மீனவர்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய, மாநில அரசுகள்-நல்லக்கண்ணு

திருச்செந்தூர்: இயற்கை வளம் வாய்ந்த தமிழ்நாட்டில் மீனவர்கள் நலனில் அக்கறை இன்றி மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய கட்டுபாட்டுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்செந்தூர் மீனவ மக்கள் வாழ்வுரிமை மாநாடு வீரபாண்டியபட்டணத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய கட்டுபாட்டுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கலந்து கொண்டு பேசுகையில்,

தமிழ்நாட்டில் 13 -க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் உள்ளன. இயற்கை வளம் வாய்ந்த தமிழ்நாட்டில் மீனவர்கள் நலனில் அக்கறை இன்றி மத்திய மாநில அரசுகள் செயல்படுகிறது.

சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்பும் மீனவர்கள் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவில்லை. அவர்களது உரிமை பறிக்கப்படுவது வேதனை தருகின்றது.

இந்தியாவில் உள்ள கடலில் 600 வகையான மீன்கள் முத்துக்குளியல் உள்ளிட்ட எல்லா வளமும் கிடைக்கிறது. 30 சதவீத மீன்கள் ஐப்பான், ஐரோப்பா [^] போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 15 ஆயிரம் கோடி அந்திய செலவாணியை ஈட்டித் தருவது மீனவர்கள் தான்.

கடலி்ல் மீனவர்கள் 12 கிலோ மீட்டர் மைல்களுக்கு அப்பால் செல்லக் கூடாது என்கிறார்கள். 10 ஆயிரத்துக்கு மேல் மீன் பிடிக்கக் கூடாது என்று ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு சட்டம் போடுகிறார்கள். மண், மீன்வளம் ஏழைகளைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.

கடல் மேலாண்மைச் சட்டம் கொண்டு வந்த போது மீனவர்களும் அவர்களுக்குத் துணையாக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராடியது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி பாராளுமன்றத்தில் எதிர்ப்புக் குரல் தெரிவித்தது. மீனவ கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததின் மூலம் இந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

1974 ல் கட்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதன் விளைவாக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீன் வளமும், மீனவர்களும் பாதிக்கப்படாத வகையில் மத்திய மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.

கடந்த ஆண்டு இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டப் பின்பும் அங்கு பல்வேறு வகையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் ராஜபக்சேவுக்கு அளவுக்கு அதிகமான மரியாதை கொடுக்கப்பட்டு அழைத்து வருகின்றனர். அதே நேரத்தில் மீனவர்களை பாதுகாக்க எந்த ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது என்றார்.
thanks to http://thatstamil.oneindia.in/news/2010/10/25/cpi-nallakannu-fishermen-tamilnadu.html
மீனவர்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய, மாநில அரசுகள்-நல்லக்கண்ணுSocialTwist Tell-a-Friend

No comments: