இந்தியாவின் உண்மையான வரலாற்றை எழுத வேண்டும்

சென்னை, ஆக. 12: இந்தியாவின் உண்மையான வரலாற்றை எழுத வேண்டும் என்று இந்திய -ரஷிய தொழில், வர்த்தக சபையின் தலைவர் ஜெம் வீரமணி வேண்டுகோள் விடுத்தார்.
சென்னையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தியாவின் 62-வது சுதந்திர தின விழாவில் அவர் பேசியது:
ஹிட்லர், நெப்போலியன் போன்ற சர்வாதிகாரிகளை தோற்கடித்த நாடு ரஷியா. நாட்டை காப்பதற்காக நடைபெற்ற பல போர்களில் சுமார் 3 கோடி ரஷியர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
இது போன்ற வெற்றி வரலாறுகள் ரஷியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ரஷியர்களை உற்சாகப்படுத்துவதோடு உலகுக்கே வழிகாட்டியாகவும் உள்ளது.
ஆனால், இங்கு இந்தியாவை தோற்கடித்தவர்களின் வரலாறு தான் எழுதப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றை எழுதிய ஆங்கிலேயர்கள் நமது வெற்றி வரலாற்றை பின்னுக்கு தள்ளி, தோல்வி வரலாற்றை முதன்மைப்படுத்தி விட்டார்கள்.
அதனால் தான் ராஜராஜ சோழன் போன்ற சோழ மன்னர்களின் வெற்றி வரலாறுகள் பதிவு செய்யப்படவில்லை. இந்தியாவின் உண்மையான வெற்றி வரலாற்றை எழுதப்பட வேண்டும்.
அந்நிய ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட கோகினூர் வைரம் போன்ற விலை மதிக்க முடியாத கலை பொக்கிஷங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் பொருள்கள் உலகம் முழுக்க விற்பனை செய்யப்படுவது போல இந்தியப் பொருள்களும் உலகெங்கும் விற்பனையாக வேண்டும். இந்தியத் தயாரிப்புகளை உலகச் சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் வீரமணி.
நன்றி http://www.dinamani.com/edition/story.aspx?
இந்தியாவின் உண்மையான வரலாற்றை எழுத வேண்டும்SocialTwist Tell-a-Friend

No comments: