கமுதி:கமுதிஅருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 103வது ஜெயந்தி விழா, 48வது குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம் பசும¢பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு குருபூஜை விழா நேற்று துவங்கியது. அக்டோபர் 28ம் தேதி ஆன்மிக விழாவும், 29ம் தேதி அரசியல் விழாவும், 30ம் தேதி குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவாகவும் நடக்கிறது. நேற்று காலை 8 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மங்கல இசையுடன் கோவை காமாட்சிபுரி ஆதீனம், சிவலிங்கேஸ்வர சுவாமிகள், அனந்தலிங்க தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் தலைமையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து லட்சார்ச்சனை நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு தேரோட்டமும் நடந்தது. இன்று (29ம் தேதி) காலை லட்சார்ச்சனை தொடர்ச்சியும், மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 30ம் தேதி காலை மஹா அபிஷேகமும் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழாவும் நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நாளை( 30ம் தேதி ) பசும்பொன் வருகின்றனர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வரும் முக்கியத் தலைவர்களுக்கும் அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன், சத்தியமூர்த்தி, ராமச்சந்திரன் ஆகியோர் செய்துள்ளனர். விழாவை முன்னிட்டு தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பசும்பொன்னில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடபட்டுள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து பசும்பொன்னுக்கு வரும் வாகனங்கள் எந்த வழியாக வந்து செல்ல வேண்டும் என ஏற்கெனவே காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. thanks to http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=7997 |
தேவர் குருபூஜை விழா : பசும்பொன்னில் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment