அமெரிக்காவில் தற்காலிக அயல்நாட்டு பணியாளர்களை நியமிப்பதற்கான எச் - 2 பி விசா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வேளாண் துறை தவிர்த்து இதர துறைகளில் தேவைப்படும் 'செமி ஸ்கில்டு' பணியாளர்களை, அமெரிக்க நிறுவனங்கள் அயல்நாடுகளிலிருந்து வரவழைத்துக் கொள்வதற்காகவே எச் - 2 பி விசா வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில், அமெரிக்க அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, இந்த விசா விண்ணப்பங்கள் வழங்குவதை அமெரிக்க தூதரகங்கள் குறைத்துக்கொண்டதன் காரணமாக 'செமி ஸ்கில்டு' பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.இந்நிலையில், தற்காலிக அயல்நாட்டு பணியாளர்களின் தேவை அதிகரித்து இருப்பதால், அவர்களை வரவழைப்பதற்கான எச் - 2 பி விசா திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து வந்த கோரிக்கையையடுத்து,அத்திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது அமெரிக்கா.
நன்றி http://tamil.webdunia.com/newsworld/news/international/0908/07/1090807101_1.htm
எச் - 2 பி விசா திட்டத்தை மீண்டும் தொடங்கியது யு.எஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment