இலங்கைத் தீவின் சகல பகுதி கரையோரங்கள் மற்றும் சில முக்கிய நிலப்பரப்புக்களில் 24 மணி நேர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், கண்காணிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிடவில்லை. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய நடவடிக்கைகளை அவதானிக்கும் பணிகள் தொடரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தலைநகர் மற்றும் வடக்கு பிரதேசத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 30 மில்லியன் ரூபா பணத்தை இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளது.

இலங்கையில் கண்காணிப்பை மேற்கொள்ள வடிவமைக்கப்பட்டடுள்ள திட்டத்தின் பிரதி ஒன்று தமிழ் நாட்டு அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டின் கடற்கரைகளை கண்காணிப்பதை நோக்காக கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள 'பனாரஸ்' நிறுவன அதிகாரி அது சம்பந்தமான முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நன்றி http://www.tamilwin.com/view.php?2aSWnVe0dHj060ecGG7X3b4N9EY4d3g2h2cc2DpY2d426QV3b02ZLu2e
No comments:
Post a Comment