இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறு

0 comments
அலையிருக்கும், மலையிருக்கும், காற்றிருக்கும் நாள்வரை மன்னராண்ட மதுரை தஞ்சை காஞ்சியோடு உறந்தையும் மறவர் நாடும் உலகமுற்றும் வாழ்கவாழ்க வாழ்கவே! -----------------------கவிஞர் கண்ணதாசன்


குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக,  
பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது. 

அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. 
விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள். மேலும் தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய இராசராச சோழன், 
கல்லணையைக்கட்டிய கரிகாலன், 
 மகனின் மீது தேராட்டி பசுவுக்குநீதிவழங்கிய ஆரூர் மனுநீதிச்சோழன் அனைவரும் கள்ளர்களே! 

உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!! இவ்வாறு அவ்வாய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன. 

இராசராசோழனை பள்ளர், பறையர்,புலையர்,வலையர் என்றெல்லாம் இழிவுபடுத்துவதை தடுக்க நம் இனத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமிருக்கிறது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், நான் ஊத்துக்காடு மழவராயர் குடும்பத்தில் பிறந்தவன். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் என்பவர்கள் மட்டுமே வசித்துவருகின்றோம். மேலும், சோழ மன்னர்கள் அனைவரும் வீர இனத்தினரான கள்ளர்குலத்தைச்சேர்ந்தவர்கள். எனவே, அவர்களைப்பற்றி எழுதவேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் எனக்கு ஏற்பட்டுள்ளதால், கட்டுரைகளை தொடங்குகின்றேன்.
பிற்காலச்சோழர்களின் ஆட்சிப்பட்டியல்:

எண்
சோழமன்னனின்
பெயர்
மனைவியின்
பெயர்
ஆட்சிக்காலம்
தலைநகரம்
1
விசயாலயச் சோழன்
ஊத்துக்காடு
மழவராயர் மகள்
கிபி.846-881
பழையாறை
ஞ்சாவூர்
2
தித்த சோழன்
வல்லவராயர் மகள்
இளங்கோபிச்சி
கி.பி.871-907
ஞ்சாவூர்
3
1ம் பராந்தக சோழன்
பழுவேட்டரையர் மகள்
கி,பி,907-953
ஞ்சாவூர்
4
கண்டராதித்த சோழன்
மழவராயர்மகள்
செம்பியன்மாதேவி
கி.பி.950- 957
ஞ்சாவூர்
5
அரிஞ்சய சோழன்
வைதும்பராயர் &
கொடும்புரார்மகள்கள்
கி.பி.956 -957
ஞ்சாவூர்
6
சுந்தரசோழன்
திருக்.மலையமான் சேதிராயர்மகள்
கி.பி.957 -970
ஞ்சாவூர்
7
உத்தமசோழன்
மழவராயர் & இருங்களார்மகள்கள்
கி.பி.957 -970
ஞ்சாவூர்
8
1ம்இராசராச சோழன்
கொடும்புரார் & பழுவேட்டரயர் மகள்கள்
கி.பி.985 -1014
ஞ்சாவூர்
9
1ம் இராசேந்திர சோழன்
5 மனைவிகள்பட்டம் தெரியவில்லை
கி.பி.1012 -1044
.கொ.சோழபுரம்
10
முதல்இராசாதிராசசோழன்

கி.பி.1018 -1054
.கொ.சோழபுரம்
11
2ம் இராசேந்திரசோழன்

கி.பி,1051-1063
.கொ.சோழபுரம்
12
வீர்ராசேந்திர சோழன்

கிபி.1063 1070
.கொ.சோழபுரம்
13
அதிராசேந்திரசோழன்

கிபி.1070
.கொ.சோழபுரம்
14
முதல் குலோத்துங்கசோழன்
காடவராயர்மகள்
கிபி1070 1120
.கொ.சோழபுரம்
15
விக்கிரமசோழன்

கிபி.1118 1136
.கொ.சோழபுரம்
16
2ம் குலோத்துங்க சோழன்

கிபி.1133 1150
.கொ.சோழபுரம்
17
2ம் இராசராச சோழன்
திருக்கோ.மலைய.சேதிராயர் மகள்
கிபி.1146 1163
.கொ.சோழபுரம்
18
2ம் இராசாதிராசசோழன்

கிபி.1163 1178
.கொ.சோழபுரம்
19
3ம் குலோத்துங்கசோழன்

கிபி.1178 1218
.கொ.சோழபுரம்
20
3ம் இராசராச சோழன்
வல்லவரையர் (வாணர்குல) மகள்
கிபி.1216 1256
.கொ.சோழபுரம்
21
3ம் இராசேந்திரசோழன்
சோழகுலமாதேவி
கிபி.1246 1279
.கொ.சோழபுரம்
கள்வன் ராஜ ராஜன்என்றும்,
read more...
இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறுSocialTwist Tell-a-Friend

தேவர் குருபூஜை விழா : பசும்பொன்னில் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது

0 comments
கமுதி:கமுதிஅருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 103வது ஜெயந்தி விழா, 48வது குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும¢பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு குருபூஜை விழா நேற்று துவங்கியது.
அக்டோபர் 28ம் தேதி ஆன்மிக விழாவும்,
29ம் தேதி அரசியல் விழாவும், 
30ம் தேதி குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவாகவும் நடக்கிறது. 
நேற்று காலை 8 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மங்கல இசையுடன் கோவை காமாட்சிபுரி ஆதீனம்,       சிவலிங்கேஸ்வர சுவாமிகள், அனந்தலிங்க தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் தலைமையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து லட்சார்ச்சனை நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு தேரோட்டமும் நடந்தது. 

இன்று (29ம் தேதி) காலை லட்சார்ச்சனை தொடர்ச்சியும், மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 30ம் தேதி காலை மஹா அபிஷேகமும் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழாவும் நடக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நாளை( 30ம் தேதி ) பசும்பொன் வருகின்றனர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வரும் முக்கியத் தலைவர்களுக்கும் அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
விழா ஏற்பாடுகளை தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன், சத்தியமூர்த்தி, ராமச்சந்திரன் ஆகியோர் செய்துள்ளனர். விழாவை முன்னிட்டு தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பசும்பொன்னில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடபட்டுள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து பசும்பொன்னுக்கு வரும் வாகனங்கள் எந்த வழியாக வந்து செல்ல வேண்டும் என ஏற்கெனவே காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
thanks to http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=7997
read more...
தேவர் குருபூஜை விழா : பசும்பொன்னில் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியதுSocialTwist Tell-a-Friend

பசும்பொன் செல்லும் வழி மாற்றம்: கிராம மக்கள் திடீர் உண்ணாவிரதம்

0 comments
First Published : 26 Oct 2010 08:43:20 AM IST


அருப்புக்கோட்டை, அக். 25: தேவர் குரு பூஜைக்காகப் பசும்பொன் செல்லும் வாகனப் போக்குவரத்து வழியை மாற்றக் கூடாது என வலியுறுத்தி அருப்புக்கோட்டை அருகே  சேதுபுரத்தில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.  

                 ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை அக்டோபர் 30-ம் தேதி நடைபெறுகிறது. அப்போது பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க வாகனங்கள் செல்லும் வழி மாற்றப்பட்டுள்ளது
                 கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு அருப்புக்கோட்டை மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் திருச்சுழி, மண்டல மாணிக்கம் வழியாகச் சென்றன. அப்போது தகராறு ஏற்பட்டு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.              
                       அதனால் இந்த ஆண்டு கல்லூரணி, ரெட்டியாபட்டி, கமுதி விலக்கு வழியாக வாகனங்கள் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால் திருச்சுழி, மண்டல மாணிக்கம் வழியாகத்தான் வாகனங்கள் செல்ல வேண்டும். ஊரைச் சுற்றி செல்ல முடியாது எனக்கூறி  மண்டலமாணிக்கம், செம்பொன்நெறிஞ்சி, நெல்லிக்குளம், அம்மன்பட்டி ஆகிய பகுதி மக்கள் சேதுபுரத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.  

                          இதுகுறித்து விருதுநகர் மாவட்ட பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் செயலாளர் முத்துராமலிங்கம் கூறுகையில், 46 ஆண்டுகளாக இந்த வழியாகத்தான் சென்று வந்தோம். இந்த ஆண்டு வேறு வழியாக சுற்றிச் செல்லுமாறு சொல்கிறார்கள். கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொடர் உண்ணாவிரதம் இருப்போம் என்றார்.  இவர்களிடம் போலீஸôர் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் உண்ணாவிரதம் நீடித்தது.
thanks to www.dinamani.com
read more...
பசும்பொன் செல்லும் வழி மாற்றம்: கிராம மக்கள் திடீர் உண்ணாவிரதம்SocialTwist Tell-a-Friend

தேவர் குருபூஜை: தலையில் ரிப்பன் கட்டி வர வேண்டாம்

0 comments
First Published : 22 Oct 2010 11:34:15 AM IST


ராமநாதபுரம், அக். 21: தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் தலையிலோ அல்லது கைகளிலோ எவ்வித கலர் துணிகள், ரிப்பன்கள் கட்டி வர வேண்டாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வியாழக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளார். தேவர் குருபூஜை விழா தொடர்பான அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமை வகித்து மேலும் பேசியதாவது: அஞ்சலி செலுத்த வாகனங்களில் வருவோர் வாகன எண், அதன் ஓட்டுநர் முகவரி, வாகன உரிமையாளர் முகவரி மற்றும் வாகனத்தில் பயணம் செய்வோரின் விவரத்தை வாகனம் புறப்படும் இடத்தின் எல்கைக்குட்பட்ட காவல் நிலையத்தில் முன்கூட்டியே தெரிவித்து, அதற்கான காவல் துறையினரின் அனுமதி சான்றை வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டி வர வேண்டும். சான்று பெறாத வாகனங்களுக்கும் லாரி,டிராக்டர் போன்ற வாகனங்களில் வரவும் அனுமதியில்லை. வாகனங்களின் மேற்கூரையில் வருவதோ, கோஷம் எழுப்புவதோ, ஆயுதங்கள் மற்றும் மதுபானங்கள் எடுத்து வரவோ அனுமதியில்லை. காவல் துறையினர் சோதனை செய்யும் போது ஆயுதங்களோ அல்லது மதுபானங்களோ இருந்தால், அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும். வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், வாகனத்தில் பயணிப்போர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். ஜோதி எடுத்து வருபவர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் செல்ல வேண்டும். ஜோதி, முளைப்பாரி, பால்குடம் போன்ற ஊர்வலங்களுக்கு இம் மாதம் 29 ஆம் தேதி அனுமதிக்கப்படும். மறுநாள் 30 ஆம் தேதி இதுபோன்ற ஊர்வலங்களுக்கு அனுமதியில்லை. பசும்பொன்னில் ஊர்வலங்கள் நடத்த அனுமதி கிடையாது. வெளிமாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு வழிக் காவல் பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், காவல் துறை தொலைபேசி எண்-04567-232110, 232111 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்தார். கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கி. பாலசுப்பிரமணியம், எஸ்.பி.பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகவேல், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்கள் உள்பட வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
 
thanks to /http://www.dinamani.com/
read more...
தேவர் குருபூஜை: தலையில் ரிப்பன் கட்டி வர வேண்டாம்SocialTwist Tell-a-Friend