காஷ்மீரில் அத்துமீறி பறந்த சீன ஹெலிகாப்டர்கள்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சீனாவின் ஹெலிகாப்டர்கள் இந்திய வான்பகுதிக்குள் வட்டமிட்டதை இந்திய ராணுவ அதிகாரிகள் இன்று உறுதி செய்துள்ளனர்.காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியை ஆக்ரமித்துள்ள சீனா அதற்கு அக்ஷய் சின் என பெயரிட்டுள்ளது. இந்நிலையில் அடிக்கடி இப்பகுதிக்கு அருகில் உள்ள இடங்களில் அத்துமீறி நடந்து வருகிறது.சீன ராணுவம் கடந்த ஆண்டு சுமார் 223 முறை இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. பின்னர் மீண்டும் தங்கள் பகுதிக்குள் திரும்பியுள்ளது.இதே போல் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி இரண்டு சீன ஹெலிகாப்டர்கள் இந்திய பகுதிக்கு வந்து சென்றுள்ளது. அப்போது அது உணவு பொருட்கள், பெட்ரோல், மண்எண்ணெய் போன்றவற்றை சுமந்து சென்றுள்ளது.சீனாவின் இந்த எம்ஐ வகை ஹெலிகாப்டர்களை பாங்காக் ஏரி பகுதியில் வசித்து வரும் மக்கள் நேரிடையாக பார்த்துள்ளனர். அதே நேரத்தில் சீன ராணுவம் இந்த மாதத்தில் மட்டும் சுமார் 26 முறை இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, வெளியேறியுள்ளது.இது குறித்து இந்திய ராணுவத்தின் வடக்கு பிரிவு செய்தி தொடர்பாளர் கர்னல் கச்சாரி கூறுகையில்,இரண்டு மாதங்களுக்கு முன் சீன ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது. இதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இதனால் யாரும் பயம் கொள்ள தேவையில்லை. இது தொடர்பாக சீனாவிடம் விளக்கம் கேட்டுள்ளோம் என்றார்.
நன்றி http://thatstamil.oneindia.in/news/2009/08/31/india-achinese-choppers-violate-indian-airspace.html
காஷ்மீரில் அத்துமீறி பறந்த சீன ஹெலிகாப்டர்கள்SocialTwist Tell-a-Friend

No comments: