
இந்த எண்ணெய்க் குதங்களை ஒப்பந்தமொன்றின் மூலம் 35 வருடங்களுக்கு குத்தகைக்குவிடுவதற்கு 2002ம் ஆண்டு ஆட்சியிலிருந்த அரசாங்கம் முயற்சித்தது. எனினும், குறித்த காணி அளவீடு செய்யப்பட்டு குத்தகை ஒப்பந்தம், 6 மாத காலத்திற்குள் கையொப்பமிடவேண்டுமென அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், தொழிற்சங்கங்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக குத்தகை ஒப்பந்தம் கையொப்பமிடும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
எனினும், இந்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி, அதில் கையொப்பமிட வேண்டுமென இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த அழுத்தத்தின் காரணமாக மிகவும் இரகசியமான முறையில், குத்தகை ஒப்பந்தமொன்று தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தத்திற்கு சட்ட மா அதிபர் ஒப்புதல் வழங்கியதன் பின்னர், குறித்த 100 எண்ணெய்க் குதங்களும் இந்தியாவிடம் வழங்கப்படவுள்ளது.
அரசாங்கச் சொத்துக்கள் தனியார் மயப்படுத்துவது நிறுத்தப்படும் என மஹிந்த சிந்தனையில் கூறி, அதிகாரத்தைக் கைப்பற்றிய ராஜபக்ச அரசாங்கம், தற்போது அரசாங்கச் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு வழங்கி தனியார்மயப்படுத்தி வருவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர்மட்டப் பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நன்றி http://www.paranthan.com/index.php?option=com_content&view=article&id=3366:----100---&catid=34:2009-04-30-04-35-39&Itemid=53
No comments:
Post a Comment