வன்னியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு இந்திய முன்னாள் படையினர் 80 பேர் மேலும் வருகை

[ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2009, 09:05 பி.ப ஈழம்] [வி.குணரட்ணம்]
வன்னியில் நிலக்கண்ணி வெடிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியப் படையினருடன் இணைந்துகொள்வதற்காக இந்திய தரைப்படையில் பணியாற்றிய மேலும் 80 பேர் சிறிலங்கா சென்றுளளதாக இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனம் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கில், மன்னார் மற்றும் வவுனியா பகுதிகளில் சிறிலங்காப் படையினராலும், விடுதலைப் புலிகள் அமைப்பினராலும் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் 2003 ஆம் ஆண்டு தொடக்கம் ஈடுபட்டுள்ள இந்தியப் படையினருடன் புதிதாக வந்துள்ள முன்னாள் படையினரும் இணைந்துகொள்வார்கள்.

தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளவர்களில் 50 பேர் பூனேயைத் தளமாகக்கொண்டுள்ள ஹொரைஸோன் குழுவைச் சேர்ந்தவர்கள். 32 பேர் ஹரியானாவைத் தளமாகக்கொண்டுள்ள சர்வத்ரா தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் 32 பேர் மற்றொரு குழுவாக விரைவில் அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE...
வன்னியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு இந்திய முன்னாள் படையினர் 80 பேர் மேலும் வருகைSocialTwist Tell-a-Friend

No comments: