கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை - ஆர். நல்லகண்ணு


கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்தார்.

நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள ஊழல், மணல் கொள்ளை, நிர்வாகச் சீரழிவு, சமூக பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறோம். கடந்த 2 ஆண்டு காலமாக விலைவாசி உயர்வும், மின்வெட்டும் அதிகரித்துள்ளன. விலைவாசி உயர்வைக் குறைக்க வேண்டுமென்றால் ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடைவிதிக்க வேண்டும். விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நாங்கள் பிரசாரத்தில் வலியுறுத்தி வருகிறோம்.

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் பேச்சைக் கேட்டு நடக்காததால் அதன் செயல்பாடுகளை நெருக்கடிகால நிலை என்கின்றனர். இது முதல்வர் கருணாநிதியின் இயலாமையை காட்டுகிறது.

160 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்.

கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தேர்தல் முடிவு வெளியான பிறகு எங்களின் நிலை குறித்து அறிவிப்போம். தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

THANKS TO http://thatstamil.oneindia.in/news/2011/04/06/no-cance-coalition-government-says-r-nallakannu-aid0128.html
கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை - ஆர். நல்லகண்ணுSocialTwist Tell-a-Friend

No comments: