
இந்தியாவின் பல பாகங்களிலும் தொல்லியல் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்த தொல்லியழாளர்கள், தமிழகத்தில் செந்துறை எனும் இடத்தில் 41 அபூர்வகை முட்டைகளை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து வரலாற்று தொல்லியலாளர் குடவாயில் சுந்தரவேலு, கும்பகோணத்தில் வைத்து நிருபர்களிடம் பேட்டி அளிக்கையில் 'அரியலூர் மாவட்டத்தில் இப்போதுள்ள நிலப்பகுதிகள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கடல் பகுதிகளாக இருந்துள்ளன. பூமிக்கு அடியில் உள்ள பாறை தட்டுகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி கொண்டிருப்பதால், அரியலூர் பகுதி மேலே உயர்த்தப்பட்டு கடல் நீர் வடிந்து வற்றியுள்ளது.
READ MORE...இந்நிலையிலேயே செந்துறைக்கு அருகில் புதையுண்ட நிலையில் கோள வடிவிலான சேதமடைந்த நிலையில் 41 முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை டைனோசர்களது முட்டைகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
முட்டைகளில் பெரும்பாலானவை ஏறக்குறைய கோள வடிவில் 20 இஞ்ச் உள்ளன. ஒவ்வொன்றும் 5 கிலோ எடையில் உள்ளன. சில முட்டைகள் மட்டும் சிறியவையாகவும், பெரியவையாகவும் உள்ளன என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், இவ்வாறு தொல்பொருள் ஆய்வுகள் மூலம் அபூர்வகை முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
THANKS THATS TAMIL
No comments:
Post a Comment