First Published : 26 Oct 2010 08:43:20 AM IST
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை அக்டோபர் 30-ம் தேதி நடைபெறுகிறது. அப்போது பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க வாகனங்கள் செல்லும் வழி மாற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு அருப்புக்கோட்டை மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் திருச்சுழி, மண்டல மாணிக்கம் வழியாகச் சென்றன. அப்போது தகராறு ஏற்பட்டு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
அதனால் இந்த ஆண்டு கல்லூரணி, ரெட்டியாபட்டி, கமுதி விலக்கு வழியாக வாகனங்கள் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருச்சுழி, மண்டல மாணிக்கம் வழியாகத்தான் வாகனங்கள் செல்ல வேண்டும். ஊரைச் சுற்றி செல்ல முடியாது எனக்கூறி மண்டலமாணிக்கம், செம்பொன்நெறிஞ்சி, நெல்லிக்குளம், அம்மன்பட்டி ஆகிய பகுதி மக்கள் சேதுபுரத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் செயலாளர் முத்துராமலிங்கம் கூறுகையில், 46 ஆண்டுகளாக இந்த வழியாகத்தான் சென்று வந்தோம். இந்த ஆண்டு வேறு வழியாக சுற்றிச் செல்லுமாறு சொல்கிறார்கள். கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொடர் உண்ணாவிரதம் இருப்போம் என்றார். இவர்களிடம் போலீஸôர் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் உண்ணாவிரதம் நீடித்தது.
thanks to www.dinamani.com
No comments:
Post a Comment