“தெய்வத்திருமகன்” பட பெயருக்கு எதிர்ப்பு; நடிகர் விக்ரம் வீடு முற்றுகை; 50 பேர் கைது; போலீஸ் குவிப்பு

0 comments
திருவான்மியூர், ஏப். 30-
 
நடிகர் விக்ரம் “தெய்வத் திருமகன்” என்ற படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக நடித்துள்ளார். விஜய் இயக்கியுள்ளார். விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் தலைப்பு “தெய்வத்திருமகன்” என்று வைத்திருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேவர் பேரவை மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் இது தொடர்பாக புகார் செய்துள்ளனர்.
 
மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை “தெய்வத்திருமகன்” என்று அழைத்து வருகிறோம். அந்தப் பெயர் அவருக்குத்தான் பொருந்தும், சினிமா படத்தில் மனவளர்ச்சி குன்றிய கதாபாத்திரத்திற்கு அந்தப் பெயரை சூட்டி இருப்பது அவரை அவமதிப்பதாகும்.
 
எனவே படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் “தெய்வத் திருமகன்” படத்தின் தலைப்பை எதிர்த்து சென்னையில் இன்று நடிகர் விக்ரம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
 
விக்ரம் வீடு திருவான்மியூர் அருண்டேல் கடற்கரை சாலையில் உள்ளது. இன்று காலை தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் முத்தையா தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக விக்ரம் வீட்டுக்கு சென்று முற்றுகையிட்டனர்.
 
படத்தின் தலைப்பை மாற்றக்கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் கிடைத்ததும் அடையாறு துணை கமிஷனர் சித்தண்ணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். முத்தையா உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த போராட்டம் காரணமாக விக்ரம் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே எதிர்ப்பு காரணமாக படத்தின் தலைப்பை “தெய்வத்திரு மகள்” என்று மாற்றி இருப்பதாக தயாரிப்பாளர் மோகன் நடராஜன் தெரிவித்துள்ளார். 
thanks to http://www.maalaimalar.com/2011/04/30131434/deiva-thirumagan-objection-att.html
read more...
“தெய்வத்திருமகன்” பட பெயருக்கு எதிர்ப்பு; நடிகர் விக்ரம் வீடு முற்றுகை; 50 பேர் கைது; போலீஸ் குவிப்புSocialTwist Tell-a-Friend

ஐ.நாவின் 196 பக்க அறிக்கை: சுருக்கக் குறிப்புகள் தமிழில் !

0 comments
ஐ.நாவின் 196 பக்க அறிக்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. பெரும்சிரமத்துக்கு மத்தியில், ஆங்கிலத்தில் உள்ள அந்த அறிக்கையை தமிழ் மக்களும் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு சில உணர்வாளர்களால் இது தமிழாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் இதில் உள்ள சாராம்சத்தையும், முக்கிய குறிப்புகளையும் நாம் இங்கே தருகிறோம்.

சுருக்கமான தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள 196 பக்கங்கள் கொண்ட அறிக்கையின் மொழிபெயர்ப்புக்கு உதவிய ஊடகவியலார்களளுக்கு நாம் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஐ.நாவின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை:

சிறீலங்காவில் இடம்பெற்றபோரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவின் குழு மேற்கொண்ட ஆய்வுகளை தொடர்ந்து சிறீலங்காவில் பெருமளவான போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் 2008 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை நாம் அதிகமாக ஆராய்ந்துள்ளோம்.

வன்னியில் 330,000 மக்கள் போரில் சிக்கியிருந்தனர். அவர்களில் பலர் சிறீலங்கா படையினரின் எறிகணை தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகளும் மக்களை கேடையமாக பயன்படுத்தினர். போரில் நடைபெறும் சம்பவங்கள் வெளியில் தெரியவருவதை தவிர்ப்பதற்காக சிறீலங்கா அரசு ஊடகவியலாளர்களையும், ஏனைய பணியாளர்களையும் மிரட்டிவந்துள்ளது. வெள்ளைவான் கடத்தல் மூலமும் மக்கள் காணாமல்போகச் செய்யப்பட்டனர்.

மூன்று பாதுகாப்பு வலையங்களை அறிவித்த சிறீலங்கா அரசு அதன் மீது செறிவான எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டு மக்களை படுகொலை செய்துள்ளது. கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என சிறீலங்கா அரசு தெரிவித்தபோதும், அவர்கள் அதனை மீறியுள்ளனர். ஐ.நா அலுவலகம் மீதும், வைத்தியசாலைகள் மீதும், அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தின் உணவு விநியோக நிலையம் மீதும் சிறீலங்கா அரசு எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. சிறீலங்கா அரசின் எறிகணைத்தாக்குதல்களினாலேயே பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலைகள் என தெரிந்திருந்தும் சிறீலங்கா படையினர் அதன் மீது மோட்டார் மற்றும் பீரங்கி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். மக்களுக்கான உணவு மற்றும் மருந்து விநியோகங்களையும் சிறீலங்கா அரசு திட்டமிட்டு தடுத்துள்ளது. வன்னியில் இருந்த மக்கள் தொகையையும் அது குறைத்து கூறியிருந்தது. போரின் பின்னரும் மக்களை தடுப்புக்காவலில் வைத்திருந்த சிறீலங்கா அரசு திட்டமிட்ட ரீதியில் அவர்களை பிரித்து பலரை படுகொலை செய்ததுடன், பெண்களை பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தியுள்ளது. பெருமளவானோர் காணாமல்போயுள்ளனர். பொதுமக்கள் மூடிய முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்.

சிறிய பகுதிக்குள் பெருமளவான மக்களை அடைத்து அனைத்துலகத்தின் விதிகளை அரசு மீறியுள்ளது. முகாம்களில் அடைக்கப்பட்ட பலர் துன்புறுத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்து பிரிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

போரின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கியமான வன்முறைகள்:

சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டவை

� எறிகணைத் தாக்குதல்கள் மூலம் பெருமளவான பொதுமக்களை படுகொலை செய்தது.

� வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியமை.

� மனிதாபிமான உதவிகளை தடுத்தமை.

� போரில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டமை.

� போர் நடைபெற்ற பகுதிக்கு வெளியில் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான வன்முறைகள், ஊடகத்துறை மீதான வன்முறைகள்.

விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டவை:

� மக்களை கேடையமாக பயன்படுத்தியமை.

� வெளியேற முனைந்த மக்களை படுகொலை செய்தமை.

� பொதுமக்களின் பிரதேசத்தில் படை உபகரணங்களை வைத்திருந்தமை.

� பலவந்தமாக சிறுவர்களை படையில் சேர்த்தது.

� பலவந்தமாக மக்களை பணியில் அமர்த்தியது.

� தற்கொலை தாக்குதல்களில் பொதுமக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியது.

எனவே இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மற்றும் அனைத்துலக விதிகளின் மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா படை அதிகாரிகள், படை சிப்பாய்கள், சிறீலங்கா அரச அதிகாரிகள், விடுதலைப்புலிகள் மற்றும் ஏனையவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

சிறீலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அதன் முன் பெருமவளாக மக்கள் சாட்சியமளித்துள்ளனர். ஆனால் இந்த குழு அனைத்துலகத்தின் தராதரத்தை கொண்டிருக்கவில்லை. அவர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தவில்லை.

சிறீலங்காவில் தீர்க்கப்படாத ஏனைய பிரச்சனைகள்:

� விடுதலைப்புலிகளை முறியடித்துள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துவரும்போதும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் அங்கு தீர்க்கப்படவில்லை.

� அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதார ரீதியாக தமிழ் மக்கள் புறக்கணிப்புக்கு உள்ளானதே இனப்பிரச்சனைக்கான முக்கிய காரணம்.

� போர்க்கால நடவடிக்கைகள் அங்கு தொடர்கின்றன. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் என்பன தொடர்கின்றன. இராணுவமயப்படுத்தல்களும், துணைஇராணுவக்குழுக்களின் நடவடிக்கைகளும் நிறுத்தப்படவில்லை.

� ஊடகங்கள் மீதான வன்முறைகளும் தொடர்கின்றது.

பொதுமக்களை பாதுகாப்பதில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு

இறுதிக்கால போரில் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அனைத்துலக சமூகமோ பொதுமக்களை பாதுகாப்பதில் இருந்து தவறியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கொண்டுவந்த தீர்மானம் கூட 2009 ஆம் ஆண்டு தவறான தகவல்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகள்:

சிறீலங்கா அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என நாம் பரிந்துரை செய்கிறோம்.

பரிந்துரை -1: விசாரணைகள்

நாம் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு நீதியான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

சிறீலங்கா அரசின் விசாரணைகளை அவதானிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உடனடியாக சுயாதீன அனைத்துலக கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவேண்டும்.

இந்த குழு பின்வரும் செயற்பாடுகளை கொண்டிருத்தல் வேண்டும்:

� சிறீலங்கா அரசின் விசாரணைகளை உன்னிப்பாக அவதானித்து, செயலாளர் நாயகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

� நீதியான சுயாதீன விசாரணைகளையும் அது மேற்கொள்ள வேண்டும்.

� ஆதாரங்களை சேகரித்து, அதனை பாதுகாத்து வழங்கவேண்டும்.

பரிந்துரை -2: உடனடியான சிறப்பு நடவடிக்கைகள்

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

1. சிறீலங்கா அரசினாலும், அதனுடன் இணைந்து இயங்கும் துணைஇராணுவக்குழுக்களினாலும் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

2. போரில் கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் முகமாக அவர்களின் எச்சங்கள் கையளிக்கப்படுவதுடன், அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

3. காணாமல்போனவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கப்படவேண்டும். அதற்கான கட்டணங்கள் அறவிடப்படக்கூடாது.

4. போரில் தப்பியவர்களுக்கு சமூக மற்றும் உளவியல் உதவிகளை வழங்கவேண்டும்.

5. தடுப்புக்காவலில் உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலைசெய்யப்பட்டு அவர்கள் விரும்பிய இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

6. விடுதலைசெய்யப்பட்டவர்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பும்வரை தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

7. காணாமல்போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன், காணாமல்போனவர்கள் தொடர்பான ஐ.நாவின் அமைப்புக்கும் அது அனுமதி வழங்கவேண்டும்.

8. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் என்பன நீக்கப்பட வேண்டும். அல்லது அதனை அனைத்துலக தராதரத்திற்கு மாற்றவேண்டும்.

தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தொடர்பில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

� தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பெயர் விபரங்களும், அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடமும் வெளியிடப்பட வேண்டும்;.

� அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களும், சட்டவாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.

� நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

� குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதுடன், ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

� சுதந்திரமான நடமாட்டங்களை தடைசெய்யும் சிறிலங்கா அரசின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.

பரிந்துரை -3: நீண்டகால சிறப்பு விசாரணை நடவடிக்கைகள்

போர் உருவாகியதற்கான காரணங்கள், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் பின்வரும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

1. பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூகப்பிரச்சனைகளை சிறீலங்கா அரசு ஆராயவேண்டும். அதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் தகவல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற பொதுமக்களின் இழப்புக்களுக்கு சிறீலங்கா அரசு பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்.

3. இறுதிக்கட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறீலங்கா அரசு அனைத்துலக தராதரத்திற்கு அமைவாக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பரிந்துரை -4: ஐக்கிய நாடுகள் சபை

வன்னியில் இடம்பெற்றபோரின்போதும், அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் குறித்து பின்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன.

1. 2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த தீர்மானத்தை அது மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான கோரிக்கையை மனித உரிமை ஆணைக்குழு மேற்கொள்ளவேண்டும்.

2. மனித உரிமைகளை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் போரின்போதும், போரின் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.

நன்றி: ஈழம் ஈ நியூஸ்
read more...
ஐ.நாவின் 196 பக்க அறிக்கை: சுருக்கக் குறிப்புகள் தமிழில் !SocialTwist Tell-a-Friend

இந்தியாவில் புதிய லேசர் குண்டுகள் தயாரிக்க ஆய்வு

0 comments
[ வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011, 12:13.58 PM GMT +05:30 ]
இந்திய பாதுகாப்பு துறை தலைமை கட்டுப்பாடு அதிகாரி விஞ்ஞானி சிவதாணுபிள்ளை நாகர்கோவிலில் நிருபர்களை சந்தித்து இன்று பேசினார்.
5 ஆயிரம் கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கும் வகையில் அக்னி 5 ஏவுகணை இந்தியாவின் அடுத்த கண்டுபிடிப்பாக இருக்கும்.
களத்தில் வீரர்கள் எண்ணிக்கையை குறைத்து, தொழில்நுட்ப உதவியுடன் தாக்குதல் நடத்துவதுதான் இனி போர் தந்திரமாக இருக்கும். அதற்கேற்ப லேசர் குண்டு போன்ற ஆயுதங்களை கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது.
அணுசக்தி இன்ஜின் பொருத்தப்பட்ட நீர்முழ்கி கப்பலை இந்தியா உருவாக்கியுள்ளது. பூகம்ப இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க உதவும் ஹைட்ரோ போன் பொருத்தப்பட்ட 250குச்சிகளை இயற்கை பேரிடர் மேலாண்மை இயக்கத்துக்கு வழங்கியுள்ளோம்.
30 மீட்டருக்கு அடியில் அவர்கள் மூச்சு விடும் சத்தத்தைக்கூட இதன்மூலம் உணர்ந்து அவர்களை மீட்க முடியும்.
thanks to http://www.newindianews.com/view.php?22AOlv2bc440Ce4e44MMc02aKmD3dd2RDmc3036CAY2e4M04K0cb2lOSd2
read more...
இந்தியாவில் புதிய லேசர் குண்டுகள் தயாரிக்க ஆய்வுSocialTwist Tell-a-Friend

ஸ்ரீவை., கள்ளர்பிரான் சுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவம்

0 comments
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவை., கள்ளர்பிரான் சுவாமி கோயிலில் சித்திரை பிரமோற்சவத்தை முன்னிட்டு கருடசேவை நடந்தது. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை இரவு சுவாமி வீதிபுறப்பாடு நடந்தது. ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான், நத்தம் விஜயாசனர், திருப்புளியங்குடி காய்சினிவேந்தபெருமாள், ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்றபிரான் ஆகியோருக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடந்தது. பின்னர் வீதி உலாவும் இரவு கருட வாகனத்தில் சுவாமி கள்ளர் பிரான், விஜயாசனர், காய்சினவேந்தபெருமாள், பொலிந்த நின்ற பிரான் ஆகியோர் அன்ன வாகனத்தில் சுவாமி நம்மாழ்வார் குடவரை பெருவாயில் எதிர்சேவை நடந்தது. விழாவில் அறங்காவலர் குழுதலைவர் பெருமாள், நிர்வாக அதிகாரி தங்கப்பாண்டியன், ஆய்வாளர் பாலு உறுப்பினர்கள் இசக்கியப்பனர் முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

THANKS TO http://www.dinamalar.com/News_Detail.asp?Id=233117
read more...
ஸ்ரீவை., கள்ளர்பிரான் சுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவம்SocialTwist Tell-a-Friend

சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம்- அசாஞ்ஜே

0 comments
அயல்நாட்டு வங்கிகளில் சேர்ந்து கொண்டே போகும் இந்திய கறுப்புப் பணம் குறித்து இந்திய அரசு அசிரத்தை காட்டி வரும் நிலையில், விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ஜே, சுவிஸ். வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கூறியுள்ளார்.

"வேறு எந்த நாட்டுக்காரர்களின் பணத்தை விடவும் சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமஅதிகம் உள்ளது." என்று அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

"ஆம், பட்டியலில் இந்தியர்கள் பெயர்கள் உள்ளன. இந்திய அரசு அயல்நாட்டு வங்கிகளில் பெருகி வரும் இந்திய கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதில் விரைவில் ஆக்ரோஷம் காட்டுவது அவசியம், இத்தகையக் கறுப்புப் பணத்தினால் ரூபாயின் மதிப்பு சீரழிந்து வருகிறது." என்றார் அசாஞ்ஜே.

அதே போல், 'தங்கள் இணையதளம் வெளியிட்டு வரும் செய்திகளுக்கு இந்திய அரசு காட்டி வரும் மெத்தனப் போக்கு ஏமாற்றம் அளிக்கிறது'. "உலகிலேயே நாங்கள் வெளியிட்டுஅள்ள தகவல்களுக்கு வினையாற்றுவதில் இந்திய அரசுதான் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. இந்திய அரசு இந்திய மக்களுக்கு தவறான கருத்துக்களைக் கூறிவருகிறது. என்னிடம் பிரதமர் மன்மோகன் சிங் ஊழலற்றவர் என்று கூறினார்கள். ஆனால் அயல்நாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை மீட்க அவரது நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாக உள்ளது." என்றார் அசாஞ்ஜே.

மேலும் அயல்நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணத்திற்கு சுவிஸ்.வங்கியுடன் புரிந்துணர்வு கொண்டு இரட்டை வரி விதிப்பு முறை செய்யலாம் என்ற திட்டத்தை அசாஞ்ஜே நேரடியாக நிராகரித்தார். இதனால் இந்தியாவுக்கு அந்தப் பணங்களை திருப்பி கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும் என்றார் அவர்.

"இரட்டை வரிவிதிப்பு முறையால் பயனில்லை. சொத்துக்கள் மறைந்திருக்கும் நிலையில் வரி விதிப்பு முறை மட்டும் சரியாகாது. இதனால் இந்தியப் பொருளாதாரம் நசிவடைந்து வருகிறது." என்று கூறினார் அசாஞ்ஜே.

தங்களிடம் சில முக்கியஸ்தர்கள் சுவிஸ்.வங்கியின் பணப்பட்டியலைக் கொடுக்குமாறு பல்வேறு விதங்களில் பேரம் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சுவிஸ்.வங்கியின் வர்த்தகம் பாதிக்கும் என்பதால் அந்தப் பெயர்களை வெளியிடவேண்டாம் என்று மிரட்டல்கள் வருவதாகவும் அசாஞ்ஜே தெரிவித்தார்.
thanks to http://tamil.webdunia.com/newsworld/news/national/1104/26/1110426013_1.htm
read more...
சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம்- அசாஞ்ஜேSocialTwist Tell-a-Friend

சிறிலங்கா அரசை குற்றவியல் நீதிமன்றதில் நிறுத்தவேண்டும்- சென்னையில் ஆர்ப்பாட்டம்!

0 comments
Published on April 25, 2011-11:30 am   ·   No Comments
சிங்கள அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் ஏற்ற வேண்டும் என  வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாலை 4.30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், ம.நடராசன் உள்பட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் கலந்து கொள்கின்றனர்.
TTHANKS TO http://www.thinakkathir.com/?p=6295
read more...
சிறிலங்கா அரசை குற்றவியல் நீதிமன்றதில் நிறுத்தவேண்டும்- சென்னையில் ஆர்ப்பாட்டம்!SocialTwist Tell-a-Friend

பச்சைப் பட்டுடன் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

0 comments
First Published : 19 Apr 2011 12:00:00 AM IST


சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையில் திங்கள்கிழமை பக்தர்கள் வெள்ளம்போல் திரண்டிருக்க, வைகையாற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கி, அருள்பாலிக்கிறார
மதுரை, ஏப். 18: சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அருள்மிகு கள்ளழகர் பச்சைப் பட்டுடன் மதுரை வைகை ஆற்றில் புதிய தங்கக்குதிரை வாகனத்தில் திங்கள்கிழமை காலை இறங்கினார். ஆற்றில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதையடுத்து, கோயில் திருவிழா நிறைவுபெற்றது.இந்நிலையில், சனிக்கிழமை மாலையில் அழகர்மலையிலிருந்து மதுரை நோக்கி அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை புதூர் அருகே உள்ள மூன்றுமாவடியில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் சார்பில் எதிர்சேவை நடைபெற்றது.இதையடுத்து, மதுரை நகருக்குள் வந்த கள்ளழகர் மாநகராட்சி அலுவலகம் உள்ள அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பலகாரர் மண்டகப்படியில் ஞாயிறுக்கிழமை மாலை எழுந்தருளினார். அங்கிருந்து மதுரை அருள்மிகு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் இரவு எழுந்தருளிய அவருக்கு, திருமஞ்சனமாகி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மாலை சூட்டப்பட்டது. பின்னர், புதிய தங்கக்குதிரை வாகனத்தில் ஆரோகணித்த கள்ளழகருக்கு பச்சைப் பட்டு சாத்தப்பட்டது. சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை வேஷ்டியிலும், பசுமை வளத்தை நாட்டில் நிலவச் செய்யும் வகையில் பச்சைப் பட்டு சாத்தியும் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றை நோக்கி ஞாயிறு நள்ளிரவில் புறப்பட்டார்.காலை 6.15 மணிக்கு கள்ளழகர் எழுந்தருளும் ஆற்று திருக்கண் மண்டபத்தில் வெள்ளிக் குதிரையில் அருள்மிகு வீரராகவப் பெருமாள் எழுந்தருளினார். இந்நிலையில், காலை 6.40 மணிக்கு ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதிக்கு வந்த கள்ளழகர் அங்கிருந்த திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளினார். ôலை 6.45 மணிக்கு ஆற்றுக்குள் அமைக்கப்பட்ட திருக்கண் மண்டபத்தை நோக்கி அவர் ஆற்றில் இறங்கினார்.ஆற்றில் இறங்கிய அழகரின் குதிரை மூன்று முறை குலுங்கியது. இதையடுத்து, பக்தர்கள் பட்டாசு வெடித்து அழகரை வரவேற்றனர்.ஆற்றில் இறங்கிய கள்ளழகர் அங்கிருந்த திருக்கண் மண்டபத்தைச் சுற்றி வந்தார். பின்னர், காலை 6.50 மணிக்கு திருக்கண் மண்டபத்தில் நுழைந்தார். அவரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்கும் வகையில் வெள்ளிக் குதிரை குலுங்கியது. கள்ளழகர் வீரராகவப் பெருமாளைச் சுற்றிவந்து, மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர், கள்ளழகர் காலை 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, ராமராயர் மண்டபம் நோக்கிச் சென்றார். பகல் 1.45 மணிக்கு ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகர் மீது பக்தர்கள் நீர் பீய்ச்சியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமராயர் மண்டகப்படியிலிருந்து பிற்பகலில் புறப்பட்ட கள்ளழகர், வண்டியூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோயிலை அடைந்தார்.
thanks to http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=406858&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
read more...
பச்சைப் பட்டுடன் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்SocialTwist Tell-a-Friend

* அவர்கள் மண்ணிலேயே தமிழர்களுக்கு ஈழம் அமைத்து கொடுப்பேன் அது அவர்களின் அன்னை பூமி! ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல் !

0 comments
April 27, 2009

இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
thanks to http://www.alaikal.com/news/?p=15652
read more...
* அவர்கள் மண்ணிலேயே தமிழர்களுக்கு ஈழம் அமைத்து கொடுப்பேன் அது அவர்களின் அன்னை பூமி! ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல் !SocialTwist Tell-a-Friend

ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை: சங்கரன்கோயில் அருகே எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!

0 comments
சங்கரன் கோயில்: ஈழத் தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நெஞ்சை உலுக்கும் கொடூரங்கள் மற்றும் ஈழத்தில் இன்னும் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் கொடுமைகளால் மனம் வெதும்பி இளம் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி (25) தீக்குளித்து மரணமடைந்தார்.
நெஞ்சைப் பதற வைக்கும் இந்த கொடிய சோகம் நேற்று இரவு நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே உள்ளது சீகம்பட்டி கிராமம். இங்குள்ள ராமசுப்பு என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (25). பிஇ பட்டப்படிப்பு முடித்து ராஜஸ்தானில் எஞ்ஜினீயராகப் பணியாற்றி வந்தார்.

விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார் இந்த இளைஞர். சிறு வயதிலிருந்தே, ஈழத் தமிழர் விவகாரங்களில் பெரும் அக்கறை காட்டி வந்தாராம். இந்த நிலையில் ராஜஸ்தானில் இவருக்கு எஞ்ஜினீயர் பணி கிடைத்ததும் அங்கு போய்விட்டார்.

விடுமுறையில் ஊருக்குத் திரும்பிய கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து ஈழப் பிரச்சினை குறித்தும், அங்கு இப்போது தொடரும் கொடுமைகள் குறித்தும் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். ஆனால் பெற்றோரிடம் எதுவும் சொல்வில்லையாம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கை வெளியானது. அதில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், ராஜபக்சே அரசு நடத்திய கொலைவெறி தாக்குதல்களைப் படித்து கலங்கிப்போய்விட்டாராம்.

தீக்குளிப்பு

நேற்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி கொளுத்திக் கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்றுவிட்டான். இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்சேவை தூக்கில் போடுங்கள்... என்று கதறியபடி கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்தார்.

உடனே கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம், அவரது குடும்பத்தாரிடம் கிடைத்தது.

அந்தக் கடிதம்:

அன்று ராவணன் செய்த கொடுமையான செயல்களை இன்று சிங்களவர்கள் செய்து விட்டார்கள். அவர்களுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத் தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு தனி நாடு என்ற சிறப்பை பெற்றுத் தர வேண்டும்.

அதுவரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கக் கூடாது. அப்படி பொறுப்பேற்றால், தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள். இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை.

இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சநேயரை அழைக்கிறேன்.

அப்பா, அம்மா, சீனி, தினகரன் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இதுதான். இதை நான் செய்யாவிட்டாலும், மிகப்பெரிய குற்றவாளி நான்தான்," இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

thanks to http://sivasinnapodi1955.blogspot.com/2011/04/blog-post_5832.html
read more...
ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை: சங்கரன்கோயில் அருகே எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!SocialTwist Tell-a-Friend

தலை இல்லாத நான்காவது மீனவரின் பிணமும் கரை ஒதுங்கியது

0 comments
இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட நான்காவது மீனவரது பிணமும் தலை இல்லாமல் இன்று கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம் மீனவர்கள் நான்கு பேர் கடந்த 2 ஆம் தேதி மீன் பிடிக்க சென்றபோது என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தது.அவர்கள் கரை திரும்பவில்லை.

மற்ற மீனவர்கள் தேடி வந்த நிலையில் கை,கால் இல்லாமல் மூன்று உடல்கள் இதுவரை கரை ஒதுங்கியது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 4 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்து, படகில் வைத்தே வெட்டிக் கொன்று பிணத்தை கடலில் வீசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 3 மீனவர்களின் சடலங்கள் கிடைத்த நிலையில்,மாரிமுத்து என்பவரின் உடல் மட்டும் காணவில்லை என்று பரிதவித்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள புதுக்குடி ஓடாய்மடம் கடலோரத்தில் தலை இல்லாதல் அழுகிய நிலையில் ஆண் பிணம் கரை ஒதுங்கியுள்ளது.

இது மாரிமுத்து உடல்தான் என்று ராமநாதபுரம் மீனவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்
thanks to 
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1104/16/1110416051_1.htm
read more...
தலை இல்லாத நான்காவது மீனவரின் பிணமும் கரை ஒதுங்கியதுSocialTwist Tell-a-Friend

அணு உலையின் கதிர்வீச்சு செர்னோபில் அளவுக்கு உயர்த்தப்பட்டது

0 comments
ஜப்பானில் கடந்த மாதம் 11ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் ராட்சத சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் கதிர்வீச்சு அபாய அளவு 5-இலிருந்து 7-ற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது 1986ஆம் ஆண்டு ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தின் அபாயத்திற்கு ஒப்பானது இது என்று ஜப்பான் அணுசக்திப் பாதுகாபு ஆணைய அதிகாரி ஒருவர் ஜப்பான் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

7 என்பது சர்வதேச அளவில் மிகவும் அபாயகட்டமாகும். மேலும் இது பெருத்த விபத்து மற்றும் அதனால் ஏற்படும் பரவலான மோச விளைவுகள் என்பதையும் குறிக்கிறது.

காற்று, காய்கறி, குழாய் நீர், கடல் நீர் என்று கதிர்வீச்சின் வீச்சு பரல்வலாகி வருவதால் இந்த அபாய கட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அணு உலையில் இந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட விளைவுகளினால் விண்வெளியில் காற்றோடு கலக்கும் அணுக்கதிர்வீச்சின் அளவு 7-வது அபாயக் கட்ட அளவை ஒத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

செர்னோபில் அணு விபத்தினால் அதனைச் சுற்றியுள்ள 19 மைல் அல்லது 30 கிமீ சுற்றுப்பரப்பளவு பகுதிகள் மனிதர்கள் வாழ்வதற்கு முற்றிலும் லாயக்கறதாகி விட்டது.

இப்போது ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலைகளின் கதிர்வீச்சு அந்த நிலமைகளை எட்டியுள்ளது பெரும் கவலையளிப்பதாக உள்ளது என்று அந்த நாட்டு அணுசக்திப் பாதுகாப்பு அமிப்பு தெரிவித்துள்ளது.
thanks to  http://tamil.webdunia.com/newsworld/news/international/1104/12/1110412016_1.htm
read more...
அணு உலையின் கதிர்வீச்சு செர்னோபில் அளவுக்கு உயர்த்தப்பட்டதுSocialTwist Tell-a-Friend

இந்திய மீனவரின் மற்றொரு சடலம் தமிழகக் கரையில் ஒதுங்கியது

0 comments

[ வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011, 02:04.43 AM GMT ]
தொழிலுக்குச் சென்ற சமயம் காணாமற் போனதாகக் கூறப்பட்ட நான்கு இந்திய மீனவர்களில் மற்றொருவரின் சடலம் தமிழகக் கரையோரப் பகுதியில் ஒதுங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தொண்டி என்னும் இடத்திலுள்ள சோழியக் குடி கரையிலேயே அந்தச் சடலம் கரையொதுங்கியுள்ளது.
காணாமற்போன நான்கு மீனவர்களில் ஒருவரான எவ்.அந்தோனிராஜ் (வயது 36) என்பவரின் சடலமே அது என்று உறவினர்களால் இனங்காணப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலிருந்து படகுகளில் புறப்பட்ட நான்கு மீனவர் கள் காணாமற் போயிருந்தனர்.
அவர்களில் ஒருவரின் சடலம் குடாநாட்டு கடற்பரப் பில் கரையொதுங்கியதும் இராமநாதபுரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த சேவியர் விக்ரஸின் அந்தச் சடலம் பின்னர் அவரின் உறவினர்களால் யாழ்ப் பாணத்தில் அடக்கம் செய்யப்பட்டதும் தெரிந்ததே.
காணாமற்போன ஏனைய மூன்று மீனவர்களையும் தேடும் பணியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே எஸ்.அந்தோனிராஜ் என்பவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
thanks to http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI24eM29303jQ6dd3QjR20t922e4cLBcb3pG02
read more...
இந்திய மீனவரின் மற்றொரு சடலம் தமிழகக் கரையில் ஒதுங்கியதுSocialTwist Tell-a-Friend

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை - ஆர். நல்லகண்ணு

0 comments

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்தார்.

நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள ஊழல், மணல் கொள்ளை, நிர்வாகச் சீரழிவு, சமூக பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறோம். கடந்த 2 ஆண்டு காலமாக விலைவாசி உயர்வும், மின்வெட்டும் அதிகரித்துள்ளன. விலைவாசி உயர்வைக் குறைக்க வேண்டுமென்றால் ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடைவிதிக்க வேண்டும். விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நாங்கள் பிரசாரத்தில் வலியுறுத்தி வருகிறோம்.

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் பேச்சைக் கேட்டு நடக்காததால் அதன் செயல்பாடுகளை நெருக்கடிகால நிலை என்கின்றனர். இது முதல்வர் கருணாநிதியின் இயலாமையை காட்டுகிறது.

160 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்.

கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தேர்தல் முடிவு வெளியான பிறகு எங்களின் நிலை குறித்து அறிவிப்போம். தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

THANKS TO http://thatstamil.oneindia.in/news/2011/04/06/no-cance-coalition-government-says-r-nallakannu-aid0128.html
read more...
கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை - ஆர். நல்லகண்ணுSocialTwist Tell-a-Friend

20 விமானங்களை விலைக்கு வாங்க இருக்கும் சீன கிராமம்

0 comments
சீனாவில் ஒரு கிராமம் மிகுந்த பணவசதி உள்ளதாக இருக்கிறது. அந்த கிராமத்தின் பெயர் ஹூவாக்ஷி. இது ஜியாங்ஷூ மாநிலத்தில் உள்ளது. இது ஒரு சுற்றுலா தலம் ஆகும். இதன் பரப்பு ஒரு சதுர கி.மீ. ஆகும். இந்த கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் பலகோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு சுற்றுலா கம்பெனி ஏற்கனவே 2 ஹெலிகாப்டர்களை வைத்து இருக்கிறது.

இந்த கிராமத்தில் மொத்தமே 1500 பேர் தான் வசிக்கிறார்கள். அவர்கள் உருக்கு, ஜவுளி, சுற்றுலா ஆகிய தொழில்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த கிராமம் விமானம் ஓட்டும் பயிற்சி பள்ளிக்கூடம் ஒன்றை அந்த கிராமத்தில் தொடங்க இருக்கிறது. இதற்காக அது 20 விமானங்களை விலைக்கு வாங்க இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 100 விமானிகளுக்கு பயிற்சி அளிக்க அது திட்டமிட்டு உள்ளது.
THANKS TO
http://www.marikumar.co.cc/2010/11/20.html

read more...
20 விமானங்களை விலைக்கு வாங்க இருக்கும் சீன கிராமம்SocialTwist Tell-a-Friend

ஹற்றனில் தமிழ் குடியிருப்புகள் மீது தாக்குதல்! பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடில் ஹர்த்தால் - அமைச்சர் தொண்டமான்

0 comments
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 01:47.05 AM GMT ]
தாக்குதலுக்குள்ளான குடியிருப்பொன்று இலங்கையில் மலையக நகரமான ஹற்றனில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஹர்த்தால் நடவடிக்கையொன்றுக்கு அழைப்பு விடுக்கப் போவதாக அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை இந்திய இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிய உலகக் கிண்ண இறுதிப் போட்டியினைத் தொடர்ந்து ஹட்டனில் மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் புகுந்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
சமநலகம, ஹிஜ்ரா புர பிரதேசங்களில் பல வீடுகள் இதனால் சேதமடைந்துள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த மூன்று இளைஞர்கள் டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காடையர் கூட்டமொன்று பட்டாசு வெடிகளை தமிழர்களின் வீடுகளுக்குள் கொளுத்தி வீசி விட்டுப் பின்னர் உட்புகுந்து தாக்குதலிலும் ஈடுபட்டதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் சிங்களவர்கள் எவரும் இருக்கவில்லையெனக் கூறிய தொண்டமான், இனவாதத்தை தூண்டி முரண்பாடொன்றை தோற்றுவிக்கும் தீய எண்ணத்திலேயே அந்தக் கும்பல் செயற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பிபிசிக்குக் கருத்து தெரிவித்த இலங்கைப் பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி, சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

thanks to http://www.tamilwin.com/view.php?202IBJ30ebjQM4ebiGpVcbdF92Yddc8292bc41pG3e43oQj2023PLc32
read more...
ஹற்றனில் தமிழ் குடியிருப்புகள் மீது தாக்குதல்! பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடில் ஹர்த்தால் - அமைச்சர் தொண்டமான்SocialTwist Tell-a-Friend

சென்னை லாட்ஜில் தங்கியிருந்த கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்; போலீசில் புகார்!

0 comments
[ பிரசுரித்த திகதி : 2011-04-01 11:40:21 AM GMT    ]

லாட்ஜில் தங்கியிருந்த கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி சட்டமன்ற தேர்தலில் 21 இடங்களில் போட்டியிடுகிறது. கார்த்திக் கட்சி சார்பில் உசிலம்பட்டி தொகுதியில் வீரண்ணராஜு, கம்பம் தொகுதியில் ரவிச்சந்திரன் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் சென்னை சத்தியமூர்த்தி பவன் எதிரில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தபோது துப்பாக்கி முனையில் காரில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அண்ணாசாலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார். இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக சென்னையில் தங்கியுள்ள நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் வீரண்ணராஜு கூறியதாவது:-

கடந்த 29-ந்தேதி நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிர்வாகிகளுடன் சென்னை வந்தேன். ராயப்பேட்டையில் உள்ள லாட்ஜில் அன்று இரவு தங்கியிருந்தபோது, போடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த எங்கள் கட்சியின் வேட்பாளர் அறிவழகன், 2 பேருடன் வந்து ஊருக்கு செல்வோம் என்று கூறினார். இதையடுத்து கம்பம் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரனும், நானும் அவருடன் சென்றோம். லாட்ஜில் இருந்து ஆட்டோவில் ஏறி, எல்.ஐ.சி. கட்டிடம் அருகே வந்து இறங்கினோம். அங்கு தயார் நிலையில் இருந்த ஸ்கார்பியோ காரில் எங்களை ஏற்றிக் கொண்டனர். நடுவில் உள்ள இருக்கையில் என்னை உட்கார சொன்னார்கள். அறிவழகனும், ரவிச்சந்திரனும் பின்னால் ஏறிக் கொண்டனர்.

எனது அருகில் அடையாளம் தெரியாத 2 பேர் உட்கார்ந்து கொண்டனர்.   நீங்கள் யார்? எங்கே போகிறோம் என நான் அவர்களிடம் கேட்டேன். இதற்கு அவர்கள் பேசாமல் வா... எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறினர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் நான் திகைத்துப்போய் இருந்தேன். இந்த நேரத்தில் எனது மனைவியிடமிருந்து எனக்கு போன் வந்தது. என்னை அவருடன் பேசுவதற்கு அனுமதிக்காமல் செல்போனை பிடுங்கிக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் பெட்ரோல் போடுவதற்காக காரை நிறுத்தினார்கள். அப்போதுதான் காரின் முன்பக்கத்தில் அ.தி.மு.க. கொடி கட்டியிருப்பதை நான் பார்த்தேன். பின்னர் கார் புறப்பட்டதும் என்னை கீழே இறக்கி விடுகிறீர்களா என சத்தம் போட்டு காரில் இருந்து குதிக்கவா என்று நான் கோபமாக கேட்டேன். உடனே அருகில் இருந்த ஒருவர் துப்பாக்கியை காட்டி என்னை மிரட்டினார். இதனால் என்னால் எதுவும் பேசமுடியவில்லை.

பின்னர் மறுநாள் காலையில் கார் திண்டுக்கல்லில் சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்தவர்களுக்கு ஒரு போன் வந்தது. உடனே என்னையும், கம்பம் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரனையும் கீழே இறக்கி விட்டுவிட்டு அறிவழகனை (போடி தொகுதி வேட்பாளர்) மட்டும் அழைத்துச் சென்று விட்டனர். போடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். அவரது வெற்றி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எங்கள் கட்சி வேட்பாளரை அவர்கள் இழுத்துக் கொண்டனர்.

நான் போட்டியிடும் தொகுதியில் (உசிலம்பட்டி) பார்வர்டுபிளாக் நிற்கிறது. ரவிச்சந்திரன் (கம்பம் தொகுதி) போட்டியிடும் தொகுதியில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. இவர்கள் தோற்றால் பரவாயில்லை என்று அ.தி.மு.க. நினைத் திருக்கலாம். இதனாலேயே எங்களை இடையில் இறக்கி விட்டு விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடத்தல் புகார் தொடர்பாக வேட்பாளர்கள் தங்கியிருந்த லாட்ஜில் போலீசார் விசாரணை நடத்தினர்.
thanks to http://www.tamilulakam.com/news/view.php?id=24841
read more...
சென்னை லாட்ஜில் தங்கியிருந்த கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்; போலீசில் புகார்!SocialTwist Tell-a-Friend

குற்றப் பரம்பரை’க்குத் தயாராகும் ‘ராஜா’க்கள்!

0 comments

இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள், ‘குற்றப் பரம்பரை’க்காக. பாரதியும் ராஜாவும் பெயரைப் போலவே, நகமும் சதையுமாய், கதையும் இசையுமாய் தமிழ்த் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள். எழுபதுகளின் மத்தியில் தங்கள் திரைப் பயணத்தைத் துவங்கிய இந்த ராஜாக்கள், 24 ஆண்டுகள் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு தனி ராஜாங்கமே நடத்தினர். 16 வயதினிலே படம் முதல் பல படங்களில் இருவரும் இணைந்து மயக்கினர். ‘வேதம் புதிது’ படம் இந்த இமயங்களின் பாதை புதிது என்று காட்டியது. இருவரும் பிரிய ஒரு காரணமாயும் அமைந்தது. அதைத் தொடர்ந்து மூன்று படங்களில் வெளி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய பாரதியால், ராஜாவின் இடத்தை நிரப்பவே முடியவில்லை. இதையடுத்து ‘என் உயிர்த் தோழ’னில், தன்னுயிர் தோழனோடு மீண்டும் இணைந்தார் பாரதி.

indillaiyaraja-bharathiraja-z1.jpg

தொடர்ந்து ‘புது நெல்லு புது நாத்து’, ‘நாடோடி தென்றல்’ என தொடர்ந்தவர்கள், ஒரு கட்டத்தில் மீண்டும் பிரிந்தார்கள். தமிழ் சினிமாவில் அப்போதுதான் வீசத் தொடங்கியிருந்த புதிய புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பாரதி கை குலுக்க, ராஜா மட்டும் தன் வழக்கமான ராஜபாட்டையில் இசைப் பயணத்தைத் தொடர்ந்தார்.
ஆனால் இருவராலுமே மீண்டும் அந்த பழைய ‘மாஜிக்’கை நிகழ்த்த முடியாமல் போனது தமிழ் ரசிகர்களின் துரதிருஷ்டம்!
‘இந்த இரு சிகரங்களும் இனி இணையவே மாட்டாகளோ…’ என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான், பாரதி தானாகவே முன்வந்து, ‘ராஜாவின் இசையின்றி தன் படங்கள் முழுமை பெறாது’ என்பதை பகிரங்கமாய் அறிவித்தார். அதுவும் இன்னொருவர் (ஹிமேஷ் ரேஷம்மையா ) இசையமைத்த தனது ‘பொம்மலாட்டம்’ பட பாடல் வெளியீட்டு விழாவில்.
இந்த விழாவில் இளையராஜாவும், தனது நட்பு குறித்து உருகினார். இப்படி இவர் பேசியதே இல்லை என்று கூட கலந்து கொண்ட கலைஞானி கமல்ஹாசனே வியப்பாக கூறும் அளவுக்கு இளையராஜாவின் பேச்சு இருந்தது.
இந் நிலையில் இரு ராஜாக்களும் மீண்டும் இணைகின்றனர். தமிழ் சினிமாவுக்கு புதிய ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது. பாரதிராஜாவின் கனவுப் படமான ‘குற்றப் பரம்பரை’க்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக் கொண்டுள்ளார்.
வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் வாழ்ந்த பிரமலைக் கள்ளர் இன மக்கள் பிறப்பாலேயே குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர். இம்மக்களின் கைரேகைகளைப் பதிந்து கொண்ட போலீசார், தினசரி மாலையானதும் ஆண்களை மட்டும் ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொண்டு போய் விடுவார்களாம். காரணம் இரவுகளில் திருடுவது இவர்களில் சிலருக்கு தொழிலாக இருந்ததால்.
இந்த நிலையிலிருந்து பிரமலைக் கள்ளர் இனம் எப்படி மீண்டது என்பதை மதுரை மண்ணின் ஈரமும் வீரமும் மணக்க மணக்கச் சொல்லும் படம்தான் ‘குற்றப் பரம்பரை’.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய பாரதிராஜா,
“இந்தப் படத்தை எனது 30 ஆண்டு கால திரையுலகப் பயணத்தில் மற்றுமொரு புதிய பரிமாணமாகப் பார்க்கிறேன். தமிழக வரலாற்றில் ஒரு முக்கியப் பதிவாக இந்தப் படம் அமையும். இளையராஜா மட்டுமல்ல, இன்னும் சில இனிய ஆச்சர்யங்களும் படத்தில் உண்டு” என்றார்.
அது என்ன ஆச்சரியம் என்று வியந்து போய் நாம் புலனாய்ந்து பார்த்தபோது, பாரதிராஜாவையும் இளையராஜாவையும் பெரிதும் நேசிக்கும் இயக்குநர்கள் சேரன், அமீர் இருவருமே இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்று தெரிய வந்தது. இதில் கமல்ஹாசனும் இருக்கிறார் என்பது இன்னொரு ஆச்சர்யம். மன மாச்சரியங்கள் மாய்ந்து போகும்போது ஆச்சரியங்களுக்கு வாய்ப்புகள் அதிகம்தான்.
இரு ராஜாக்களும் இணைந்து படைக்கப் போகும் இந்த குற்றப் பரம்பரை, இன்னும் பல பரம்பரைகளுக்கு மறக்க முடியாத வரலாற்றுப் பெட்டகமாக இருக்கப் போவது நிச்சயம்.
thanks to http://www.nitharsanam.net/?p=6955&sess=fea975c01dc2eb50a6a56ccf8135ebce



read more...
குற்றப் பரம்பரை’க்குத் தயாராகும் ‘ராஜா’க்கள்!SocialTwist Tell-a-Friend