சென்னை: தீபாவளியையொட்டி ரூ. 150 கோடி மதிப்பிலான சீன பட்டாசுகள் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று நேற்றில்லாமல் கடந்த சில ஆண்டுளாகவே சீன பட்டாசுள் கள்ளச் சந்தை மூலம் இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளிப் பண்டிகையின்போது இந்தப் பட்டாசுகளையும் சேர்த்து விற்கிறார்கள்.
திருட்டுத்தனமாக இவற்றைக் கொண்டு வருவதற்குக் காரணம் - சீனப் பட்டாசுகளுக்கு இந்தியாவில் தடை இருப்பதால்தான்.
பட்டாசு என்றில்லை, சீனாவிலிருந்து பல தரமற்ற பொருட்கள் சந்தைக்குள் நுழைந்து விடாமல் இந்திய அரசு விழிப்புடன் இருந்து வருகிறது. இதன் காரணமாக இவை அனைத்துமே திருட்டுத்தனமாக இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டுள்ளது.
இந்த நிலையில் தீபாவளிக்காக கொல்கத்தா வழியாக கிட்டத்தட்ட 20 கன்டெய்னர்களுக்கும் மேலாக (ஒவ்வொன்றிலும் தலா ரூ. 7 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகள்) கொண்டு வரப்பட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் கள்ளத்தனமாக சப்ளை ஆகியுள்ளதாம். இவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 150 கோடி இருக்கும். ஆனால் இந்தப் பட்டாசுகளின் மார்க்கெட் ரேட் ரூ. 600 கோடி அளவுக்கு இருக்கும் என்று பட்டாசு மொத்த டீலர்கள் தெரிவிக்கிறார்கள்.
இவற்றை நேபாள நாட்டு முகமூடியுடன் சீனர்கள் இந்தியாவுக்குள் தள்ளி விட்டு வருகின்றனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
'மோடஸ் ஆபரன்டி'
முதலில் சீனாவிலிருந்து நேபாள நாட்டு நிறுவனம் சார்பில் இந்தப் பட்டாசுகளை வாங்குகின்றனர். சீனாவிலிருந்து இந்த பட்டாசுகள், கொல்கத்தா மற்றும் ஹால்தியா துறைமுகங்களுக்கு வருகின்றன.
அங்கிருந்து சாலை மார்க்கமாக நேபாளத்திற்கு பட்டாசுகளை கன்டெய்னர்களில் எடுத்துச் செல்கின்றனர். அப்படி எடுத்துச் செல்லும்போது வழியிலேயே சில கன்டெய்னர்கள் 'காணாமல்' போய் விடுமாம்.
இப்படி காணாமல் போகும் கன்டெய்னர்களில் உள்ள பட்டாசுகள்தான் இந்தியாவுக்கான சப்ளையாகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் இவற்றை கொண்டு சென்று விற்கிறார்கள்.
கள்ளச்சந்தையில் சீனப் பட்டாசுகள் விற்பதை தமிழ்நாடு பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கமும் உறுதி செய்கிறது. இதுகுறித்து அந்த சங்கப் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், இதுதொடர்பாக பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்புக் கழகத்திடம் நாங்கள் தொடர்ந்து புகார் கொடுத்தபடிதான் உள்ளோம். பட்டாசுகள் புழக்கத்தை இவர்கள்தான் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்.
இந்தியாவுக்குள் ஊடுறுவுவதை பல வழிகளிலும் மேற்கொண்டு வருகிறது சீனா. காஷ்மீர் மூலமாக, இலங்கை மூலமாக, அருணாச்சல் பிரதேசம் மூலமாக, இப்போது பட்டாசுகள் மூலமாகவும் இந்தியாவுக்குள் அனலைக் கக்க வந்துள்ளது சீனா.
'டிராகனின்' இந்த ஊடுறுவலை எப்படி இந்தியா தடுக்கப் போகிறது?
Thanks
http://thatstamil.oneindia.in/news/2009/10/04/business-rs-150-cr-chinese-firecrackers.html
இந்தியாவுக்குள் ஊடுறுவிய ரூ. 150 கோடி சீன பட்டாசுகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment