மானம் இழந்த விவசாயம்

சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு கர்ணனைப் போல் வாழ்ந்த விவசாயிகள் இன்று குசேலர்களாகி விட்டார்கள். இன்று கிராமங்களில்கூட ஓட்டல்கள் உண்டு. காசுக்கு உணவு உண்டு. அந்தக் காலத்தில் கிராமங்களில் ஓட்டலும் இல்லை. வழிப்போக்கனிடம் காசும் இருக்காது. விவசாயிகள் கூப்பிட்டு அழைத்து வழிப்போக்கர்களுக்கு இலை போட்டு சாப்பாடு வழங்குவார்கள். அன்று கொடையாளியாக வாழ்ந்த விவசாயிகளின் வாரிசுகள் இன்று விருந்தினர்களாக வரும் சொந்தக்காரர்களுக்குக் கூட வயிராற ஒரு வேளை சோறு போட வக்கில்லாத தரித்திர நாராயணர்களாகிவிட்டார்கள்."மிகவும் தவறான விவசாய விலைக் கொள்கையைப் பின்பற்றி விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கிவிட்டுக் கடன் தள்ளுபடி... அது... இது... என்று ஏமாற்றுகிறார்கள். விவசாயிகள் பிச்சைக்காரர்கள் இல்லை. மானியமும் வேண்டாம். கடன் தள்ளுபடியும் வேண்டாம். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளுக்குரிய விலை வழங்கப்பட்டாலே போதும்' இப்படிச் சொல்வது நான் மட்டுமல்ல, விவசாயிகள் சங்கத் தலைவரான மகேந்தர் சிங் திகாயத் கூறுவதும் இதுவே.திகாயத் மேலும் கூறுகையில், ""1966ல் ஒரு டிராக்டர் விலை ரூ. 11,000. இன்று அதுவே ரூ. 3 லட்சமாகிவிட்டது. 40 பைசாவுக்கு விற்ற டீசல் இன்று ரூ. 34. உரம், பூச்சிமருந்து, விதை விலைகள் நூறு மடங்கு உயர்ந்துவிட்டன. READ MORE...



மானம் இழந்த விவசாயம்SocialTwist Tell-a-Friend

No comments: