புலிகள் 4000 கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை இந்திய தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளனர்

0 comments
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சுமார் 4000 கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை இந்திய தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இயங்கி வரும் அசாம் விடுதலை போராளிகளுக்கே புலிகள் அதிகளவு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற தேடுதல் வேட்டையொன்றின் போது அசாம் போராளிகளிடமிருந்து மீட்கப்பட்ட இராணுவ ஆவணங்களின் மூலம் இந்த ஆயுத கொடுக்கல் வாங்கல் விவகாரம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோல்வியைத் தழுவுவதற்கு முன்னர் இந்த ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பாரிய யுத்தமொன்றை முன்னெடுத்து வரும் சந்தர்ப்பத்தில் பெருந்தொகை ஆயுதங்களை இந்திய கிளர்ச்சியாளர்களுக்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Thanks
http://parantan.com/pranthannews/srilankanews.htm
read more...
புலிகள் 4000 கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை இந்திய தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளனர்SocialTwist Tell-a-Friend

வெறுப்பான நகர்கள் பட்டியலில் சென்னை!!

0 comments
வெறுப்பான நகர்கள் பட்டியலில் சென்னை!!

லண்டன்: உலகின் மிகவும் வெறுக்கத்தக்க நகரங்கள் வரிசையில் சென்னையைச் சேர்த்துள்ளது லோன்லிபிளானட். மேலும், தமிழ் சினிமா நடிகர், நடிகையர் இந்தி கலைஞர்களுடன் ஒப்பிடுகையில், அந்த அளவுக்கு ஹாட்டானவர்கள் இல்லை என்றும் அது கூறுகிறது.

லோன்லிபிளானட், இதுதொடர்பாக சுற்றுலாப் பிரியர்களிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அந்தக் கருத்துக் கணிப்பின்படி, 9 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில், உலகிலேயே மிகவும் வெறுப்புக்குரிய நகரமாக அமெரிக்காவின் டெட்ராய்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரில் குற்றம் , மாசு, மோசமான அடிப்படைக் கட்டமைப்பு உள்ளதாம். இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு இது நகரம் அல்ல நரகம் என்று வர்ணித்துள்ளது.

அடுத்த இடத்தில் கானா நாட்டின் அக்ரா நகரமும், 3வது இடத்தில் சியோல் நகரமும் உள்ளன.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரத்திற்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

5வது இடத்தில் உள்ள நகரம் இங்கிலாந்தின் வால்வர்ஹாம்ப்டன். 6வது இடம் சான் சால்வடாருக்குப் போகிறது.

7வது இடம் சிங்காரச் சென்னைக்கு. மும்பையைப் போன்ற செழிப்போ, டெல்லியைப் போன்ற வரலாறோ, பெங்களூரைப் போன்ற பரபரப்போ இங்கு இல்லையாம். மேலும் இங்குள்ள நடிகர் , நடிகையரும் அவ்வளவு 'ஹாட்'டானவர்கள் இல்லையாம்.

8வது இடத்தில் தான்சானியாவின் அருஷா, 9வது இடத்தில் மெக்சிகோவின் செடுமல் ஆகிய நகரங்கள் உள்ளன

Thanks
http://thatstamil.oneindia.in/news/2009/10/15/tn-chenai-in-cities-you-really-hate.html
read more...
வெறுப்பான நகர்கள் பட்டியலில் சென்னை!!SocialTwist Tell-a-Friend

மைசூர் அரசர்கள்!

0 comments
ஒரு மாலை நேரச் சொற்பொழிவுக்காக பெங்களூரிலிருந்து வந்திருந்தார் இளைஞர் விக்ரம் சம்பத். வயது 30. பிலானி இஞ்சினீயரிங் இன்ஸ்டிட்யூட்டில் மின் இயல்- மின்னணு இயல் துறையில் பயிற்சி பெற்று, மும்பையில் எம்.பி.ஏ., நிதி நிர்வாக ஆராய்ச்சித் துறையில் தேறி, கணிதத் துறையிலும் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றவர். தற்போது ஒரு கணினி நிறுவனத்தில் உயர் பதவி வகித்து வருகிறார்.

இத்தனை துறைகளிலும் தேறியிருந்தாலும் அவருடைய ஆர்வம் எல்லாம் சரித்திரம், கலாசாரம், இசை, கவிதை, இதழியல் என்று பரந்து விரிந்திருக்கிறது.

அவர் எழுதிய மைசூர் அரச வம்சத்தைச் சேர்ந்த ஒடையார்கள் பற்றிய ஆங்கில நூலை சென்ற ஆண்டு கர்நாடக ஆளுநர் பெங்களூரில் வெளியிட்ட பிறகு, தொடர்ந்து லண்டன், சிகாகோ, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம், கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை என்று பல இடங்களில் அந்தப் புத்தக வெளியீட்டு விழாக்கள் நடந்தன. மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, எல்.கே. அத்வானி, கன்னட நாவலாசிரியர் யு.ஆர்.அனந்தமூர்த்தி, வைஜயந்திமாலா பாலி, ராமச்சந்திர குஹா, சுதா மூர்த்தி என்று பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த நூலை வியந்து ரசித்து விக்ரம் சம்பத்தைப் பாராட்டியிருக்கிறார்கள். 2008ஆம் ஆண்டில் வெளியான நாவல்-அல்லாத படைப்புகளில் அதிக விற்பனை என்ற சாதனையைச் செய்த நூல்களில் இதுவும் ஒன்று.

ஒரு காலத்தில் மைசூரும் அதையடுத்த பகுதிகளும் மஹிஷாசுரன் என்ற அரக்கன் ஆட்சியின் கீழ் இருந்ததாம். அவனோடு பத்து நாட்கள் போர் புரிந்து துர்க்கா சாமுண்டீசுவரி அவனைக் கொன்றாளாம். மஹிஷூரு என்பதுதான் மருவி மைசூர் என்று ஆயிற்றாம்.

இந்தப் பகுதிக்கு 1399-ல் இரண்டு இளைஞர்கள் யாதுராயா, கிருஷ்ணராயா குஜராத்தில் உள்ள துவாரகையில் இருந்து குதிரையில் பயணம் செய்து வந்து சேர்ந்தார்களாம். தாங்கள்

பகவான் கிருஷ்ணரின் யதுகுலத் தோன்றல்கள் என்று கூறினார்களாம்.

"ஒடையா' என்றால் கன்னட மொழியில் எசமான் என்று அர்த்தம். அதாவது 33 கிராமங்களுக்கு அதிபதியாக இருக்க வேண்டும். அப்போதிருந்த அரசியல் குழப்பத்தினிடையே அங்கு ஆண்டுக்கொண்டிருந்த சாமராஜா மரணமடைந்தார். அவர் மகள் சிக்கதேவரசியைக் கடத்திக் கொண்டு போவதோடு, ஆட்சியையும் பிடிக்கப் போவதாக மாறநாயக்கன் என்பவன் அச்சுறுத்தினான். யதுராயனும் கிருஷ்ணராயனும் அவனை எதிர்த்துப் போராடி அவனைக் கொன்றனர். சாமராஜாவின் மனைவி, தன் மகள் சிக்கதேவரசியை யதுராயனுக்கு மணம் செய்து கொடுத்தான். இந்த 1399லிருந்து ஒடையார் ராஜ பரம்பரை தொடங்குகிறது.

சாமராஜ ஒடையார், திம்மராஜ ஒடையார், இரண்டாவது சாமராஜ ஒடையார் என்று தொடங்கி ராஜ ஒடையார், நரசராஜ ஒடையார், சிக்கதேவராஜ ஒடையார் என்று தொடர்ந்து பிறகு ஹைதர் அலி-திப்பு சுல்தான் இடைப்பட்டு, மறுபடியும் மும்மடி கிருஷ்ணராஜ ஒடையார் (இவரை மகாத்மா காந்தி "ராஜரிஷி' என்று குறிப்பிட்டிருக்கிறார்) ஜெயசாமராஜ ஒடையார் என்று மைசூர் ஒடையார் ராஜ வம்ச பரம்பரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

ஒடையார்களின் ஆட்சியின்போது கலையும் கலாசாரமும் முக்கிய இடம் பெற்றனவாம். மும்மடி கிருஷ்ணராஜ ஒடையார் ஏராளமான ஜாவளிகள் இயற்றியிருக்கிறார். அவை யாவும் தியாகம் அல்லது விட்டுவிடுதல் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவருடைய பக்திப் பாடல்கள் "அனுபவ பஞ்சரத்னம்' என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கின்றனவாம். கிருஷ்ணராஜ ஒடையார் ஓவியம் வரைவதிலும் சிறந்தவராம். ஸ்ரீதத்வநிதி, ஸ்வர சூடாமணி என்ற தமது இரண்டு தொகுப்புகளுக்கு அவரே ஓவியம் வரைந்தாராம். தென்னிந்திய இசைத் தொடர்பு ஓவியத்தில், சுவரங்களுக்கும் ராகங்களுக்கும் தாளங்களுக்கும் மனித வடிவத்தில் ஓவியங்கள் வரைந்து அவற்றைப் போற்றியதில் இவையே முதல் என்கிறார்கள்.

இசை என்று எடுத்துக் கொண்டால், மூன்றாம் கிருஷ்ணராஜ ஒடையார் காலத்தில்தான் வீணை அனந்த சுப்பையா, வீணை சாம்பய்யா, வீணை தொட்ட சுப்பராயா, தியாகராஜரின் சீடர் லால்குடி ராமய்யர், சியாமா சாஸ்திரிகளின் சீடர் அப்புக்குட்டன் நட்டுவனார், மைசூர் சதாசிவராவ் போன்றோர் ஆஸ்தான வித்துவான்களாக இருந்தனர்.

"ராஜரிஷி' நால்வாடி கிருஷ்ணராஜ ஒடையாரின் அரண்மனையில் மைசூர் வாசுதேவாச்சார், பிடாரம் கிருஷ்ணப்பா, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் போன்றோர் வித்துவான்களாக இருந்தனர்.

தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியம் போலவே மைசூர் வீணையும் மைசூர் ஓவியமும் தனிச் சிறப்பு வாய்ந்தவை.

இவர்கள் காலத்தில் இருந்த திவான்கள் கர்நாடகப் பகுதியை எல்லா வகைகளிலும் மிகுந்த முன்னேற்றமடைந்த நகரமாக அமைத்தார்கள். ரயில் போக்குவரத்து, மின்சாரம்.. எனப் பல விஷயங்களிலும் வளர்ச்சி அடைந்தார்கள். 1881லேயே ஜனநாயகத்துக்கு முன்னோடியாக பிரஜா பிரதிநி சபா ஏற்படுத்தினார்கள் என்பன புதிய செய்திகளாய் இருந்தன.

கர்நாடக இசையில் மிகுந்த ஆர்வமுள்ள விக்ரம் சம்பத் பாம்பே ஜெயஸ்ரீ, ஜெயந்தி குமரேஷ் ஆகியோரிடம் இசை பயின்று வருகிறார்.




பகவத் கீதை குறித்த ஆங்கிலச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதில் சுவாமி சின்மயானந்தா முதல் பலரும் தத்தம் முத்திரையைப் பதித்து வருகிறார்கள். தமிழில் சொல்லும்போது வரும் கூட்டத்தைப் போலவே ஆங்கிலச் சொற்பொழிவுகளுக்கும் நிறையப் பேர் வருகிறார்கள். ஊன்றிக் கவனித்தால், ஆங்கில உரையைக் கேட்க நிறைய இளைஞர்கள் வருகிறார்கள் என்று தெரிகிறது.

உலகின் பல பகுதிகளுக்கும் சென்று சொற்பொழிவாற்றி வரும் சுவாமி பூமானந்த தீர்த்தர் நிகழ்த்திய மூன்று நாள் நிகழ்ச்சியின் முதல் நாள் உரையைக் கேட்டபோது,

அவருடைய எளிமையான, ஆனால் ஆவேசமான விறுவிறுப்பான ஆங்கிலமே அவருக்கு ரசிகர்களை உருவாக்கியிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பகவத் கீதையில் நிர்வாகம், போர், மனித சுபாவம் இவைதான் பேசப்படுகின்றனவே தவிர மதம் பற்றிய பேச்சு இல்லை என்றார் சுவாமிஜி. (அப்படியா!)




ஊத்துக்காடு வேங்கட கவி இசை விழா, ஆலாபனா அறக்கட்டளை இசை நடன விழா, டாக்டர் எஸ்.ராமநாதன் நினைவு "சிவன் மூவர்' நடன நிகழ்ச்சி, பாலகர்னாம்ருதம் இசை நிகழ்ச்சிகள் என்று அக்கம்பக்கம் முழுக்க ஏராளமான நிகழ்ச்சிகள்! சீஸன் சாதாரணமாக நவம்பரில்தான் சூடு பிடிக்கும். செப்டம்பரிலேயே இத்தனை விழாக்கள் தொடங்கிவிட்டதால், அக்டோபரிலும் சில சின்ன சபாக்கள் தொடர் இசை நிகழ்ச்சிகளை அறிவித்துவிட்டார்கள்!

ஓ.எஸ்.அருண் நடத்திய "ஆலாபனா' இசை விழாவில் வந்து பாடிய இளைஞர் துஷார், படு உஷார் பார்ட்டி ஒரு மணி நேரத்திலேயே அத்தனை ரசிகர்களையும் தம் குரலாலும் இசையாலும் வளைத்துப் போட்டதோடு, பாடி முடித்ததும் எல்லோருக்கும் நன்றி சொன்னார். இந்தக் கேரள இளைஞரை டிசம்பர் சீஸனில் எந்த சபாவாவது அழைத்து குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது கொடுக்க வேண்டும் என்பதுதான் ஒருமித்த கருத்து! நீலகண்ட சிவன், ராமசாமி சிவன், பாபநாசம் சிவன் பாடல்களை மட்டுமே வைத்து, தன் நடன நிகழ்ச்சியை வழங்கினார் நர்த்தகி நடராஜ். ஜதிகளாகட்டும், சஞ்சாரிகளாகட்டும், அபிநயமாகட்டும் எதையும் மிகை இல்லாமல் செய்தார் நர்த்தகி.


Thanks
http://dinamani.com/
read more...
மைசூர் அரசர்கள்!SocialTwist Tell-a-Friend

அன்னபூரணியிடம் மோனலிசா புன்னகை!

0 comments
மாமன்னன் இரண்டாம் ராஜராஜ சோழனால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பழமை வாய்ந்தது கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம். தஞ்சாவூருக்கு முன் சோழர்களின் தலைநகரமாக திகழ்ந்த பழையாறையின் ஒரு பகுதியில்தான் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

நூறு கோயில்களுக்குச் சென்று அதன் சிற்பங்களின் பேரழகைப் பார்த்து ரசித்த அனுபவத்தை, இந்த ஒரே கோயிலுக்குள் கொண்டு வந்து பிரமிக்க வைத்திருக்கிறார்கள் சோழர்கால சிற்பிகள். பல்லாயிரக்கணக்கான சிற்பங்களை செதுக்கி வைத்திருக்கிறார்கள். முப்புரம் எரித்த திரிபுராந்தகன் கதையை நம் கண் முன் நிறுத்துகிறது ஒரு சிற்பம். கஜமுக அசுரனை வதம் செய்யும் ஈஸ்வரனை கஜசம்ஹார மூர்த்தி எனும் இச்சிற்பம் அற்புதமான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. யானையின் மத்தகத்தில் ஒரு காலை வைத்து நிற்கும் இந்த ஈஸ்வரன் சூலத்தை தலைகீழாக வைத்து யானையை வதம் செய்கிறார். உரிக்கப்பட்ட தோல்களே இச்சிற்பத்திற்கு திருவாட்சியாக அமைகிறது. ஈஸ்வரனின் உக்கிரமான பார்வையைப் பார்த்து பயந்த கோலத்தில் ஒடுங்கி நிற்கிறாள் பார்வதி. யானையின் கால்கள் கீழே இரண்டும், மேலே இரண்டுமாக தொங்குகின்றன. கஜசம்காரமூர்த்தி எனும் இச்சிலையை கரி உரித்த சிவன் என்று தேவார பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உருவங்களை அழகிய முறையில் வடிவமைக்கப்பட்ட சிறந்த கட்டமைப்பு சிற்பமாக சிற்பிகளால் கருதப்படுகிறது. தாராசுரக்கோயிலில் எங்கோ ஒரு மூலையில் தரையில் கிடந்த இச்சிற்பத்தை தற்போது தஞ்சை அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வருகின்றனர்.

இதுபோல் இறைவனின் அடி முடி தேட வைக்கும் லிங்கோத்பவர் சிற்பம் போன்றவை நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. ரத மண்டபத் தூண்களில் மகாபாரதம், ராமாயணம் மற்றும் சிவபுராணம், பரத நாட்டிய கர்ணங்கள், ரதி மன்மதன் கதைகள் என்று எண்ணிலடங்கா கதைகளைச் சொல்கின்றன இச்சிற்பங்கள். தூண்களின் நான்கு பட்டைகளிலும் சிற்றோவியங்கள்போல் ஆயிரக்கணக் கான புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.

கோயிலின் நுழைவாயினுள் செல்வதற்கு முன்பே பலிபீடத்திற்கு ஏறும் ஏழு கருங்கற்படிகளை, சரிகமபதநி எனும் ஏழு சுர படிகளாக வடிவமைத் துள்ளது அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. கீழ்வாயிலுள் நுழைந்தால் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கொடிமரம். கோயிலின் கூம்பிய விமானத் தோற்றம், அதற்குக் கீழ் உள்ள மண்டபமும், இரு புறமும் யானைகளும், குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைக்கப்பட்ட இக்கோயிலை சிற்பக்கலையின் சிகரம் என்றே சொல்லலாம்.

இங்குள்ள அன்னபூரணி, கண்ணப்ப நாயனார் சிற்பங்கள் வெளிநாட்டு பயணிகளை வியப்பூட்டும் சிற்பங்களாகும். முன்மண்டபத்தைத் தாண்டி முகவாயில் தோன்றும் அன்னபூரணி சிற்பம் வெளிநாட்டு பயணிகளை அதிலும் குறிப்பாக பிரான்சு நாட்டு பயணிகளை கவர்ந்து இழுக்கும் சிற்பமாகும். புன் முறுவல் சிறப்போடு திகழும் இச் சிற்பம், தற்போது பிரான்ஸ் நாட்டின் அருங்காட்சியகத்தில் உள்ள லியனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மோனலிசா எனும் ஓவியத்தில் தோன்றும் புன்னகைக்கு இணை யானது என்கின்றனர்.

சிவத்தொண்டர்களான அதிபத்தர், அமர்நீதியார், இயற்பகையார், இசை ஞானியார், ஏனாதி நாயனார் கண்ணப்பர், கழற்சிங்கர் போன்ற 63 நாயன்மார்களின் புடைப்புச் சிற்பங் களை, கோயிலைச் சுற்றி ஒரு முறை வலம் வந்தால் அனைத்தையும் பார்த்துவிடலாம். இதுபோல் 63 நாயன்மார்களின் புடைப்பு கற்சிற்பங்கள் வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்புடையதாகும்.

பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பயணிகள் ஆண்டிற்கு ஒரு லட்சத்திற்கு மேல் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கல்வெட்டுகள், நாட்டிய கர்ண முத்திரைகள், ராமாயண மகாபாரத காவியங்கள் மற்றும் சிவபுராணக் கதைகள் போன்ற 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொத்துக்கொத்தான சிற்பங்கள் கொண்ட பெருமைமிகு இவ்வாலயத்தை சிற்பங்களின் கலைக்கூடம் எனலாம்.

Thanks
dinamani.com
read more...
அன்னபூரணியிடம் மோனலிசா புன்னகை!SocialTwist Tell-a-Friend

பசும்பொன் பல்கலை கழகம்

0 comments
பசும்பொன் பல்கலை கழகம் .....மனை போடும் விழா ........ புகைப்படங்கள்
























































read more...
பசும்பொன் பல்கலை கழகம்SocialTwist Tell-a-Friend

எதிரியின் நண்பன் எனக்கும் நண்பன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இது - வேல்ஸிலிருந்து அருஷ்

0 comments
இலங்கைக்கும் மேற்குலகத்திற்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் நேரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையை எட்டியுள்ளன. கடந்த வாரம் இலங்கை தொடர்பாக அனைத்துலக மட்டத்தில் பல இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பல முக்கிய அதிகாரிகளும் இலங்கைக்கு அவசர விஜயங்களை மேற்கொண்டிருந்தனர். READ MORE...
read more...
எதிரியின் நண்பன் எனக்கும் நண்பன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இது - வேல்ஸிலிருந்து அருஷ்SocialTwist Tell-a-Friend

சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - தென்செய்தி

0 comments
ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் தடுமாற்றத்துக்கு இந்திய பெருமுதலாளிகளின் தலையீடே காரணமாகும் எனத் தமிழ்நெட்டின் கொழும்பு செய்தியாளர் கூறியிருக்கிறார். ஏற்கனவே முதலமைச்சர் கருணா நிதியின் குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளில் மிகப்பெரிய தொழில் குடும்பமாக வளர்ந்துள்ளனர். READ MORE...
read more...
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - தென்செய்திSocialTwist Tell-a-Friend

Collectors meet up

0 comments

Collectors meet up -தேவர் குருபூஜை

ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்கும் தென்மாவட்ட வாகனங்களுக்கான வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை,தேனி,திண்டுக்கல்: மானாமதுரை,பார்த்திபனூர், அபிராமம் வழியாக வந்து, பசும்பொன், கமுதி, கண்ணாபட்டி சந்திப்பு, கிளாமரத்துப்பட்டி, மண்டபசாலை, அருப்புக்கோட்டை வழியாக திரும்ப வேண்டும்.

திருச்சி,தஞ்சாவூர்,புதுக்கோட்டை, சிவகங்கை: மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக வந்து கோட்டைமேடு, நகரத்தார்குறிச்சி, அபிராமம் வழியாக பார்த்திபனூர் வந்து வந்த வழியில் திரும்ப வேண்டும். சாத்தூர்,ராஜபாளையம்,ஸ்ரீ.வி., சிவகாசி, விருதுநகர், திருநெல்வேலி: அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியாபட்டி, மண்பசாலை, கானாவிலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக வந்து பசும்பொன் வந்து வந்த வழியில் திரும்ப வேண்டும். தூத்துக்குடி: சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி வழியாக வந்து வந்த வழியில் திரும்ப வேண்டும். திருச்சுழி: கல்லூரணி, கானாவிலக்கு, கிளாமரத்துப்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, வந்த வழியாக திரும்ப வேண்டும்

முத்துராமலிங்கபுரம்புத்தூர், மண்டலமாணிக்கம் வழியாக செல்ல தடை) நரிக்குடி: கல்லூரி வீரசோழன் விலக்கு, பிடாரிசேரி, பார்த்திபனூர், அபிராமம் வழியாக வந்து கோட்டைமேடு, நகரத்தார்குறிச்சி, அபிராமம், பார்த்திபனூர் வந்து வந்த வழியில் திரும்ப வேண்டும்.

இது தவிர இடர்பாடுகள் குறித்து முறையீடுகள் இருப்பின் புகார் தெரிவிக்க பிரத்யேக எண்கள் தரப்பட்டுள்ளன.

ராமநாதபுரம்(04567-230 056, 221 349, 231 350, 232 111),

சிவகங்கை(04575-240 391,241 455, 241 485, 240 307,240 427),

விருதுநகர்(04562-252 600,252 500,252 300, 252 011),

மதுரை(0452-253 2501, 2532 290, 2530 925, 2744 197, 2652 278),

தூத்துக்குடி(0461-2340 600, 2320 050,2340 200, 2340 650),

திருநெல்வேலி(0462-2501 222, 2577 655, 2579 011, 2579 055),

புதுக்கோட்டை(04322-221 658, 221 690, 265 673, 266 243),

தேனி(04546-251 466, 253 676, 253 999, 253 101) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


read more...
Collectors meet upSocialTwist Tell-a-Friend

Oct 4 , Maduraiyil sivaji silai thirakkapattathu

0 comments
Oct 4, மதுரைல நம்ம சிவாஜி சிலை திறக்க பட்டது .
கமலதாசன் அழகிரி நு பெரிய பெரிய தலைக்கலாம் வந்தாங்க மதுரைல ராஜாமுத்தையா மன்றம் பக்கத்துல திறதாங்க.

பிரபு நன்றி கூறினாறு
என்ன போன்றவர்களுக்கு என்ன வருத்தம்னா ஒரு எடத்துல கூட பசும்பொன் அய்யா போட்டோ வோ அவர பத்தி பேசவோ இல்ல .
read more...
Oct 4 , Maduraiyil sivaji silai thirakkapattathuSocialTwist Tell-a-Friend

டால்பின் - இந்தியாவின் தேசிய நீர் விலங்காக அறிவிப்பு

0 comments
டெல்லி: இந்தியாவின் தேசிய நீர் விலங்காக டால்பின் அறிவிக்கப்பட்டுள்ளது. அரிதாகி வரும் இந்த விலங்கினத்தைக் காப்பாற்றும் நோக்கில், இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், தேசிய விலங்காக புலியும், தேசியப் பறவையாக மயிலும் உள்ளதைப் போல, டால்பின் தேசிய நீர் விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆறுகள், குறிப்பாக கங்கையின் ஆரோக்கியத்திற்கு டால்பின்களின் சேவை மிகப் பெரியது.இதுதொடர்பான முடிவு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய கங்கை ஆற்றுப் படுகை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.டால்பினை தேசிய நீர் விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பீகார் முதல்வர் நிதீஷ் குமார்தான் முன்வைத்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது என்றார்
நன்றி http://www.tamilveli.com/v2.0/index-new.php?pageNo=13
read more...
டால்பின் - இந்தியாவின் தேசிய நீர் விலங்காக அறிவிப்புSocialTwist Tell-a-Friend

மதுரையில் தேவர் சிலை அகற்றம் - தடியடி

2 comments
மதுரை: மதுரை யில், வைக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் சிலையை போலீஸார் அகற்ற முயன்றதை எதிர்த்து சிலர் வன்முறையில் இறங்கினர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை, காமராசர் சாலையில், கொண்டித் தொழு சந்திப்பு என்ற இடத்தில் ஒரு தேவர் சிலை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு காவல்துறையின் அனுமதி பெறப்படவில்லை.இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்து வந்த போலீஸார், தேவர் சிலையை அகற்ற முயன்றனர். இதையடுத்து அங்கு திரண்ட சிலர் சிலையை அகற்றக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர்.மேலும் போலீஸார் மீது கல்வீச்சிலும் இறங்கினர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்து விரட்டினர். போலீஸ் தடியடியில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. கலைந்து சென்ற கும்பல் அந்தப் பகுதியில் தொடர்ந்து நின்றதார் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
நன்றி http://thatstamil.oneindia.in/news/2009/10/05/05-violence-in-madurai-against-removal-of-thevar.html
read more...
மதுரையில் தேவர் சிலை அகற்றம் - தடியடிSocialTwist Tell-a-Friend
0 comments

பசும்பொன் நுண்கலைக் கழகம்மூவேந்தர்கள் விழா அழைப்பிதழ்!
மாமன்னன் பூலித்தேவன் பிறந்த நாள் விழா!

மாமன்னன் ராஜராஜன் சதயவிழா!

மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு நாள் விழா!
நாள்:04.10.2009,
மாலை 6:00 மணி
இடம்: பசும்பொன் தேவர் மண்டபம்.
158/100, அபிபுல்லா சாலை, தி.நகர், சென்னை -
தலைமை: திரு T.T.துரைராஜ் கண்டியர்.BSc.,FCA.,தலைவர், பசும்பொன் நுண்கலைக்கழகம்.
முன்னிலை:திரு Dr. M.ராஜகோபால், M.S.(Ortho)(D.Ortho),தலைவர், பசும்பொன் அறக்கட்டளை.
திரு S.P.சுப்ரமணியன், M.A.,M.P.Ed.,செயலாளர், பசும்பொன் அறக்கட்டளை.
திரு. K.P.M.வேலுத்தேவர்,பொருளாளர், பசும்பொன் அறக்கட்டளை.
வரவேற்புரை:திரு. S. பெரியசாமி பாண்டியன்,
சிறப்பு விருந்தினர்: திரு. சு.திருநாவுக்கரசர், M.A.,B.L.,MP.
சிறப்புரை: திரு. காவ்யா சண்முகசுந்தரம்,
மன்னன் பூலித்தேவன் பற்றி.
திரு. முதுநிலை முனைவர். இரா. இளங்குமரனார்,
மாமன்னன் ராஜராஜன் பற்றி.
திரு M.S.கருணாநிதி,
மாமன்னர் மருதுபாண்டியர் பற்றிசிறப்புரையாற்றுவார்கள்.
நன்றியுரை:திரு M.கொம்பையா பாண்டியன்.
அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்
தங்களை அன்புடன் எதிர்நோக்கும்பசும்பொன் நுண்கலைக்கழகம் மற்றும் பசும்பொன் அறக்கட்டளை.நிர்வாகிகள், அறங்கவலர்கள், துணைத்தலைவர்கள், இணைச் செயலாளர்கள்,செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உடன் தேர்ந்த அறங்காவலர்கள்.
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
வடசேரி (அகமுடையோர்) பொது நல சங்க ஆண்டு விழா

சிறப்பு விருந்தினர்: மருத்துவர்.N. சேதுராமன்,M.S.M.Ch (uro) MNAMS (uro) FICS அவர்கள்

நாள்: 04.10.2009, காலை 9.00 மணி
இடம்: அறிஞர் அண்ணா சமுதாயக் கூடம், உதயம் திரையரங்கம் எதிர்புறம், அசோக் நகர், சென்னை.
read more...
SocialTwist Tell-a-Friend

நானோ டெக்னாலஜியின் மூலம் மனிதன் மரணமடையாத நிலையை அடைய முடியும்

0 comments
இன்னும் 20 ஆண்டுகளில், நானோ டெக்னாலஜியின் மூலம் மனிதன் மரணமடையாத நிலையை அடைய முடியும், என பிரிட்டன் விஞ் ஞானி தெரிவித்துள்ளார்.





தற்போது எந்த துறையை எடுத்தாலும், நானோ டெக்னாலஜி பற்றி பேசப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகள் படைக்கப்படுகின்றன.




இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது உடலில் பழுதடையும் பாகத்தை மாற்றியமைக்க செய்ய முடியும். இதன் மூலம் நமக்கு வயோதிகம் ஏற்படுவதை தடுக்கவும் முடியும்.




முடிவில் மரணமே ஏற்படாமல் செய்யவும் முடியும், என்கிறார் பிரிட்டன் விஞ்ஞானி ரே குர்ஸ்வீல்.ரத்தத்தில் உள்ள செல்களின் பரப்பளவு கொண்ட "நானோ போட்' என்ற பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.




இந்த நானோபோட்டை பயன்படுத்தி கட்டியை அழிக்கலாம்; உடம்பில் துளையிடாமலேயே அறுவை சிகிச்சை செய்யலாம்; ரத்தம் உறைவதை தடுக்கலாம்.





இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் மரணமே ஏற்படாதவாறு செய்ய முடியும். இந்த தொழில்நுட்பத்தினால் மூளையின் திறனையும் அதிகரிக்க செய்ய முடியும். ஒரு நிமிடத்தில் ஒரு புத்தகத்தை முழுவதுமாக படிக்கவும் முடியும்.




நானோ தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கை கண்களும், செயற்கை உறுப்புகளும் கூட உருவாக்க முடியும், என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இவ்வாறு ரே குர்ஸ்வீல் தெரிவித்துள்ளார்

Thanks
http://today-world-news-update.blogspot.com/2009/10/blog-post_6227.html
read more...
நானோ டெக்னாலஜியின் மூலம் மனிதன் மரணமடையாத நிலையை அடைய முடியும்SocialTwist Tell-a-Friend

வைரஸ் தாக்குதலை தடுக்க டிஜிட்டல் எறும்புகள்

0 comments
கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வைரஸ் தாக்குதல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தி அழிக்க, புதிதாக, டிஜிட்டல் எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன.என்ன வியப்பாக இருக்கிறதா, உண்மை தான். கம்ப்யூட்டர் உலகில் எதுவும் சாத்தியம் தான்.





இதுகுறித்து, கணினி அறிவியல் துறை பேராசிரியர் எரின் பல்ப் கூறியதாவது:





சாதாரணமாக, ஒரு இடத்தில் உணவுப் பொருட்களை கண்டறிந்தால், அந்த இடத்தில், எறும்புகள் அனைத்தும், கூட்டாக ஒன்று சேர்ந்து விடும். அதேபோல், ஆபத்து என்றாலும், அந்த இடத்தில் கூட்டமாக சேர்ந்து, தங்கள் எதிரியை அழித்துவிடும் இயல்பு கொண்டது எறும்புகள்.




இந்த டெக்னிக்கை பாதுகாப்புக்காக, கம்ப் யூட்டர் துறையிலும் பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கருதினர்.அந்த எண்ணத்தின் அடிப்படையில் உருவானது தான், டிஜிட்டல் எறும்புகள்.கம்ப்யூட்டர் நெட் வொர்க்கில் ஏற்படும், அச்சுறுத்தல்களை சமாளிக்க, பல்வேறு வகையான டிஜிட்டல் எறும்புகள் உருவாக்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.





இதுகுறித்து, விஞ் ஞானி கிளென் பிங்க் கூறுகையில்,





"டிஜிட்டல் எறும்புகள், கம்ப்யூட்டர் நெட் வொர்க்கில் நகர்ந்து செல்லும் போது, டிஜிட்டல் அடையாளங் களை விட்டு செல்லும். இந்த டிஜிட்டல் அடையாளங்கள் மூலம், எறும்புகள் ஒன்றன் பின், மற்றொன்று என பின்பற்றி செல்லும்.




"எறும்புகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் அமைப்பு, வழக்கமான பாதுகாப்பு முறையை விட வேகமாக செயல்படும். இவை, புதிய தொற்றுக்களை கண்டறியும் வகையில் முறையான இடைவெளியில், அடிக்கடி மேம்படுத்தப்படும்."இது கம்ப்யூட்டரில் ஏற்படும் தொற்றுக்களை அழிக்கும் வகையில், புரோக்கிராம் செய்யப் பட்டது' என்றார்

Thanks
http://today-world-news-update.blogspot.com/2009/10/blog-post_2335.html
read more...
வைரஸ் தாக்குதலை தடுக்க டிஜிட்டல் எறும்புகள்SocialTwist Tell-a-Friend

டெல்லியை பிடிக்க 2 நாள் போதும் - சீனாவின் மிரட்டல் இமெயில்

0 comments
டெல்லி: டெல்லியை கைப்பற்ற தங்களுக்கு இரண்டு நாங்கள் தான் ஆகும் என சீன வெப்சைட் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கும் இமெயிலை அனுப்பியுள்ளது அந்த தளம்.

சீனா கடந்த 1ம் தேதி தனது 60வது தேசிய தினத்தை கொண்டாடியது. அப்போது தனது ராணுவ பலத்தையும், தங்களது வளர்ச்சியையும் உலகிற்கு காட்டியது.

ஆனால், அதே நேரத்தில் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுப்பதில்லை. மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கிகள் அருணாசல பிரதேசத்துக்கு நிதி உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும், இந்தியாவுடனான எல்லைக்கோடான மெக் மோகன் கோட்டை தாண்டி பல முறை அத்துமீறல் செய்து வருகிறது.

இதையடுத்து தற்போது இந்தியா, சீனா எல்லை பகுதி பதற்றம் நிறைந்தவையாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது அருணாச்சல பிரேதசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு சில மிரட்டல் இமெயில் வந்துள்ளது. அதில் சில வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்றில் அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொன்றில் டெல்லி மீது ஒரு வட்டம் போடப்பட்டுள்ளது. அதன் அருகே இந்த இடத்தை சீன ராணுவம் பிடிக்க இரண்டு நாட்கள் தான் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது.

இவை இரண்டும் ஒரு சீன இணையதளத்தில் இருந்து தான் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ஹிமாலயன் ஹாலிடேஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் டேரிங் வாங்கே கூறுகையில்,

அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்கள் அனைத்துக்கும் இது போன்ற மிரட்டல் இமெயில் வருகிறது. எங்களுக்கு சில இமெயில்கள் வந்துள்ளது. இது அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விஷயத்தை மத்திய அரசு சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. இதன்மூலம் அருணாச்சலம் இந்தியா வின் ஒரு பகுதி என்பதை உறுதியாக தெரிவிக்க வேண்டும். அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

Thanks
http://thatstamil.oneindia.in/news/2009/10/03/india-chinese-army-will-capture-delhi-in-2-days.html
read more...
டெல்லியை பிடிக்க 2 நாள் போதும் - சீனாவின் மிரட்டல் இமெயில்SocialTwist Tell-a-Friend

இந்தியாவுக்குள் ஊடுறுவிய ரூ. 150 கோடி சீன பட்டாசுகள்

0 comments
சென்னை: தீபாவளியையொட்டி ரூ. 150 கோடி மதிப்பிலான சீன பட்டாசுகள் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று நேற்றில்லாமல் கடந்த சில ஆண்டுளாகவே சீன பட்டாசுள் கள்ளச் சந்தை மூலம் இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளிப் பண்டிகையின்போது இந்தப் பட்டாசுகளையும் சேர்த்து விற்கிறார்கள்.

திருட்டுத்தனமாக இவற்றைக் கொண்டு வருவதற்குக் காரணம் - சீனப் பட்டாசுகளுக்கு இந்தியாவில் தடை இருப்பதால்தான்.

பட்டாசு என்றில்லை, சீனாவிலிருந்து பல தரமற்ற பொருட்கள் சந்தைக்குள் நுழைந்து விடாமல் இந்திய அரசு விழிப்புடன் இருந்து வருகிறது. இதன் காரணமாக இவை அனைத்துமே திருட்டுத்தனமாக இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில் தீபாவளிக்காக கொல்கத்தா வழியாக கிட்டத்தட்ட 20 கன்டெய்னர்களுக்கும் மேலாக (ஒவ்வொன்றிலும் தலா ரூ. 7 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகள்) கொண்டு வரப்பட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் கள்ளத்தனமாக சப்ளை ஆகியுள்ளதாம். இவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 150 கோடி இருக்கும். ஆனால் இந்தப் பட்டாசுகளின் மார்க்கெட் ரேட் ரூ. 600 கோடி அளவுக்கு இருக்கும் என்று பட்டாசு மொத்த டீலர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவற்றை நேபாள நாட்டு முகமூடியுடன் சீனர்கள் இந்தியாவுக்குள் தள்ளி விட்டு வருகின்றனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

'மோடஸ் ஆபரன்டி'

முதலில் சீனாவிலிருந்து நேபாள நாட்டு நிறுவனம் சார்பில் இந்தப் பட்டாசுகளை வாங்குகின்றனர். சீனாவிலிருந்து இந்த பட்டாசுகள், கொல்கத்தா மற்றும் ஹால்தியா துறைமுகங்களுக்கு வருகின்றன.

அங்கிருந்து சாலை மார்க்கமாக நேபாளத்திற்கு பட்டாசுகளை கன்டெய்னர்களில் எடுத்துச் செல்கின்றனர். அப்படி எடுத்துச் செல்லும்போது வழியிலேயே சில கன்டெய்னர்கள் 'காணாமல்' போய் விடுமாம்.

இப்படி காணாமல் போகும் கன்டெய்னர்களில் உள்ள பட்டாசுகள்தான் இந்தியாவுக்கான சப்ளையாகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் இவற்றை கொண்டு சென்று விற்கிறார்கள்.

கள்ளச்சந்தையில் சீனப் பட்டாசுகள் விற்பதை தமிழ்நாடு பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கமும் உறுதி செய்கிறது. இதுகுறித்து அந்த சங்கப் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், இதுதொடர்பாக பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்புக் கழகத்திடம் நாங்கள் தொடர்ந்து புகார் கொடுத்தபடிதான் உள்ளோம். பட்டாசுகள் புழக்கத்தை இவர்கள்தான் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்.

இந்தியாவுக்குள் ஊடுறுவுவதை பல வழிகளிலும் மேற்கொண்டு வருகிறது சீனா. காஷ்மீர் மூலமாக, இலங்கை மூலமாக, அருணாச்சல் பிரதேசம் மூலமாக, இப்போது பட்டாசுகள் மூலமாகவும் இந்தியாவுக்குள் அனலைக் கக்க வந்துள்ளது சீனா.

'டிராகனின்' இந்த ஊடுறுவலை எப்படி இந்தியா தடுக்கப் போகிறது?


Thanks
http://thatstamil.oneindia.in/news/2009/10/04/business-rs-150-cr-chinese-firecrackers.html
read more...
இந்தியாவுக்குள் ஊடுறுவிய ரூ. 150 கோடி சீன பட்டாசுகள்SocialTwist Tell-a-Friend

புதுக்கோட்டை சமஸ்தானம்

0 comments
புதுக்கோட்டை எனும் புகழ்மாடம் ( full article at - http://varungalamuthalvar.blogspot.com/2009/06/blog-post_23.html )
புதுக்கோட்டை
சமஸ்தானம் 1947 ஆகஸ்ட்டு 15 வரை பிரிட்டீஷ் ஆளுகைக்கு உட்படாத தனி நாடு. 1948 மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை இந்தியன் யூனியனில் இல்லாத தனி சுதந்திர நாடு. மன்னர் ஆளுகையின் கீழ் மகத்தான சாதனைகள் பல படைத்து வந்த தனி தேசம்.
- தனி ஆட்சி, தனி சட்டம், தனி நாணயம் -
ஆதிமனிதன்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.
திரைகடலோடி
திரவியம் தேடிய பண்டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் சீனம் முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு முத்து மணிவகைகள் பருத்தி பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும் பட்டு மெந்துகிலும் நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டட வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.)
இந்த நாணயங்களில் காணப்படும் ரோம நாட்டு மன்னர்களின் விவரம்,

மன்னர்கள்
அகஸ்டஸ் சீசர் (கி.மு 29 - கி.பி 14)
டைபீரியஸ் சீசர் (கி.பி 14 - கி.பி 27)
நீரோ ட்ரூசஸ்(கி.மு 38 - கி.பி 9)
அந்தோனியா(ட்ரூசஸ் மனைவி)
ஜெர்மானிக்கஸ்
அக்ரிபின்னா(ஜெர்மானிக்ஸ் மனைவி)
காலிகுலா(கி.பி 37 - 41)
டைபிரியஸ் க்ளாடியஸ் (கி.பி 41 - 54)
நீரோ (கி.பி 54 - 68)
வெஸ்பாசியானஸ்(கி.பி 69 - கிபி 79)
நல்ல
நிலையிலிருந்த நாணயங்கள் பெரும்பாலானவை தற்போது இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளன. மீதமுள்ளவை சென்னை புதுக்கோட்டை அருங்காட்சியங்களில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை
இன்று வரை தனி நாடாகவே இருந்திருக்கலாமோ? தமிழனுக்கென்று அந்த நாடாவது மிஞ்சி இருந்திருக்கும்.
read more...
புதுக்கோட்டை சமஸ்தானம்SocialTwist Tell-a-Friend

முற்றிலும் தொடர்பில்லாத மூன்று - கொள்கை, அரசியல் நிலைப்பாடு & தொழில் (i.e.வயிறு வளர்ப்பு).

0 comments
கெட்ட சேதி:
தஞ்சை
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட CIDC (Construction Industry Professional Training Council )அமைப்பு இலங்கை அரசின் கட்டுமான மற்றும் பொறியியல் அமைச்சகத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கின்றது. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள வன்னி மக்களை வன்னி நிலத்தில் மீண்டும் குடியமர வைக்க இலங்கை அரசால் தீட்டப்பட்டுள்ள நயவஞ்சகத் திட்டமான "வட்டக்கின் வசந்தம்' திட்டத்தில் CIDC இணைந்து செயல்படுவதற்கு அந்த ஒப்பந்தம் அனுமதி வழங்கியிருந்தது.

முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்கள் படும் துன்பங்களை நினைக்கும் போதெல்லாம் ரத்தக் கண்ணீர் வருகிறது என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் கவலை தெரிவித்திருந்த திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக்த்தின் வேந்தருமான திரு.வீரமணி, ஏனோ இலங்கை அரசுடன் தங்கள் பங்காளியான CIDC அமைப்பு கூட்டு சேர்ந்து கொண்டதை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை.

கொஞ்சம் நல்ல சேதி
:
திரு
. கலிபூங்குன்றன் அவர்களை தொடர்பு கொண்டு CIDC ஒப்பந்தம் குறித்து கேட்டோம். அப்போது அவர் :
full story at - http://tamilthavi.blogspot.com/2009/09/blog-post_2642.html
read more...
முற்றிலும் தொடர்பில்லாத மூன்று - கொள்கை, அரசியல் நிலைப்பாடு & தொழில் (i.e.வயிறு வளர்ப்பு).SocialTwist Tell-a-Friend

தமிழ் இனப்படுகொலையை வெளிக்கொண்டு வந்த அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் இந்தியாவிற்குள் நுழைவதற்குத் தடை

0 comments
[சனிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2009, 05:24 பி.ப ஈழம்] [நி.விசுவலிங்கம்]
http://puthinam.com/full.php?2a34ORC4b34YaHb34db6TsTeb033bBTc4d3jWmH3e0dlZQrCce03h4hH2ccdqc1t0e
புதுடில்லி தமிழ் மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக எலைன் ஷண்டர் இந்தியா வர இருந்தார். இதற்கான விசா அனுமதிப் பத்திரத்தை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் அவருக்கு ஏற்கனவே வழங்கி இருந்தது. கடந்த 11 ஆம் நாள் இந்தியாவிற்குப் பயணம் செய்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் கடந்த 10 ஆம் நாள் அவரது விசா அனுமதிப் பத்திரத்தை இந்தியத் தூதரகம் அவசர அவசரமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
மனித உரிமைகள் ஆர்வலரான ஷண்டர், இலங்கையில் அண்மையில் நடந்த போர் குறித்து கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வருபவர். சிறிலங்காவில் இனப்படுகொலையை அரசு மேற்கொண்டு வருகின்றது என்பது பற்றியே அவர் புதுடில்லியில் பேச இருந்தார் என்று கூறப்படுகின்றது. இதனை அடுத்தே அவர் நாட்டுக்குள் நுழைவதற்கு இந்தியா தடை விதித்தது.
புதுடில்லி தமிழ் மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்கு ஷண்டர் வரமுடியாத காரணத்தால் அவரது செய்தி பதிவு செய்யப்பட்டு கூட்டத்தில் ஒலிபரப்பப்பட்டது. அந்தச் செய்தியில், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அரசை ஹிட்லர் தலைமையிலான நாசிகளுக்கு அவர் ஒப்பிட்டுள்ளார். சிறிலங்கா அரசின் அடாவடித்தனங்களை கண்மூடித்தனமாக ஆதரித்து வருவதாக இந்திய அரசு மீதும் அவர் தாக்குதல் நடத்தி உள்ளார். "தமிழர்களை அழிவில் இருந்து காக்குமாறு இந்தியாவிடம் நாங்கள் கோருகின்றோம். கைதிகளை அடைத்து வைக்கும் முகாம்களில் இருந்து மக்களை விடுவியுங்கள்" என்று ஷண்டர் தனது செய்தியில் கூறினார்
read more...
தமிழ் இனப்படுகொலையை வெளிக்கொண்டு வந்த அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் இந்தியாவிற்குள் நுழைவதற்குத் தடைSocialTwist Tell-a-Friend

ACTOR Karthik

0 comments

Early life and background
Karthik was born in Chennai to R. Muthuraman, a popular Tamil actor.
He studied in the Famous St. Bede's School in Chennai then at New College, Chennai and got a Bachelors Degree in Arts.
[edit] Film career
Karthik was first introduced by Bharathiraja in the film Alaigal Oivathillai. He has acted in Tamil and Telugu films. He has received the Best New Face Award from the Tamil Nadu Government in 1980, the Kalaimamani Award and the Nandi Award for Abhinandana.
He has received the best actor for three consecutive times by Tamil Nadu government. He is popular with the audience for sense of humor and was involved with several small comedy scenes in most of his movies. His cameo in Mouna Ragam was very well received by the audience. During his later years, he formed a partnership with Goundamani in doing comedy scenes.
His pairing with Rambha was a hit with audience as the pair provided good hits in the nineties.
Karthik entered politics ahead of the 2006 Tamil Nadu Legislative Assembly election. He joined the All India Forward Bloc, and was appointed as the Secretary of the Tamil Nadu state unit of the party. He led the party during its electoral campaign On September 24, 2006.
He is currently making a comeback into tamil cinema with movies like Raavana and Maanja Velu.
[edit] Awards
Tamil Nadu Government - Recipient of Best New Face Award in 1980.
Tamil Nadu Government - Kalaimamani award (multiple years).
Nandi Award for Abhinandana.
The role played by Karthik as Manohar in Mouna Ragam is included in Roll of Honour of the Film and Television Institute of India (Pune) as one of the best supporting roles in a film.
[edit] Personal life
He is married to actress Ragini, heroine of Solai Kuyil. He then also married Ragini's younger sister. His son is also planning to be launched as hero in Tamil movies.
நன்றி விக்கிபீடியா
read more...
ACTOR KarthikSocialTwist Tell-a-Friend

அரியலூரில் நூற்றுக்கணக்கில் டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு!

0 comments

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை சுமார் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை என கருதப்படுகிறது.இதை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த புவியியல் விரிவுரையாளர் எம்.மு.ராம்குமார் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.அந்த குழுவில் பேராசிரியர் கு.அன்பரசு, விரிவுரையாளர் இரா.சுரேஷ் மற்றும் ஆய்வு மாணவர்கள் சுகந்தா, சதீஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இந்த குழுவினர் கடந்த 2006ம் ஆண்டில் இருந்து அரியலூருக்கு வடகிழக்கே ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் டைனோசர் முட்டைகளை சென்னை, திருச்சி நெடுஞ்சாலையில் அரியலூர் அருகே காவிரி நதியின் வடக்கு பகுதியில் உள்ள செந்துறை என்ற கிராமத்தில் கண்டுபிடித்துள்ளனர். இந்த முட்டைகள் மாமிச கார்னோசர் மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ சௌரபோட் டைனோசரின் முட்டைகள் என தெரியவந்துள்ளது. இதில் சைவமான சௌரபோட்ஸ் நீண்ட கழுத்தை கொண்டு, அதிக உயரமாக வளர கூடியவை.இங்கு கிடைத்த படிவங்களின் மூலம் இப்பகுதியில் ஒரு காலத்தில் டைசோனர்கள் பெருமளவில் இருந்திருக்கலாம் என தெரிகிறது. மேலும், இந்த முட்டைகள், சுமார் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை எனவும் தெரிகிறது.இதே பகுதியில் 1843ம் ஆண்டு ஒரு பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் 32 பெட்டிகள் நிறைய வித்தியாசமான கற்களை அகழ்ந்தெடுத்தார். அதுவும் டைனோசர் முட்டையின் படிவங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.இது குறித்து பெரியார் பல்கலைக்கழக புவியியல் பிரிவு விரிவுரையாளர் ராம்குமார் கூறுகையில்,டைனோசரின் கோள வடிவமான முட்டைகளை குவியல் குவியலாக கண்டெடுத்துள்ளோம். எலும்புத் துண்டுகள், அவை வாழ்ந்த காலத்தில் இருந்த நன்னீர் ஏரி, ஆற்றுப் பாதை ஆகியவற்றின் தடயங்களும் கிடைத்துள்ளன.ஒவ்வொரு குவியலிலும் குறைந்தது 9 முட்டைகள் வரை இருந்தன. முட்டைகள் சுமார் 13 முதல் 20 செமீ விட்டம் கொண்டதாக இருந்ததது. அந்த குவியல்கள் சுமார் 1.25 மீ நீளம் இருந்தது.மண்ணுக்குள் ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்படுவது இந்தியாவில் இது தான் முதல் முறை.நானும் எனது மாணவர்களும் கடந்த மாதம் 12ம் தேதி ஒரு சுனை வழியாக சென்று கொண்டிருந்த போது கோள வடிமான ஒன்று மண்ணில் இருந்து வித்தியாசமாக தெரிந்தது. அதை பார்த்ததும் நாங்கள் ஆச்சர்யமடைந்தோம்.நான் டைனோசர் முட்டைகளை அதற்கு முன்னதாக பார்த்திருந்ததால் அது டைனோசர் முட்டை தான் என்பதை உறுதி செய்தேன்.இதையடுத்து அப்பகுதியில் 2 சதுர கிமீ அளவுக்கு தோண்டி, ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். அப்போது ஏழு படுக்கைகளுக்கு அடியில் முட்டை குவியல்களை கண்டோம். தக்கான பீடபூமி பகுதியில் அந்த காலத்தில் இருந்த எரிமலைகள் வெடித்து சிதறியதால் தான் இவை அழிந்தன என சந்தேகப்படுகிறோம். ஏனென்றால் முட்டைகளுக்கு இடையே எரிமலை சாம்பல்கள் இருந்தன. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு என்றார்.இதையடுத்து அரியலூர் மாவட்டம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடிக்க இருக்கிறது. தற்போது இங்கு எடுக்கப்பட்ட முட்டைகளின் மாதிரிகள் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டு மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட உள்ளது.
read more...
அரியலூரில் நூற்றுக்கணக்கில் டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு!SocialTwist Tell-a-Friend