தமிழ் இனப்படுகொலையை வெளிக்கொண்டு வந்த அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் இந்தியாவிற்குள் நுழைவதற்குத் தடை

[சனிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2009, 05:24 பி.ப ஈழம்] [நி.விசுவலிங்கம்]
http://puthinam.com/full.php?2a34ORC4b34YaHb34db6TsTeb033bBTc4d3jWmH3e0dlZQrCce03h4hH2ccdqc1t0e
புதுடில்லி தமிழ் மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக எலைன் ஷண்டர் இந்தியா வர இருந்தார். இதற்கான விசா அனுமதிப் பத்திரத்தை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் அவருக்கு ஏற்கனவே வழங்கி இருந்தது. கடந்த 11 ஆம் நாள் இந்தியாவிற்குப் பயணம் செய்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் கடந்த 10 ஆம் நாள் அவரது விசா அனுமதிப் பத்திரத்தை இந்தியத் தூதரகம் அவசர அவசரமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
மனித உரிமைகள் ஆர்வலரான ஷண்டர், இலங்கையில் அண்மையில் நடந்த போர் குறித்து கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வருபவர். சிறிலங்காவில் இனப்படுகொலையை அரசு மேற்கொண்டு வருகின்றது என்பது பற்றியே அவர் புதுடில்லியில் பேச இருந்தார் என்று கூறப்படுகின்றது. இதனை அடுத்தே அவர் நாட்டுக்குள் நுழைவதற்கு இந்தியா தடை விதித்தது.
புதுடில்லி தமிழ் மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்கு ஷண்டர் வரமுடியாத காரணத்தால் அவரது செய்தி பதிவு செய்யப்பட்டு கூட்டத்தில் ஒலிபரப்பப்பட்டது. அந்தச் செய்தியில், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அரசை ஹிட்லர் தலைமையிலான நாசிகளுக்கு அவர் ஒப்பிட்டுள்ளார். சிறிலங்கா அரசின் அடாவடித்தனங்களை கண்மூடித்தனமாக ஆதரித்து வருவதாக இந்திய அரசு மீதும் அவர் தாக்குதல் நடத்தி உள்ளார். "தமிழர்களை அழிவில் இருந்து காக்குமாறு இந்தியாவிடம் நாங்கள் கோருகின்றோம். கைதிகளை அடைத்து வைக்கும் முகாம்களில் இருந்து மக்களை விடுவியுங்கள்" என்று ஷண்டர் தனது செய்தியில் கூறினார்
தமிழ் இனப்படுகொலையை வெளிக்கொண்டு வந்த அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் இந்தியாவிற்குள் நுழைவதற்குத் தடைSocialTwist Tell-a-Friend

No comments: