சஹாரா பாலைவனப் பிரதேசத்திலிருந்து சூரிய சக்தி மூலம் ஐரோப்பாவிற்கு மின்சாரம் வழங்க புதிய திட்டம்சஹாரா பாலைவனப் பகுதியிலிருந்து சூரிய சக்தி மூலம் ஐரோப்பாவிற்கு மின்சாரம் வழங்கும் புதிய திட்டமொன்று குறித்து ஆராயப்பட்டு வருவதாகத்ழ்ய்தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பாவின் பல நாடுகளும் எரிசக்தி பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உலகழ்ய்நாடுகளில் ஏற்பட்டுள்ள எரிசக்தி பற்றாக்குறைக்கு தீர்வாக சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரிய சூரிய கலங்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு மின்சாரத்தை வழங்கும்ழ்ய் விசாலமான திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் சுவிட்சர்லாந்தின் முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பலவும் கைகோர்த்துக் கொண்டுள்ளன. இந்தத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு சுமார் 555 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், முன்னணி நிறுவனங்களுக்கு இடையேழ்ய்ஆரம்பகட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும்ழ்ய்தெரிவிக்கப்படுகிறது.
நன்றி :http://www.alaikal.com/news/?p=20137
சஹாரா பாலைவனப் பிரதேசத்திலிருந்து ஐரோப்பாவிற்கு மின்சாரம் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment