டெல்லி: டெல்லியை கைப்பற்ற தங்களுக்கு இரண்டு நாங்கள் தான் ஆகும் என சீன வெப்சைட் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கும் இமெயிலை அனுப்பியுள்ளது அந்த தளம்.
சீனா கடந்த 1ம் தேதி தனது 60வது தேசிய தினத்தை கொண்டாடியது. அப்போது தனது ராணுவ பலத்தையும், தங்களது வளர்ச்சியையும் உலகிற்கு காட்டியது.
ஆனால், அதே நேரத்தில் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுப்பதில்லை. மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கிகள் அருணாசல பிரதேசத்துக்கு நிதி உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும், இந்தியாவுடனான எல்லைக்கோடான மெக் மோகன் கோட்டை தாண்டி பல முறை அத்துமீறல் செய்து வருகிறது.
இதையடுத்து தற்போது இந்தியா, சீனா எல்லை பகுதி பதற்றம் நிறைந்தவையாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது அருணாச்சல பிரேதசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு சில மிரட்டல் இமெயில் வந்துள்ளது. அதில் சில வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்றில் அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொன்றில் டெல்லி மீது ஒரு வட்டம் போடப்பட்டுள்ளது. அதன் அருகே இந்த இடத்தை சீன ராணுவம் பிடிக்க இரண்டு நாட்கள் தான் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது.
இவை இரண்டும் ஒரு சீன இணையதளத்தில் இருந்து தான் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ஹிமாலயன் ஹாலிடேஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் டேரிங் வாங்கே கூறுகையில்,
அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்கள் அனைத்துக்கும் இது போன்ற மிரட்டல் இமெயில் வருகிறது. எங்களுக்கு சில இமெயில்கள் வந்துள்ளது. இது அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விஷயத்தை மத்திய அரசு சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. இதன்மூலம் அருணாச்சலம் இந்தியா வின் ஒரு பகுதி என்பதை உறுதியாக தெரிவிக்க வேண்டும். அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
Thanks
http://thatstamil.oneindia.in/news/2009/10/03/india-chinese-army-will-capture-delhi-in-2-days.html
டெல்லியை பிடிக்க 2 நாள் போதும் - சீனாவின் மிரட்டல் இமெயில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment