இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறு

அலையிருக்கும், மலையிருக்கும், காற்றிருக்கும் நாள்வரை மன்னராண்ட மதுரை தஞ்சை காஞ்சியோடு உறந்தையும் மறவர் நாடும் உலகமுற்றும் வாழ்கவாழ்க வாழ்கவே! -----------------------கவிஞர் கண்ணதாசன்


குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக,  
பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது. 

அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. 
விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள். மேலும் தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய இராசராச சோழன், 
கல்லணையைக்கட்டிய கரிகாலன், 
 மகனின் மீது தேராட்டி பசுவுக்குநீதிவழங்கிய ஆரூர் மனுநீதிச்சோழன் அனைவரும் கள்ளர்களே! 

உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!! இவ்வாறு அவ்வாய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன. 

இராசராசோழனை பள்ளர், பறையர்,புலையர்,வலையர் என்றெல்லாம் இழிவுபடுத்துவதை தடுக்க நம் இனத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமிருக்கிறது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், நான் ஊத்துக்காடு மழவராயர் குடும்பத்தில் பிறந்தவன். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் என்பவர்கள் மட்டுமே வசித்துவருகின்றோம். மேலும், சோழ மன்னர்கள் அனைவரும் வீர இனத்தினரான கள்ளர்குலத்தைச்சேர்ந்தவர்கள். எனவே, அவர்களைப்பற்றி எழுதவேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் எனக்கு ஏற்பட்டுள்ளதால், கட்டுரைகளை தொடங்குகின்றேன்.
பிற்காலச்சோழர்களின் ஆட்சிப்பட்டியல்:

எண்
சோழமன்னனின்
பெயர்
மனைவியின்
பெயர்
ஆட்சிக்காலம்
தலைநகரம்
1
விசயாலயச் சோழன்
ஊத்துக்காடு
மழவராயர் மகள்
கிபி.846-881
பழையாறை
ஞ்சாவூர்
2
தித்த சோழன்
வல்லவராயர் மகள்
இளங்கோபிச்சி
கி.பி.871-907
ஞ்சாவூர்
3
1ம் பராந்தக சோழன்
பழுவேட்டரையர் மகள்
கி,பி,907-953
ஞ்சாவூர்
4
கண்டராதித்த சோழன்
மழவராயர்மகள்
செம்பியன்மாதேவி
கி.பி.950- 957
ஞ்சாவூர்
5
அரிஞ்சய சோழன்
வைதும்பராயர் &
கொடும்புரார்மகள்கள்
கி.பி.956 -957
ஞ்சாவூர்
6
சுந்தரசோழன்
திருக்.மலையமான் சேதிராயர்மகள்
கி.பி.957 -970
ஞ்சாவூர்
7
உத்தமசோழன்
மழவராயர் & இருங்களார்மகள்கள்
கி.பி.957 -970
ஞ்சாவூர்
8
1ம்இராசராச சோழன்
கொடும்புரார் & பழுவேட்டரயர் மகள்கள்
கி.பி.985 -1014
ஞ்சாவூர்
9
1ம் இராசேந்திர சோழன்
5 மனைவிகள்பட்டம் தெரியவில்லை
கி.பி.1012 -1044
.கொ.சோழபுரம்
10
முதல்இராசாதிராசசோழன்

கி.பி.1018 -1054
.கொ.சோழபுரம்
11
2ம் இராசேந்திரசோழன்

கி.பி,1051-1063
.கொ.சோழபுரம்
12
வீர்ராசேந்திர சோழன்

கிபி.1063 1070
.கொ.சோழபுரம்
13
அதிராசேந்திரசோழன்

கிபி.1070
.கொ.சோழபுரம்
14
முதல் குலோத்துங்கசோழன்
காடவராயர்மகள்
கிபி1070 1120
.கொ.சோழபுரம்
15
விக்கிரமசோழன்

கிபி.1118 1136
.கொ.சோழபுரம்
16
2ம் குலோத்துங்க சோழன்

கிபி.1133 1150
.கொ.சோழபுரம்
17
2ம் இராசராச சோழன்
திருக்கோ.மலைய.சேதிராயர் மகள்
கிபி.1146 1163
.கொ.சோழபுரம்
18
2ம் இராசாதிராசசோழன்

கிபி.1163 1178
.கொ.சோழபுரம்
19
3ம் குலோத்துங்கசோழன்

கிபி.1178 1218
.கொ.சோழபுரம்
20
3ம் இராசராச சோழன்
வல்லவரையர் (வாணர்குல) மகள்
கிபி.1216 1256
.கொ.சோழபுரம்
21
3ம் இராசேந்திரசோழன்
சோழகுலமாதேவி
கிபி.1246 1279
.கொ.சோழபுரம்
கள்வன் ராஜ ராஜன்என்றும், களப ராஜராஜன்என்றும் தன்னுடைய மெய்க்கீர்த்திக் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ள இராஜராஜ சோழன் கள்ளரே! ஆவார்.
இரண்டாம் இராசராச சோழன் கிபி.1146ல் அரியணை ஏறினார். அவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் கிபி.1149ல் இரண்டு மெய்க்கீர்த்திக்கல்வெட்டுக்களை வெளியிட்டார். அக்கல்வெட்டு-1ல் தன்னை களப ராஜராஜன் என்றும், மற்றொரு 2-வது கல்வெட்டில், தன்னை கள்வன் ராஜ ராஜன் என்றும் பொறித்துவைத்துள்ளார். 860 ஆண்டுகளுக்குமுன் வெட்டப்பட்டுள்ள களபஎன்ற வார்த்தை களவ என்பதன் திரிபு ஆகும். களவர், களபர் என்ற பட்டப்பெயர் உள்ள கள்ளர்கள் இன்றும் தஞ்சாவூரிலும், அதனைச்சுற்றியுள்ள ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.(ஆதாரம்: ந.மு.வேங்கடசாமி நாட்டாரய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் & சர்வதச கள்ளர்பேரவை வெளியிட்டுள்ள பட்டப்பெயர்கள் பட்டியல்.
Posted by Picasa



ஆரியர்கள் இமயம் கடந்து இந்தியாவிற்குள் வந்த காலம் கி.மு.1500. அவர்கள் வடநாடெங்கும் பரவியதை ஆரிய வர்த்தனம் என்று வரலாறு குறிப்பிடுகிறது. ஆரியவர்த்தனம் நடைபெற்றபிறகு, அவர்கள் வாழ்வியல்தேடி தெற்கே விந்தியமலை கடந்து தமிழகத்திற்குள் நுழைந்தகாலம் கி.மு.6ம் நூற்றாண்டு ஆகும். கி.மு.6ஆம் நூற்றாண்டுக்குமுன், அதாவது ஆரியர்கள் தமிழகம் வருவதற்குமுன், தமிழகத்தில் சாதிப்பிரிவுகள் ஏதும் இல்லை. திருமணக்கலப்பு ஏதும் தடைசெய்யப்படவில்லை குறிஞ்சி நிலத்து குறவன் ஒருவன் முல்லைநிலத்து இடைச்சியை மணக்கலாம். அதுபோல் நெய்தல் நிலத்து பரதவன், மருதநிலத்து விவசாயப்பெண்ணைமணக்கலாம்.(ஆதாரம்:முனைவர் கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்)அப்போது, தமிழகத்தில் மக்கள் அவரவர் செய்துவந்த தொழிலுக்கேற்ப பல குலங்கள் மட்டுமே தோன்றியிருந்தன. தமிழக மக்கள் அனைவரும் அவரவர் செய்துவந்த தொழிலின் அடிப்படையில், தொழில் பெயராலேயே அழைக்கப்பட்டனர். எ.கா:—(1)அளவர் (2)இடையர் (3)உமணர் (4)உழவர் (5)எயினர் (6)குயவர் (7)கூத்தர் (8)கொல்லர் (9)தச்சர் (10)தட்டார் (11)தேர்ப்பாகர் (12)பரதவர் (13)பறையர் (14)புலையர் (15)வண்ணார் (16)வணியர் (17) வெள்ளாளர் (18)களவர். இன்றைய கள்ளர்குல முன்னோர்கள் அனைவரும் உலகம் தோன்றிய நாள்முதல் போர்க்களம் சென்று போராடுவதையே தங்கள் குலத்தொழிலாகக்கொண்டிருந்தனர் என்பதை பன்னிருபடலம், புறப்பொருள்வெண்பாமாலை, அகநானூறு, புறநானூறு, நற்றிணை கலித்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது.


களவர்(விளக்கம்): ஆதிகாலம் முதல் நம்குலமுன்னோர்கள் அனைவரும்போர்க்களத்தொழிலையே குலத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்ததால், கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்குமுன் அக்குலத்தொழில் பெயராலேயே களவர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டனர். களவர் என்றால் களம் காண்பவர் என்று பொருள். இதனைப்பற்றி, மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளது வருமாறு: களவர் தமிழ்ச்சொல். களம் என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்து பெறப்படும். களம் என்றால் போர்க்களம். களவர் என்பதற்கு களம் காண்பவர் அல்லது போர்க்களம் சார்ந்த மக்கள் என்று பொருள். இவ்வாறு அவர் எழுதியுள்ளார். தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூல் எழுதிய எட்கர் தர்சன் என்ற ஆங்கிலேய வரலாற்று ஆசிரியரும் கள்ளர்,மறவர், அகமுடையோர் என்போர் போர்க்களம் சார்ந்த மக்கள் என்பதை தெளிவாக எழுதியுள்ளார். பிற்காலத்தில், களவர் என்ற வார்த்தைக்கு புள்ளி வைத்து எழுதும்போது கள்வர் என்றும்,கள்வர் என்ற வார்த்தையே தற்காலத்தில் கள்ளர் என்றும் மரூவி வந்துள்ளது. தஞ்சை பெருவுடையார் கோயிலில் உள்ள மாமன்னர் இராஜராஜசோழனின்கல்வெட்டில் தாய்மண் காக்க உதிரம் கொட்டிய கள்ளர்குல மறவர்களுக்கு உதிரப்பற்று என்னும் வரிநீக்கிய நிலங்களை கொடையாக அளித்து போற்றியுள்ளது பொறித்துவைக்கப்பட்டுள்ளது. இதை அறியாத அரைவேக்காட்டு கத்துக்குட்டி வரலாற்று ஆசிரியர்கள், கள்ளர் என்பதற்கு திருடர் என்று பொருள் கண்டுள்ளனர்., மேலும், கள்ளர்கள் பலப்பல போர்க்களங்கள் கண்டு ஏராளமான விருதுப்பெயர்களை சோழமன்னர்களிடமிருந்து பெற்றுள்ளனர் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. எனவே, கள்ளர்களைவிருதுகள் பலகூறு வீரைமுடையான் என்று மிராஸ்ரைட் கல்வெட்டு கூறுவதை காண்க:
தொண்டைமண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன், குயவன்,வண்ணான், ஓலை சொன்னபடி எழுதும் ஒச்சன், கண்டகம் மாளர்வகை ஐவர், வாணியர் மூவர், கந்தமலர் மாலைகாரர் கலைமீது சரடோட்டும் பாணன், தலைக்கடைக் காவல்புரி பள்ளி,வலையன், பண்டுமுதல் ஊரான் மறிக்கும் இடையன், விருது பலகூறு வீரமுடையான் பதினெண் குடிமக்கள் அனைவரும்……………………………………”
பழங்காலத்தில், போர்முரசு கொட்டியவுடன், நம் முன்னோர்கள் அனைத்துவேலைகளையும் புறம்தள்ளிவைத்துவிட்டு, அவசரம் அவசரமாக போர்க்கோலம் பூண்டு, இடது தோளில் வில்லை எடுத்துமாட்டிக்கொண்டு, வலது தோளில் முதுகுப்பக்கம் கற்றை கற்றையாக எண்ணற்ற அம்புகளைப்பிணைத்திருக்கும் அம்பறாத்தூளியை எடுத்துக்கட்டிக்கொண்டு, இடது இடையில் போர்வாளுடன கூடிய உறையை எடுத்து இறுகக்கட்டிக்கொண்டு, வலதுகையில் நெடிய ஈட்டியையும் இடதுகையில் கேடயத்தையும் எடுத்துக்கொண்டு போர்க்களம் நோக்கி ஓடி, எதிரி நாட்டுப்போர்ப்படையின்மீது புலிபோல் பாய்ந்து உயிரைப்பற்றிக்கவலைப்படாமல் மதம்கொண்ட யானையைப்போல்வெறியுடன் போர்க்களம்முழுவரும் ஓடி எதிரிகளின் தலைகளை பனங்குலைகளை வெட்டித்தள்ளுவதைக்போல் வெட்டித்தள்ளி வீரம்-தீரம் காட்டிப்போராடியவர்கள் என்பதை புறநானூறு அகநானூறு போன்ற தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தொல்காப்பியர். அவர் நம்குலமறவர்களாகிய வெட்சிமறவர் கள்வர்கள் போர்செய்த முறையையும் அவர்கள் போர்க்களம் சென்று வீரமரணம் அடைந்தபின் நடுகல்லாகி அனைவராலும் வணங்கப்பட்ட செய்திகள் பலவற்றையும் நேரில் கண்ட செய்திகளாக பன்னிருபடலத்தில் நமக்கு படம்பிடித்துக்காட்டுகிறார். தொல்காப்பியருக்குப்பின் இருநூறு ஆண்டுகளுக்குப்பின் வாழ்ந்தவர் திருவள்ளுவர்.அவரும் நம்மறக்குடி மக்களின் மாண்பையும் வீரத்தையும் நேரில்கண்டு போற்றிப்பாடியுள்ளார். திருவள்ளுவரின் கீழ்காணும் இருபாடல்கள் நம் குல முன்னோர்கள் போர்க்களத்தில் நின்று போராடும் காட்சியை நமக்குக் காட்டுகின்றது:

விழித்தக்கண் வேல்கொண்டு எறிய, அழித்து இமைப்பின் ஓட்டு அன்றோ வன் கணவர்க்கு(குறள் 775)

பொருள்: போர்க்களத்தில் நேருக்குநேர்நின்று போர்புரியும்போது, எதிரி எறியும் வேலைக்கண்டு, திறந்திருந்த கண்களை சிறிது மூடிதிறந்தாலும்(இமைத்தாலும்) அது கோழையின் செயலாகக்கருதி, புறமுதுகிட்டு ஓடியதற்கு ஒப்பாகும்.

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் (குறள் 774

பொருள்:போர்க்களத்தில் வீரன் ஒருவன் தன்னைத்தாக்க எதிரேவரும் யானையின் மீது தன் கையிலிருக்கும் கூரிய வேலை வேகமாக எறிந்து அதன் உடலில் ஆழமாக பாய்ச்சி விடுகின்றான். வேலின் வன்மையை தாக்குபிடிக்கமுடியாத அந்த யானை வலியினால் பின்வாங்கி அவன் எறிந்த வேலோடு திரும்பி ஓடிவிடுகின்றது. மேற்கொண்டு போராட வேலில்லையே என அவ்வீரன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றான். அப்போது, எதிரி எறிந்த வேல் ஒன்று வேகமாக பாய்ந்துவந்து அவன் மார்பில் பதிந்த நிற்கின்றது. அதுகண்டு அவன் மனம் மகிழ்ந்தான். வேல்ஒன்று கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், அவன் மார்பில் தைத்துநிற்கின்ற அந்த வேலை பிடிங்கி கையில் எடுத்து சுழற்றிக்கொண்டு எதிரியைத்தாக்க மகிழ்ச்சியுட்ன் ஓடுகின்றான்.
மேலும், போர்க்களம்செல்லும் முன் தன் மனைவியை மைத்துனர் வீட்டில் விட்டுச்செல்வதையும் நம் குலமுன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். போர்க்களம் செல்லும் நம்குல மறவர்கள், மாலையில்வீடுதிரும்புவோம் என்ற நிச்சயமற்றநிலையை மனதில் கருதியே அவ்வழக்கத்தைக்கடைபிடித்தனர்.

  தமிழ் இனத்தில்பள்ளுபறை என்னும் 18 சாதிகள் உண்டு. ஆனால், எந்த சாதியினரும் செய்யாத மிகவும் ஆபத்தான தொழிலையேஇவர்கள் செய்ததற்குக் காரணம், முற்கால மன்னர்கள் இவர்களை மிகவும் போற்றி மதித்துள்ளனர் என்பதுமட்டுமல்லாமல் பிறந்த மண்ணுக்காகவும், மன்னனுக்காகவும் போரில் வீர மரணம் அடைவதை பெறும் பேறாகக்கருதியவர்கள் நம்குலமுன்னோர்கள் என்பதும் அவர்கள் உண்மையாக போர்செய்து வெற்றிவாகைசூடி மன்னனுக்குபெருமைதேடித்தந்தனர் என்பதையே தஞ்சை பெருவுடையார் கோயிலில்உள்ள பேரரசன் இராஜராஜ சோழனின்கல்வெட்டு சான்று கூறுகிறது. போர்க்களம் சென்ற தன் தளபதிகள் உடல் உறுப்புக்கள் ஊனமின்றி நல்லபடியாக வீடுதிரும்பவேண்டும் என, சிவபெருமானைவேண்டி இராஜராஜசோழன் திருவிளக்கு எரிய நிவந்தம் விட்ட செய்திகளும்தஞ்சை பெருவுடையார்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்.இரட்டைப்பாடி ஏழரைஇலக்கத்தின்மன்னன் மேலைச் சாளுக்கியனுடன் 100 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்ற போரில் 9,00,000 போர்வீரர்கள் போரிட்டுஇறுதியில் சோழமன்னன் வெற்றிவாகை சூடினான்..தரைப்படை,குதிரைப்படை,யானைப்படை மற்றும்கப்பற்படைமூலம் கடல்கடந்த நாடுகளையும் தாக்கி தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சோழர்படை வென்றது


1. பாண்டிநாடு
2. பல்லவநாடு
3. சேரநாடு
4. இலங்கை
5. இரட்டைப்பாடி ஏழரை இலக்கம்
6. வேங்கி
7. சாளுக்கியநாடு
8. சக்கரக்கோட்டம்
9. கலிங்கம்
10. கங்கபாடி
11. நுளம்பப்பாடி
12. குடகு
13. கேரளம்
14. கொல்லம்
15. மாநக்கவாரம்
16. மாப்பாளம்
17. மலேயா தீபகற்பத்திலுள்ள மாயிருடிங்கம்
18. கடாரம்
19. சாவகம்
20. இலாமுரிதேசம்
21. சிறீவிசயம்
22. கருமனம்
23. புட்பகம்
24. யவனம்
25. மிசிரம்
26. காழகம்
27. புட்பகம்
28. அரபிக்கடலிலுள்ள முன்னீர் பழந்தீவுபன்னீராயிரம்
29. அங்கம்
30. வங்கம்
31. கோசலம்
32. விதேகம்
33. கூர்சரம்
34. பாஞ்சாலம்
35. இடைதுறைநாடு
36. வனவாசி
37. கொள்ளிப்பாக்கை
38. மண்ணைக்கடக்கம்
39. மதுரமண்டலம்
40. நாமணக்கோணை
41. பஞ்சப்பள்ளி
42. மாசுணிதேசம்
43. ஒரிசா(ஒட்ட விசயம்)
44. சுமத்ரா தீவிலுள்ள விசையம்
45. பண்ணை
46. மலையூர்
47. இலங்கா சோகம்
48. இலிம்பிங்கம்
49. வளைப்பந்தூறு
50. தக்கோலம்
51. மதமாலிங்கம்
ஆகிய நாடுகளை சோழர் படைவென்றுஉலகப்பேரரசாக மாறியது. சோழனின் படை வடஇந்தியாவில் உள்ள கங்கைக்கரைவரை சென்று வெற்றிவாகைசூடியது.  

வடஇந்தியாவின்மீது 18முறை படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை கொள்ளையிட்ட ஆப்கானிஸ்தானின்துருக்கி அரசன் கஜினிமுகமதுவை தண்டிக்கவும் இராஜேந்திரசோழன் வடஇந்தியாவின்மீது திக்விஜயம் செய்தார்என்பதற்கு வலுவான வரலாற்று சான்று உள்ளன. கி.பி.1025,டிசம்பர் மாதத்தில் 17வது முறையாக கஜினி முகமதுசோமநாதபுரம் கோயிலின்மீது படையெடுத்தான். அவன் அக்கோயிலைநோக்கி அரபிக்குதிரைகளின்மீதும்ஒட்டகங்களின்மீதும் புயல்காற்றென வாயுவேகத்தில் வந்து தாக்கினான். அவனைத்தடுத்த 50,000க்கும் மேற்பட்டநிராயுதபாணியான பக்தர்களைவெட்டிசாய்த்தான். கோயிலை இடித்து, இறைவனுக்கு காணிக்கையாக பக்தர்களால்அளிக்கப்பட்ட தங்கம்,வைரம், வைடூரியம், கோமேதகம்,முத்து, பவளம்,மாணிக்கம் போன்ற விலையுயர்ந்த கோடானகோடிசெல்வங்களை கொள்ளையிட்டு ஒட்டகங்களின்மீதும், குதிரைகளின்மீதும் மூட்டையாக்க்கட்டிஅள்ளிச்சென்றான். அவன் அப்போது கொண்டுபோன தங்கம் மட்டுமே ஆறுடன் எடைக்கு குறையாது. அம்மூட்டைகளைதூக்கமுடியாமல், ஒட்டகங்களும், குதிரைகளும் முதுகைநெளித்துக்கொண்டு எறும்புஊருவதைபோல்ஆப்கானிஸ்தானை நோக்கி மெல்ல ஊர்ந்துசென்றன.. இவ்வாறு அரபுநாட்டு வரலாற்று ஆசிரியர்அல்காசுவினி எழுதியுள்ளார். கி.பி.1000லிருந்து தொடங்கி தொடர்ந்து ஆண்டுதோறும் துருக்கி அரசன் கஜினிமுகம்மதுவடஇந்தியாவின்மீது படையெடுத்து சோமநாதபுரம் சிவன்கோயிலைகொள்ளைஅடித்துவரும்செய்தி, சிவபாதசேகரனும்சிவநேசச்செல்வனுமான இராஜராஜசோழனையும், மும்முடிச்சோழன் பெற்ற களிறு என்று வரலாறு போற்றும்இராசேந்திர சோழனையும் மனம் நோகச்செய்திருக்கவேண்டும். மேலும், கஜினி முகமது கிபி.1018ல் கன்னோசிநாட்டின்மீதுபடையெடுத்து, அந்நாட்டை ஆண்ட ராஜ்யபாலனைத்தோற்கடித்து நாட்டைவிட்டே துரத்தி, வழக்கம்போல்கோயில்களை இடித்தும், கோயில் சொத்துக்களையும் உடைமைகளையும் சூறையாடி, பொதுமக்களைகொன்றுகுவித்து ஊருக்கும் எரியூட்டி அந்நாட்டிற்கு பேரிழப்பை உண்டுபண்ணினான். ராஜ்யபாலன் இவற்றைத்தடுக்கஎவ்வித முயற்யசியும்செய்யாது கோழையைப்போல் ஓடி ஒளிந்துகொண்டான். இதனால் பக்கத்து நாட்டுமன்னர்கள்சந்தெல்லர் நாட்டு மன்னன் வித்தியாதரன் என்பவன் தலைமையில் ஒன்றுகூடி நடவடிக்கை மேற்கொண்டனர்.கஜினியை எதிர்த்துப்போரிடாத கோழை ராஜ்யபாலனை கொன்று அவன் மகன் திரிலோசன பாலனை கன்னோசியின்மன்னாக முடிசூட்டி, கஜினியை எதிர்க்க கூட்டு உடன்படிக்கை மேற்கொண்டனர். தன்னைஎதிர்த்து கூட்டுநடவடிக்கைமேற்கொண்ட மன்னர்களைத்தண்டிக்க, கஜினி மீண்டும் கன்னோசியின்மீது படையெடுத்து வெற்றிகண்டான். இரண்டுஆண்டுகளுக்குப்பிறகு,(கிபி.1021-22ல்) தனக்கு எதிராக கூட்டணிநிறுவிதலைமையேற்ற வித்தியாதரனைத்தண்டிக்க,கஜினி முகமது அவன் நாட்டின்மீது படையெடுத்தான்.இந்நிலையில்,வடநாட்டுபடையெடுப்பின்போது போசராசன்நட்பும், சேதிநாட்டுக்காளச்சூரி மன்னன் காங்கேயர் விக்கிரமாதித்தன் நட்பும் இராசேந்திர சோழனுக்கு கிடைத்தது.அவர்களின் வேண்டுகோளை ஏற்று,வித்தியாதரனை கஜினியிடமிருந்து காப்பாற்ற மாபெரும் படையுடன் இராசேந்திரசோழன் வடநாடுநோக்கி திக்விஜயம் புறப்பட்டான். வழியில் சக்கரக்கோட்டம், மதுரை மண்டலம், நாமனைக்கோட்டம்,பஞ்சப்பள்ளி, மாசுணிதேசம்(சிந்துநதிக்கரையில் உள்ளது) ஆகிய இடங்களை கைப்பற்றினான்.(ஆதாரம்: டாக்டர்கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் பக்கம் 277&278ல்காண்க).இராசேந்திரசோழனின் மேற்கண்ட திக்விஜயத்தைகேள்விபட்ட கஜினி முகமது அஞ்சிஓடிஒளிந்துகொண்டான். அதுமட்டுமல்ல.,இராசேந்திரசோழனின் மேற்கண்ட வடநாட்டு படையெடுப்பிற்குப்பிறகு,இந்தியாவின்மீது படையெடுப்பதையும் கோயில்களை கொள்ளை யடிப்பதையும் விட்டுவிட்டான். அதன்பிறகுஇந்தியாவின் மீது படையெடுப்பு எதையும் கஜினி முகமது எடுக்கவில்லை ன்று வரலாறுகூறுகிறது.மதுரை மண்டலம் என்பது யமுனைக்கரையில் உள்ள வடமதுரையே என்பதில் ஐயமில்லை.அந்நகர் அக்காலத்தில் செல்வமும் செழிப்பும் புகழும்பொதிந்து காணப்பட்டதால், அந்நகர்மீது கஜினிமுகமது பன்முறை தாக்குதல்நடத்தி கொள்ளையடித்து தீயிட்டு சீரழித்தான்.அப்போது வடநாட்டு மன்னர்களின் வேண்டுகோளைஏற்று சிவபாதசேகரனின் மகனான இராசேந்திரசோழன்,சோமநாதபுரம் கோயிலைக் காப்பாற்றவும்,கஜினிமுகம்மதுவுடன் போரிட்டு அவன்தொல்லையிலிருந்து வடஇந்தியாவைவைக் காப்பாற்றவும், மாபெருமபடை திரட்டிக்கொண்டு வடநாட்டின்மீது திக்விஜயம் விஜயம் மேற்கொண்டான் என்று கருதத்தோன்றுகிறது என்று டாக்டர் கே.கே.பிள்ளை கூறுகிறார்.(பக்கம்279) இராஜேந்திரசோழனின் நாட்டம் அடுத்துக் கங்கை வெளி யின் மீது பாய்ந்த்து. மேலைச்சாளுக்கிய மன்னன்இரண்டாம் சயசிம்மனுக்கு படைத்துணைநல்கிய வர்களான கலிங்கத்து அரசனும், ஒட்டவிசயஅரசனும் சோழர்படைக்கு அடிபணிந்தனர். இப்படைகள் மேலும் வடக்கே முன்னேறிச்சென்று இந்திரதரன், இரணசூரன், தருமபாலன்ஆகியமன்னர்களை வென்று கங்கைவெளியில் அடிவைத்தன. வங்க நாட்டு பாலவமிசத்து மன்னன் மகிபாலன் என்பான்சோழர்படைக்கு தலைவணங்கி அடிபணிந்தான். கங்கைஆற்யறைக்கடந்துசென்றும் சோழர் படை சிற்சில இடங்களில்போரிட்டுவென்றது. வங்காளம் முழுவதுமே சோழப்பேர்ரசின் மேலாட்சிக்குஇணங்கிற்று.இராசேந்திரசோழனின் வடநாட்டுபடையெடுப்பில் படைத்தலைவனாக சென்ற கருநாடகக்குறுநிலமன்னன் ஒருவன் மேலை வங்கத்தில் குடியேறினான்.அவன் வழியில் பிறந்த சமந்தசேனன் என்ற ஒருவன் தோன்றி, சேனர் பரம்பரைஒன்றை மேற்கு வங்காளத்தில் தொடங்கி வைத்தான். மேலும், இராசேந்திரசோழன் கங்கைக்கரையிலிருந்து சைவர்கள்(கங்கை வேளாளர்) சிலரை கொண்டுவந்து காஞ்சிபுரத்தில் குடியேற்றினான்(ஆதாரம்: திரிலோசன சிவாச்சாரியார் எழுதிய சித்தாந்த சாராவளி என்னும் நூல்).கங்கைத்திருநாட்டில் வேளாண்மைத்தொழில் செய்த வேளாளர் இன்றும்தமிழகத்தில், தங்களை கங்கைக்குலத்தவர் என்றே கூறிக்கொள்கின்றனர். வேளாளர்களுக்குக் கங்கக்குலம் அல்லது கங்க வம்சம் என்ற பெயரும் உண்டு. ஏனெனில் அவர்கள் பிளினி, டாலமி ஆகியவர்களால் குறிப்பிடப்பட்ட கங்கைத்தீரத்திலுள்ள வல்லமைவாய்ந்த கங்கரிடே என்ற மாபெருங்குடி மரபிலிருந்து தங்கள் குலமரபை வரன்முறையாகக் கொண்டனர். (ஆதாரம்:ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தமிழகம் ஊரும் பேரும் என்ற நூலில் எழுதியுள்ளது).இராசேந்திரன் கிபி.1018ல் இலங்கை முழுவதையும் வென்று சோழப்பேரரசின்கீழ் கொண்டுவந்தார். முதலாம் பராந்தகச்சோழனிடம் தோற்றோடிய வீரபாண்டியன் அன்று சிங்களத்தில் கைவிட்டோடிய பாண்டிநாட்டு மணிமுடியையும், இந்திரஆரத்தையும், இரெத்தின சிம்மாசனத்தையும், பாண்டியனின் செங்கோலையும் இராசேந்திரன் மீட்டு வந்தார்.(தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மாப்பினவேஎன்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இதனை குறிப்பிடுவதை காண்க) மேலும் சிங்கள மன்னனின் மணிமுடியையும் அவன் பட்டத்தரசியின் மணிமுடியையும் பறித்தார். இலங்கையில் சிவனுக்கும் பெருமாளுக்கும் பல கோயில்கள் எழுப்பப்பட்டன. சேரனும் தன்அரசுரிமையையும், செங்கதிர் வீசிய மணிமாலை ஒன்றையும் இராசேந்திரனிடம் பறிகொடுத்தான். இராசேந்திரன் மதுரையில் தன் மகனைப் பிரதிநிதியாக அமர்த்தி, அப்பிரதிநிதியிடம் பாண்டிநாடு, கேரளம் ஆகியவற்றின் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தான்.(கிபி.1018-19) அப்பிரதிநிதியின் பெயர் சடாவர்மன் சுந்தரபாண்டியன். இவன் 23 ஆண்டுகள் அரசாண்டான். வடநாட்டு வெற்றிகளுக்குப்பிறகு நாடுதிரும்பிய இராசேந்திரன் சோழகங்கை என்னும் குளம் ஒன்றை வெட்டி அதில்கங்கையிலிருந்து கொண்டுவந்தநீரைசொரிந்து கங்கா ஜலமயம் ஜயஸ்தம்பம் என்று பெயரிட்டுத் தன் வெற்றிக்கு விழாகொண்டாடினான். தன்மருமகன் இராசராச நரேந்திரனை (வேங்கி இளவரசன் விமலாதித்தனுக்கும் இராசராச சோழன் மகள் குந்தவைக்கும் பிறந்தவனை) வேங்கிநாட்டு மன்னனாக மணிமுடிசூட்டினான். தன்மகள் அம்மங்காதேவியை இராசராச நரேந்திரனுக்கு மணம் முடித்துவைத்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கசோழன் ஆவான்
 
““களவர்என்ற வார்த்தை மருவி களபர்என்ற வார்த்தை பிறந்jது. களவர் என்போர் சுத்தத் தமிழர். முக்குலத்தோர்.  இரண்டு வார்த்தைகளுக்கும் வேறுபாடு அறிந்திருப்பது அவசியம். கள்ளர் என்பதன் மூலவார்த்தை களம் ஆகும். அதிலிருந்து பிறந்ததே களவர் என்ற வார்த்தை. களவர் என்ற ஒரே குடும்பத்திலிருந்து பிரிந்தவர்களே மறவரும் அகமுடையோரும் ஆவர். மூவரும் போர்க்களத்தொழிலையே செய்துவந்த ஒருதாய்வயிற்று மக்களாவர். போர்க்களத்தொழில் ஒரேகுடும்பத்திலிருந்து பிறந்தது. கள்ளர் என்போரே மூத்தவரானார். அவரே மற்ற இளையவர்களுக்கும் போர்பயிற்சி அளித்த குருவானார் எனலாம். தனக்கு போர்க்களத்தில் உதவிடும் பொருட்டே தன் இளையவர்களுக்கும் போர்பயிற்சிஅளித்து தன்நிழலைப்போல் பின்தொடர பழக்கியிருந்தனர் எனலாம்.
மறவர்(விளக்கம்): இவர்கள் களவர் குலத்தின் ஒருபிரிவினர் ஆவார். இவர்கள் வீர தீரத்துடன் ஊக்கம் காட்டி போர்புரிந்ததால், மறவர் என்று அழைக்கப்பட்டனர். மறம் என்றால் வீரம். வீரத்துடன் போரிட்ட தால் மறவர் என்ற பெயர் பெற்றனர்.இவர்கள் கோட்டைக்கு வெளியே அரணாக நின்று எதிரி படையை தடுத்துநிறுத்தி இறுதிகட்ட போர்புரிவர். இது இவர்களின் தலையாய பணியாக இருந்தது.
அகமுடையோர்(விளக்கம்): இவர்கள் களவர் குலத்தின் மற்றொரு பிரிவினர்ஆவார். இவர்கள் கோட்டையின்உள்ளே இருந்தபடி ,மதில்களின் மீது மறைந்து நின்றபடி கோட்டையை முற்றுகையிட வரும் எதிரியின் படைமீது குறி தவறாமல் அம்புமழை பொழிந்து, எதிரிகளை தடுத்து நிறுத்திப்போர் புரிந்தனர். வில்லில் நாண் ஏற்றி அதன் மீது அம்பைப்பூட்டி குறிதவறாமல் எதிரியின்மீது எய்தனர். அவ்வாறு எறிந்துஅவர்களைக் கொல்வதில் வல்லவர்கள். கோட்டையின் உள்ளேஇருந்தபடி போர்புரிந்ததால் அகமுடையோர் எனப்பெயர் பெற்றனர். அகம் என்றால் உள்ளே என்று பொருள்படும்.இவர்கள் கோட்டைக்கு உள்ளே இருக்கும் அரசகுடும்பத்தினர்கள், பெருந்தர மக்கள், அரசனின் சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களின் தலையாய கடமையாக இருந்தது அதற்காக கோட்டையின் மதில்கள்மீது நின்று அம்புமழைபொழிந்து எதிரிகளை கொன்றதோடு மட்டுமல்ல….கோட்டைப்பாதுகாப்புப்பொறிகளையும் பயன்படுத்தி கோட்டைமீது ஏறுகின்ற எதிரிகளை தாக்கி கொன்றனர். இவ்வாறு கோட்டைப்பாதுகாப்புப்பொறிகளை இவர்கள் பயன்படுத்திகொன்றனர் என்பதை இளங்கோவடிகள் பாடல் மூலம்கீழ்கண்டவாறு அறிகின்றோம்:
பாடல்: மிளையும் கிடங்கும் விளைவிற் பொறியும், கருவிர லூகமும் கல்லுமிழ் கவனும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் லுலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும் சுவையுட்ம கழுவும் புதையும் புழையும் அய்யவித் சீப்பும் முழுவிற்ற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும்………………..”

பொருள்:
1)அம்பெய்யும் பொறி  
2)கரிய விரலையுடைய குரங்குபோன்ற கடிக்கும் பொறி  
3)கல்லெறியும் கவண்  
4)கோட்டைமீதேற முயற்சிக்கும் எதிரிமீது காய்ச்சி ஊற்றும் எண்ணெய்  
5)அவ்விதமான எண்ணெய் முதலியன ஊற்றுவதற்கான பாத்திரம்  
6)இரும்பு கம்பிகளைக் காய்ச்சும் உலை  
7)கல்லும் கவணும் வைக்கும் கூடை  
8)கோட்டைமதில்மீது ஏற முயற்சிக்கும் எதிரிமீது மாட்டி இழுக்கும் தூண்டில்  
9)சங்கிலி  
10)எதிரியின்மீது வீச்ச் சேவல் போன்ற பொறி  
11)அகழியைத்தாண்டி மேலே ஏறும் எதிரியைத்தாக்கி கீழேதள்ளும் இயந்திரம் 1
2)திடீரென பாயும் அம்புக்கூட்டம் 
 13)எதிரியின்மீது தீவீசும்,தீபந்தம் மற்றும் தீப்பொறி  
14)சிற்றம்புகள் எய்யும் இயந்திரம்  
15)மதிலின் மேல் உச்சியில் ஏறும் எதிரியின் கைகளைக்குத்தும் குத்தூசிகள் 
 16)மதிலில் ஏறியவனின் உடலைக்கிழிக்கும் இரும்பாற்செய்த பன்றி உருவமுடைய இயந்திரம்  
17)மூங்கில் போன்ற உருவமுடைய இரும்பு உலக்கைகள்  
18)கோட்டைக்கு ஆதரவாகப்போடப்படும் பெரிய மரக்கட்டைகள்  
19)பெரியமரக்கட்டைகளை பிணைத்து குறுக்கே போடும் உத்திரங்கள்  
20)தடி,ஈட்டி,வேல்,வாள் வீசும் இயந்திரப்பொறி. இக்கருவிகளைக்கொண்டு கோட்டைமீதிருக்கும் அகமுடையப்படையினர் போராடினர். இவ்வாறு போராடிய வீரர்கள் நொச்சிப்பூமாலை அணிந்துபோராடினர். எனவே, இது நொச்சித்தினை எனப்படும்.

கள்ளர், மறவர், அகமுடையோர் என்னும் மூவரும் ஒருதாய்வயிற்றில் பிறந்தவர்கள்என்பதை விசயநகரப்பேர்ரசின் அமைச்சர் வெங்கய்யா அவர்கள் 1730ல் எழுதிய தொண்டைமான் வம்சாவளி என்றநூல் வலியுறுத்திக்கூறுகிறது. தொண்டைமான் கள்ளர் வம்சத்தினர் என்று இராஜதொண்டைமான் அநுராகமாலை சுவடிகூறுகிறது. பூவிந்தபுராணம், கள்ளகேசரிபுராணம் கள்ளர்,மறவர், அகமுடையோர் ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்றும் இந்திரகுலத்தார் என்றும் கூறுகின்றன. இன்றைக்கும் தேவர், சேர்வை ஆகிய பட்டங்கள் கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகிய மூவருக்குமே உள்ளதை நுண்மான் நுழைபுலம்கொண்டு நுணுகிஆராய்ந்தால், இவர்கள் மூவரும் ஒரு தகப்பனுக்குப்பிறந்த, ஒருதாய்வயிற்றுப் பிள்ளைகள் என்பதை எளிதில் உணரலாம். தகப்பனின் பட்டப்பெயரே அவன் பெற்ற ஆண்மக்களுக்கும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்துகொண்டிருப்பது நடைமுறையிலுள்ள மரபு ஆகும். அவ்வாறே தேவர், சேர்வை என்ற பட்டங்கள் ஒருதகப்பன் பெற்ற மூன்று ஆண்மக்களுக்கும்(கள்ளர்,மறவர், அகமுடையோர் ஆகிய மூன்று ஆண்மக்களுக்கும்) வந்துள்ளது. பன்னிருபடலமும், புறப்பொருள்வெண்பாமாலையும் களவர் குலத்திலிருந்து பிறந்த முக்குலத்தோர் போர் செய்த முறைகளை முக்கியமாக எட்டு தினைகளாக்கி விவரித்துக் கூறுகின்றன.அவைகள் வருமாறு:-

1)வெட்சித்தினை: வேந்தனால் ஏவிவிடப்பட்ட வெட்சிமறவர் கள்வர்கள் படை பகைஅரசனின் நாட்டிற்குள் புகுந்து காவற்படையை வென்று ஆநிரைகளைக் கவர்ந்து வந்து, ஊர்மன்றத்தில் கொண்டுவந்து நிறுத்துதல். வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக்களவின் ஆதந்து ஓம்பல் மேவற்றாகும் வெட்சிஎன்று தொல்காப்பியர் பாடியுள்ளார். மற்றொரு இடத்தில் தன்னுறு தொழிலே வேந்துறு தொழில் என்றன்ன இருவகைத்தே வெட்சிஎன்று பாடியுள்ளார்(.வி.சூ.602 மேற்.) வெட்சிப்பூ மாலை அணிந்து போராடியதால் இது வெட்சித்தினை ஆயிற்று.(இதன் விளக்கத்தை எம்_130 மரபணு கள்ளர்களுக்கே உள்ளது என்ற என்னுடைய மற்றொரு கட்டுரையில் காண்க)

2)கரந்தைத்தினை: வெட்சிமறவர் கள்வர்கள் படை கவர்ந்து சென்ற ஆநிரைகளை, அவர்கள் நாட்டின் ஊர்மன்றத்திற்குள் கொண்டுபோய் சேர்க்கும் முன் அவர்களை வழிமறித்து வெட்சிமறவர் கள்வர்படையை வென்று, இழந்த ஆநிரைகளை மீட்டு வருதல். இவர்கள் கரந்தைப்பூ மாலை அணிந்து போராடியதால், இது கரந்தைத்தினை ஆயிற்யறு.(வெட்சித்தினை, கரந்தைத்தினை ஆகிய இருபோர்களையும் செய்தவர்கள் கள்ளர்களே ஆவர். இதனை தொல்காப்பியரின் பன்னிருபடலத்தில் காணலாம்.)

3)வஞ்சித்தினை: பகைஅரசனின் நாட்டைக்கைப்பற்றக் கருதிய வேந்தன், பகைநாட்டின்மீது போர்தொடுத்தல். (கள்ளர், மறவர்,அகமுடையோர் ஆகிய மூன்றுபடைகளும் இணைந்து பகைமன்னனின் நாட்டின்மீது படைஎடுத்துப்போய் போர் தொடுத்தல்) வஞ்சிப்பூ மாலைஅணிந்துபோராடுவர்

4)காஞ்சித்தினை: நாட்டைக்கவர படையெடுத்து வரும் அரசனின் படைகளை எதிர்த்து போராடுதல் (கள்ளர்,மறவர் படைகள் இணைந்து நாட்டைக்கவர வரும் எதிரி அரசனின்படைகளை எதிர்த்து நின்று போராடுதல்

5)நொச்சித்தினை: பகைவர் படையின் முற்றுகையிலிருந்து கோட்டையை காக்க கோட்டைமீதிருந்து எதிரிகள் மீது அம்புமழைபொழிந்து தாக்கும் அகமுடையோர் படையின்(வில்லாளிகள்) போர். அகமுடையோர்படை கோட்டைமேலிருந்து அம்புமழைபொழிந்து தாக்குவர். அதேநேரத்தில், கோட்டையை முற்றுகையிடும் எதிரிபடைகளுடன் கோட்டைவாசலில் பாதுகாப்பாகநின்று கள்ளர்,மறவர் படைகள் இணைந்து எதிரியுடன் போர் செய்வர். நொச்சிப்பூமாலை அணிந்து போராடுவர்.

6)உழிஞைத்தினை: பகைவரது கோட்டையை சுற்றிவளைத்து முற்றுகையிட்டு, கோட்டையின்காவலை உடைத்து, கோட்டைக்குள்புக எதிரிநாட்டரசன் படைகள் நடத்தும்போர். எதிரிநாட்டின் கள்ளர், மறவர் அகமுடையோர்(வில்லாளிகள்) படைகள் மூன்றும் இணைந்து நடத்தும்போர். உழிஞைப்பூ மாலை அணிந்து போராடுவர்.
7)தும்பைத்தினை: இரண்டு நாட்டு அரசர்களின் படைகளும் நேருக்கு நேர் மோதி நடத்தும் இறுதிகட்டப் போர். (இப்போரில் இரண்டு நாடுகளின் கள்ளர்,மறவர்,அகமுடையோர்(வில்லாளிகள்) படைகள் நேருக்குநேர் கடுமையாக மோதிக்கொள்ளும் இறுதிகட்டப்போர். தும்பைப்பூ மாலை அணிந்து போராடுவர்..

8)வாகைத்தினை: இரண்டு நாடுகளின் கள்ளர், மறவர், அகமுடையோர்படைகளும் போரிட்டு ஒருநாடு வெற்றி வாகைசூடும் போர். வெற்றிபெற்ற படைகள் வாகைப்பூ மாலை சூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர்
கள்ளர் என்ற வார்த்தை களம் என்ற மூலவார்த்தையிலிருந்து பிறந்ததுபோல், வேறு எந்த இனமும், களம் என்ற வார்த்தையிலிருந்து பிறக்கவில்லை. இந்த அடிப்படைஉண்மையை அறியாது எழுதப்படும் வரலாறு, பெருக்கல்வாய்ப்பாடு அறியாத மாணவன் போடுகின்ற கணக்கின் விடைபோல் தவறாகவே முடிந்துவிடும்.களவர் குலத்தினராகிய நம்முன்னோர்கள் ஆற்றிய போரினையே 2300ஆண்டுகளுக்கு முன் அகத்தியரின் மாணவர்களாகிய பன்னிருவர் எழுதியுள்ளனர். அப்பன்னிரு மாணவர்களில் முக்கியமானவர் தொல்காப்பியர். தொல்காப்பியரே முதல் இருபடலங்களை எழுதியுள்ளார். அவ்விரு படலங்களே வெட்சித்தினையும் கரந்தைத்தினையும் ஆகும். வெட்சிச்தினையிலும் கரந்தைத்தினையிலும் கள்ளர்கள் ஆற்றிய போரையே தொல்காப்பியர் தெளிவாக பாடியுள்ளார். அதன்பிறகு ஐயனாரிதனார் என்னும் சேரர்குடியைச்சேர்ந்த புலவரும் கி,பி,9ஆம் நூற்றாண்டில் புறப்பொருள்வெண்பாமாலையை பாடியுள்ளார். இப்பன்னிருபடலமும் புறப்பொருள் வெண்பாமாலையும் களவர் என்ற நம் முன்னோர்கள் ஆற்றிய குலத்தொழில் போரைமிகத்தெளிவாக படம்பிடித்துக்காட்டுகின்றன. 

இக்களவர் என்ற பெயரையே, இராஜராஜசோழனின் கல்வெட்டில் கள்வன் ராஜராஜன் என்றும் களப ராஜராஜன் என்றும் பொறித்துவைத்துள்ளார். களபஎன்ற வார்த்தையும் கள்வன்என்ற வார்த்தையும் கள்ளர் இனத்தைக்குறிக்கும் இரு வார்த்தைகளாகும். இவ்விருவார்த்தைகளும் ஒரே பொருளைத்தன் குறிக்கின்றன. எனவேதான், கல்வெட்டு 1ல் களப என்றும் மற்றொரு கல்வெட்டில் களப என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, அவ்வார்த்தைக்குப்பதிலாக எளிதில் புரியக்கூடிய கள்வன்என்ற வார்த்தையையும் வெட்டிவைத்துள்ளனர். இவ்வார்த்தைகள் கள்ளர்கள் முற்காலத்தில் செய்த குலத்தொழிலைக்குறிக்கும் காரணப்பெயர்களாகும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன். எனவே, சோழமன்னர்கள் அனைவரும் வீரஇனமாகிய கள்ளர் குலத்தவரே ஆவர்

நன்றி திரு.சம்பந்த மூர்த்தி மழவராயர்


thanks to http://mazhavarayarpages.blogspot.com/2010/07/blog-post_1552.html
இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறுSocialTwist Tell-a-Friend

No comments: