ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எண்ணெய் எடுப்பது தொடர்பாக செலவழித்த இரு ஆண்டு கணக்குகள் காணாமல் போயுள்ளதால், ரிலையன்ஸின் கணக்குகளைத் தணிக்கை செய்து வரும் இந்தியத் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரிகளுக்குத் தலை வேதனை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் எண்ணெய் எடுப்பது தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எண்ணெய், எரிவாயு எடுக்கும் பணிக்கு ரூ. 45 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இத்தொகை மிக அதிகம். இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அனில் அம்பானி வலியுறுத்தியிருந்தார்.
இதையடுத்து நிறுவனத்தின் கணக்குகளைத் தணிக்கை செய்யுமாறு இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியை (சிஏஜி) அரசு கேட்டுக் கொண்டது. தணிக்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு செலவிட்ட தொகைக்கான கணக்கு விவரங்கள் கிடைக்கவில்லை. இதனால் தணிக்கை பணிகள் குறித்த முழு விவரத்தை வெளியிட முடியவில்லை என்று தணிக்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எண்ணெய், எரிவாயு உற்பத்தி மற்றும் அதை பகிர்ந்து கொள்வது தொடர்பானவை மட்டுமின்றி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மேற்கொண்ட மேலும் 6 ஒப்பந்தங்கள் குறித்தும் தணிக்கை செய்யப்பட்டு வருவதாக தணிக்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி http://www.inneram.com/index.php/200908081431/2009-08-08-20-16-17
No comments:
Post a Comment