READ MORE...
இதையடுத்து காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் விசாரணை நடைபெறவுள்ளதால். அதற்குப் பிறகு மீண்டும் கூடிப் பேசுவது என்று இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் சிவசமுத்திரம், மேகதாது ஆகிய இரண்டு இடத்திலும், தமிழகத்தில் ஓகேனக்கல், ராசிமணல் ஆகிய இடங்களிலும் நீர் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க தேசிய நீர்மின் உற்பத்தி கழகம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி சிவசமுத்திரத்தில் 270 மெகாவாட், ராசிமணலில் 360 மெகாவாட், மேகேதாதுவில் 360 மெகாவாட், ஒகேனக்கலில்120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் சிவசமுத்திரம் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை உள்பட மத்திய அரசு துறைகள் அனைத்தும் ஒப்புதல் அளித்துவிட்டன. மற்ற 3 இடங்களில் அங்கு வாழும் மக்களை இடமாற்றுவது, வனத்தை பாதுகாப்பது போன்ற பிரச்சனைகள் எழுந்துள்ளன.
மேலும் சிவசமுத்திரம் பகுதி கர்நாடக மாநிலத்தின் எல்லைக்குள் வருவதால் அங்கு 375 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடைய மின் நிலையத்தை கர்நாடக அரசு தானே அமைக்கப் போவதாகவும் அறிவித்த சிக்கலை அதிகரித்துள்ளது.
இது குறித்து கர்நாடக மின்துறை செயலாளர் ஜெய்ராஜ் கூறுகையில், சிவசமுத்திரம் ஆசியாவிலேயே மிகப் பழமையான, இந்தியாவின் முதல் நீர்மின் உற்பத்தித் திட்டமாகும். சிவசமுத்திரம் எங்களது எல்லையில் உள்ளது. அதனால் அங்கு புதிய மின் உற்பத்தி திட்டத்தை நாங்களே செயல்படுத்த நினைக்கிறோம். ஆனால், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக, காவிரியில் தண்ணீர் எடுக்க மாட்டோம். இந்த திட்டத்துக்கு மற்றவர்கள் ஒப்புக் கொண்டால், மற்ற திட்டங்களில் எங்களது ஒத்துழைப்பை தரத் தயாராக இருக்கிறோம் என்றார்.
இதன்மூலம் பெரும்பாலான நீரை சிவசமுத்திரத்துக்குத் திருப்பிவிட்டு அதை தானே முழுமையாக உபயோகித்துக் கொள்ள கர்நாடகம் திட்டமிடுகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இந்த விவகாரம் குறித்துப் பேச தமிழகம் , கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் பொதுப்பணி மற்றும் மின் துறை உயர் அதிகாரிகள் கூட்டம், மத்திய எரிசக்தித் துறைச் செயலாளர் எச்.எஸ்.பிரம்மா தலைமையில் சென்னையில் நடந்தது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரம்மா,
நான்கு தென் மாநிலங்களிலும் கடுமையான மின்சார பற்றாக்குறை நிலவுகிறது. இதை சமாளிக்க மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுவது அவசியம். நான்கு நீர் மின் நிலையங்களை அமைப்பதன் மூலம், 1,200 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் கிடைக்கும்.
காவிரி நடுவர் மன்றம் தீர்ப்புக் கூறிய பின்னரும் தமிழகமும் கர்நாடகமும் நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன. இதனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளோம். மின் திட்டங்கள் குறித்த அடுத்த கட்டக் கூட்டம், பெங்களூரில் நடைபெறும் என்றார்.
இக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றுப் பேசிய பொதுப்பணித் துறை செயலாளர் ராமசுந்தரம்,
காவிரி விவகாரத்தில் இறுதித்தீர்ப்பு வராத நிலையில், சிவசமுத்திரம் பகுதியில் தனியாக புதிய நீர்மின் உற்பத்தி நிலையத்தை கர்நாடக அரசு அமைக்க ஒப்புதல் அளிக்க மாட்டோம்.
காவிரி நீர் விவகாரத்தில் 1991ல் இடைக்கால தீர்ப்பு அளிக்கப்பட்டது. இறுதித் தீர்ப்பு, 2007ல் அளிக்கப்பட்டது. தற்போது இடைக்காலத் தீர்ப்புதான் அமலில் உள்ளது. ஆனால், இடைக்கால தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளதை கூட கர்நாடகம் அமலாக்கவில்லை.
இதனால் கர்நாடகம் முதலில் 20 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விட வேண்டும். இடைக்கால தீர்ப்பில் சொல்லியுள்ளபடி, தர வேண்டிய நீரை தராத பட்சத்தில் மேட்டூருக்கு மேலே காவிரியில் புதிய திட்டத்தை கர்நாடகா செயல்படுத்த அனுமதிக்க முடியாதது.
எனவே நான்கு நீர் மின் திட்டங்களும் தேசிய நீர் மின் உற்பத்தி கழகம் மூலமே தொடங்க வேண்டும் என்றார்.
இந் நிலையில், காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு நவம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, நான்கு மாநிலங்களுடனும் மீண்டும் பேச பிரம்மா திட்டமிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் கடந்த மாதம் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது நினைவுகூறத்தக்கது
THANKS http://thatstamil.oneindia.in/news/2009/08/18/tn-cauvery-tn-kar-power-plants-talks-fail-again.html

No comments:
Post a Comment