சமச்சீர் கல்வி முறையில் முத்துக்குமரன் குழுவினர் அளித்துள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டிவனம் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
சமச்சீர் கல்வி : முதலமைச்சர் கருணாநிதி அறிவிப்பு என்று தலைப்புச் செய்தியை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீர்குமிழிபோல விரைவிலேயே கலைந்துவிட்டது.
சமச்சீர் கல்வி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு கொள்கை முடிவு. அதன்படி கல்விமுறையில் மிகப்பெரிய மாற்றங்களை செயல்படுத்த முயலும்போது அதன் தாக்கம் எந்தவொரு பிரிவினருக்கும், பகுதியினருக்கும் பாதகம் ஏற்படுத்தி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் முக்கியமான கடமையாகும்.
ஒரே பாடத்திட்டம், ஒரே விதமான பாடப்புத்தகங்கள் என்பனவற்றால் அனைவருக்கும் சமச்சீரான கல்வியை வழங்கிட முடியாது. அனைத்து குழந்தைகளுக்கும் தரமான, சீரான, ஒரேவிதமான கல்வியை வழங்குவதுதான் சமச்சீர் கல்வி.
அதற்கு இப்போது அறிவித்து இருப்பது வழிவகுக்காது.
எல்லாவற்றிற்கும் மேலாக பயிற்று மொழியாக தமிழும், தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடரும் என்று அறிவித்திருப்பது சமச்சீர் கல்வி என்ற நடைமுறைக்கு வேட்டு வைப்பதாகும்.
தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிறமொழிகளும் பயிற்றுமொழியாக தொடரும் என்ற அறிவிப்பினால் இப்போது நடைமுறையில் இருந்துவரும் கல்வியில் ஏற்றத்தாழ்வு என்கிற சாபக்கேடு தொடர்ந்து நீடிக்கும்.
C நடைமுறைப்படுத்துவது தொடர்பாக முத்துக்குமரன் குழுவினர் அளித்துள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தும்போதுதான் அனைவருக்கும் ஒரேவிதமான தரமான கல்விக்கு உத்தரவாதம் கிடைக்கும். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதில் இந்த அரசு கால் கிணறுகூட தாண்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
வருகிற 29ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலித்து முடிவெடுத்து அறிவிக்கப்போவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இந்த கால்கிணறு தாண்டும் வேலையை விட்டுவிட்டு எப்படி நுழைவுத்தேர்வை ரத்து செய்வதில் அரசு துணிச்சலோடு முடிவெடுத்ததோ அதைப்போல முத்துக்குமரன் குழுவினரின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தும் முடிவை அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டும்.
நன்றி http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=00f95c80-2d5a-4e8b-a0c6-985192d20d96&CATEGORYNAME=TCHN
கல்வியில் ஏற்றத்தாழ்வு என்கிற சாபக்கேடு தொடர்ந்து நீடிக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment