கொசுக்களை ஒழிக்க வரும் லேசர்!

0 comments
வாஷிங்டன்: கொசுக்களை லேசர் மூலம் ஒழிக்கும் சாதனத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்து உள்ளனர்.

ஃபோடானிக் ஃபென்ஸ் என்றழைக்கப்படும் இந்த சாதனத்தை வாஷிங்டனில் உள்ள இன்டெலக்சுவல் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதைசுவற்றிலோ அல்லது வேலிகளிலோ பொருத்தி விட்டால் அதில் இருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள், கொசுக்களை கண்டுபிடித்து 'எரித்துவிடும்'.

இந்த லேசர் சாதனம் கொசுக்களை மட்டுமே அடையாளம் கண்டு அழிக்கும். மற்ற பட்டாம்பூச்சி உள்ளிட்ட மென்மையான பூச்சிகளை தொந்தரவு செய்யாது.

மேலும், இந்த சாதனத்தின் மூலம் கொசுக்களிலேயே ஆண், பெண் இனத்தையும் தனியாக பிரித்து அறியலாம். மனிதர்களை கடிப்பது பெண் கொசுக்கள் என்பதால் அவற்றை மட்டும் குறிவைத்து ஒழிக்கவும் இயலும். (ஒவ்வொரு பூச்சியின் இறக்கை அசைவிலும் உள்ள வி்த்தியாசம் உண்டு. அதிலும் ஆண்-பெண் பூச்சிகளின் இறக்கை அசைவிலும் கூட வேறுபாடு உண்டு. அதை வைத்து பெண் கொசுவை மட்டும் தனியே பிரித்து இந்த லேசர் பாயும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள்)

சர்வேதேச அளிவில் மலேரியா நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கொசுக்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் விஞ்ஞானிகள் இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பி்ல் கேட்சின் அறக்கட்டளை தான் நிதியுதவி அளித்துள்ளது.

கொசுவை ஒழிக்க லேசரா.. பயங்கர செலவு பிடிக்குமே என்று நினைக்காதீர்கள் என்கிறது இன்டெலக்சுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம். விளையாட்டு பொம்மைகளில் உள்ள சாதாரண லேசர் தொழில்நுட்பத்தைத் தான் இதில் பயன்படுத்தியுள்ளோம் என்கின்றனர்
http://thatstamil.oneindia.in/news/2010/02/19/new-laser-zaps-mosquitoes.html
read more...
கொசுக்களை ஒழிக்க வரும் லேசர்!SocialTwist Tell-a-Friend

புகழ்பெற்ற யானைமலையில் சிற்பக் கலை நகரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு - போராட்டம் வலுக்கிறது

1 comments
மதுரைஅடுத்து உள்ள ஒத்தக்கடை யானைமலையை குடைந்து சிற்பக்கலைநகரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொது மக்கள் மேலூர் ரோட்டில் சாலை மறியல் ஈடுபட்டதால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
read more...
புகழ்பெற்ற யானைமலையில் சிற்பக் கலை நகரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு - போராட்டம் வலுக்கிறதுSocialTwist Tell-a-Friend