தொழிற்சாலைகளுக்காக 200 மெகாவாட் மின்சாரம் வாங்கும் தமிழகம்

சென்னை & மதுரை: தொழிற்சாலைகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க 200 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்கவுள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படவுள்ளது
மதுரையில், தென்மாநில மின்சார ஆணையங்களின் மாநாடு நடந்தது. மாநாட்டைத் தொடங்கி வைத்து ஆற்காடு வீராசாமி பேசுகையில்,



தனி மனிதனின் மின்நுகர்வு தேசிய அளவில் சராசரியாக 635 யூனிட்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது தமிழகத்தில் 1,000 யூனிட்டுகள் என்ற நிலையை எட்டியுள்ளது.



தமிழகத்தில் மின் நுகர்வோரின் எண்ணிக்கை தற்போது 2.03 கோடி.ஒவ்வோர் ஆண்டும் 5 லட்சம் மின் நுகர்வோர்கள் கூடுதலாக சேருகிறார்கள். நம்முடைய மின் தேவை சராசரியாக ஆண்டிற்கு 8 சதவீதம் அதிகரித்து வருகிறது.



தமிழக தொழில் துறை, உற்பத்தித் துறை வளர்ச்சி 9 சதவீதத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



எண்ணூரிலும், காட்டுப்பள்ளியிலும் முறையே 600, 2000 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.



2012ம் ஆண்டிற்குள் சுமார் 10,000 மெகாவாட் திறன் கொண்ட 5 தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும் என எதிர்பார்க்கிறோம்.



என்னுடைய கருத்துப்படி இந்திய அரசு அவசரமாக கவனிக்க வேண்டிய பிரச்சினை என்னவென்றால், மின்சாரத்திற்காக ஒரு தேசிய மின் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே.



வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு போன்ற மின் கட்டமைப்புகள் தற்போது ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. தென்மண்டல மின்கட்டமைப்பு மட்டும் தனியாக உள்ளது. பிற மண்டலங்களுடன் தென் மண்டலம் இணைக்கப்படாத பட்சத்தில் அன்றாட மற்றும் பருவநிலை மாற்றத்திற்கேற்ப மாறுபடக்கூடிய மின் கட்டணங்களின் பயனை தென் மண்டலம் அடைய முடியாத நிலை உள்ளது.



தென் மண்டலத்தில் தொழிலகங்கள் அதிகம் இருப்பதால் அதிகமாக மின்சாரம் தேவைப்படுகிறது. நாட்டின் பிற மின் கட்டமைப்பில் மின்சாரம் உபரியாக இருந்தும் அதன் பயனை தென்மண்டலம் அனுபவிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் தேசிய மின் கட்டமைப்பை உருவாக்குவதை விரைவுபடுத்த வேண்டும் என்று இந்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.



மின் பற்றாக்குறை மற்றும் உபரியாக இருக்கும் காலத்தில் அண்டை மாநிலத்தார் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை நல்க வேண்டும். எந்த மாநிலத்திலும், எந்த நேரத்திலும் உபரியாக இருக்கும் மின்சாரத்தை மற்ற மாநிலத்திற்கு தற்காலிகமாக திருப்பி விட வேண்டும்.



அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீரான மின் கட்டணம் இருக்க வேண்டும் எனக் கோரி வருகிறார்கள். இது சாத்தியமல்ல.



உதாரணமாக கேரள மாநிலத்தில் நீர் மின் நிலையம் அதிகம். தமிழ்நாட்டில் அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், அணு மின் நிலையம் போன்றவற்றில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதனால் உற்பத்தி கட்டணம் மாறுபடுகிறது என்றார் வீராசாமி.



200 மெகாவாட் மின்சாரம் வாங்க டெண்டர்:



இதற்கிடையே, தமிழ்நாடு மின்சார வாரியம், தொழிற்சாலைகளுக்கு தடங்கலற்ற மின் விநியோகத்தை மேற்கொள்ள 200 மெகாவாட் மின்சாரத்தை வாங்கவுள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படவுள்ளது.



இந்த மின்சாரத்தைக் கொண்டு பீக் ஹவர் எனப்படும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படும். இதன் மூலம் தொழில் துறையினருக்கு தடங்கலற்ற மின் வினியோகம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.



கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொழில் நிறுவனங்களுக்கு 40 சதவீத மின் வெட்டை மின்வாரியம் அமல்படுத்தியது.

இதன் மூலம் மின் பற்றாக்குறையை சமாளிப்பதோடு வீடுகளுக்கு தடங்கலற்ற முறையில் மின்சாரம் விநியோகிக்க மின்வாரியம் திட்டமிட்டது.



இந்த கட்டுப்பாடு காரணமாக 24 மணி நேரமும் இயங்க வேண்டிய தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. இதனால் உற்பத்தியி்ல் 40 சதவீத இழப்பும் ஏற்பட்டது.



இதையடுத்து தற்போது 200 மொகவாட் மின்சாரத்தை விலைக்கு வாங்கி அவற்றை மாலை நேரங்களில் தொழில் நிறுவனங்களுக்கு சப்ளை செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது. எனவே அடுத்த ஆண்டு மின்வெட்டு பெருமளவில் நீங்கி தொழில் நிறுவனங்கள் புத்துயிர் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.



மின் கட்டணம் உயருமா...?



இதற்கிடையே மாநாட்டுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் ஆற்காடு வீராசாமி பேசுகையில்,



கடந்த 7 ஆண்​டு​க​ளா​கத் தமி​ழ​கத்​தில் மின்​ கட்​ட​ணம் உயர்த்​தப்​ப​ட​வில்லை. தமி​ழக மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யத்​தின் தலை​வர் எஸ்.கபி​லன்,​​ மின்​கட்​ட​ணத்தை உயர்த்த வேண்​டும் என்று அரசை அடிக்​கடி வலி​யு​றுத்தி வரு​கி​றார்.​


இருப்பினும் தற்​போ​தைய சூழ்​நி​லை​யில் உட​ன​டி​யாக மின் கட்​ட​ணத்தை உயர்த்​தும் எண்​ணம் இல்லை.​ எனி​னும் இது குறித்து உரிய நேரத்​தில் பரிசீ​லிக்​கப்​ப​டும் என்றார்.
thankshttp://thatstamil.oneindia.in/news/2009/12/09/tn-urges-establish-national-grid.html
தொழிற்சாலைகளுக்காக 200 மெகாவாட் மின்சாரம் வாங்கும் தமிழகம்SocialTwist Tell-a-Friend

No comments: