விடுதலைப் போருக்கு வித்திட்ட பூலித்தேவன் செப்பேடு

0 comments

வாழ்த்து பா
""பூலிநாட்டை ஆண்டு
வெள்ளையனுக்கு
நெல் கட்டேன் என்று உரைத்தாய்
சந்தனம் மணம் உடைத்து

மாமழையும் நீருடைத்து
நீல்கடலும் உப்புடைத்து
பூலிதேவா
உன் வீரம்
எம் தேவருடைத்து """"

இந்தியாவிலேயே முதன் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்தவர் பூலித்தேவன். வரி பெறுவதற்கு வந்த அலெக்சாந்தர் கெரான் என்பவனோடு 1755இல் பூலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கிழக்கிந்தியக் குழுமத்துக்கு எதிரான முதல் பேராகும்.
பூலித்தேவன் அளித்த கொடைச் செய்தி எழுதப்பட்ட செப்பேடு ஒன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அச்செப்பேடு 27 செ.மீ. நீளமும் 15 செ.மீ. அகலமும் உடையது. ஒரு கிலோ எடையுள்ள அச்செப்பேட்டில் ஒரு பக்கத்தில் மட்டும் 40 வரிகள் எழுதப்பட்டுள்ளன. அச்செப்பேட்டை ஈரோடு கொங்கு ஆய்வு நடுவ ஆய்வாளர் புலவர் இராசு ஆய்வுசெய்து பின்வரும் செய்திகளைத் தெரிவித்துள்ளார்.

அதாவது, சேரநாட்டின் ஒரு பகுதியான பூழிநாட்டை ஆண்ட பாண்டியனுக்கு உட்பட்டு ஆட்சி புரிந்ததால் பூழித்தேவன் என்ற பெயர் பூலித்தேவன் என அழைக்கப்பட்டதென்றும். அவர் முழுப்பெயர் காத்தப்ப பூலித்தேவன் என்றும் ஆய்வாளர் ந. இராசையா கூறியுள்ளார். 1748ஆம் ஆண்டு இச்செப்பேடு எழுதப்பட்டுள்ளது. நெற்கட்டுச் செவ்வலில் கோட்டை கட்டி அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் பூலித்தேவன். நெற்கட்டுச் செவ்வலில் இராமகோவிந்தப்பேரி என்ற பெயரில் பெரிய குளம் இருந்தது. அக்குளம் உடைந்து சிதைந்து பல ஆண்டுகள் பாசனம் இல்லாமல் இருந்தது. அதைச் சரி செய்யப் பூலித்தேவன் கேட்டுக் கொண்டதனால் நெற்கட்டுச் செவ்வலில் உள்ள பிறக்குடையாக் குடும்பன் என்பவர் தன் செலவில் இராமகோவிந்தபேரிக் குளத்தைப் புதுக்குளமாக அமைத்தார். அதற்குப் பதிலாக விபவ ஆண்டு ஆடி மாதம் 25ஆம் நாள் பூலித்தேவன் பிறக்குடையாக் குடும்பனுக்கு மானியபூமி நன்செய் நிலம் வழங்கியதோடு அவர் நிலங்களுக்குச் சில ஆண்டுகள் வரிச் சலுகையும் அளித்த விவரம் இந்தச் செப்பேட்டில் உள்ளது.

குளத்தில் உள்ள மீன்களைப் பிடிப்பதன் மூலம் வருகின்ற வருவாயில் இருந்து குளம் பேணிக்காப்பும், தூர் வாருதலும் நடைபெற வேண்டும் என்றும், இவற்றிற்குக் கணக்கெழுதி ஒப்புவிக்க வேண்டும் என்றும் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலங்கள் அளக்கப்பட்டு அடையாளமாக அவற்றிற்கு எண்கள் இடப்பட்டுள்ளன. 85,86,87,88 ஆம் எண் நிலங்கள் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக அக்காலச் செப்பேட்டில் வழக்கமாக இருக்கும் வடமொழிச் சொற்கள் இன்றித் தனித்தமிழில் செப்பேடு எழுதப்பட்டுள்ளது. விடுதலைப் போரை முதலில் தொடங்கிய பூலித்தேவனைப் பற்றி அரிய செய்திகளைக் கூறும் இச்செப்பேடு வரலாற்று முதன்மை வாய்ந்தது என்று புலவர் செ. இராசு கூறுகிறார்.- நன்றி. தமிழோசை, 6-7-௨00௮
நன்றி http://www.thelithamizh.com/jul_08/pooli.html
read more...
விடுதலைப் போருக்கு வித்திட்ட பூலித்தேவன் செப்பேடுSocialTwist Tell-a-Friend

காஷ்மீரில் அத்துமீறி பறந்த சீன ஹெலிகாப்டர்கள்

0 comments
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சீனாவின் ஹெலிகாப்டர்கள் இந்திய வான்பகுதிக்குள் வட்டமிட்டதை இந்திய ராணுவ அதிகாரிகள் இன்று உறுதி செய்துள்ளனர்.காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியை ஆக்ரமித்துள்ள சீனா அதற்கு அக்ஷய் சின் என பெயரிட்டுள்ளது. இந்நிலையில் அடிக்கடி இப்பகுதிக்கு அருகில் உள்ள இடங்களில் அத்துமீறி நடந்து வருகிறது.சீன ராணுவம் கடந்த ஆண்டு சுமார் 223 முறை இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. பின்னர் மீண்டும் தங்கள் பகுதிக்குள் திரும்பியுள்ளது.இதே போல் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி இரண்டு சீன ஹெலிகாப்டர்கள் இந்திய பகுதிக்கு வந்து சென்றுள்ளது. அப்போது அது உணவு பொருட்கள், பெட்ரோல், மண்எண்ணெய் போன்றவற்றை சுமந்து சென்றுள்ளது.சீனாவின் இந்த எம்ஐ வகை ஹெலிகாப்டர்களை பாங்காக் ஏரி பகுதியில் வசித்து வரும் மக்கள் நேரிடையாக பார்த்துள்ளனர். அதே நேரத்தில் சீன ராணுவம் இந்த மாதத்தில் மட்டும் சுமார் 26 முறை இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, வெளியேறியுள்ளது.இது குறித்து இந்திய ராணுவத்தின் வடக்கு பிரிவு செய்தி தொடர்பாளர் கர்னல் கச்சாரி கூறுகையில்,இரண்டு மாதங்களுக்கு முன் சீன ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது. இதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இதனால் யாரும் பயம் கொள்ள தேவையில்லை. இது தொடர்பாக சீனாவிடம் விளக்கம் கேட்டுள்ளோம் என்றார்.
நன்றி http://thatstamil.oneindia.in/news/2009/08/31/india-achinese-choppers-violate-indian-airspace.html
read more...
காஷ்மீரில் அத்துமீறி பறந்த சீன ஹெலிகாப்டர்கள்SocialTwist Tell-a-Friend

ஆங்கிலேயரை எதிர்த்து முதலில் போராடியவன் பூலித்தேவன்: வைகோ புகழாரம்

0 comments
இந்திய மண்ணைக் காப்பதற்காக ஆங்கிலேயரை எதிர்த்து நாட்டிலேயே முதலில் போராடியவன் பூலித்தேவன் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டினார். அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் சார்பில் மன்னன் பூலித்தேவனின் 294-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கழகத்தின் தலைவர் டாக்டர் ந. சேதுராமன் தலைமை வகித்தார்.

இக் கூட்டத்தில் வைகோ பேசியது: நம் இளைஞர்களுக்கு நம் முன்னோர்களின் தியாகமிக்க வீர வரலாறு குறித்த செய்திகள் தெரியவில்லை. எனவே அந்த வரலாற்றை நினைவுகூர்வது நமது கடமை. இந்தியாவில் முதல் சுதந்திரப் போர் 1857-ம் ஆண்டு நடைபெற்றதாக நம் வரலாறு கூறுகிறது. ஆனால் அதற்கும் நூறாண்டுகளுக்கு முன்னரே, 1750-களில் தென் தமிழகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து பல வீரம் மிகுந்த போராட்டங்களை நடத்தியவன் பூலித்தேவன். அதாவது நாட்டிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து முதலில் போராடியவன். தான் மட்டுமின்றி தென் தமிழகத்திலிருந்த பாளையக்காரர்கள் அனைவரையும் ஆங்கிலேயருக்கு எதிராக ஓரணியில் திரட்டியவன் பூலித்தேவன். ஆங்கிலேயருக்கு மிகப்பெரும் சவாலாக அவன் திகழ்ந்தான் என்றார் வைகோ.

ஓ.பன்னீர்செல்வம்: கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், ஆங்கிலேயருக்கு எதிராக முதலில் போராடிய பூலித்தேவனுக்கு நமது இந்திய சரித்திரத்தில் உரிய இடம் அளிக்கப்படவில்லை. இது மிகவும் நெருடலுக்கு உரியது. நம் சுதந்திரப் போராட்ட வரலாற்றில், பூலித்தேவனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கச் செய்வது நம் அனைவரது கடமை என்றார். கூட்டத்தில் மூவேந்தர் முன்னணிக் கழகப் பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் உள்ளிட்டோர் பேசினர்..
http://parantan.com/pranthannews/indianews.htm
read more...
ஆங்கிலேயரை எதிர்த்து முதலில் போராடியவன் பூலித்தேவன்: வைகோ புகழாரம்SocialTwist Tell-a-Friend

இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும்: இயக்குனர் சீமான்

0 comments
ராஜபக்ச தமிழர்களை விடுவிக்கும் விஷயத்தில் வாக்கு தவறிவிட்டார். இதனால், இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இயக்குனர் சீமான் கூறினார்.

தூத்துக்குடி வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டம் சிங்கள பயங்கரவாதத்திற்கு எதிரானது. ராஜபக்ச தமிழர்களை விடுவிக்கும் விஷயத்தில் வாக்கு தவறிவிட்டார்.

இதில் உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு 3 லட்சம் தமிழர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இதனை வலியுறுத்தி மதுரையில் கடந்த ஜீன் 18ல் ஊர்வலம் நடத்தினோம். அதற்கு யாரும் செவி சாய்க்கவில்லை.

இதனால் இன்று (29ம் தேதி) தூத்துக்குடியிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் பொதுகூட்டம் நடத்தி வருகிறோம்.

உலக நாடுகள் உடனடியாக இலங்கையை நிர்பந்தித்து தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க செய்ய வேண்டும். அனைத்து உலக நாடுகளும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் தாக்கப்பட்டால் அது மட்டும் இங்கு பிரச்சனையை கிளப்புகிறது. தமிழக மீனவன் கடலில் சுடப்பட்டால் இந்திய மீனவனாக கருதப்படுவதில்லை.

கடந்த தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினையை கையில் எடுத்த அரசியல் கட்சிகள் தோல்வி கண்டன என்பது தவறான கருத்தாகும். நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற இருக்கிறோம் என்றார் சீமான்.

நன்றி http://www.tamilwin.com/view.php?2aSWnVe0dZj0K0ecQG7N3b4N9E84d3g2h3cc2DpY2d436QV3b02ZLu2e

read more...
இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும்: இயக்குனர் சீமான்SocialTwist Tell-a-Friend

கல்வியில் ஏற்றத்தாழ்வு என்கிற சாபக்கேடு தொடர்ந்து நீடிக்கும்.

0 comments
சமச்சீர் கல்வி முறையில் முத்துக்குமரன் குழுவினர் அளித்துள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திண்டிவனம் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

சமச்சீர் கல்வி : முதலமைச்சர் கருணாநிதி அறிவிப்பு என்று தலைப்புச் செய்தியை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீர்குமிழிபோல விரைவிலேயே கலைந்துவிட்டது.

சமச்சீர் கல்வி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு கொள்கை முடிவு. அதன்படி கல்விமுறையில் மிகப்பெரிய மாற்றங்களை செயல்படுத்த முயலும்போது அதன் தாக்கம் எந்தவொரு பிரிவினருக்கும், பகுதியினருக்கும் பாதகம் ஏற்படுத்தி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் முக்கியமான கடமையாகும்.

ஒரே பாடத்திட்டம், ஒரே விதமான பாடப்புத்தகங்கள் என்பனவற்றால் அனைவருக்கும் சமச்சீரான கல்வியை வழங்கிட முடியாது. அனைத்து குழந்தைகளுக்கும் தரமான, சீரான, ஒரேவிதமான கல்வியை வழங்குவதுதான் சமச்சீர் கல்வி.

அதற்கு இப்போது அறிவித்து இருப்பது வழிவகுக்காது.

எல்லாவற்றிற்கும் மேலாக பயிற்று மொழியாக தமிழும், தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடரும் என்று அறிவித்திருப்பது சமச்சீர் கல்வி என்ற நடைமுறைக்கு வேட்டு வைப்பதாகும்.

தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிறமொழிகளும் பயிற்றுமொழியாக தொடரும் என்ற அறிவிப்பினால் இப்போது நடைமுறையில் இருந்துவரும் கல்வியில் ஏற்றத்தாழ்வு என்கிற சாபக்கேடு தொடர்ந்து நீடிக்கும்.

C நடைமுறைப்படுத்துவது தொடர்பாக முத்துக்குமரன் குழுவினர் அளித்துள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தும்போதுதான் அனைவருக்கும் ஒரேவிதமான தரமான கல்விக்கு உத்தரவாதம் கிடைக்கும். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதில் இந்த அரசு கால் கிணறுகூட தாண்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

வருகிற 29ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலித்து முடிவெடுத்து அறிவிக்கப்போவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இந்த கால்கிணறு தாண்டும் வேலையை விட்டுவிட்டு எப்படி நுழைவுத்தேர்வை ரத்து செய்வதில் அரசு துணிச்சலோடு முடிவெடுத்ததோ அதைப்போல முத்துக்குமரன் குழுவினரின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தும் முடிவை அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டும்.
நன்றி http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=00f95c80-2d5a-4e8b-a0c6-985192d20d96&CATEGORYNAME=TCHN
read more...
கல்வியில் ஏற்றத்தாழ்வு என்கிற சாபக்கேடு தொடர்ந்து நீடிக்கும்.SocialTwist Tell-a-Friend

Pasumpon Muthuramalinga Thevar (PMT) Chair

0 comments
தனியன் செய்திகள்
MADURAI: A proposal would be submitted to the State Government to establish Department of Sri Pasumpon Muthuramalinga Thevar in Madurai Kamaraj University and offer various courses based on his life history.
The existing Pasumpon Muthuramalinga Thevar (PMT) Chair in the university would be converted into a department after getting the varsity Syndicate approval, according to K.Muthuchelian, Director, PMT Chair, MKU.
The proposal was mentioned during a special lecture on ‘the role of Pasumpon Muthuramalinga Thevar in communal harmony of India’ organised in the university on August 3.
Dr. Muthuchelian said that diploma, certificate and postgraduate courses along with research programmes will be offered in the proposed department.
Photo gallery
The PMT Chair also has plans to establish a photo gallery and museum besides creating a website on freedom fighter Thevar.
Some of the topics suggested for research were on contributions of Pasumpon Muthuramalinga Thevar in freedom struggle, revocation of Criminal Tribes Act, removal of zamindari system, relationship of Thevar with eminent leaders like Gandhiji, Nethaji, Nehru and Kamaraj.
C a Chennai-based poet, stated that Muthuramalinga Thevar stood as a bridge between Hindus, Muslims and Christians and he stood for national integration.
He was very pious, spiritual and had respect for reformists like Swami Vivekananda, Vallalar and Sri Ramakrishna Paramahamsa,” Mr.Bharathi said.
G. Gnanasambandan, Reader, Department of Tamil, Thiagarajar College, spoke on Thevar’s courage, sharpness, wisdom and transparency in public life.
He explained the way in which Thevar succeeded in taking untouchables into Meenakshi Temple.
K. Karunakara Pandian, Assistant Director, PMT Chair, proposed a vote of thanks.
THANKS TO
http://www.thehindu.com/2009/08/05/stories/2009080562100200.htm
read more...
Pasumpon Muthuramalinga Thevar (PMT) ChairSocialTwist Tell-a-Friend

கண்களையும் கைகளையும் கட்டிப் போட்டுவிட்டு சிங்களப் படை தமிழர்களை சுட்டுக்கொல்லும் கோரக் காட்சிகள்: அம்பலப்படுத்துகின்றது 'சனல் - 4'

0 comments
குறிப்பு: மனதை மோசமாக பாதிக்கும் காட்சிகள் இந்த காணலியில் இடம்பெற்றுள்ளன.

'சிறிலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' அமைப்பு வெளியிட்ட காணொலி காட்சியை பார்வையிட:
VIDEO/2009/aug/channel4_video.asxவன்னி படையெடுப்பை நடத்திய சிறிலங்காப் படைகள் கைகளையும் கண்களையும் கட்டி வைத்துவிட்டுத் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் பட்டவர்த்தனமான காட்சிகளை பிரித்தானிய காணொலிச் செய்திச் சேவையான 'சனல் -4' நிறுவனத்தின் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார்.
இந்தக் காணொலிக் காட்சிகளை வெளியிட்டுள்ள 'சிறிலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' (Journalists for Democracy in Sri Lanka) என்ற அமைப்பு, இந்தக் காட்சிகள் கடந்த ஜனவரி 2009 இல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாகவும், இதே காலப் பகுதியில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் போர்ப் பகுதிகளுக்குச் செல்வதை சிறிலங்கா அரசு தடை செய்துவிட்டிருந்தது எனவும் 'சனல் - 4' தெரிவிக்கின்றது.

இந்தக் காட்சிகள், "சிறிலங்கா அரசின் போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களாக இல்லையா?" என ஜொனதன் மில்லர் கேள்வி எழுப்புகினன்றார்.

இதேவேளையில் இந்த காணொலி காட்சிகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதுவரகம் - தமிழ் மக்களுக்கு எதிரான கோரச் செயல்களில் தமது படையினர் ஈடுபட்டனர் என்பதை மறுத்துள்ளதுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டுமே தமது படையினர் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளதாக 'சனல் - 4' தெரிவிக்கின்றது.

மேலும் - "கடந்த காலங்களில் சிறிலங்கா அரசையும் படையினரையும் மாசுபடுத்தும் விதமாக இவ்வாறான - பொய்யாக உருவாக்கப்பட்ட - ஆவணங்களை ஊடக நிறுவனங்கள் வெளியிட்டதாகவும். அதனால், இந்தக் காணொலிக் காட்சிகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே இதனை வெளியிடுமாறும் பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதுவரகம் தம்மிடம் கோரியதாகவும் 'சனல் - 4' நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் காணொலியை தன்னோடு சோர்ந்து பார்த்த, பக்க சார்பற்ற ஒரு சிங்கள ஊடகவியலாளர் - இது உண்மையானது தான் என தன்னிடம் கூறியதாகவும் ஜொனதன் மில்லர் குறிப்பிடுகின்றார்.

நன்றி புதினம் இணையம்
read more...
கண்களையும் கைகளையும் கட்டிப் போட்டுவிட்டு சிங்களப் படை தமிழர்களை சுட்டுக்கொல்லும் கோரக் காட்சிகள்: அம்பலப்படுத்துகின்றது 'சனல் - 4'SocialTwist Tell-a-Friend

தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறை

0 comments
தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்படுகிறது. தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையைக் கொண்டுவரவேண்டும் என்று கல்வியாளர்கள், கல்வி மீது அக்கறையுள்ள பல்வேறு தனி நபர்கள், இயக்கங்கள் பத்தாண்டுகளுக்கும் மேல் வலியுறுத்தி வருகின்றன. இதைத் தொடர்ந்து, சமச்சீர் கல்வி முறையைச் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் முத்துக்குமரன் குழு ஆய்வுசெய்து பரிந்துரைகள் வழங்கியது. அதைச் செயலாக்குவதற்காக அமைக்கப்பட்ட விஜயகுமாரின் பரிந்துரைகள் பற்றியும்-அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பற்றி வெளிமாநிலங்களுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை அறிந்து கடந்த 25ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

READ MORE...



read more...
தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறைSocialTwist Tell-a-Friend

இயக்குனர் திரு. தினகரன் ஜெய் அவர்களுடன் ஒரு நேர்காணல்:

0 comments

1. முதலில் உங்களைப் பற்றி... எனது அம்மாவின் சொந்த ஊர் மதுரைக்கு அருகில் உள்ள செம்பிலாங்குடி. அப்பா சிவகங்கை கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் சுபாஷ் சந்திரபோஸீன் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றியவர். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், ஒரு தெளிந்த நாடக கலைஞராக வாழ்ந்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்த புகழ்பெற்ற நடிகர். இயல்பிலேயே வசதிமிக்க கிராமத்து குடும்ப பின்னணி இருந்ததால் என்னுடைய தந்தை பெரும் செலவாளியாக இருந்தார். நாடகத்துறை சார்ந்தே அவரது பிற்பகுதி வாழ்வு கழிந்தது. லெளகீகத்தின் எந்தவித சாமர்த்தியமும் இல்லாமல் வாழ்ந்தார்.இதனால் குடும்ப சூழல் காரணமாக 20 வயதில் போலீசிலோ, இராணுவத்திலோ சேர வேண்டும் என்ற மனநிலை எங்களுக்கு இருந்தது. அதன் விளைவாகவே இரண்டு சகோதரர்களும் யூனிபார்ம் சர்வீஸில் சேர்ந்தார்கள்.READ MORE...



read more...
இயக்குனர் திரு. தினகரன் ஜெய் அவர்களுடன் ஒரு நேர்காணல்:SocialTwist Tell-a-Friend

தினகரன் ஜெய் - குறும்பட இயக்குநர்

0 comments
--யாழினி முனுசாமி
Created On 04-May-07 06:37:19 PMதினகரன் ஜெய்.விடுதலைப் போராட்டக்களத்தில் வெள்ளையனை எதிர்த்து தூக்குமேடை கண்ட வீரத்தமிழர்களான சின்னமருது, பெரியமருது சகோதரர்களைப் பற்றி "மருதிருவர்" எனும் விவரணப்படத்தையும், குற்றப் பழங்குடிகள் சட்டம் பற்றி "ரேகை" எனும் விவரணப்படத்தையும் எடுத்து சமூகச் சிந்தனையாளர்களையும் குறும்பட ஆர்வலர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறார் தினகரன் ஜெய்
READ MORE...




read more...
தினகரன் ஜெய் - குறும்பட இயக்குநர்SocialTwist Tell-a-Friend

நாம் தமிழர் இயக்கம்" அரசியல் இயக்கமாக மாறும்: இயக்குநர் சீமான்

0 comments


"நாம் தமிழர் இயக்கம்" 2010ம் ஆண்டில் அரசியல் இயக்கமாக மாறும் என, இன்றுவரை தமிழினக் கொள்கையில் இருந்து சற்றுமே தளராது சீறிப்பாயும் இயக்குநர் சீமான் தெரிவித்தார்.READ MORE...



read more...
நாம் தமிழர் இயக்கம்" அரசியல் இயக்கமாக மாறும்: இயக்குநர் சீமான்SocialTwist Tell-a-Friend

மானம் இழந்த விவசாயம்

0 comments
சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு கர்ணனைப் போல் வாழ்ந்த விவசாயிகள் இன்று குசேலர்களாகி விட்டார்கள். இன்று கிராமங்களில்கூட ஓட்டல்கள் உண்டு. காசுக்கு உணவு உண்டு. அந்தக் காலத்தில் கிராமங்களில் ஓட்டலும் இல்லை. வழிப்போக்கனிடம் காசும் இருக்காது. விவசாயிகள் கூப்பிட்டு அழைத்து வழிப்போக்கர்களுக்கு இலை போட்டு சாப்பாடு வழங்குவார்கள். அன்று கொடையாளியாக வாழ்ந்த விவசாயிகளின் வாரிசுகள் இன்று விருந்தினர்களாக வரும் சொந்தக்காரர்களுக்குக் கூட வயிராற ஒரு வேளை சோறு போட வக்கில்லாத தரித்திர நாராயணர்களாகிவிட்டார்கள்."மிகவும் தவறான விவசாய விலைக் கொள்கையைப் பின்பற்றி விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கிவிட்டுக் கடன் தள்ளுபடி... அது... இது... என்று ஏமாற்றுகிறார்கள். விவசாயிகள் பிச்சைக்காரர்கள் இல்லை. மானியமும் வேண்டாம். கடன் தள்ளுபடியும் வேண்டாம். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளுக்குரிய விலை வழங்கப்பட்டாலே போதும்' இப்படிச் சொல்வது நான் மட்டுமல்ல, விவசாயிகள் சங்கத் தலைவரான மகேந்தர் சிங் திகாயத் கூறுவதும் இதுவே.திகாயத் மேலும் கூறுகையில், ""1966ல் ஒரு டிராக்டர் விலை ரூ. 11,000. இன்று அதுவே ரூ. 3 லட்சமாகிவிட்டது. 40 பைசாவுக்கு விற்ற டீசல் இன்று ரூ. 34. உரம், பூச்சிமருந்து, விதை விலைகள் நூறு மடங்கு உயர்ந்துவிட்டன. READ MORE...



read more...
மானம் இழந்த விவசாயம்SocialTwist Tell-a-Friend

கடல் நீரைக் குடிநீராக்குதல்

0 comments
உலகில் கிடைக்கும் மொத்த நீரில் 97.5 சதவீதம் கடல் நீர்தான். மீதி உள்ள 2.5 சதவீதம் நீரிலும் 70 சதவீதம் வட-தென் துருவங்களில் உறை நிலையில் உள்ளது. 30 சத வீதம் மட்டுமே உலகெங்கும் உள்ள மக்களுக்குப் பயன்படும் வகையில் நீர்நிலைகளிலும் நிலத்தடி நீராகவும் உள்ளது. இந்த அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பது நமது உடனடி கவனத்தை ஈர்க்க வேண்டிய முக்கியமான அம்சம்.

READ MORE...


read more...
கடல் நீரைக் குடிநீராக்குதல்SocialTwist Tell-a-Friend

ஜானகி சம்பந்தம் அறக்கட்டளை

0 comments
கள்ள பெரம்பூர் ...
சுதந்திர தின விழாவில்
ஜானகி சம்பந்தம்அறக்கட்டளை நிறுவனர் திரு . எஸ் . மணிவண்ணன் அவர்கள்
ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு முதல மதிபெண் பெற்ற மாணவி எஸ். மதுபாலா அவர்களுக்கு பரிசு வழங்கினார் .
read more...
ஜானகி சம்பந்தம் அறக்கட்டளைSocialTwist Tell-a-Friend

ஓவியர் புகழேந்தியின் ”உயிர் உறைந்த நிறங்கள் - தமிழீழத்தின் இரத்தப்பதிவு” என்ற பெயரிலான ஓவியக் காட்சி சென்னை கொளத்தூரில் நடைபெற்றது.

0 comments
ஈழத்தமிழர்க்காக இன்னுயிர் நீத்த ஈகி முத்துக்குமாரின் ஊரான சென்னை கொளத்தூரில், விநாயகா திருமண நிலையத்தில் இக்கண்காட்சி 15.08.09 அன்றிலிருந்து தொடங்கி 16.08.09 வரை நடந்தது. 15.8.09 (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடந்த தொடக்க விழாவில்தமிழ் முழக்கம்சாகுல் அமீது கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஓவியர் புகழெந்தியின் ஓவியங்கள் பற்றியும், சமகால அரசியல் தொடர்பாகவும் புலவர் புலமைப்பித்தன் கருத்துரை வழங்கினார்.
READ MORE...

read more...
ஓவியர் புகழேந்தியின் ”உயிர் உறைந்த நிறங்கள் - தமிழீழத்தின் இரத்தப்பதிவு” என்ற பெயரிலான ஓவியக் காட்சி சென்னை கொளத்தூரில் நடைபெற்றது.SocialTwist Tell-a-Friend

ராஜபக்சவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயற்படுவது படுபயங்கரமானது: அமெரிக்க பேராசிரியர் பிரான்சிஸ் போய்ல் பேட்டி

0 comments

இந்திய அரசு ராஜபக்சவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது படுபயங்கரமானது என அமெரிக்காவின் இலினாயி பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் பேராசிரியராகக் கடமை புரியும் பிரான்சிஸ் போய்ல், இந்தியாவிலிருந்து வெளிவரும் தலித் முரசு இதழுக்கு தொலைபேசி மூலம் வழங்கிய சிறப்புப் பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் பிரான்சிஸ் அந்தோனி போய்ல், பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், உலகமெங்கும் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏராளமாக எழுதியும், பேசியும் வருகிறார். இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
உலகளவில் மனித உரிமைகள் அமைப்பான "அம்னஸ்டி இன்டர்நேஷனலின்' உயர்மட்டக் குழு இயக்குநராக போய்ல் பணியாற்றியுள்ளார்.
READ MORE...
read more...
ராஜபக்சவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயற்படுவது படுபயங்கரமானது: அமெரிக்க பேராசிரியர் பிரான்சிஸ் போய்ல் பேட்டிSocialTwist Tell-a-Friend

ஒரு இராணுவச் சர்வாதிகார நாடாக வளர்ந்து கொண்டிருக்கிறது சிறிலங்கா: இந்திய மனித உரிமை அமைப்பின் தலைவர் சுரேஷ் குற்றச்சாட்டு

0 comments
வியாழக்கிழமை, 20 ஓகஸ்ட் 2009
"ஒரு இராணுவச் சர்வாதிகார நாடாக வளர்ந்து கொண்டிருக்கும் சிறிலங்கா அரசு, தமிழ் மக்களில் ஒரு பகுதியினரைக் இனப்படுகொலை செய்வதன் மூலமாக ஒட்டுமொத்த தமிழர்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது" எனக் குற்றம் சாட்டியிருக்கும் இந்திய மனித உரிமை அமைப்பான பி.யூ.சி.எல். இன் தமிழ்நாடு, புதுச்சேரி தலைவரான சுரேஷ், "நீண்டகால மற்றும் நினைவுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழ் மக்களை நிரந்தரமாக அச்சுறுத்தி அவர்களை முடக்க நினைக்கிறது சிறிலங்கா அரசு. இவை எல்லாம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்" எனவும் தெரிவித்திருக்கின்றார்.
ஈழத் தமிழர் விவகாரத்தில் அதிகளவு அக்கறை காட்டிச் செயற்பட்டுவரும் வழக்கறிஞரான சுரேஷ், ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் 'குங்குமம்' வார இதழின் உதவி ஆசிரியர் டி.அருள் எழிலனுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.
இந்த நேர்காணலை இங்கு முழுமையாகத் தருகின்றோம்:

READ MORE...
read more...
ஒரு இராணுவச் சர்வாதிகார நாடாக வளர்ந்து கொண்டிருக்கிறது சிறிலங்கா: இந்திய மனித உரிமை அமைப்பின் தலைவர் சுரேஷ் குற்றச்சாட்டுSocialTwist Tell-a-Friend