தடை ‌மீ‌றி போரா‌ட்ட‌ம் நட‌த்‌திய தா.பா‌ண்டிய‌ன் உ‌ள்பட 400 பே‌ர் கைது

0 comments
பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுசெயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இ.கம்யூ., சார்பில் நிலமீட்பு போராட்டம் ஆனைமலை ஒடையகுளம் அருகே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், போலீசார் அனுமதி மறுத்தன்பேரில், போராட்டம் ஆனைமலையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தா.பாண்டியன் உள்ளிட்ட 400 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 100 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
THANKS TO http://www.dinamalar.com/News_Detail.asp?Id=175171
read more...
தடை ‌மீ‌றி போரா‌ட்ட‌ம் நட‌த்‌திய தா.பா‌ண்டிய‌ன் உ‌ள்பட 400 பே‌ர் கைதுSocialTwist Tell-a-Friend

மெய்ப்பொருள் நாயனார் மண்டலாபிஷேக பூர்த்தி

0 comments
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் மெய்ப்பொருள் நாயனார் சன்னதியில் கடந்த மாதம் 12ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு இடபக்கொடியேற்றுதல், 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவஸனம், கடம் ஸ்தாபனம், கலசபூஜை, அக்னி பிரதிஷ்டை, அன்னம், ஆஞ்யம், சமித்து, 108 மூலிகை திரவியாகுதி, பூர்ணாகுதி முடிந்து கடம் புறப்பாடா னது. கோவிலை வலம் வந்து மூலவராக வீற்றிருக்கும் மெய்ப்பொருள் நாயனாருக்கு மகா அபிஷேகம், மண்டலாபிஷேக பூர்த்தி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை மெய்ப்பொருள் நாயனார் வழிபாட்டு மன்றம், கள்ளக்குறிச்சி திருநாவுக்கரசு நாயனார் உழவாரத் திருக்கூட்டம், விருத்தாசலம் அறுபத்து மூவர் திருப்பணி மன்றம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து செய்திருந்தனர்.
thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=175108
read more...
மெய்ப்பொருள் நாயனார் மண்டலாபிஷேக பூர்த்திSocialTwist Tell-a-Friend

அரிசிக்கு வருகிறது ஆபத்து- இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

0 comments
நம்மாழ்வார்
துரையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டில் பேசிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் " மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் இப்போதைய அரசுகள் மக்கள் நலனுக்கான அரசுகளாக இல்லை. ஜனநாயக நாட்டில் தேர்தல் நடைபெறுகிறது. வெற்றி பெற்று வருபவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு பதில் பன்னாட்டு நிறுவனங்களில் ஏஜெண்டுகளாக சேவை செய்து வருகிறார்கள். கலையை ரசித்து பார்க்க கூடிய அளவிற்கு விவசாயிகளின் வாழ்க்கை இல்லை. அவர்களது வாழ்நிலை மோசமாக இருக்கிறது. கிராமப்புறங்கள் தரிசாகி வருகின்றன. நிலத்தை உழுத மாடுகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

சாலையோர மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. நம்நாட்டின் வளம் முழுவதும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய்படுகிறது. தமிழகத்தில் 10 ல் 4 பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. புரட்சி என்பது சிவப்பாகத் தான் இருக்கும். பசுமையாக இருக்காது. தமிழத்தில் பசுைப்புரட்சி ஏற்பட்டு விட்டதாக சொன்னார்கள். அது எப்போது? தமிழத்தின் தேவை வெளி மாநிலங்களின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. ஆறுகள் மாசுபடுத்தப்படுகின்றன. விவசாயிகளின் உழைப்பு சுரண்டப்படுகிறது. பதுக்கல் வர்த்தகம் நடைபெறுகிறது.
விவசாயிகள் நிலங்களை விற்று விட்டு நகரத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். மண்ணைப்பற்றியோ மக்களை பற்றியோ ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. தமிழகத்தில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள் மான்சான்டே போன்ற வெளிநாட்டு விதை கம்பெனிகளின் ஆராய்ச்சிக்கூடங்களாக மாறி விட்டன. அரிசியிலிருந்து 12 பொருட்களை உற்பத்தி செய்யலாம் என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால் அப்படி செய்வதற்கு வருங்காலத்தில அரிசி இருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. அரிசிக்கே ஆபத்து வரக்கூடிய சூழல் உள்ளது. இப்போது திராட்சை பழம் பூச்சிக் கொல்லி மருந்துகளால் நிரம்பி இருக்கிறது. திராட்சை பழங்களை உண்ணாதீர்கள்.
இவ்வாறு நம்மாழ்வார் பேசினார். என்ன நடக்குமோ இனி எதிர்காலத்தில்!
நமது கருத்து
நமது விவசாயிகள் விதைத்து வந்த பாரம்பரியமான நெல் ரகங்கள் அனைத்தும் கண்காட்சி பொருளாக மாறிவிட்டன. நாட்டு ரக நெல் விதைகளை இப்போது யாரும் விதைப்பதில்லை. இப்போது இருப்பவை பெரும்பாலும் வீரிய ரகங்கள் தான். இப்படி அனைத்திலும் புதிய கண்டுபிடிப்புகளும், வீரிய ரகங்களும் வந்துள்ளன. இவற்றை தாக்கும் பூச்சிகளை ,நோய்களை விரட்ட புதிய புதிய மருந்துகளை விவசாயிகள் வாங்கி குவிக்க வேண்டியதிருக்கிறது.

எல்லாவற்றையும் முடித்து விட்டு அறுவடை செய்த நெல்லை விற்பனைக்கு கொண்டு போனால் விவசாயிக்கு கிடைப்பது நாமம் தான் என்றே பொதுவான பேச்சு இருக்கிறது. இப்படி இருந்தால் யார் விவசாயம் செய்ய முன்வருவார்கள்? ஆக..அரிசிக்கு ஆபத்து தான் இனி!
thanks to  http://greenindiafoundation.blogspot.com/2011/01/blog-post_1106.html
read more...
அரிசிக்கு வருகிறது ஆபத்து- இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.SocialTwist Tell-a-Friend

மகரஜோதி மனித தயாரிப்பே : தேவசம்போர்டு!

0 comments
thanks to http://www.inneram.com/2011012213131/makarajyothi-is-man-made
மகரஜோதியை ஆர்வமுடன் காணும் பக்தர்கள்
மகரஜோதியை ஆர்வமுடன் காணும் பக்தர்கள்
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் மகரவிளக்குப் பூஜை நாளன்று தென்படுவதாகக் கூறப்படும் மகரஜோதி மனித தயாரிப்பே என்று திருவாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகிகள் கூறியிருப்பதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மகரஜோதி மனித தயாரிப்பா என்று கேரள உயர் நீதிமன்றம் கடந்த வியாழக் கிழமையன்று கேள்வி எழுப்பியது. இக்கேள்விக்கு விடைகாணும் முயற்சியில் தி இந்து நாளிதழ் ஈடுபட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தினரை வெள்ளிக் கிழமையன்று சந்தித்து இது தொடர்பாக கேள்வி எழுப்பியது.

குறிப்பிட்ட நாளன்று பொன்னம்பலமேடு பகுதியில் காணப்படும் ஜோதி மனித தயாரிப்பே என ஒப்புக் கொண்ட திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர், ஆனால் இந்த ஜோதியை உருவாக்குவதில் தேவசம் போர்டுக்குத் தொடர்பில்லை என்றும் கூறியுள்ளார்.

பழங்காலத்தில், காட்டுவாசிகள் மகரவிளக்கு விழாவினை பொன்னம்பலமேடு பகுதியில் கொண்டாடுவார்கள் என்று நம்பப்படுகிறது. அப்போது பொன்னம்பலமேடுவில் ஜோதியை ஏற்றி மகரவிளக்கு விழாவைக் கொண்டாடுவார்கள். காட்டுவாசிகள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறி வேறு இடங்களுக்குச் சென்றுவிட்ட பின்னரும் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்டது என்றும் ராஜகோபாலன் நாயர் கூறியுள்ளார்.

பன்டலம் அரண்மலை மேலாண்மைக் குழுத் தலைவர் ராமவர்மா ராஜா மற்றும் கோயிலின் தலைமைப் பூசாரி கன்டரராரு மகேஷ்வரரு ஆகியோரும் மகரஜோதி மனித தயாரிப்பே என்று ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தி இந்து நாளிதழ் கூறியுள்ளது.

மகரவிளக்கு நாளின் போது சபரிமலை சன்னிதானத்திற்கு மேல் மலை உச்சியில் தென்படும் நட்சத்திரத்தின் ஒளிதான் மகரஜோதி என்றும் தற்போது பொன்னம்பலமேடு பகுதியில் தெரியும் ஜோதி மகரஜோதி அல்ல என்றும் தலைமைப் பூசாரி கூறியுள்ளார்.

பொன்னம்பலமேடு பகுதியில் தெரியும் மகரஜோதி மனித தயாரிப்பு என்பது உண்மை என்றாலும் அது நம்பிக்கை சார்ந்தது என்று ஐயப்பா சேவா சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் விஜயகுமார் கூறியுள்ளார்.

மகரஜோதி மனித தயாரிப்பாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது ஐயப்ப பக்தர்களின் மனதில் புனிதம் பெற்ற நிகழ்வாக இடம்பெற்றுவிட்டது என்று இந்து ஐக்கியவேதி அமைப்பின் பொதுச் செயலாளர் கும்மனம் ராஜசேகரன் கூறியுள்ளார்.
மகரஜோதியும் பொன்னம்பலமேடும் சபரிமலை கோயிலின் அடிப்படையான இடம் என்று கருதப்படுகிறது. இவை ஆழ்ந்த மத நம்பிக்கையின் உண்மைப் பகுதிகள். பொன்னம்பலமேடுவில் சிமெண்ட் தரையைக் கட்டியது திருவாங்கூர் தேவசம் போர்டுதான் என்றும் ராஜசேகரன் கூறியுள்ளார். கேரள உயர் நீதிமன்றத்தின் அறிவிற்குட்பட்டு தேவசம்போர்டால் கட்டப்பட்டதே இந்த இடம் என்றும் கூறியுள்ள ராஜசேகரன், புல்மேடு விபத்திலிருந்து மக்கள் கவனத்தைத் திருப்புவதற்காக சிலர் மகரஜோதி குறித்து பிரச்சனைகளை எழுப்புகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மகரஜோதிக்காக விளக்கு எரிக்கப்படும் இடம். வட்டத்தில் சபரிமலை சன்னிதானம்
மகரஜோதிக்காக விளக்கு எரிக்கப்படும் இடம்

பொன்னம்பலமேடுவில் மகரஜோதிக்காக விளக்கு எரிக்கப் பயன்படுத்தப்படும் இடம் 1990களில் திருவாங்கூர் தேவசம் போர்டால் கட்டப்பட்டது. இந்தப் புகைப்படம் உரிய அனுமதி பெற்று 2006ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் அந்தப் பகுதிக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
read more...
மகரஜோதி மனித தயாரிப்பே : தேவசம்போர்டு!SocialTwist Tell-a-Friend

நடராசன் -----பொங்கல் திருநாள் விழா ............

0 comments
இந்த ஆண்டு 15,16,17    தஞ்சை மாநகரில் முனைவர் மா . நடராசன் அவர்கள் சீரும் சிறப்புமாக நடத்தி காட்டினார் ...
திரு பழ.நெடுமாறன் அவர்களும் காசி .ஆனந்தன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் ....
இந்த வருடம் பொங்கல் விழா , மக்கள் விழாவாக சிறப்பு பெற்றது ......
read more...
நடராசன் -----பொங்கல் திருநாள் விழா ............SocialTwist Tell-a-Friend

சபரி்மலை நெரிசல் ஏற்பட்டது எப்படி?-அதிர்ச்சி தகவல்கள்

0 comments
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/01/16/sabarimala-tragedy-was-invited-kerala-govt-aid0090.html



பத்தினம்திட்டா: சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் முடிந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 100க்கும் அதிகமானோர் மரணத்தை தழுவியதற்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபரிமலையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற மகரவிளக்கு தரிசனத்தை கண்டு விட்டு புல்மேடு நோக்கி சுமார் இரண்டை லட்சம் பக்தர்கள் திரும்பியுள்ளனர். அப்போது ஏராளமான வாகனங்கள் புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்துள்ளன. பயணிகளை ஏற்றி வந்த வாடகை ஜீப் ஸ்டார்ட் ஆகாமல் போகவே அதனை பக்தர்கள் தள்ளி ஸ்டார்ட் செய்யும் முயற்சியி்ல் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஜீப் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து அது ஆட்டோ ரிக்ஷா மீது மோதி, புறப்பட தயாராக இருந்த மினி பஸ் மீது மோதியுள்ளது.

அதைத் தொடர்ந்து ஏற்பட் களோபரத்தினால் பக்தர்கள் சிதறி ஓட, மிகக் குறுகிய அந்த இடத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பலரும் கீழே விழுந்து மிதிபட, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பக்தர்கள் இருபுறமும் இருந்த தற்காலிக கடைக்களுக்குள் திபுதிபுவென புகுந்துள்ளனர்.

இதில் கடையில் இருந்த பொருட்கள் கீழே சரிய, கோபமான கடைக்காரர்கள், பக்தர்களை கட்டைகளால் தாக்கியுள்ளனர். இதனால் கடைகளுக்குள் இருந்து பக்தர்கள் வெளியே திரும்பி வெளியே ஓடி வர, கடைகளுக்குள் வர முயன்றவர்களும் இவர்களும் எதிரெதிரே மோதிக் கொண்டு தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலில் மேலும் பலரும் கீழே விழுந்து மிதிபட்டுள்ளனர். இந்த நெரிசலில் சிக்கி கீழே விழுந்துவிடாமல் இருக்க சாலையி்ன் இருபுறமும் கட்டப்பட்டிருந்த தடுப்பு சங்கிலிகளை பக்தர்கள் பிடித்து தொங்க, அந்த தடுப்பு சங்கிலி எடை தாங்காமல் மொத்தமாய் அப்படியே பெயர்ந்துள்ளது.

இதனால் ஏராளமான பக்தர்கள் இருண்டு கிடந்த பள்ளத்துக்குள் விழுந்துள்ளனர். மகரஜோதியை கண்ட புல்மேடு உப்புபாறையில் இருந்து மரண ஒலியோடு பக்தர்கள் பள்ளத்துக்குள் சரிந்து விழுந்து உயிரை இழந்துள்ளனர்.

போதிய மின் வசதிகளும் இல்லாத சூழலும், இரண்டரை லட்சம் ஐயப்ப பக்தர்களை ஓழுங்குபடுத்த வெறும் 5 போலீசார் மட்டுமே அங்கு பணியில் இருந்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு ஜீப் ஒரு காரணம் என்றாலும் உயிரை காப்பாற்ற கடைக்குள் புகுந்த ஐயப்ப பக்தர்களை விறகு கட்டைகளால் தாக்கி விரட்டிய அந்த பகுதி கடைக்காரர்கள் தான் மிக முக்கிய காரணம் என்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் கேரள அரசு தீவிர நீதி விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை உலகுக்கு அடையாளம் காட்டி தக்க தண்டனை பெற்று தர வேண்டும்.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன் சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்கள் மீது கேரள காவல்துறையினர் காட்டுமிராண்டிதனமான தாக்குதலை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் புல்மேட்டில் பெரிய வாகனங்கள் நிறுத்த வண்டிபெரியார் முதல் வல்லகடவு செக்போஸ்ட் பகுதியில் கோழிக்காணம் பகுதி ஓதுக்கப்பட்டும், தவறான அணுகுமுறையால் இந்த வாகனங்கள் அங்கு நிறுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சபரிமலை வரலாற்றில் நடந்த மிகப்பெரிய முக்கிய விபத்து இதுதான். 1952ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி 66 பேர் பலியாகினர். 1999ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி கூட்ட நெரிசல் ஏற்பட்டு நிலச்சரிவில் 53 பேர் பலியாகினர். இந்த விபத்துகள் அனைத்தும் மகர ஜோதி தரிசனம் சமயத்தில் நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் உண்டியல் வசூல், வாகன வசூல் என பல்வேறு வழிகளில் பல நூறு கோடிகளை குவிக்கும் தேவஸ்தனமும் சரி, கேரள அரசும் சரி ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் காசி்ல் மட்டுமே குறியாக இருப்பதை விட்டு விட்டு அவர்களது உயிரையும் பாதுகாக்கும் வண்ணம் சாலை வசதி, பாதுகாப்பு வசதி, உள்ளிட்டவைகளை இந்த 109 மரணத்துக்கு பிறகாவது சீரமைக்க வேண்டும்.
read more...
சபரி்மலை நெரிசல் ஏற்பட்டது எப்படி?-அதிர்ச்சி தகவல்கள்SocialTwist Tell-a-Friend

விக்கிலீக்சின் டெக்னாலஜி எதிரி சீனா: அசாஞ்ச்

0 comments
லண்டன் : விக்கிலீக்ஸ் இணையதளத்தின் டெக்னாலஜி எதிரி அமெரிக்கா அல்ல அது சீனா மட்டுமே என ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார். லண்டனில் நியூ ஸ்டேட்மெண்ட் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், சீனாவின் செய்திகளை சென்சார் செய்யும் முறை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். போலியான மற்றும் வலிந்து சண்டைகளை ஏற்படுத்தும் முறையை சீனா கடைபிடித்துவருவதாகவும், விக்கிலீக்சின் டெக்னாலஜி சீனா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=165755
read more...
விக்கிலீக்சின் டெக்னாலஜி எதிரி சீனா: அசாஞ்ச்SocialTwist Tell-a-Friend

இலங்கைக் கடற்படையைக் கண்டித்து நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

0 comments

புதுக்கோட்டை: இலங்கை கடற்படையின் கொடூரச் செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள செல்வனேந்தலைச் சேர்ந்த மீனவர்கள் பாண்டியன், மணிகண்டன், மணிவண்ணன், பாஸ்கரன் ஆகியோர் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது அங்கு வந்த சிங்களக் கடற்படையினர், தமிழக மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் பாண்டியன் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். படகில் மொத்தம் 10 குண்டுகள் பாய்ந்துள்ளன. பாண்டியனுக்கு மார்பில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

சுட்டுக் கொல்லப்பட்ட பாண்டியனின் தந்தை சமீபத்தில்தான் மரணமடைந்தார். இதையடுத்து பாண்டியன்தான் தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். தற்போது அவரும் உயிரிழந்து விட்டதால் அவரது குடும்பம் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளது.

தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் என்றாலும் ஜெகதாப்பட்டினத்தில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார் பாண்டியன்.

காலவரையற்ற ஸ்டிரைக்:

இதற்கிடையே, பாண்டியன் குடும்பத்திற்கு போதிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும், இதுபோன்று சுடப்படுவதைத் தடுக்க நிரந்தரமான உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.

இதுதொடர்பாக இன்று மீனவர் சங்கங்கள் கூடி ஆலோசனை நடத்தவுள்ளன. இந்தப் போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களையும் இணைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
read more...
இலங்கைக் கடற்படையைக் கண்டித்து நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்SocialTwist Tell-a-Friend

IERA (Islamic Education and Research Academy)

0 comments
IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,

* Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள்.

* Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு.

* One Reason - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு.

* The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம்.


மேலே காணும் பிரிவுகளை உற்று நோக்கினால் IERAவின் செயல் திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

அழைப்பு பணியில் IERA போன்ற அமைப்புகள் எந்த அளவு தீவிரமாக செயல்படுகின்றனவோ அது போலவே பிரிட்டனின் இஸ்லாமிய இளைஞர் அமைப்புகளும் செயல்படுகின்றன.
read more...
IERA (Islamic Education and Research Academy)SocialTwist Tell-a-Friend

சென்னை புத்தகக் கண்காட்சி

0 comments
சென்னை, ஜனவரி 04: சென்னை மக்களிடையே மிகவும் பிரபலமான சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கியது. இது 34வது புத்தகக் கண்காட்சியாகும்.

ஆண்டுதோறும் சென்னையில் தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருவதால், ஆண்டுதோறும் இந்த கண்காட்சிக்கு மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

சுமார் ஒரு கோடி நூல்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதற்காக 666 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 376 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன.

புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு. நுழைவுக்கட்டணம் ரூ.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 வயது வரை உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு கட்டணம் கிடையாது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் கட்டணம் கிடையாது.

தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம், கருத்தரங்கு, இலக்கிய சொற்பொழிவு ஆகியவை வரும் நாட்களில் நடைபெற உள்ளன.

புத்தகக் கண்காட்சியை தினசரி பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையிடலாம். விடுமுறை நாட்களில் காலை 11 மணியிலிருந்து பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த புத்தகக் கண்காட்சி ஜனவரி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இடம்: செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய பள்ளி வளாகம், (பச்சையப்பன் கல்லூரி எதிரில்), சென்னை.
நாள்: 04 ஜனவரி 2011 முதல் 17 ஜனவரி 2011 வரை
நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
http://www.puducherrylivenews.com/news/TamilNadu/20111904101924/--.aspx
read more...
சென்னை புத்தகக் கண்காட்சிSocialTwist Tell-a-Friend