First Published : 23 Oct 2010 11:37:56 AM IST
மதுரை, அக். 22: மண்டலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உசிலம்பட்டியிலிருந்து தேவர் ஜயந்திக்கான ஜோதியை எடுத்துச் செல்லும் வழித்தடத்துக்கு அனுமதி கோரிய மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது. இதுதொடர்பாக மண்டலமாணிக்கம் மறவர் சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி தாக்கல் செய்த மனு: ஆண்டுதோறும் தேவர் ஜயந்தி கொண்டாட்டத்தின்போது, உசிலம்பட்டி மூக்கையா தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்துவோம். பின்னர் அங்கிருந்து ஜோதியை தொடர் ஓட்டமாக மதுரை, காரியாபட்டி, திருச்சுழி, முத்துராமலிங்கபுரம் புதூர் வழியாக மண்டலமாணிக்கம், கமுதி, கோட்டைமேடு சென்று பசும்பொன்னை அடைவோம். அங்கு அக். 29,30 ஆகிய இருதினங்கள் தங்கியிருந்து குருபூஜை வழிபாட்டில் ஈடுபடுவோம். கடந்த ஆண்டு போலீஸôர் எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தை அணுகியபோது, போலீஸôர் கூறும் வழித்தடத்தில் செல்லுமாறு உத்தரவிட்டது. எங்களால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது என உறுதி அளிக்கிறோம். மண்டலமாணிக்கம் வழியாகச் செல்ல, மாவட்ட எஸ்.பி.யிடம் அனுமதி கோரிய மனுவை ஏற்று, அனுமதி அளிக்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா, அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இதற்கான விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது.
thanks to http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Madurai&artid=321937&SectionID=137&MainSectionID=137&SEO=&Title=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:%20%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
No comments:
Post a Comment