ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திவரும் போராட் டத்திற்கு இந்தியப் அரசு ஆதரவு நிலை எடுத்ததற்கு இந்திய பெருமுதலாளிகளே முக்கியமான காரணமாவார்கள். இலங்கை யில் உள்ள இயற்கை வளங்களை இந்தியப் பெருமுதலாளிகள் சுரண்டு வதற்காக தனது நாட்டையே சிங்கள அரசு திறந்துவிட்டுள்ளது.
இலங்கையுடன் இந்தியத் தொழில் வணிக நிறுவனங்களின் உறவு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இலங்கையில் மேற்கொள்விருக்கும் திட்டங்கள் பலவற்றுக்கு இலங்கை அரசின் ஒப்புதலை இந்திய நிறுவனங்கள் பெற்றுவிட்டன. எஞ்சிய திட்டங்களுக்கும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
லார்சன் ரூ டியூப்ரோ நிறுவனம் ரூ.250 கோடி மதிப்புள்ள பலமாடி வணிக வளாகம் கட்டும் பணிக்கான ஒப்பந் தத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் 26 அடுக்கு குடியிருப்பு மாடி வளாகம்இ யூரியாவை சேமித்து வைக்கும் மிகப் பெரிய கிடங்குஇ உர நிறுவனத்துக்கான கிரில் கோபுரம் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களும் இந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன. இலங்கை மின்வாரியத்திற்கு தேவைப்படும் மின் கம்பி வடங்களைத் தாங்கும் உயர் அழுத்த மின் கோபுரங்களையும் இந்த நிறுவனம் தயாரித்து அளிக்க உள்ளது.
கொழும்பு புறநகர்ப் பகுதியில் குடியிருப்பு வீட்டுமனைகளை கட்டித் தரும் ஒப்பந்தத்தை கங்காதர் கன்ஸ்ட் ரக்ஷன் என்னும் நிறுவனம் பெற்றுள் ளது. கொழும்பு நகரிலேயே 25 ஏக்கர் பரப்பில் மிகப்பெரிய துணை நகரம் ஒன்றினை உருவாக்கும் ஒப்பந்தத்தை இதே நிறுவனத்தின் சகோதர நிறுவன மான புரவங்கார பெற்றுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கைபேசி நிறுவனமான பாரதி ஏர்டெல் ஏற்கனவே ஏர்டெல் என்ற பெயரில் இலங்கையில் தனது சேவைகளைத் தொடங்கிவிட்டது.
இலங்கை மின்வாரியத்துடன் இந் தியாவின் தேசிய அனல் மின் நிறுவனம் இணைந்து 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள அனல் மின்நிலையத்தை கட்டித்தரும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் இந்திய வம்சா வளித் தமிழ்த் தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் மலையகப் பகுதியில் புனல்மின் நிலையங்கள் ஏராளமாக அமைக்கப் பட்டுள்ளன. இவற்றிலிருந்து உற்பத்தி யாகும் மின்சாரத்தை மலையகத் தமிழர் களுக்கோஇ ஈழத்தமிழர்களுக்கோ அளிக்க சிங்கள அரசு மறுத்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழீழப் பகுதி மின்வசதி இல்லாமல் இருண்டு கிடக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே கடல் வழியாக மின்சாரம் கொண்டுசெல்லும் கம்பிகள் போடும் வேலையில் இந்திய அரசு ஈடு பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது.
கிழக்கு திரிகோணமலையில் சம்பூர் என்ற இடத்தில் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையத்தை நிறுவும் ஒப்பந்தத் திலும் தேசிய அனல் மின் நிறுவனம் கையெழுத்திடப்போகிறது. இதற்காக அந்தப் பகுதியில் 500 ஏக்கர் நிலம் போதும். ஆனால் சிங்கள அரசு 15இ000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அந்த நிலப் பகுதியிலிருந்த ஊர்கள்இ வீடுகள் எல்லா வற்றையும் இடித்துத் தரைமட்டமாக்கி அங்கு வாழ்ந்த தமிழர்களை எல்லாம் விரட்டியடித்தது.
ஹெச்.சி.எல்.இ மெபாசிக்ஸ்இ அக்சஞ் சர் போன்ற இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் இலங்கையில் தங்கள் பணிகளைத் தொடங்க உள்ளன.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிஇ ஆதித்யா பிர்லா குழுமம்இ டாடா குழுமம்இ இந்திய எண்ணெய் நிறுவனம்இ அசோக் லேலேண்ட் ஆகிய நிறுவனங்களும் இலங்கையில் தொழில் வணிக நடவடிக் கையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்திய இரயில்வேயும் இந்தக் கொள்ளையில் இறங்கி உள்ளது. இலங்கை இரயில்வே துறைக்குத் தேவை யான 90 பெட்டிகளுடன் கூடிய 15 டீசல் - மின் தொடர் வண்டிகளைத் தயாரித்து அளிக்க பெரம்பூரில் உள்ள இரயிவே பெட்டி தொழிற்சாலை சம்மதித்துள்ளது. மேலும் இலங்கையின் உணவு மற்றும் சுற்றுலா கழகத்திற்கு நவீன தொழில்நுட்ப மற்றும் சொகுசு வசதிகளுடன் கூடிய 10 வகையான சுற்றுலா இரயில் பெட்டிகளை பெரம்பூர் தொழிற்சாலை தயாரித்து வருகிறது.
சிங்கள அரசுஇ தனது நாட்டின் வளங்களை இந்தியப் பெருநிறுவனங் களுக்கு திறந்துவிட்டு அவர்கள் மூலம் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் அழுத்தங்களை உருவாக்கி தனக்கு ஆதரவான நிலை எடுக்க வைத்துள்ளது என்பதுதான் உண்மையாகும்.
நன்றி: தென்செய்தி
No comments:
Post a Comment