சென்னை புத்தகக் கண்காட்சி

சென்னை, ஜனவரி 04: சென்னை மக்களிடையே மிகவும் பிரபலமான சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கியது. இது 34வது புத்தகக் கண்காட்சியாகும்.

ஆண்டுதோறும் சென்னையில் தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருவதால், ஆண்டுதோறும் இந்த கண்காட்சிக்கு மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

சுமார் ஒரு கோடி நூல்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதற்காக 666 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 376 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன.

புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு. நுழைவுக்கட்டணம் ரூ.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 வயது வரை உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு கட்டணம் கிடையாது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் கட்டணம் கிடையாது.

தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம், கருத்தரங்கு, இலக்கிய சொற்பொழிவு ஆகியவை வரும் நாட்களில் நடைபெற உள்ளன.

புத்தகக் கண்காட்சியை தினசரி பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையிடலாம். விடுமுறை நாட்களில் காலை 11 மணியிலிருந்து பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த புத்தகக் கண்காட்சி ஜனவரி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இடம்: செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய பள்ளி வளாகம், (பச்சையப்பன் கல்லூரி எதிரில்), சென்னை.
நாள்: 04 ஜனவரி 2011 முதல் 17 ஜனவரி 2011 வரை
நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
http://www.puducherrylivenews.com/news/TamilNadu/20111904101924/--.aspx
சென்னை புத்தகக் கண்காட்சிSocialTwist Tell-a-Friend

No comments: