வெறுப்பான நகர்கள் பட்டியலில் சென்னை!!
லண்டன்: உலகின் மிகவும் வெறுக்கத்தக்க நகரங்கள் வரிசையில் சென்னையைச் சேர்த்துள்ளது லோன்லிபிளானட். மேலும், தமிழ் சினிமா நடிகர், நடிகையர் இந்தி கலைஞர்களுடன் ஒப்பிடுகையில், அந்த அளவுக்கு ஹாட்டானவர்கள் இல்லை என்றும் அது கூறுகிறது.
லோன்லிபிளானட், இதுதொடர்பாக சுற்றுலாப் பிரியர்களிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அந்தக் கருத்துக் கணிப்பின்படி, 9 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில், உலகிலேயே மிகவும் வெறுப்புக்குரிய நகரமாக அமெரிக்காவின் டெட்ராய்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரில் குற்றம் , மாசு, மோசமான அடிப்படைக் கட்டமைப்பு உள்ளதாம். இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு இது நகரம் அல்ல நரகம் என்று வர்ணித்துள்ளது.
அடுத்த இடத்தில் கானா நாட்டின் அக்ரா நகரமும், 3வது இடத்தில் சியோல் நகரமும் உள்ளன.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரத்திற்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
5வது இடத்தில் உள்ள நகரம் இங்கிலாந்தின் வால்வர்ஹாம்ப்டன். 6வது இடம் சான் சால்வடாருக்குப் போகிறது.
7வது இடம் சிங்காரச் சென்னைக்கு. மும்பையைப் போன்ற செழிப்போ, டெல்லியைப் போன்ற வரலாறோ, பெங்களூரைப் போன்ற பரபரப்போ இங்கு இல்லையாம். மேலும் இங்குள்ள நடிகர் , நடிகையரும் அவ்வளவு 'ஹாட்'டானவர்கள் இல்லையாம்.
8வது இடத்தில் தான்சானியாவின் அருஷா, 9வது இடத்தில் மெக்சிகோவின் செடுமல் ஆகிய நகரங்கள் உள்ளன
Thanks
http://thatstamil.oneindia.in/news/2009/10/15/tn-chenai-in-cities-you-really-hate.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment