[ வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011, 12:13.58 PM GMT +05:30 ] |
இந்திய பாதுகாப்பு துறை தலைமை கட்டுப்பாடு அதிகாரி விஞ்ஞானி சிவதாணுபிள்ளை நாகர்கோவிலில் நிருபர்களை சந்தித்து இன்று பேசினார். |
5 ஆயிரம் கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கும் வகையில் அக்னி 5 ஏவுகணை இந்தியாவின் அடுத்த கண்டுபிடிப்பாக இருக்கும். களத்தில் வீரர்கள் எண்ணிக்கையை குறைத்து, தொழில்நுட்ப உதவியுடன் தாக்குதல் நடத்துவதுதான் இனி போர் தந்திரமாக இருக்கும். அதற்கேற்ப லேசர் குண்டு போன்ற ஆயுதங்களை கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது. அணுசக்தி இன்ஜின் பொருத்தப்பட்ட நீர்முழ்கி கப்பலை இந்தியா உருவாக்கியுள்ளது. பூகம்ப இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க உதவும் ஹைட்ரோ போன் பொருத்தப்பட்ட 250குச்சிகளை இயற்கை பேரிடர் மேலாண்மை இயக்கத்துக்கு வழங்கியுள்ளோம். 30 மீட்டருக்கு அடியில் அவர்கள் மூச்சு விடும் சத்தத்தைக்கூட இதன்மூலம் உணர்ந்து அவர்களை மீட்க முடியும். thanks to http://www.newindianews.com/view.php?22AOlv2bc440Ce4e44MMc02aKmD3dd2RDmc3036CAY2e4M04K0cb2lOSd2 |
இந்தியாவில் புதிய லேசர் குண்டுகள் தயாரிக்க ஆய்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment