நானோ டெக்னாலஜியின் மூலம் மனிதன் மரணமடையாத நிலையை அடைய முடியும்

இன்னும் 20 ஆண்டுகளில், நானோ டெக்னாலஜியின் மூலம் மனிதன் மரணமடையாத நிலையை அடைய முடியும், என பிரிட்டன் விஞ் ஞானி தெரிவித்துள்ளார்.





தற்போது எந்த துறையை எடுத்தாலும், நானோ டெக்னாலஜி பற்றி பேசப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகள் படைக்கப்படுகின்றன.




இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது உடலில் பழுதடையும் பாகத்தை மாற்றியமைக்க செய்ய முடியும். இதன் மூலம் நமக்கு வயோதிகம் ஏற்படுவதை தடுக்கவும் முடியும்.




முடிவில் மரணமே ஏற்படாமல் செய்யவும் முடியும், என்கிறார் பிரிட்டன் விஞ்ஞானி ரே குர்ஸ்வீல்.ரத்தத்தில் உள்ள செல்களின் பரப்பளவு கொண்ட "நானோ போட்' என்ற பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.




இந்த நானோபோட்டை பயன்படுத்தி கட்டியை அழிக்கலாம்; உடம்பில் துளையிடாமலேயே அறுவை சிகிச்சை செய்யலாம்; ரத்தம் உறைவதை தடுக்கலாம்.





இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் மரணமே ஏற்படாதவாறு செய்ய முடியும். இந்த தொழில்நுட்பத்தினால் மூளையின் திறனையும் அதிகரிக்க செய்ய முடியும். ஒரு நிமிடத்தில் ஒரு புத்தகத்தை முழுவதுமாக படிக்கவும் முடியும்.




நானோ தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கை கண்களும், செயற்கை உறுப்புகளும் கூட உருவாக்க முடியும், என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இவ்வாறு ரே குர்ஸ்வீல் தெரிவித்துள்ளார்

Thanks
http://today-world-news-update.blogspot.com/2009/10/blog-post_6227.html
நானோ டெக்னாலஜியின் மூலம் மனிதன் மரணமடையாத நிலையை அடைய முடியும்SocialTwist Tell-a-Friend

No comments: