ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழர் பிரகடனத்தை அறிவிக்கும் பேரணி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் வருகிற 20ம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக கூறுகையில், எனது தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இலங்கை அரசின், வடக்கின் வசந்தம் திட்டத்தை செயல்படுத்த வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் தலைமையிலான குழுவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதித்திருந்தது. நாங்கள் சுவாமிநாதனைச் சந்தித்து இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்களை எடுத்துக் கூறியபின் அவர் இலங்கை செல்வதை தவிர்த்து விட்டார்.
முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஒழுங்காக வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பவேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.
உலகத் தமிழர் பிரகடனத்தை அறிவிக்கும் பேரணி 20ம் திகதி சென்னையில் நடைபெறுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment