறை துரை.கி.சரவணனுக்கு மீண்டும் சீட் கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெறுவார் என உளவுத்துறை முதல் அனைத்து பகுதியிலிருந்து திமுகவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  ÷ஆனால் திமுக வெற்றி பெறும் தொகுதியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு அமைச்சர் வாங்கிக் கொடுத்துள்ளார் என துரை.கி.சரவணன் ஆதரவாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.  ÷சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் அதிமுகவினர் அதிருப்தி: கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயமும், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.அருண்மொழிதேவனும் வெற்றி பெற்றனர். தற்போது சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் போட்டியிட முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, ஏ.அருண்மொழிதேவன், செல்வி ராமஜெயம், சிதம்பரம் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட பேரவைச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, மாவட்ட இலக்கிய அணிச் செயலர் சொ.ஜவகர் உள்ளிட்ட 50- அதிமுகவினர் போட்டியிட கட்சி தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளனர்.  ÷வெற்றி பெற்ற இத்தொகுதிகளில் இத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. இந்த இரு தொகுதிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிலையுள்ளதால் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். 
thanks to http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81:+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95,+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&artid=391912&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu
read more...
சிதம்பரம் மூ.மு.க.வுக்கு ஒதுக்கீடு: திமுக, பாமக அதிருப்திSocialTwist Tell-a-Friend

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம் சட்டசபைத் தேர்தல்-அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

0 comments
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அவை குறித்த விவரம்:

- கோவில், மசூதி, ஆலயங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.

- ஜாதி, மதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது.

- பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசார சுற்றுப்பயணங்கள், ஊர்வலங்கள் அனைத்துக்கும் போலீஸ் முன் அனுமதி பெறவேண்டும்.

- தேர்தல் பிரசாரத்தின்போது கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் யாரேனும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தினால், அதற்கான செலவுக் கணக்கை வேட்பாளர்களின் பெயரில்தான் ஏற்றப்படும்.

- ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சியின் நட்சத்திப் பிரசாரகர்கள் யார் என்பதை ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பிரசாரகர்களின் பயணச் செலவுகள், வேட்பாளர் கணக்கில் வராது.

- பொது இடங்களில் சுவர் விளம்பரம் செய்யக் கூடாது. தனியார் இடங்களில் சுவர்களின் அனுமதி பெற்ற பிறகே தேர்தல் விளம்பரம் செய்யவேண்டும்.

- விளம்பர செலவுகள் அனைத்தும் வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

- அரசியல் பொதுக் கூட்டங்கள், பிரசாரங்கள், சுவர் விளம்பரங்கள், ஊர்வலங்கள், பேனர்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும். இதற்கான செலவுகள் கணக்கிடப்பட்டு வேட்பாளர் செலவில் சேர்க்கப்படும்.

- தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் கார், வேன், பஸ் ஆகியவற்றின் வாடகை எவ்வளவு என்பதை கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்து அந்த தொகை தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.

- தேர்தலில் முறைகேட்டை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்படும். இதில் ஒரு துணை தாசில்தார், ஒரு போலீஸ் அதிகாரி, 4 போலீசார், ஒரு வீடியோ கிராபர் இடம் பெறுவார். இவர்கள் தவிர ஒவ்வொரு தொகுதியிலும் 4 அல்லது 5 சோதனை மையம் அமைக்கப்படும். இந்த மையங்கள் அடிக்கடி இடமாற்றப்படும்.

- ஒவ்வொரு மாவட்டத்திலும் வருமான வரித்துறை சார்பில் வருமான வரி உதவி இயக்குனர் நியமிக்கப்படுவார். அவர் மூலம் வேட்பாளருக்கு வரும் பணம் ஆய்வு செய்யப்படும்.

- வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும்போது 3 வாகனங்கள் மட்டுமே வேட்பு மனுதாக்கல் அலுவலகம் அருகே 100 மீட்டர் வரை அனுமதிக்கப்படும். வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்யும் இடத்துக்கு செல்லலாம். அனுமதி பெறாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சொத்து விவரம், வழக்கு விவரம் ஆகிய 2 வகை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். சொத்துக்கள் விவரங்களை மொத்தமாக குறிப்பிடாமல் தனித்தனியாக குறிப்பிடவேண்டும். அந்த சொத்து யாரிடம் வாங்கியது? அது என்ன சொத்து? வாங்கிய போது மதிப்பு என்ன? இப்போது மதிப்பு என்ன? அதில் முதலீடு செய்த தொகை என்ன? போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதுதவிர அவரது குடும்பத்தில் உள்ள வாரிசு தாரர்கள் சொத்து கணக்கு காட்டவேண்டும்.

- கல்யாண மண்டபங்கள் கண்காணிக்கப்படும். அதில் என்ன விழா நடக்கிறது? எதற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது? என்பது பற்றி கண்காணிக்கப்படும்.

- மொத்தமாக எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரம் செய்யவும் அனுமதி பெற வேண்டும். இது செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/03/04/ec-announces-tough-norms-political-parties-aid0091.html
read more...
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம் சட்டசபைத் தேர்தல்-அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுSocialTwist Tell-a-Friend

சிவராத்திரி ஜல்லிக்கட்டு-மாடு முட்டி ஒருவர் பலி

0 comments
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/03/03/one-killed-jallikattu-near-trichy-aid0091.html
திருச்சி: திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் கிராமத்தில் மகா சிவராத்திரியையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் ஒருவர் மாடு முட்டி உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான காளைகள் இதில் கலந்து கொண்டன. ஜல்லிக்கட்டின்போது மாடு பிடி வீரர் ஒருவரை காளை முட்டியதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

முன்னதாக காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
read more...
சிவராத்திரி ஜல்லிக்கட்டு-மாடு முட்டி ஒருவர் பலிSocialTwist Tell-a-Friend

இலங்கை தூதரகம் முன் சென்னையில் போராட்டம் வைகோ,நடராஜன், நெடுமாறன் கைது

0 comments
சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் கொடும் பாவியை எரித்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தா.பாண்டியன், மகேந்திரன் மற்றும் புதிய பார்வை நடராஜன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிர பாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தியை சிதைத்ததைக் கண்டித்தும் சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தை அகற்றக் கோரியும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார் பில் சென்னையில் நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவிலிருந்து தொடங் கிய அறப் போராட்டப் பேரணிக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். இதனைத் தொடர்ந்து இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வேளையில் இவர்கள் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
http://www.valampuri...ws.php?ID=16757
read more...
இலங்கை தூதரகம் முன் சென்னையில் போராட்டம் வைகோ,நடராஜன், நெடுமாறன் கைதுSocialTwist Tell-a-Friend

விமானம் ஓட்டும் பயிற்சி அளிப்பதற்காக திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் 5 குட்டி விமானங்கள்

0 comments
திருச்சி,செப்.29&
திருச்சி விமான நிலையத்தில் விமானம் ஓட்டும் பயிற்சி அளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட 5 குட்டி விமானங்கள் தயார்நிலையில் உள்ளன.

விமானம் ஓட்டும் பயிற்சி நிலையம்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து அரபு நாடுகள், சிங்கப்பூர் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையட்டி பயணிகளின் வசதிக்காக திருச்சி விமான நிலையத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் புதிய டெர்மினல் கட்டப்பட்டது.
இந்நிலையில் தற்போது திருச்சி விமான நிலையத்தில் விமானம் ஓட்டும் பயிற்சி பெறுவதற்கான பயிற்சி நிலையமும் தொடங்கப்பட இருக்கிறது. ‘வீகேயென் ஏவியேசன் அகாடமிÕ என்ற நிறுவனம் இந்த பயிற்சி நிலையத்தை தொடங்குகிறது. இதற்காக விமான நிலைய வளாகத்தில் பயிற்சி விமானங்கள் நிறுத்துவதற்கான கூடாரம் (செட்) கட்டப்பட்டு உள்ளது.

தயார் நிலையில் குட்டி விமானங்கள்
இந்த பயிற்சி நிலையத்திற்காக அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட 5 குட்டி விமானங்களும் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. அவை நேற்று விமான நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. இந்த விமானங்கள் ஒவ்வொன்றும் தலா 4 இருக்கைகள் உடையவை ஆகும்.

விஜயதசமி விழாவையட்டி இந்த குட்டி விமானங்களுக்கு நேற்று காலை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. வீகேயென் ஏவியேசன் அகாடமியின் தலைவரும், தொழில் அதிபருமான வீகேயென் கண்ணப்பன் தலைமை தாங்கினார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் சவுண்டையா, கே.என்.சேகரன் எம்.எல்.ஏ, தொழில் அதிபர் கே.என். ராமஜெயம், பஞ்சாயத்து தலைவர் குடமுருட்டி சேகர், தில்லை மனோகரன், கவுன்சிலர் கண்ணன், வீகேயென் பாண்டியன், விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி தர்மராஜ், மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆணையர் நயினார் உள்பட அதிகாரிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பயிற்சி நிலையத்தின் நிர்வாக இயக்குனர் கேப்டன் வீகேயென் ராஜா வரவேற்றார்.
திருச்சி விமான நிலையத்தில் துவக்கப்படவுள்ள பிளையிங் கிளப்பில் விஜயதசமியை முன்னிட்டு நேற்று சிறிய ரக பயிற்சி விமானங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு பூஜை போடப்பட்டது.


வி.கே.என்., சிவில் ஏவியேசன் நிறுவனம் சார்பில் திருச்சி விமான நிலையத்தில் பிளையிங் கிளப் துவக்கப்பட உள்ளது. இதற்கு திருச்சி விமான நிலையத்தின் (பழைய விமான நிலையம்) வடகிழக்கு மூலையில் சிறிய பயிற்சி விமானங்கள் நிறுத்துமிடம் மற்றும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. பிளையிங் கிளப்பில் விமான பயிற்சி அளிக்க கலிஃபோர்னியாவிலிருந்து ஐந்து சிறிய ரக விமானங்கள் கப்பல் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு பின் சரக்கு வாகனத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அடிப்படை பணிகள் முடிக்கப்பட்ட பின் முறைப்படி திருச்சி பிளையிங் கிளப் அக்டோபர் 21ம் தேதி தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.


இந்நிலையில், விஜயதசமியை முன்னிட்டு நேற்று பிளையிங் கிளப்பில் விமானங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு விஜயதசமி பூஜை நடந்தது. விழாவில், பிளையிங் கிளப் தலைவர் வி.கே.என்., கண்ணப்பன், இயக்குனர் ராஜா மற்றும் அமைச்சர் நேரு, விமான நிலைய கண்ட்ரோலர் தர்மராஜ், எஸ்.பி., கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பிளையிங் கிளப் செயல்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.


""பிளையிங் கிளப் அமைக்கப்படுவதன் மூலம் திருச்சியை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் �வட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பிளையிங் கிளப் மூலம் விமான பயிற்சி பெற சென்னைக்கு செல்ல வேண்டியதில்லை. திருச்சியிலேயே பயிற்சி எடுத்துக் கொண்டு சிறந்த விமானியாக முடியும்,'' என்றும் பிளையிங் கிளப் நிர்வாகிகள் கூறினர்.
thanks to http://www.trichyportal.com/forum/viewtopic.php?f=3&t=46&start=90
read more...
விமானம் ஓட்டும் பயிற்சி அளிப்பதற்காக திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் 5 குட்டி விமானங்கள்SocialTwist Tell-a-Friend

லிபியா கலவரத்தில் மேலும் ஒரு நெ‌ல்லை தமிழர் பலி

0 comments
லிபியா‌வி‌ல் நடந்து வரும் கலவரத்தில் சிக்கி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு த‌மிழர் பலியா‌கியு‌ள்ளா‌ர்.

நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா தலைவன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா (40), ஆலங்குளம் தாலுகா நாகல்குளம் அசோக்குமார் (24) உள்பட சுமார் 30 பேர் லிபியா நாட்டுக்கு வேலைக்கு சென்றனர்.

அவர்கள் அங்குள்ள மின் கோபுரங்கள் காற்றாலைகள் அமைக்கும் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். அந்த நிறுவனத்தின் கூடாரங்களில் தங்கி வேலைக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த கூடாரத்தை ஒரு கும்பல் சுற்றி வளைத்தனர்.

அப்போது கலவர கும்பல் குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் தலைவன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா சிக்கி உயிரிழந்தார்.

இ‌தி‌ல் படுகாய‌ம் அடை‌ந்த ஆலங்குளம் தாலுகா நாகல்குளத்தைச் சேர்ந்த அசோக்குமார் (24) அ‌ங்கு‌ள்ள மரு‌த்துவமனை‌யி‌ல் சிகிச்சை பெற்று வந்தார். நே‌ற்று அவ‌ர் சிகிச்சை பலனின்றி உ‌யி‌ரிழ‌ந்தா‌ர்.

அசோக்குமார் இறந்த தகவல் நாகல்குளத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் காயம் அடைந்த களப்பாகுளம் முத்துக்குமார் தொட‌ர்‌ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இத‌னிடையே ‌லி‌பியா‌வி‌ல் உ‌ள்ள த‌ங்க‌ள் ‌பி‌ள்ளைகளை உடனடியாக ‌மீ‌ட்க வே‌ண்டு‌ம் எ‌ன்று பெ‌ற்றோ‌ர்க‌ள் ம‌‌த்‌திய, மா‌நில அரசுகளை கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர்.
THANKS TO http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1102/25/1110225004_1.htm
read more...
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு நெ‌ல்லை தமிழர் பலிSocialTwist Tell-a-Friend

இனிஇ இல்லை அண்ணையின் அன்னை

0 comments
கனடாவிலிருந்து பொன்.சிவகுமாரன்


பார்வதி... பார்வதிப் பிள்ளை... பார்வதி அம்மா... அண்ணையின் அம்மா... அன்னை... இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரானஇ தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது!


2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்துஇ 'பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். 'நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி. பரபரத்த ராணுவம்இ அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங் கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னை யும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார் கள். அந்த சோகம்கூடச் சொல்ல முடியாமல் வேலுப்பிள்ளை மரணித்தார். அடுத்ததாகஇ இதோ அம்மாவும் சென்றுவிட்டார்.

வல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள்இ இந்தப் பார்வதி. சின்ன வயதில் இவரைக் 'குயில்’ என்றுதான் கூப்பிடுவார்கள். 16 வயதில் வல்வெட்டித்துறை திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார். மூத்த மகன் மனோகரன்இ அடுத்த மகள் ஜெகதீஸ்வரிஇ இளைய மகள் விநோதினி ஆகிய மூவரையும் பெற்ற இந்தத் தம்பதியினர் அனுராதபுரம் புத்தளம் வீதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் எல்லாளன் நினைவுத் தூபி இருக்கும். தூபியைச் சுற்றிய புல்வெளியில் ஐந்து வயதான மனோகரனும் நான்கு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாடஇ கைக்குழந்தையான விநோதினி அம்மா மடியில் தவழ்ந்துகொண்டு இருப்பார். எல்லா மாலை நேரங்களும் அவர்களுக்கு அப்படித்தான் கழியும். இந்த வேளையில்தான் புதிய கரு உண்டானது. ஈழத்தை ஆண்டதால் ஈழாளன் என்றும்இ அதுவே காலப்போக்கில் எல்லாளன் என்று மருவியதாகச் சொல்வார்கள். அந்த ஈழாளனின் வீரக் கதையை மற்ற பிள்ளைகளுக்கு பார்வதித் தாய் சொல்ல... கருவில் இருந்த குழந்தையும் கேட்டது. அந்தக் கரு... பிரபாகரனாக வளர எரு போட்டது பார்வதித் தாய்!

பார்வதிக்கு நெருக்கமான பெண்களில் ஒருவர் ராசம்மா. சிங்கள இனவாதைக் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவர் இந்த ராசம்மா என்ற ஆசிரியை. இவரது கணவரான ஆசிரியர் செல்லத்துரைஇ சிங்கள இனவெறியன் ஒருவரால் சுட்டுக் கொல்லப் பட்டார். கணவனை இழந்ததால் தான் பட்ட துன்பங்களையும் இதே மாதிரி தமிழர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் பார்வதியிடம் ராசம்மா சொல்ல... அதை சிறுவனாக இருந்த பிரபாகரன் காது கொடுத்துக் கேட்பார்.பத்திரிகை யாளர் அனிதா பிரதாப்புக்கு வழங்கிய பேட்டி யில் பிரபாகரனே இந்த சம்பவத்தைக் குறிப் பிட்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிய சம்பவமாக இதையேகுறிப்பிட்டார்.

வேலுப்பிள்ளையும் பார்வதியும் வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டைத்தான் சிங்கள ராணுவம் இப்போது இடித்து நொறுக்கியது. இந்த வீட்டுக்கு இவர்கள் குடிவந்தபோதுஇ ஏதும் அறியாத சிறுவன்தான் பிரபாகரன். ஆனால்இ 14 வயதில் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை முதலில் கண்டுபிடித்தது பார்வதியே. சிறுசிறு போத்தல்களை எடுத்து வருவதும்இ பால்பேணிகளைக் கொண்டுவந்து காயவைப்பதும்இ பின்னர் அதை எடுத்துச் செல்வதையும் பார்வதி பார்த்தார். சின்னச்சோதிஇ நடேசுதாசன் ஆகிய நண்பர்கள் வந்து போவதும்இ பிரபாகரனைவிட மூத்த குட்டி மணியின் நட்பும் அன்னையை யோசிக்கவைத்தது. மகனின் கையில் இருந்த மோதிரமும் வீட்டில் இருந்த காப்பும் காணாமல் போய்இருந்தது. மகனின் போக்கு பற்றி மெதுவாகச் சொன்னார் பார்வதி. ''நாலு மொட்டையர்களுடன் இணைந்து உன்னால் என்ன செய்ய முடியும்?'' என்று வேலுப்பிள்ளை கேட்டார்.



''நாலு மொட்டை நாளைக்கு நாற்பது மொட்டை ஆகும். அது நானூறு மொட்டை ஆகும்'' என்று சொல்லிவிட்டுப் போன பிரபாகரனை இருவரும் அவரது வழியில் விட்டுவிட்டார்கள். அதன் பிறகு வந்த போலீஸ் நெருக்கடிகள் அனைத்தையும் மனதார ஏற்றுக்கொண்டார் பார்வதி. 1975-ல் தொடங்கி 2010 வரை ஒரு நிமிடம்கூட மனதால் வருந்தியிருக்கவே மாட்டார். மாறாகஇ பெருமையாகக் கழித்தார். 2000-ம் ஆண்டில் பார்வதியின் கால்கள் பாரிசவாதம் காரணமாக நகர மறுத்தன. இலங்கையிலும் சமாதானப் பேச்சுக்கள் தொடங்கியதால் மகனுடன் இருக்கவே நினைத்தார் பார்வதி. 2003-ல் தாயகம் வந்தார்கள் இருவரும். சில வருடங்களில் சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சி வலையில் சின்னஞ்சிறு தமிழர் தேசம் சிக்கிக்கொண்டது. மக்களைப் பிரியா மன்னவனும்... மன்னனைப் பிரியா அன்னை அவளும் இருக்க... சொற்களால் சொல்ல முடியாத சோகம் அது!

புலியை வளர்த்த குயில் பறந்துவிட்டது. குயில் பாட்டும் புலிச் சீற்றமும் கேட்டுக்கொண்டே இருக்கும்!



Thanks
http://www.yarl.com/forum3/index.php?showtopic=82167
read more...
இனிஇ இல்லை அண்ணையின் அன்னைSocialTwist Tell-a-Friend

அதிமுக கொடுத்த ஒரு சீட்டுக்கு அதிருப்தி-பார்வர்ட் பிளாக்கில் போர்க்கொடி

0 comments
சென்னை: அதிமுக கூட்டணியில் தங்களது கட்சிக்கு ஒரு சீட் மட்டுமே ஒதுக்கியதற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் அதிருப்தி வெடித்துள்ளது. தங்களது கட்சி தனித்துப் போட்டியிடும் என கட்சியின் ஒரு பிரிவு அறிவித்துள்ளதால் கட்சி பிளவுபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இக்கட்சிக்கு ஜெயலலிதா ஒரு சீட் ஒதுக்கியுள்ளார். இதுதொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

அதில் பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசியச் செயலாளரும் மேற்குவங்க மாநில விவசாயத்து துறை அமைச்சருமானர் நரேந்திரநாத் தே, ஜெயலலிதா ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர். அப்போது கட்சியின் தேசியச் செயலாளர் தேவராஜன், மாநில பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தேவராஜன் கூறுகையில், தமிழ்நாட்டில் இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு அணியை வலுப்படுத்தும் வகையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான அணியில் சேர்ந்து போட்டியிடுவது என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினோம்.

இந்தத் தேர்தலில் அதிமுக அணியில் எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்கம் சின்னத்தில் எங்கள் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் என்றார் தேவராஜன்.

உசிலம்பட்டி தொகுதியில்...

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில்தான் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தொடர்ச்சியாக போட்டியிட்டு வருகிறது. எனவே, இந்தத் தேர்தலிலும் தங்கள் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் பார்வர்டு பிளாக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு சீட் மட்டும் தரப்பட்டதற்கு அந்தக் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு சீட்டுக்காக ஒப்பந்தம் போடுவதா என்று கட்சியின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் மாயாண்டி ஆகியோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

ஒரு சீட் தருவதை தங்களால் ஏற்க முடியாது என்றும், தங்களது கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் பார்வர்ட் பிளாக் கட்சி பிளவு படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இக்கட்சியின் தலைவராக நடிகர் கார்த்திக் பதவி வகித்துள்ளார். ஆனால் அவரும் பின்னர் அதிருப்திக்குள்ளாகி, கட்சியை விட்டு நீக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். அதன் பிறகுதான் அவர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை ஆரம்பித்தார். தற்போது கார்த்திக்கும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/02/24/upset-over-seat-allocation-aifb-on-verge-of-split-aid0090.html
read more...
அதிமுக கொடுத்த ஒரு சீட்டுக்கு அதிருப்தி-பார்வர்ட் பிளாக்கில் போர்க்கொடிSocialTwist Tell-a-Friend

மீனவர் பிடிக்கப்பட்டமை திமுக, டக்ளஸ் ஆகியோரின் கூட்டு சதி – மாதகல் பங்குதந்தை

0 comments
அண்மையில் வடமராட்சியில் தமிழக மீனவர்கள் பிடிகப்பட்டமையும் பின்னர் திமுக கனிமொழி உட்பட பலர் உடனடியாக ஆர்ப்பாட்டம்செய்து அரசியல் புழுதியை கிளப்பியதும் தெரிந்ததே. உண்மையில் இந்த சம்பவங்கள் அனைத்தும் திட்டமிட்டு திமுக அரசு மற்றும் யாழ் அரசியல் வாதி ஒருவரினாலும் நடத்தப்பட்டது. இவ்வாறு கூறியுள்ளார் மாதகல் பங்குதந்தை ஆனந்த குமார்.


எடுத்துக்காட்டாக நேற்று 50 ரோலர்களில் தமிழ் நாட்டு மீனவர்கள் மாதகல் பகுதியில் மீன்பிடிக்க நுழைந்தனர். இவர்களை எமது மீனவர்கள் ஒன்றும் செய்ய கூடாது என நான் கூறியிருந்தேன் அதே நேரம் நான் அந்த இந்திய மீனவர்களை சந்தித்தேன் அவர்கள் கூறியது என்னவென்றால், தாம் திமுக தொண்டர்களால் கட்டாயபப்டுத்தப்பட்டு அனுப்பப்படுவதாக கூறினார்கள் தம்மை மன்னிக்குமாறும் கூறினார்கள் என அருட்தந்தை ஆனந்த குமார் கூறியுள்ளார்


Thnaks

http://www.nerudal.com/nerudal.26242.html
read more...
மீனவர் பிடிக்கப்பட்டமை திமுக, டக்ளஸ் ஆகியோரின் கூட்டு சதி – மாதகல் பங்குதந்தைSocialTwist Tell-a-Friend

சாமியார் பிரேமானந்தா காலமானார்!

0 comments

THANKS TO http://www.inneram.com/2011022113690/premananda-died


 
சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல சாமியார் C காலமானார்.

திருச்சியை அடுத்த பாத்திமா நகரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா. பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு 95ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

பிரேமானந்தாவுக்குப் புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இரட்டை ஆயுள் தண்டனையையும் தனித்தனியாக அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. கடலூர் சிறையில் 10 ஆன்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வந்தார்.

தண்டனை ரத்து செய்ய மேல் முறையீடு செய்தார். ஆனால் கீழ் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது.

கடந்த சில நாள்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த பிரேமானந்தா, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று நண்பகல் அவரது உயிர் பிரிந்தது.
read more...
சாமியார் பிரேமானந்தா காலமானார்!SocialTwist Tell-a-Friend

தீருவில் சதுக்கத்தில் ஈழத்தாயின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி - நாளை மாலை தகனம்

0 comments
THANKS TO http://www.tamilwin.com/view.php?222CQjH3bcdT92qb4e0cIBB402dRpGsbdd0aGpX4202VLLSk2e4cC293ecbe5jQec2
[ திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011, 02:56.08 AM GMT ]
நேற்று இயற்கை எய்திய பார்வதியம்மாளின் பூதவுடல் தீருவில் சதுக்கத்தில் நேற்று மாலை 5 மணி முதல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஊர்மக்கள் தொடர்ச்சியாக வந்து அஞ்சலி செலுத்தினர். பேரன்னையின் இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளன.

பார்வதி அம்மாளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கறுப்புக் கொடிகளைக் கட்ட வேண்டாம். அஞ்சலி செலுத்தும் சுவரொட்டிகளில் பிரபாகரனின் பெயரைப் பாவிக்க வேண்டாமென இராணுவத்தினர் கடுமையாக உத்தரவிட்டுள்ளனர் என யாழ். மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நேற்றுத் தெரிவித்தார்.

இராணுவத்தினரின் உத்தரவையும் மீறி, மக்கள் வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுள்ளனர். பிரபாகரன் பெயரைக் கொண்ட அஞ்சலி சுவரொட்டிகளை இராணுவத்தினர் இளைஞர்களைக் கொண்டு அகற்றி வருகின்றனர்.
அஞ்சலி சுவரொட்டிகளில் பிரபாகரன் பெயரைப் பாவிக்க வேண்டாம் எனவும், "வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள்" எனப் பாவிக்கும்படியும் இராணுவத்தினர் பணித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
read more...
தீருவில் சதுக்கத்தில் ஈழத்தாயின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி - நாளை மாலை தகனம்SocialTwist Tell-a-Friend