skip to main |
skip to sidebar
ஓவியர் புகழேந்தியின் ”உயிர் உறைந்த நிறங்கள் - தமிழீழத்தின் இரத்தப்பதிவு” என்ற பெயரிலான ஓவியக் காட்சி சென்னை கொளத்தூரில் நடைபெற்றது.
ஈழத்தமிழர்க்காக இன்னுயிர் நீத்த ஈகி முத்துக்குமாரின் ஊரான சென்னை கொளத்தூரில்,
விநாயகா திருமண நிலையத்தில் இக்கண்காட்சி 15.08.09
அன்றிலிருந்து தொடங்கி 16.08.09
வரை நடந்தது. 15.8.09 (
சனிக்கிழமை)
காலை 10
மணியளவில் நடந்த தொடக்க விழாவில் ”
தமிழ் முழக்கம்”
சாகுல் அமீது கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
ஓவியர் புகழெந்தியின் ஓவியங்கள் பற்றியும்,
சமகால அரசியல் தொடர்பாகவும் புலவர் புலமைப்பித்தன் கருத்துரை வழங்கினார்.
READ MORE...



16.8.09 (
ஞாயிறு)
மாலை 5
மணியளவில் நடந்த நிறைவு விழாவில் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்,
திருச்சி எல்.
கணேசன்,
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர்.
ஓவியர் புகழேந்தி தம் ஒவியங்கள் பற்றியும்,
தமிழீழ விடுதலைப் போராட்டம் தனக்குள் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை பற்றியும் தமது ஏற்புரையில் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழும் என்பதே அனைவரது குரலாகவும் ஒலித்தது.
ஓவியர் புகழேந்தியின் ”உயிர் உறைந்த நிறங்கள் - தமிழீழத்தின் இரத்தப்பதிவு” என்ற பெயரிலான ஓவியக் காட்சி சென்னை கொளத்தூரில் நடைபெற்றது.
No comments:
Post a Comment