[வியாழக்கிழமை, 06 ஓகஸ்ட் 2009, 04:48 பி.ப ஈழம்] [க.நித்தியா
'வடக்கில் வசந்தம்' எனும் பேரால் தமிழர்களின் இன அடையாளத்தை அழிக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசு ஈடுபட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக 'குமுதம்' குழுமத்தின் 'குமுதம் றிப்போர்ட்டர்' வாரம் இருமுறை இதழுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
READ MORE...
இலங்கையில் தமிழர்களும், சிங்களவர்களும் தனித்தனியாக தங்களை அடையாளப்படுத்தி வாழ வேண்டும் என்பதே சரியானது. ஆனால், சிங்கள இனவெறி அரசோ, தமிழர்களின் இன அடையாளத்தை அழிப்பதில் மிகவும் குறியாக இருக்கிறது. இந்த இன ஒழிப்பு முயற்சி, தமிழர் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றும் திட்டம் போன்றவை நீண்டகாலமாகவே அங்கு நடந்து வருகின்றன.
உதாரணமாக, தமிழர்களின் மாவட்டங்களில் ஒன்றான திருகோணமலையில் 1827 ஆம் ஆண்டு 15,663 தமிழர்கள் இருந்தார்கள். இது அங்கிருந்த மொத்த மக்கள் தொகையில் 81 சதவிகிதம் ஆகும். அதே ஆண்டில் திருகோணமலையில் வெறும் 280 சிங்களவர்களே இருந்திருக்கிறார்கள். இது 1.3 சதவிகிதம் ஆகும்.
ஆனால், 1981 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி, அங்கே சிங்கள மக்களின் எண்ணிக்கை 42 சதவிகிதமாகப் பெருகியுள்ளது. இது தமிழரின் பாரம்பரியப் பகுதிகளில் சிங்கள மக்களைக் குடியேற்றி, சொந்த மாவட்டத்திலேயே தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் சதித்திட்டம் ஆகும்.
நான்காவது ஈழப்போர் முடிந்துவிட்டதாக தற்போது அறிவித்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்ச, ஈழத் தமிழர் அழிப்புப் போரை இன்னும் வேகப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பிருந்த சிங்கள அரசுகள்கூட தமிழ் இன அழித்தொழிப்பில் இறங்கியிருந்தாலும், ராஜபக்ச ஆட்சியில்தான் இது உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
தற்போது நடந்து முடிந்துள்ள போருக்குப்பின் ஒட்டுமொத்த தமிழ்ப் பகுதிகளையும் சிங்களமயமாக்கும் முயற்சியில் ராஜபக்ச அரசு வேகமாக ஈடுபட்டுள்ளது. ஏறத்தாழ மூன்று லட்சம் தமிழர்கள் முள்வேலி கம்பிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் இதற்கு மிகப் பெரிய கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே சிங்கள அரசு அவசர அவசரமாக வெலிஒயா பகுதியில் அறுபதாயிரம் சிங்கள குடும்பங்களைக் குடியேற்ற முயற்சித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் சிங்களக் கைதிகள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
'வெலிஓயா' என்ற பகுதி முழுக்க முழுக்க தமிழர்களின் பகுதி ஆகும். அதன் உண்மையான பெயர் மணலாறு. அந்த மணலாறு என்ற பெயரை 'வெலிஓயா' என்ற சிங்களப் பெயராக மாற்றி, அங்கே தொடர்ந்து சிங்களவர்களைக் குடியேற்றி வருகின்றனர்.
இதேபோல தமிழர்களின் பகுதிகளை கல்யாணிபுர, முரவேவா, கஜபுர, ஜனகபுர என்று சிங்களப் பெயர்களாக மாற்றியுள்ளனர். இந்தப் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்ற அறுபதாயிரம் குடியிருப்புக்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இங்கேதான் நாம் ஒரு முக்கிய விடயத்தைக் கவனிக்க வேண்டும். இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளை இணைக்க வேண்டும் என்பதுதான் இந்தியத் தலைவர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றவர்களின் ஆசையாக இருந்தது.
இந்த மணலாறு பகுதி, தமிழர்களின் வடக்கு- கிழக்குப் பகுதிகள் சந்திக்கும் இடத்தில் இருப்பதால், இங்கே திட்டமிட்டுத் தமிழர்களைக் குடியேற்றி வடக்கையும் கிழக்கையும் தனித் தனி துண்டுகளாக்க சிங்கள அரசு சதி செய்கிறது.
இந்த சதிச்செயல் இந்திய அரசிற்குத் தெரியாதது அல்ல. இந்த விடயத்தில் இந்தியா ஏன் மௌனம் காக்கிறது என்பது புரியவில்லை? இந்திய அரசு இனிமேலும் இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையில் பெருத்த மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவின் தெற்குப் பகுதியில் இலங்கை மூலம் பெரும் நெருக்கடியை இந்தியா சந்திக்க வேண்டியிருக்கும்.
ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும், அமெரிக்காவும் இலங்கையின் போர்க்குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், இந்த விசாரணையை நடத்த விடாமல் இந்தியாதான் தடுக்கிறது என்ற கருத்தும் பரவலாக உள்ளது.
உண்மையில் இலங்கைத் தமிழ் மக்கள் மீது இந்திய அரசிற்கு அக்கறை இருக்குமானால், சர்வதேச சமூகத்துடன் இந்திய அரசு இணக்கம் கண்டு இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்கு சுணக்கமின்றி அரசியல் தீர்வு காண முன்வர வேண்டும். இதில் இந்திய அரசு முதலில் செய்ய வேண்டிய வேலை சிங்கள மயமாக்கும் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதுதான்.
இலங்கையில் தற்போது இன்னொரு பெரிய கொடுமையும் நடக்க இருக்கிறது. விலங்கினங்களில் கலப்பினத்தை உருவாக்குவது போல, முகாம்களில் அகதிகளாக உள்ள தமிழ்ப்பெண்களையும், சிறையில் இருக்கும் சிங்களக் கைதிகளையும் சேர்த்து கலப்பினம் ஒன்றை உருவாக்கும் முயற்சியும் நடக்கிறது.
சிங்களவர்களும், தமிழர்களும் காதல்மணம் புரிந்து கொண்டால் அதை நாம் வரவேற்கலாம். ஆனால், வலுக்கட்டாயமாக ஒரு கலப்பினத்தை உருவாக்கும் முயற்சியை எப்படி அனுமதிக்க முடியும்? இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற ஈனச் செயல்களுக்குத்தான் இலங்கை ஆட்சியாளர்கள் 'வடக்கில் வசந்தம்' என்று திட்டம் வகுத்துள்ளனர். இதை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று ஒரே மூச்சில் முடித்துக் கொண்டார் சி.மகேந்திரன்.
THANKS http://www.puthinam.com/full.php?2bdrD6KUb0accAmSOe0ec4AYcm20cc360Mt534d335Vo624b30mOO4A4d4eKOA4ccd0eb6e1fDde

No comments:
Post a Comment