அணு உலையின் கதிர்வீச்சு செர்னோபில் அளவுக்கு உயர்த்தப்பட்டது

ஜப்பானில் கடந்த மாதம் 11ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் ராட்சத சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் கதிர்வீச்சு அபாய அளவு 5-இலிருந்து 7-ற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது 1986ஆம் ஆண்டு ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தின் அபாயத்திற்கு ஒப்பானது இது என்று ஜப்பான் அணுசக்திப் பாதுகாபு ஆணைய அதிகாரி ஒருவர் ஜப்பான் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

7 என்பது சர்வதேச அளவில் மிகவும் அபாயகட்டமாகும். மேலும் இது பெருத்த விபத்து மற்றும் அதனால் ஏற்படும் பரவலான மோச விளைவுகள் என்பதையும் குறிக்கிறது.

காற்று, காய்கறி, குழாய் நீர், கடல் நீர் என்று கதிர்வீச்சின் வீச்சு பரல்வலாகி வருவதால் இந்த அபாய கட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அணு உலையில் இந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட விளைவுகளினால் விண்வெளியில் காற்றோடு கலக்கும் அணுக்கதிர்வீச்சின் அளவு 7-வது அபாயக் கட்ட அளவை ஒத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

செர்னோபில் அணு விபத்தினால் அதனைச் சுற்றியுள்ள 19 மைல் அல்லது 30 கிமீ சுற்றுப்பரப்பளவு பகுதிகள் மனிதர்கள் வாழ்வதற்கு முற்றிலும் லாயக்கறதாகி விட்டது.

இப்போது ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலைகளின் கதிர்வீச்சு அந்த நிலமைகளை எட்டியுள்ளது பெரும் கவலையளிப்பதாக உள்ளது என்று அந்த நாட்டு அணுசக்திப் பாதுகாப்பு அமிப்பு தெரிவித்துள்ளது.
thanks to  http://tamil.webdunia.com/newsworld/news/international/1104/12/1110412016_1.htm
அணு உலையின் கதிர்வீச்சு செர்னோபில் அளவுக்கு உயர்த்தப்பட்டதுSocialTwist Tell-a-Friend

No comments: