இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும்: இயக்குனர் சீமான்

ராஜபக்ச தமிழர்களை விடுவிக்கும் விஷயத்தில் வாக்கு தவறிவிட்டார். இதனால், இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இயக்குனர் சீமான் கூறினார்.

தூத்துக்குடி வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டம் சிங்கள பயங்கரவாதத்திற்கு எதிரானது. ராஜபக்ச தமிழர்களை விடுவிக்கும் விஷயத்தில் வாக்கு தவறிவிட்டார்.

இதில் உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு 3 லட்சம் தமிழர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இதனை வலியுறுத்தி மதுரையில் கடந்த ஜீன் 18ல் ஊர்வலம் நடத்தினோம். அதற்கு யாரும் செவி சாய்க்கவில்லை.

இதனால் இன்று (29ம் தேதி) தூத்துக்குடியிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் பொதுகூட்டம் நடத்தி வருகிறோம்.

உலக நாடுகள் உடனடியாக இலங்கையை நிர்பந்தித்து தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க செய்ய வேண்டும். அனைத்து உலக நாடுகளும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் தாக்கப்பட்டால் அது மட்டும் இங்கு பிரச்சனையை கிளப்புகிறது. தமிழக மீனவன் கடலில் சுடப்பட்டால் இந்திய மீனவனாக கருதப்படுவதில்லை.

கடந்த தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினையை கையில் எடுத்த அரசியல் கட்சிகள் தோல்வி கண்டன என்பது தவறான கருத்தாகும். நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற இருக்கிறோம் என்றார் சீமான்.

நன்றி http://www.tamilwin.com/view.php?2aSWnVe0dZj0K0ecQG7N3b4N9E84d3g2h3cc2DpY2d436QV3b02ZLu2e

இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும்: இயக்குனர் சீமான்SocialTwist Tell-a-Friend

No comments: